Thursday, 29 August 2024

எவ்வளவு வழிபாடு செய்தும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள்

**எவ்வளவு வழிபாடு செய்தும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள் வாராகி அம்மனுக்கு இந்த ஒரு தீபத்தை தினமும் ஏற்றி வந்தால் போதும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.**

இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபடக்கூடிய ஒரு தெய்வம் என்றால் அது வாராஹி அம்மன் தான். உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடிய இந்த வாராகி அம்மன் நம்முடைய கஷ்டங்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுவாள். மேலும் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ வைக்கவும் உதவுவாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நிறைவேறாத வேண்டுதல்களும் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

**நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற**

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அந்த வேண்டுதலை முன்வைத்து எந்த தெய்வத்திடம் வழிபட்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தெய்வத்தை வழிபடுவதையே வெறுத்து விடும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி வழிபாடு செய்வதை நிறுத்துவதற்கு பதிலாக அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் எந்த தெய்வத்திடம் வேண்டி நிறைவேறாமல் இருந்தாலும் வாராகி அம்மனிடம் இந்த முறையில் தீபம் ஏற்றி வைத்து வேண்டுதலை வைக்க அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதற்கு நாம் நம்முடைய வீட்டில் தினமும் வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். வேறு எதுவும் பெரிதாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுவாக தீபம் ஏற்றுவதற்கு நெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பஞ்ச கூட்டி எண்ணெய் என்று பல எண்ணெய்கள் உபயோகப்படுகின்றன. அதில் எந்த எண்ணெய்யை பயன்படுத்தி நீங்கள் தீபம் ஏற்றுகிறீர்களோ அந்த எண்ணையவே இந்த தீபத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். காலையிலும், மாலையிலும் இந்த தீபத்தை வாராகி அம்மனை நினைத்து ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது பஞ்சமுக விளக்காக இருந்தால் மிகவும் சிறப்பு.

நாம் விளக்கேற்றுவதற்காக எண்ணெய் வாங்குவோம் அல்லவா? அதை ஒரு லிட்டர், அரை லிட்டர் என்று வாங்குவோம். அவ்வாறு வாங்கி வந்த எண்ணெயில் அரை லிட்டர் எண்ணெய் ஆக இருக்கும் பட்சத்தில் அதில் வால் மிளகு ஒன்றை போட வேண்டும். வால்மிளகு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய சாதாரண மிளகை கூட போடலாம். ஒரு லிட்டராக இருக்கும் பட்சத்தில் இரண்டு மிளகுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த எண்ணையை பயன்படுத்தி வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எண்ணெய் தீர்ந்த பிறகு அதில் இருக்கக்கூடிய மிளகை எடுத்து ஒரு அகல் விளக்கில் வைத்து அதனுடன் கற்பூரத்தை வைத்து வீட்டு வாசலுக்கு வெளியே வைத்து ஏற்றி விட வேண்டும். அந்த மிளகு எரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதனால் நம்முடைய வேண்டுதல்கள் தடைப்பட்டு இருக்கிறதோ அந்தத் தடையை உடைத்து எறிந்து நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழிகள் பிறக்கும். பிறகு இந்த மந்திரத்தை தினமும் காலையில் மற்றும் மாலையில் 108 முறை சொல்ல முடியாது.

**மந்திரம்**

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண வாராஹி யே ஹும்பட் ஸ்வாஹா



இந்த முறையில் தொடர்ச்சியாக நாம் வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் விரைவிலேயே நடைபெறும்

No comments:

Post a Comment