மருத்துவ குறிப்புகள்
சிறுநீரக கோளாறுகள் குறைய
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாப்பிட சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீரக கோளாறுகளுக்கு
அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவை குறைத்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.
தலைவலி குறைய
தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
பாலில் திராட்சை பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் பலம் அதிகரித்து நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
முகச்சுருக்கம் நீங்க
தர்பூசணிப் பழத்தோலை அரைத்து முகத்தில் பூசிவைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவி விடலாம்.
தூக்கமின்மை
தர்ப்பை புல் தலையணையை தலைக்கு வைத்து படுத்தால் இரவில் தூக்கம் சீக்கிரம் வரும்.
இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக தர்ப்பை புல் கஷாயம் செய்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
வீக்கம் குறைய
தலுதாலை இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் குறையும்.
எலும்புகள் வளர்ச்சி அடைய
எலும்புகள் வளர்ச்சி அடைய தவசிக்கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வளர்ச்சி அடையும்.
கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு தவசிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
வயிற்றுப்பூச்சிகள் குறைய
வயிற்றுப்பூச்சிகள் குறைய தவசிக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் குறையும்
ஆண்மைக் குறைவு நீங்க
ஆண்மைக் குறைவு நீங்க சீரகப் பொடி, வில்வப்பட்டை, இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட ஆண்மைக் குறைவு நீங்கும்.
இரத்தம் விருத்தியாக
இரத்தம் விருத்தியாக தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
No comments:
Post a Comment