Friday, 5 May 2017

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

20ஆம் நூற்றாண்டின் கடைக்குட்டி, 21ஆம் நூற்றாண்டின் மூத்தப்பிள்ளை "சோம்பேறித்தனம்". நமது இந்த சோம்பேறித்தனம் தான், இன்று சந்தையில் விற்கப்படும் உடனடி (இன்ஸ்டனட்) உணவுப் பொருட்களின் பிறப்பிற்கு முதன்மை காரணம்.

ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்...
இது, போதாமல் நாலு நாளைக்கி சேர்த்து சமைத்து ஃபிரிஜில் வைத்துவிடுவோம் அல்லது வாரத்திற்கான காய்கறிகளை மொத்தமாக வாங்கி ஃபிரிஜில் அடைத்து வைத்துவிடுவோம்.

ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இன்னும் சிலர், ஏற்கனவே பதப்படுத்தி ஃபிரிஜில் அடைக்கப்பட்டு மால்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி வந்து அவர்கள் வீட்டு ஃபிரிஜில் வைத்து பயன்படுத்திகின்றனர். இது எவ்வளவு கொடியது என்று உங்களுக்கு தெரியுமா?
106 வயதில் லட்சங்களை வாரிக் குவிக்கும், இந்த பாட்டி செய்யிற வேலைய பாருங்க! 106 வயதில் லட்சங்களை வாரிக் குவிக்கும், இந்த பாட்டி செய்யிற வேலைய பாருங்க!

உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்குன்னு 1 நமிஷத்துல கண்டுப்பிடிக்க இத ட்ரை பண்ணுங்க! உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்குன்னு 1 நமிஷத்துல கண்டுப்பிடிக்க இத ட்ரை பண்ணுங்க!
இந்த 5 அறிகுறி வெச்சு, அந்த பொண்ணு உங்கள ஏமாத்த மாட்டங்கன்னு தெரிஞ்சுக்கலாம்! இந்த 5 அறிகுறி வெச்சு, அந்த பொண்ணு உங்கள ஏமாத்த மாட்டங்கன்னு தெரிஞ்சுக்கலாம்!

இந்த வகையில் சில பொருட்களை நீங்கள் கட்டாயம் ஃபிரிஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடும்....

மூலிகைகள்

மூலிகை உணவுகளை ஃபிரிஜில் வைப்பதனால் அது விரைவாக வாடிவிடும் மற்றும் சத்து இழந்து விடும். இதற்கு மாற்றாக ஓர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனில் மூலிகை வகை உணவுகளை வைக்கலாம். இது, சீக்கிரமாக வாடாமல் இருக்கவும், வீணாகாமல் இருக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு
ஃபிரிஜில் உருளைக்கிழங்குகளை வைப்பதால் அதன் சுவை குறைந்துவிடும். இதற்கு மாறாக காகித பைகளில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை முற்றிலுமாக தவிர்கவும். இது விரைவாக காய்கறிகளை அழுகிப்போக செய்துவிடும்.

பழங்கள்

பழங்களை அறுத்துவைத்த பின்பு ஃபிரிஜில் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கிருமிகளின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதிலாக முழு பலங்களாக வைத்து, தேவையான போது அறுத்து சாப்பிடுங்கள்.

வெங்காயம்  

வெங்காயங்களை ஃபிரிஜில் வைக்கவேண்டாம், இது ஒரு வகையான துர்நாற்றம் ஏற்பட காரணமாகிவிடும். வெங்காயத்தை காகித பைகளில் வைத்தாலே போதும்.

தக்காளி  

தக்காளியை ஃபிரிஜில் வைப்பதனால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படும். மற்றும் தக்காளிகளை ஃபிரிஜில் வைப்பதனால் அவை சீக்கிரம் பழுத்துவிடும். பழுத்த தக்காளியை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.

கெட்சப் - சாஸ்  

கெட்சப் - சாஸ் போன்ற உணவுகள் நீங்கள் ஃபிரிஜில் வைக்க அவசியமே இல்லை. அவை, விரைவில் கெட்டுப்போகும் தன்மையற்ற உணவுகள்

தானிய உணவுகள்

சமைக்கப்பட்ட தானிய உணவுகள் காலையிலேயே சாப்பிட்டுவிடுவது உடலுக்கு நல்லது. அதை ஃபிரிஜில் வைப்பதனால் அது ஒரு மாதிரி சுவையிழந்து, சத்து இழந்து வீணாகிவிடும்.

எண்ணெய்  

எண்ணெய்கள் பொதுவாக கெட்டுபோகாது. ஒருவேளை அது குறைந்த செறிவூட்டப்பெற்ற - கொழுப்பு உடைய என்னியாக இருந்தால் அவற்றை ஃபிரிஜின் கதவுப் பகுதிகளில் வைக்கலாம். அல்லது நட்ஸ் வகை சார்ந்த என்னியாக இருந்தால் மட்டும் ஃபிரிஜில் வைத்து பாதுகாக்கலாம்.

ஊறுகாய்  

ஊறுகாய்களை ஃபிரிஜில் வைக்க வேண்டிய தேவையே இல்லை. அவை வெளியில் வைத்தாலே போதுமானது. நீர் படாமல் மட்டும் பாதுகாத்து வைத்தால் போதும்.

தேன்  

தேனை ஃபிரிஜில் வைப்பதனால் அது அடர்த்தியாகி அதன் இயற்கையை நிலையை இழந்துவிடும். எனவே, தேனை வெளியில் வைப்பதுதான் நல்லது

பூண்டு  

ஃபிரிஜில் பூண்டினை வைப்பதனால் அதன் சுவை குறைந்துவிடும் மற்றும் விரைவில் கெட்டி போய் விடும். எனவே, பூண்டினை ஏதேனும் காகித பையில் போட்டு நீர் படாத இடத்தில் வைத்தாலே போதும்.\

மசாலா பொருட்கள்  

நிலத்தில் விளையும் மசாலா பொருட்களை ஃபிரிஜில் வைக்க அவசியம் இல்லை.
நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்  
நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்
நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களை வெளிபுறங்களில் வைத்தாலே அவை கெட்டு போகாமல் இருக்கும்.

பிரட்  

பிரட்டினை ஃபிரிஜில் வைப்பதனால் அது சீக்கிரமாக காய்ந்துவிடும். இதற்கு மாறாக காற்று புகாத பைகளில் வைத்து பாதுகாத்தாலே போதுமானது.

காபி  

சில அதிமேதாவிகள் காபியை ஒருமுறை சமைத்து ஃபிரிஜில் வைத்துவிடுவாகள். பின்பு வேண்டிய போதெல்லாம் எடுத்து சுட வைத்து குடிப்பார்கள். இது காபியின் சுவையை குறைப்பது மட்டுமின்றி.சில சமயங்களில் விஷத்தன்மையாகிறது.

தர்பூசணி, முலாம்பழம்  

நீர்சத்து சத்து அதிமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதுமானது. ஒரு வேலை அறுத்துவிட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் ஃபிரிஜில் சாப்பிடுங்கள். அதற்கு மேல் தனது தன்மையை இழந்துவிடும்.

ஜாம்  

ஜாம் போன்ற உணவுகள் தயாரிக்கும் போது நிறைய பதப்படுத்தப்படுகின்றன. எனவே, அவை சீகிரனம் கெட்டு போகாது. அதை ஃபிரிஜில் வைக்க அவசியமே இல்லை

No comments:

Post a Comment