மூட்டுவலிக்கு இயற்கை மருத்துவம் !!!
உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே மிகப்பெரிய பிரச்சனை என்பது மூட்டுவலி. எந்தெந்த இடங்களில் எல்லாம் எலும்பு வளையக்கூடிய தன்மை உள்ளதோ அந்த இடங்களில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் தான் வலி என்று சேர்ப்போம்.
உதாரணமாக சொன்னால் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி. இந்த மாதிரியான வலிகள் வருவதற்கான காரணங்கள் பலவகையாக இருக்கிறது.
முப்பது வயதைத் தாண்டிய ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சாதாரணமாக வரக்கூடிய வலி என்ன என்றால் அதை மூட்டுவலி என்று சொல்லலாம்.
வயதான காலத்தில் ஒரு அறுபது வயதிற்கு பின்னால் உடலில் இருக்கக்கூடிய வளர்சிதை மாற்றங்கள் அடிப்படையில் மூட்டுவலி வந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருக்கும்.
மூட்டுவலியெல்லாம் அந்தக்காலத்தில் இல்லாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு வீடுகளிலும் உளுத்தங்களி வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தொடர்ந்து சாப்பிடக்கூடிய சூழல் அன்றைய சமுதாயத்தில் இருந்தது.
ஒவ்வொரு வீடுகளிலேயுமே இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை நல்லெண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கி அதோடு மாவையும் சேர்த்து நன்றாக கூழ் மாதிரி கரைத்து வைத்துக்கொண்டு, நன்றாக தண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சிறிது சேர்த்து களியாகக் கிண்டி அதை காரக்களியாகவோ அல்லது இனிப்பு களியாகவோ தொடர்ந்து சாப்பிடுவார்கள்.
உளுந்தின் தன்மை என்னவென்றால் உடம்பில் இருக்கக்கூடிய 206 எலும்புகளையும் நன்றாக வலுவாக்கக்கூடிய தன்மை உளுந்துக்கு உண்டு. இந்த உளுந்தை சித்த மருந்துகளில், ஆயுர்வேத மருந்துகளில் மருந்துப்பொருளாகவே பயன்படுத்துவது உண்டு.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சித்தமருந்துகளில் உளுந்து தைலம் உண்டு. இந்த உளுந்து தைலம் நாட்டுமருந்து கடைகளில், சித்தமருந்துகடைகளில் கிடைக்கும்.
இந்த உளுந்து தைலத்தை பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கை-கால் அசதி, சோர்வு இருக்கும்பொழுது எலும்புகள் தளர்ந்து போகும் பொழுது, எலும்புகளில் வலி இருக்கும்பொழுது அந்தத் தைலம் தேய்த்து பிடித்துவிட்டால் உடனே வலியை நீக்கக்கூடிய தன்மை உண்டு.
உளுந்து தைலத்தை மிதமாக சூடுசெய்து வலி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து பிடித்து விடும்பொழுது கை-கால் வலி, அசதி, சோர்வு எல்லாமே சரியாகிவிடும்.
இன்றும் கிராமங்களில் பார்த்தோம் என்றால் உளுந்தை எலும்பு முறிவாக பயன்படுத்துவார்கள். சிலநேரங்களில் அடிபட்டோ, கிணற்று வேலைக்குப்போகும் பொழுதோ முதுகெலும்பு உடைந்துவிடுவது, மூட்டுகளில் வலி உண்டாவது, தவறி கீழே விழுந்துவிடுவது, சைக்கிள் மற்றும் பிரயாணத்தில் அடிப்பட்டுவிடுவது இந்த மாதிரி நேரங்களில் எலும்பு உடைந்துவிடும். அந்தமாதிரி உள்ளவர்களுக்கு இந்த உளுத்தங்களியை தினசரி உணவாக கொடுத்துக்கொண்டு, அதே உளுந்தோடு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளக்கருவை சேர்த்து குழைத்து பருத்தி துணியில் நன்றாக தடவி அதை கட்டு மாதிரி கட்டி 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
அந்த கட்டின இடத்தில் உளுந்து தைலத்தை விடாமல் தொடர்ந்து ஊற்றுவது, இந்த மாதிரி செய்யும் பொழுது உடைந்த எலும்புகள் கூட ஒன்றுசேரக்கூடிய தன்மை இந்த உளுந்துக்கு உண்டு.
ஆகவே இந்த மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், வேதனையில் உள்ளவர்கள் கண்டிப்பாக எந்த அளவிற்கு இந்த உளுந்தை சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல அபாரமான பலனைப் பெறமுடியும்.
மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தோமென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவைத்தான் நாம் சொல்லவேண்டும். புளிப்பான உணவுகளை எந்த அளவிற்கு முடியுமோ குறைத்துவிடுங்கள். எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகளை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். அதே போல் வாயுவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் இருக்கிறது. அதில் உதாரணமாக பார்த்தோம் என்றால் வாழைக்காய். மூட்டுவலி இருப்பவர்கள் வாழைக்காயை உட்கொண்டால் வாய்வு அதிகமாகி மூட்டுவலி இன்னும் அதிகமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எனவே வாழைக்காயை முழுமையாக நீக்கிவிடுங்கள். அதே போல் அகத்திக்கீரை, பாகற்காய் இவைகள் உடலிலே சில முரண்பாடுகளைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள். மூட்டுவலி இருக்கும்பொழுது பித்தவாயு அதிகமாக இருக்கும். பித்தத்தைக் குறைக்கக்கூடிய உணவுகளைத்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
அதேபோல் இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும்.
மூட்டுவலி இருக்கிறது என்றால் பித்தத்தை குறைப்பதற்கு நெல்லிக்காய்க்கு நல்ல பலன் உண்டு.
அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து தினசரி 4 நெல்லிக்காயை ஒன்றிரண்டாக நறுக்கி கூடவே சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதை காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும்.
இன்னும் ஒருசிலருக்கு பித்தஅடிப்படையிலேயே மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் லேகியத்தை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்ல ஒரு அற்புதமான பலன் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு உடலில் ஆற்றல் பற்றாக்குறையினால் மூட்டுவலி வரலாம். அந்த மாதிரி உடல் பலகீனம் அடிப்படையில் மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய அமுக்கரா லேகியம், அஸ்வகந்தா லேகியம் இவைகளை நீங்கள் வாங்கி சாப்பிடலாம்.
இன்னும் சித்த மருந்துகளில் கிடைக்கும் மகாவல்லாதி லேகியத்தைக்கூட தொடர்ந்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட வலியாக இருந்தாலும் சரியாகும்.
சித்த மருந்துகடைகளில் கிடைக்கக்கூடியது பிண்டத்தைலம். இந்தத் தைலம் சித்தமருந்துகடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான தைலம்.
இந்தத் தைலத்தை சூடுசெய்து கை,கால்வலி, உடம்புவலி, மூட்டுவலி, மூட்டு விலகியிருப்பது, பிசங்கியிருப்பது, பித்தவெடிப்பு எதுவாக இருந்தாலும் பிண்டத்தைலத்தை சூடு செய்து தேய்க்கலாம்.
ஆக தைலம் முறையின் அடிப்படையில் ஒரு வலிநிவாரணத்தை தேடும்பொழுது கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
கூடுதலாக உணவுபொருட்களில் வெந்தயக்களி சாப்பிடலாம், உளுத்தங்களி சாப்பிடலாம் இல்லையென்றால் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி சாப்பிடலாம்.
இதில் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி கை-கால் வலி, உடம்புவலி, மூட்டுசார்ந்த அத்தனை பிரச்சனைகளையும் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான கஞ்சி.
இதில் பஞ்சமுட்டி என்னவென்றால் பச்சரிசி, சிறுபருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சமுட்டி என்று
சித்தர்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்ற நூலில் சொல்லி
இருக்கின்றார்கள் .
இந்த பஞ்சமுட்டியையும், மூங்கிலரிசி என்பது மூங்கில் மரத்தில் விளையக்கூடிய ஒரு வகையான அரிசி, இந்த அரிசியையும் சேர்த்து எல்லாமே சமஅளவு சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
இதில் ஒரு கையளவு எடுத்து 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இந்த கஞ்சியை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுவும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உடல்பற்றாக்குறையால் மூட்டுவலி வருகிறது என்றால் அதற்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், அண்ணாசிப்பழம், பப்பாளிப்பழம், மாதுளை, ஆப்பிள் இவற்றையெல்லாம் விடாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக பற்றாக்குறையால் வரக்கூடிய நோய்கள் சரியாகும்.
இப்பொழுது சாதாரணமாக கிடைக்கக்கூடிய முடக்கத்தான் கீரை. முடக்கத்தான் என்றால் முடக்கு + அறுத்தான் என்று சொல்வோம். இந்த முடக்கத்தான் கீரையோடு சிறிது சீரகம் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து அதை காலையில் தோசைமாவோடு கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் கிராமங்களில் முடக்கத்தான் ரசம் என்று வைப்பதுண்டு. முடக்கத்தான், சீரகம், பூண்டு, புளி எல்லாமே சேர்த்து ரசம் மாதிரியும் பண்ணலாம். அந்தமாதிரி முடக்கத்தானை சாப்பிடக்கூடிய ஆண்,பெண் இருவருக்குமே மூட்டுவலி சார்ந்த எல்லா பிரச்சினையும் சரியாகும்.
