Tuesday, 2 May 2017

சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

ஒருவர் அளவுக்கு அதிகமான சர்க்கரையை உணவில் சேர்ப்பதால், உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் இதோ!

சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சர்க்கரையின் அளவு அளவுக்கு அதிகமானால் உடலின் ஆற்றல் குறைந்து, மிகுந்த சோர்வு, களைப்பு, கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அதிகமான அளவில் சர்க்கரையை உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் அடிக்கடி நோய்வாய்டுதல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
அதிகமான சர்க்கரை உடலளவில் மட்டும் சோர்வடையச் செய்யாமல், மனநிலையையும் பாதிக்கும். இதனால் அதிகப்படியான மன அழுத்தப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
உணவில் அளவுக்கு அதிகமான சர்க்கரை இருந்தால், உடல் நலம் மட்டுமின்றி, சருமத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.
நமது உடலானது ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது. அதற்கு மேல் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், அது கொழுப்புக்களாக மாற்றப்பட்டு, அதிக உடல் பருமனை ஏற்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைக்கு தொடர்பு உள்ளதால், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், அது பற்களில் சொத்தை பிரச்சனையை ஏற்படுத்தி, பற்கள் மற்றும் ஈறு போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment