Tuesday, 29 August 2017

வாழை இலைக்குளியல்!!!

வாழை இலைக்குளியல்!!!

உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள்.
அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு.
உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக
வாழ முடியாது.
இதுவே
இறைநிலையின் ஏற்பாடு.!
அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது
அதில் பிராணக்காற்றும்
கலந்துள்ளது.ஆனால், வாழையிலை மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது
மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட
பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது.

அதனால்தான்
உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது.

*பலன்கள்
————
1.உடல் எடையை குறைக்கும்.
2.உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும்.
3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்.
4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதி
களைப்போக்கும்.
5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும்.
6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும்.
7. உடலுக்கு புத்துணர்வை
யும், புதுப்பொலிவையும் தரும்.
8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.

*செய்முறை
—————–

1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பச்சையாக உண்ணவேண்டும்.
2.குளியல் செய்ய
போகும் இடத்தில்
ஆறு துண்டு நூல்கயிறு அல்லது தென்னை கயிறை வரிசையாக
தரையில் போடவும்.
3.அதன்மேல் நான்கு பெரிய இலைகளை விரிக்கவும்
< உடல் பருமனுக்கு தகுந்தபடி>
4.வாழை குளியல் எடுப்பவருக்கு ஆறுடம்ளர் தண்ணீர் கொடுத்து, தலையில் ஒரு டவ்வலை நனைத்து சுற்றி இலைகளில் படுக்க வைக்கவும்.
5.கால் பாதம் முதல் உச்சந்தலை
வரை உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி அவரின் மேலே இலைகளால் மூடவும்.
6.மூக்கின் அருகே மூச்சு விடுவதற்காக இலையின் சிறு பகுதியை வெட்டிவிடவும்.
7.இலைகட்டு
களை கட்டுவதுபோல் அவர் உடல் முழுவதையும் போர்த்தி சற்று மெல்லிய இறுக்கத்துடன் கட்டிவிடவும்.
அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துவிட செய்து எழுப்பி நிழலில் அமர்த்தி. எலுமிச்சை , தேன் , இந்துப்பு , இஞ்சி கலந்த கலவையை கொஞ்சம் மெதுவாக நன்றாக கொப்பளித்து குடிக்க செய்துவிட்டு பிறகு 15 நிமிடம் கழித்து பச்சைதண்ணீரில் குளிக்க செய்து
விடலாம்.

அதன்பிறகு அன்றைக்கு முழுவதும் இயற்கை உணவு அல்லது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும்.
10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம். வாழை குளியல் செய்ய காலை
ஏழு மணி முதல் பதினோரு மணிவரை உள்ள நேரமே சிறந்ததாகும்.
வாழைகுளியலின்போது
இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்துகொள்ளலாம்.
இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம்.
குளியலின் போது வெறும்
டவ்வல் அல்லது ஜட்டியை மட்டுமே அணிந்து கொள்ளலாம்.
பெண்கள் குறைந்த பட்ச பருத்தி ஆடைகளை அணிந்து
கொள்ளலாம்.

இயற்கையின் ஆற்றல் அளவிட முடியாதது நண்பர்களே அதை முழுவதுமாக பயண்படுத்தி
கொண்டு. கெட்ட
பின் விளைவுகளை
தரும் மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து, வெளிநாட்டு இரசாயண மருந்துகளின் குப்பைத் தொட்டியாக
நம் உடலை ஆக்காமல் இறை உறையும் ஆலயமாக அதை மாற்றுவது நமது கைகளில் தான்
இருக்கிறது.!

இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

Sunday, 27 August 2017

உங்க நெற்றி மேல ஏறிட்டே போகுதா? முடி உதிர்வை தடுக்க அற்புதமான வழிமுறைகள்.

உங்க நெற்றி மேல ஏறிட்டே போகுதா? முடி உதிர்வை தடுக்க அற்புதமான வழிமுறைகள்.

பீட்ரூட் இலைகள் பீட்ரூட் இலைகளில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி விட்டமின் பி 6 உள்ளது இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

ஒரு கைப்பிடி பீட்ரூட் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனை பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பீட்ரூட் இலை பேஸ்ட்டில் தேவையான அளவு மருதாணி பொடியை சேர்த்து மாஸ்காக அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து முடிக்கு   சீகைக்காய்  அல்லது  அரப்பு  என சொல்லப்படும் உசிலம்பொடி  போட்டு அலசவும்

கொத்தமல்லி கொத்தமல்லியில் அதிகளவு விட்டமின் சி, இரும்பு சத்து, புரோட்டின் அடங்கியுள்ளது. இது முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர செய்கிறது.