அதே போல் வாதநாராயணா. வாதநாராயணா என்பது சாலை ஓரங்களில் புளிய இலை போல் இருக்கக்கூடிய ஒரு வகையான மரம். இந்த இலை இன்றைக்கும் கிராமங்களில் அதீதமான புகழ்பெற்ற ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். இந்த மூட்டுவலியில் முடக்கு வாதம் என்ற ஒரு வகை உண்டு. இது வந்தால் அது கண்டிப்பாக இதய நோயோடு சேர்ந்த ஒரு வாதமாக மாறுவதற்கு ஒருவாய்ப்பு உண்டு. இன்னும் சில மூட்டுவலிகள் தோல் நோயோடு சம்பந்தமான மூட்டுவலிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இவைகளை முழுமையாக சரிசெய்வதற்கு மூட்டுவலியோடு உள்தொடர்புடையதாக வரும் பட்சத்தில் மூட்டுவலியையும் சரிசெய்து, வாதநோயையும் சரிசெய்து, அந்த வாதநோய் அடிப்படையில் வரக்கூடிய வேறு சில பிரதான நோய்களையும் சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான மூலிகைப்பொருள் வாதநாராயணா.
இன்றைக்கும் சில கிராமங்களில் கை-கால் வலியாக இருக்கிறது,மூட்டுவலி வீக்கமாக இருக்கிறது, மூட்டு பழுத்து உள்ளது என்றால் இந்த வாதநாராயணா இலையை அப்படியே அரைத்து சாறெடுத்து அந்த சாறை துணியில் நனைத்து,அதை சுற்றும்பொழுது அதிலேயே இந்த வலி முழுமையாக சரியாகக்கூடிய ஒரு அற்புதமான குணம் இதற்கு உண்டு.
ஒரு சில ஆண்களுக்கு இரைப்பையின் மேல் துவாரம் (cardia) பிரச்சினையில் சேர்ந்துவிடும். அதாவது மார்பிலேயும் வலி வரும், அதே வலி வலது கால் மூட்டிலேயும், இடது கால் மூட்டிலேயும் வரும்.
அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆணோ,பெண்ணோ துடித்துப்போகக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். அந்த மாதிரி தருணங்களில் கிராமங்களில் பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான முறை என்னவென்றால் இந்த வாதநாராயணா இலை ஒரு கைப்பிடி, 3 பல் பூண்டு, 4 சிட்டிகை மஞ்சள் தூள் அவ்வளவுதான். இதனை நன்றாக விழுதாக அரைத்து,இந்த விழுதை ஒரு அரை எலுமிச்சங்காய் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது. 21 நாட்கள் விடாமல் கொடுத்தால் எப்பேற்பட்ட முடக்கு வாதமாக இருந்தாலும் சரி,மூட்டுவாதமாக இருந்தாலும் சரி,இடுப்பு வாதமாக இருந்தாலும் சரி,எந்த வாதமாக இருந்தாலும் அடியோடு விரட்டக்கூடிய தன்மை வாதநாராயணாவுக்கு உண்டு.
சிலருக்கு பக்கவாதம் (paralysis) மாதிரி பாதிக்கபடும். இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதனடிப்படையில் நடுக்கு வாதம் வரலாம். திடீரென்று பேச்சு வராமல்; போகலாம். பேச்சில் தெளிவு இருக்காது,இந்த மாதிரி இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த வாதநாராயணா இயற்கை கொடுத்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
எனவே அதையும் தொடர்ந்து விடாமல் சாப்பிடும்பொழுது அற்புதமான பலனை ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் பெறலாம்.
அதே போல் தலுதாலை என்றொரு மூலிகை இருக்கிறது. இந்த தலுதாலை மூலிகையை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கை-கால் வலியிலிருந்து, அசதியிலிருந்து, சோர்விலிருந்து, மூட்டுத்தேய்விலிருந்து, vertigo பிரச்சினையிலிருந்து அதாவது vertigo என்றால் சிலருக்கு கழுத்து எலும்பு தேய்ந்து போகும்.
நிறைய கம்ப்யூட்டர் பார்க்கக்கூடிய சூழல் இருக்கிறது. இந்த vertigo பிரச்சினைக்கு தொடர்ந்து விடாமல் ஆங்கில மருந்தில் painkillers-ஐ எடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இந்த vertigo பிரச்சினையையும் சரிசெய்யக்கூடியது தலுதாலை.
