Friday, 18 August 2017

தூதுவளை கஷாயம்

தூதுவளை கஷாயம்

தேவையான பொருட்கள்:
தூதுவளை - கைப்பிடி அளவு
மிளகு - அரை தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு தூதுவளையை எடுத்து அலம்பி, ஒரு டம்ளர் தண்ணிர் விட்டு  அதோடு அரை தேக்கரண்டி மிளகுத்தூள் போட்டு அடுப்பில்  வைக்கவும்.தண்ணிர் கொதிச்சி அரை டம்ளர் ஆனதும் இறக்கவும்.ஆறினதும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
☘☘☘☘☘☘
தூதுவளை மருத்துவக் குணங்கள்:

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.

No comments:

Post a Comment