Tuesday, 1 August 2017

நீர்பூண்டு


இந்த மூலிகை நீர்பூண்டு என்று பெயர்.

நாள்பட்ட காயங்களை ஆற்றும் வல்லமை படைத்தது.எனக்கு முழங்காலுக்கு கீழே எலும்பில் மண்வெட்டி பட்டு காயமேற்பட்டிருந்த்து.பல நாட்கள் காயம் ஆறாமல் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன்.மூன்று நாட்கள் கழித்து மருத்துவர் புண் அழுகிவிட்டது என்றும் எனவே காலை வெட்டி எடுத்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். எனக்கும் எனது அப்பாவுக்கும் பெரிய அதிர்ச்சி. எனது அப்பா தெளிவான ஒரு முடிவை எடுத்தார். எனக்கு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள, அவன காலில்லாம நொண்டியாவெல்லாம் எங்களால பார்க்க முடியாது. அவன் செத்தாலும் காலோடு சாவட்டும் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நீண்ட நாள் உதியமர பட்டையை நசுக்கி காயத்திற்கு கட்டு போட்டோம்.ஆனால் காயம் ஆறவில்லை.ஒருநாள் எங்க ஊர் ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு பெரியவர் என் காலை பார்த்து விட்டு இந்த பூண்டை நசுக்கி கட்டு காயம் ஆறிவிடும் என்றார். செய்தேன். இப்போதுமாநிலம் முழுவதும் பம்பரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அந்த பெரியவரும் இந்த பூண்டுந்தான் காரணம்.இந்த அற்புதமான வைத்தியத்தை சொன்ன அந்த பெரியவரைஅதற்குப்பிறகு நான் சந்திக்கவே இல்லை.

No comments:

Post a Comment