குபேர ஸ்லோகம்
வளம் யாவும் தந்திடுவாய்
வைஷ்ரானவா போற்றி
தனம் தந்து காத்திடுவாய்
தளபதியே போற்றி
குறைவில்லா வாழ்வளிபாய்
குபேரன போற்றி
உறைந்திடுவாய் நீ இங்கே
உத்தமனே போற்றி
சங்கநிதி பதுமநிதி சார்ந்து
நிற்பாய் போற்றி
மங்களங்கள் தந்து எமை
மகிழ்விப்பாய் போற்றி
பொங்கிடும் நலம் யாவும்
உன்னருளே போற்றி
தங்கிட செய்வாய் செல்வம்
போற்றினோம் போற்றி போற்றி
No comments:
Post a Comment