ஒரு கைப்பிடி கொத்தமல்லியை எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலையில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து தலைமுடியை வாஷ் செய்து கொள்ளுங்கள்.

Thursday, 24 August 2017

ஆறில் ஆரோக்கியம்

*ஆறில் ஆரோக்கியம் !*
------------------------------------------

*ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.*

*ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.*

*இதோ !*
----------------

*1 - பசி*
*2 - தாகம்*
*3 - உடல் உழைப்பு*
*4 - தூக்கம்*
*5 - ஓய்வு*
*6 - மன அமைதி*

*பசி !*
-----------

*உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.*

*யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.*

*இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்*

*"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்."*

*விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.*

*"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்*
*நோயள வின்றிப் படும்."*

*விளக்கம் - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.*

*பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !*

*உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.*

*இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.*

*தாகம் !*
----------------

*அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*

*வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*

*சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.*

*தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.*

*Ro, Mineral, Filter, boiled water பேராபத்து*

*இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.*

*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.*

*"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே"*

*என்பார்கள்*

*நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.*

*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.*

*உடல் உழைப்பு !*
-------------------------------

*ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.*

*இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.*

*உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.*

*தூக்கம் !*
------------------

*யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.*

*ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.*

*ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.*

*இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.*

*பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.*

*நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.*

*இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.*

*நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.*

*ஓய்வு !*
---------------

*சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.*

*சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.*

*உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.*

*மன நிம்மதி !*
--------------------------

*ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.*

*மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள்.  உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.*

*மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிட்டீர்கள்.*

*இனி எமன் உங்களை கண்டு அஞ்சுவார்.*

*ஆறு படியை கடந்தோம்*
*ஆரோக்கியத்தை அடைந்தோம்.*

*நன்றி*

🌸🌱🌷🌿🌼🙏🏾🌼🌿🌷🌱🌸

எலும்புகள் பலம் பெற

எலும்புகள் பலம் பெற

1. கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.

2.  பிரண்டை வேரை எடுத்து நன்கு உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு கிராம் வீதம் காலையில் குடித்து வந்தால் முறிந்த எலும்பு பலம் பெறும்.

3.  அசோகமரபட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எலும்பு முறிந்த பகுதியில் வைத்து கட்டி வந்தால் முறிந்த எலும்பு ஒன்று கூடும்.

4.  முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.

குடற்புழுக்கள் (WORMS INFESTATION) வெளி வர

குடற்புழுக்கள் (WORMS INFESTATION) வெளி வர

1. பிரண்டைத்தண்டுகளை மேல்தோல் நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து, நெய்யில் வதக்கி  துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும்.மூளை,நரம்புகளும் பலப்படும்.

2. குப்பைமேனி இலைச்சாறு 4தேகரண்டி தொடர்ந்து 4நாள் உட்கொள்ள வயிற்றுப்புழு நீங்கும்.

3. ஒரு தம்ளர் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி  கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

4. சுண்டைக்காயை உணவில் சேர்த்து வர நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப் பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தம்ளர் மோரில் கலந்து, தினம் ஒரு முறை குடித்து வர, வயிற்றுப் புழுக்கள் அகலும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீர் 1 தம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

பாகற்காய் ஊறுகாய்

பாகற்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2
எலுமிச்சம்பழம் – 4
உப்பு -ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -10
செய்முறை:

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.
பயன்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.

Tuesday, 22 August 2017

வாய் கொப்பளிக்க… பல் சுத்தம்!

வாய் கொப்பளிக்க… பல் சுத்தம்!

நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குதலையும், ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் 16 முறை வாய்க்கொப்பளிப்பதையுமே வலியுறுத்திச்சென்றுள்ளனர்.

இவை எளிமையானவை.

16 முறை வாய்க்கொப்பளிக்க நேரமில்லாதபோது ஒருவர் உணவு உண்ணவே உட்காரக்கூடாது என்பது பெரியவர்கள் கருத்து.

அந்தளவு நேரம் எப்போது கிடைக்குமோ அப்போது மட்டுமே உண்ணல் தகும்.

