*இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?..*
பொதுவாகவே சில உணவுகளை சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.எல்லோருக்கும் இனிப்பு என்றாலே பிடித்தமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் இனிப்பு என்ன தான் விருப்பமான ஒன்றாக இருந்தாலும், அதை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என அச்சப்படுவார்கள்.
இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். மேலும், நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்புண்டு. எனவே இனிப்பு சாப்பிட்டவுடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற செயலாகும்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் முதலில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி இனிப்பு சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, இனிப்புகளை அளவாகவும் முறையாகவும் சாப்பிடுவது நல்லது.
*தவிர்க்க வேண்டியவை:*
பழக் கலவை (Fruit salad): பழக் கலவைகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம்.
*சிட்ரஸ் பழங்கள்:*
இந்த பழங்களை சாப்பிட்டால் தண்ணீரை உடனே குடிக்ககூடாது. அவ்வாறு குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி உண்டாகும்.
*ஐஸ்கிரீம்:*
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, சளி போன்ற நோய்கள் ஏற்படும்.
*டீ:*
ஒரு சிலர் டீ குடித்ததும் உடனே தண்ணீர் குடிப்பார்கள். சூடான டீயை குடித்துவிட்டு உடனே குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரை குடித்தால் வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படலாம்.
*இனிப்பு:*
இனிப்பு வகைகள் அல்லது டெசர்ட் வகைகள், டோனட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடித்தால் தண்ணீர் சர்க்கரையை உடனே உறிஞ்சிவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க நேரிடலாம்.
*பால்:*
பால் குடித்துவிட்டு உடனே தண்ணீர் குடித்தால் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும், செரிமானக் கோளாறுகளை உண்டாகும். எனவே இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்காமல் குறைந்தது அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கழித்து குடிக்க வேண்டும்.இனிப்பு சாப்பிட்டவுடனேயே காரம் கலந்த ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் தண்ணீர் குடிப்பதை அவ்வப்போது தடுக்கலாம்.
No comments:
Post a Comment