சாதாரணமாக vertigo பிரச்சினை இருக்கிறது ஒரு சிலருக்கு சிறிதுநேரம் ஒரு பொருளை பார்த்துக்கொண்டே இருந்தால் கூட முன்னால் ஒரு ஆள் பிடித்து தள்ளுவது போல் இருக்கும்,மயக்கம் வரக்கூடிய சூழல் உண்டு,
வெர்டிக்கோ அதிகமாக இருக்கக்கூடிய ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும்பொழுது அந்த நேரத்தில் தலையே சுற்றக்கூடிய சூழல் உண்டு. அவ்வாறு ஈடுபட்டு முடிந்த பிறகு படாதபாடு, தொல்லைப்படக்கூடிய ஆண்கள் நிறைய உண்டு.
அந்த மாதிரி இருக்கக்கூடிய ஆண்களுக்கு அக்ரகாரம் என்றொரு வேர் உண்டு. இதனையும்,பாதாம் பருப்பையும் சமஅளவு எடுத்து தூள் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் வெர்டிக்கோ பிரச்சனை பத்தே நாளில் சரியாகிவிடும் என்பதை முழுக்க உணர முடியும்.
இந்த மருந்தை பத்து நாளுக்குப் பிறகு சாப்பிடக்கூடாதா என்று கேட்கக்கூடாது. இந்த மருந்து ஒருஉணவுப்பொருள்.
பாதாம் பருப்பு,அக்ரகார வேர் இவையிரண்டையும் தொடர்ந்துகூட சாப்பிட்டுக்கொண்டு வரலாம். மிக அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. கழுத்து சார்ந்த எலும்பு கோளாறு, இடுப்பு சார்ந்த எலும்பு கோளாறுக்கும் பலன் தரும்.
அதே நேரத்தில் உணர்வு நரம்புகளை தூண்டக்கூடிய தன்மை இந்த அக்ரகாரம் பாதாம் பருப்புக்கு உண்டு.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் சில மலைப் பிரதேசங்களில் எலும்பு ஒட்டி இலை என்ற மூலிகை கிடைக்கும். இது மிக அற்புதமாக கேட்கக்கூடிய மருந்து.
மூட்டு சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடம்பை நன்றாக வன்மைப்படுத்தி, வளப்படுத்தி, திடப்படுத்தி, உடம்பிலிருக்கும் ஒவ்வாமை, உடம்பிலிருக்கும் மற்ற விசயங்களை சரிசெய்து, எலும்புக்கு நல்ல ஊட்டமும், ஆற்றலும் கொடுக்கக்கூடிய அற்புதமான பொருள் இந்த எலும்புஒட்டி இலை.
இன்றைக்கு நிறைய ஆதிவாசிகளாக இருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் பயன்படுத்தக்கூடிய மூட்டுவலிக்கான பொருள் எது என்று பார்த்தால் இந்த எலும்புஒட்டி இலைதான்.
செஞ்சி மலைக்குச் சென்றால் துவரை இலை மாதிரியே இந்த இலை கிடைக்கும். அந்த இலையை உருவி அதை மென்று சாப்பிட்டால் வளவளவென்று வெண்டைக்காய் போல் இருக்கும். அந்த இலையை தொடர்ந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் சாப்பிட்டுப்பாருங்கள்.
எப்பேற்பட்ட மூட்டுத்தேய்மானமும் முழுமையாக சரியாகும்,அந்த அளவிற்கு அற்புதமான மருந்து.
ஆக இந்த எலும்பு ஒட்டிஇலையை அரைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது மூட்டுவலி சார்ந்த பிரச்சினைகள் எல்லாமே சரியாகும்.
ஆக உணவை வைத்து மறுபடியும் உடலை உறுதிப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக ஒரு நோய் போய்விட்டது என்றால் அது மறுபடியும் வருவதற்கு எந்தவித வாய்ப்பும் முகாந்திரமும் கிடையாது.
இன்றைக்கு இருக்கக்கூடிய தென் தமிழகத்தில் அதாவது நாகர்கோவில் போன்ற இடங்களில் காயத்ரிமேனி எண்ணெய் என்று ஒரு எண்ணெய் உண்டு.
இந்த காயத்ரிமேனி,நொச்சி,பேய்புரள் இப்படி ஏகப்பட்ட கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களை சேர்த்து அந்த காயத்ரி மேனி எண்ணெயை செய்கிறார்கள்.
அதே எண்ணெயை உள்ளே குடிக்கலாம் வலி போகும். அதே எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம் மூட்டுவலி போகும்.
No comments:
Post a Comment