இரவு உணவை மாலை 6-00 மணிக்கே முடித்து 2-3 மணி நேரம் கழித்துப்படுக்கப்போகும்போது பல் சுத்தமாகப் படுப்பதே நல்லது.

அதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

இரவு உணவு உண்ட உடனே படுக்கச் செல்வது என்பது பற்களில் அழுக்குகள் தங்க, தேங்க நாம் வழி செய்து கொடுப்பதே ஆகும்.

பிரஷ் கொண்டு தேய்த்தல், கொப்பளித்து நீக்குவது போல் சிறப்பாகாது.

50 மி.லி. தண்ணீரை வாயில் 5 நிமிடம் வெறுமனே வைத்திருக்கவும்.

மேற்படி தண்ணீர் கெட்டிப்படுவதை உணரலாம்.

1. சுரக்கும் உமிழ் நீர் அடர்த்தி அதிகமாதலால் வாயில் உள்ள நீர் கெட்டிப்படும்.

2. பல் இடுக்குகளில் உள்ள மாவுகள் கரைந்து நீர் கெட்டிப்படும்.

இந்நிகழ்வை அனுபவ பூர்வமாக அறியலாம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

Monday, 21 August 2017

டெங்கு விழிப்புணர்வு

*டெங்கு விழிப்புணர்வு* :

டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும்.
டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது
இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.
பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது.

*டெங்குவின் அறிகுறிகள்:*

1.கடுமையான காய்ச்சல்
2.வயிற்றுவலி
3.தாங்க முடியாத அளவு தலைவலி
4.உடல்வலி
5.மூட்டுவலி
6.கண்ணுக்குப் பின்புறம் வலி
7. தொடர்ச்சியான வாந்தி
8. களைப்பு
9.எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது( இந்த நோயின் முக்கிய அறிகுறி)
10. உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால் ஆபத்து அதிகம்.
டெங்குவில் மூன்று வகை:

1 .சாதாரண டெங்கு ஜூரம்
(dengue fever)
2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்(  dengue hemorrhagic fever) :
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம்
(DENGUE Shock Syndrome):
பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

இதில் முதல் வகை(DENGUE Fever) வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது.
இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை
( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்
அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்

#டெங்குவிற்கு ரத்த பரிசோதனை:
ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.
#தட்டணுக்கள் (platelet) பரிசோதனை:
( சரியான அளவு: 1.5 முதல் 4 லட்சம்/டெ.லி.  வரை)
டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
# டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.

*டெங்குவிற்கான சிகிச்சை முறை*

• டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். 

"ஓ ஆர் எஸ் "(ORS) உப்பு சர்க்கரை கரைசல், இளநீர், கஞ்சி, பழரசங்கள், நீர்மோர் போன்றவற்றை அதிகமாக பருக வேண்டும்.

• வாய்வழியே பருக இயலாதவர்களுக்கு, இரத்த நாளங்கள் வழியாக (IV fluid) திரவங்கள் ஏற்றப்படும்.

• காய்ச்சலை குறைக்க பாராசிடமால் (paracetamol) மாத்திரை போதுமானது.

• குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்

• டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக்( Antibiotic) மருந்துகள் அவசியம் இல்லை.

• மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.

• காய்ச்சல் ஏற்படின் பொதுமக்கள் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

• போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தகூடும்.

• காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும்.
( சுத்தமான பப்பாளி இலை சாரும் தட்டணுக்களின் எண்ணிக்கையை கூட்ட வல்லது)

• மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்.

*டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?*

மிக மிக எளிது....!!!
டெங்குவை பரப்பும் ஏடிஸ்(Aedes) கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது.
ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள்  எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க
தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள்
தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.
ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது. 
நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும்.
கடைசியாக.....

#தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும்.
#மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும்,சமையல் செய்யும் முன்னும்... கட்டாயம் கைகளை வழலை(soap) கொண்டு கழுவ வேண்டும்.

இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல நோய் தொற்றுகள் (Infections) நமக்கு வருவதை தவிர்க்கலாம்.

டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை  வருமுன் தடுப்பது மிக நல்லது....
கொசுக்களை ஒழிப்போம்...!
டெங்குவை தடுப்போம்....!!
நோயில்லாமல் வாழ்வோம்...!!!
                 ---பொது சுகாதாரம் (ம)
      நோய் தடுப்பு மருந்து துறை..