வயிற்றுப்புண், தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி நீங்க எளிய முறை வீட்டு வைத்தியங்கள்
வாந்தி, பித்தம் தீர :-
எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும்.
தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :-
கொத்தமல்லி விதை வறுத்துப் பொடி செய்து கசாயம் செய்து காலை, மாலை 2 வேளை 1 டம்ளர் அளவு சாப்பிட தீரும்.
வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.
துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
தீராத வாந்தி நிற்க!
“சதகுப்பை” என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.
பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு வயிற்று வலி இவற்றிற்கு:-
இஞ்சியை -100 கிராம் எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, இஞ்சியை சிறு துண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால் நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும். சாதாரணமாக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு கைகண்ட மருந்தாகும்.
வாயுத்தொல்லை, பசியின்மை:
வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழைச் சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி (5 மி.லி) கற்றாழைச் சாற்றினை நாளுக்கு 3 முறை உட்கொள்ள வேண்டும். (குறிப்பாக வெறும் வயிற்றில்) கசப்புத் தன்மையைக் குறைக்க அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.
வாயு தொல்லை
வாயு தொல்லை நீங்க ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை இனி இல்லை..
சோயா பீன்ஸ், மற்றும் சோயா பொருட்கள் கான்சரை தடுப்பதோடு மட்டுமல்லாமல், இதய் நோய்கள், எலும்பு சீர்கேடுகளையும் சரி செய்கிறது. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் நிலை மாறுதல்களுக்கும், எலும்பு தேய்வு இவற்றுக்கும் மருந்தாகவும் சோயா உதவுகிறது
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, சிறிது புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி வைத்துக்கொண்டு, உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் விலகும்.
பசியின்மை நீங்க:
துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டுவர பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும்.
பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.
நில வேம்பை கஷாயம் வைத்துக் குடிக்க நன்கு பசியெடுக்கும்.
வயிற்றுக்கடுப்பு நீங்க:-
வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .
No comments:
Post a Comment