முகப்பரு வியர்குரு நீங்க
முகப்பரு
ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தினமும் தடவி வர பரு பறந்து போகும்
வெள்ளை பூண்டையும், துளசி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் தடவி வர பரு போய்விடும்
மஞ்சள், சந்தனம், புளியாரை கீரை அரைத்து தடவி வர முகப்பரு போய்விடும்.
வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து தடவி வந்தால் முகபருவும் வியர்குருவும் போய்விடும்
அவரை இல்லை சாரு முகப்பருவை போக்குவதுடன் முகழகையும் அதிகரிக்கும்.
மரப்பாச்சி பொம்மையை நீர் விட்டு கல்லில் தேய்த்து தடவி வர முகப்பரு போகும்
புதினா இலையை அரைத்து தினமும் காலை மற்றும் இரவில் படுக்க போகும் முன் தடவி வந்தால் முகப்பரு போயே போய்விடும்
அம்மன் பச்சரிசிபால் முகப்பருவின் மேல் தடவிவர பரு போகும்
பப்பாளிபழம் அரைத்து தடவி வந்தாலும் பரு போய், முகம் அழகாகும்.
வியர்குரு
குளிக்கும் முன் வடித்த சாதத்தின் கஞ்சியை ஆறவைத்து தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் வியர்குறு போகும்.
வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து தடவி வந்தால் முகபருவும் வியர்குருவும் போய்விடும்
வெங்காய சாரு வியர்குருவை நீக்கும் ஒரு அறிய மருந்து
No comments:
Post a Comment