மனிதர்கள் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இது காலங்காலமாக உள்ளது தான். வெயிலில் போனால் கறுத்துப் போய் விடுவாய் என்று கூறி வெயிலில் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. விவசாயிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும் வெயிலில் தான் இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இவர்களைத் தவிர மற்ற எல்லாருமே வெயிலை விட்டு ஒதுங்கியே வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் சுமார் 10 கோடி மக்கள் உலகம் முழுவதும் வைட்டமின் டி சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பூமியில் உள்ள அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூலகாரணமே சூரியன் தான். சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. வெயில் அதிகமாக இருக்கிறது, வெயில் குறைவாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்வோம். சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பல விதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவைகளின் வீரியத்திற்கேற்ப அவைகளின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.
அதிக வெயிலை, வெயிலின் கடுமையைச் சுட்டெரிக்கும் சூரியன் என்று தான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் 1). எக்ஸ்ரே கதிர்கள், 2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள், 3). இன்பிராரெட் கதிர்கள் இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. 4.). நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும் சூரிய ஒளிக்கதிர் தான்.
ஆக சூரிய கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்பு சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும். இதைத்தான் நாம் சன் பர்ன் அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதேபோல மனிதர்களின் தோலிலுள்ள பிக் மென்ட்சை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றி விடும். நாம் ஏற்கனவே பார்த்தச்படி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதே கதிர்கள்தான் உடலில் வைட்டமின் டி உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கிறது. பத்து சதவீதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவீதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அதை விட்டு விடுங்கள். அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை.
ஆனால்..இந்த சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் பி கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.
உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு வைட்டமின் டி' அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது. வைட்டமின் டி' வேண்டுமென்பதற்காக சட்டை-பேண்ட் எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டு வெயிலில் படுத்து புரள முடியாது. உடம்பில் துணியில்லாமல் வெயிலில் நின்றால் சுமார் 3 ஆயிரத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் யூனிட் வரை வைட்டமின் டி` நமது உடலுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எந்தப் பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது
சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை "சூரிய ஹார்மோன்" என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தைய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின்
Jeyaseelan M IT COORDINATOR:
ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.
கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள்.
ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.
ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கேன் எடுத்தால் போதும். இதய நரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம்.
மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..
டி3 நமக்கு முழுமையாக கிடைக்க ஆன்ட்ராய்டில் "டி மைன்டர்" எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பது தெரியும். அதைப் பார்த்து உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்: தலைக்கு தொப்பி அணியுங்கள். நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம். நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்
எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும். தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்....
அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எந்தப் பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்
என்ன சூரிய குளியல் நடத்த தயாரா?