Tuesday, 9 October 2018

கேழ்வரகில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா?

கேழ்வரகில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா? அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்!
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கேழ்வரகினை உணவாக உட்கொண்டு வந்தார்கள்.கேழ்வரகில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் கால்சியம்,ப்ரோடீன், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம்,இரும்பு சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் கேழ்வரகினை தினமும் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை .பற்றி காண்போம்.
1. வலிமையான எலும்புகள்
கேழ்வரகில் கால்சியம் என்று சொல்லக்கூடிய மாவுசத்து உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் கிட்டத்தட்ட 350 மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. சத்தானது உங்கள் உணவில் உள்ள மாவுச்சத்தை உறிஞ்ச மிகவும் உதவுகின்றது.
இதனாலே உழைக்கும் மக்கள் தினமும் கேழ்வரகினை உண்டு வருகின்றனர். எனவே வலிமையான எலும்புகளை கேழ்வரகினை தினமும் உண்டு வரவும்.
2. ப்ரோடீன் நிறைந்தது
கேழ்வரகில் புரதசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கேழ்வரகில் கிட்டத்தட்ட 7 கிராம் அளவுக்கு புரதசத்து நிறைந்துள்ளது. நமது உடலின் வளர்ச்சிக்கு புரதசத்து மிக மிக அவசியமான ஒன்று.
3. மலச்சிக்கலை தடுக்கும்
கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.தினமும் கேழ்வரகினை உண்டு வந்தால் நீங்கள் மலசிக்கல் பிரச்சினையில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
4. இரத்த சோகை நோயிலிருந்து காக்க உதவும்
கேழ்வரகில் இரும்புசத்து மிகவும் அதிக அளவில் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சினையிலிருந்து உங்களை காத்துக்கொள்ளலாம் நண்பர்களே.
5. உடல் வலுவினை அதிகரிக்கும்
ராகியை அணைத்து முக்கியமான சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளதால் அவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் உங்களின் உடல் வலிமை அதிகரிக்கும். இதனாலேயே உழைக்கும் மக்கள் பெரும்பாலும் கேழ்வரகு உணவினை உட்கொண்டு வருகின்றனர் நண்பர்களே.
6. சக்கரை நோயை கட்டுக்குப்படுத்தும்
கேழ்வரகில் அதிக அளவு நார்ச்சத்தும் மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரெட்ஸ் சத்தும் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொண்டு வரும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கேழ்வரகினை உட்கொண்டு வந்தால் இரத்த சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பது மருத்துவரின் பொதுவான கருத்து ஆகும்.
7. உடல் எடையினை குறைக்க உதவும்
கேழ்வரகில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் இதனை தினமும் உட்கொண்டு வரும்போது உங்கள் உடல் எடை குறைவதோடு, நீங்கள் கட்டுடலையும் பெறலாம். எனவே தினமும் கேழ்வரகினை ஏதாவது ஒரு வகையில் உட்கொண்டு வரவும் நண்பர்களே.

No comments:

Post a Comment