Tuesday, 27 March 2018

அதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்

அதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்!

சிறுகீரை: சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும்.

முளைக்கீரை; முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும். மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும். இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

சாணாக்கீரை: இந்தக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மகோதரம் என்னும் வியாதியை இது பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும்.நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது இந்தக்கீரையை சமைத்து சாப்பிட்டால் கபம் உடைந்து வெளியேறிவிடும்.

சிறுபசலைக்கீரை: மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. இதைச்சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உடல்சூட்டைத்தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. கபத்தை உண்டுபண்ணும். சிறுநீர் தொடர்புடைய அனைத்து வியாதிகளையும் குணமாக்கும். இதில் வைட்டமின் பி உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது.

அரைக்கீரை; இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.

புளியரைக்கீரை: இதை உட்கொண்டால் மூலம் தொடர்புடைய வியாதிகள் குணமடையும், வாத நோயை தணிக்கும். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.

மிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும்.வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி , சிரங்குகளைக் குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.

இலட்சக்கெட்டை கீரை: இந்தக்கீரையை சாப்பிட்டு வர வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான். காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும் சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !

எந்த உணவுகளை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்?
🍝 வழக்கமாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலம் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

🍝 வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு சில உணவு வகைகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டியது அவசியம்.

எந்தெந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்?

🍝 உப்பு, புளிப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

🍝 மசாலா பொருட்களான மிளகு, பட்டை, இலவங்கம் போன்ற பொருட்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

🍝 எண்ணெயில் செய்த பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

🍝 சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

🍝 ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

🍝 கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

🍝 வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.

🍝 வெயில் காலத்தில் கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

🍝 பயிறு, ராகி, அதிக மைதா உணவுகள், எள்ளு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

🍝 அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

🍝 கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சு ட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே, இதனை தவிர்ப்பதே நலம்.

🍝 உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.

🍝 வெயில் காலத்தில் குளிர்ச்சியான குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இந்த குளிர்பானங்களில் உள்ள சில பொருட்கள் உடலில் உள்ள தண்ணீரை சிறுநீர் மூலம் அதிகளவில் வெளியேற்றிவிடும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

பூமிக்கடியில் கட்டபட்ட கோயில்..ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயம்!

பூமிக்கடியில் கட்டபட்ட கோயில்..ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயம்! : காஞ்சி-அய்யங்கார்குளம் ஆஞ்சநேயர் கோயில் வியப்பின் சரித்திர குறியீடு!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசயம்.

இந்த ஊரிலிருக்கும் பிரபலமான, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது.

மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோயில் பூமிக்கடியில் உருவாக்கப் பட்டு, அதற்குள் அழகிய மண்டபமும், அதன் நடுவே கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்தக் கோயில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது.
   
சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை மோட்டார் இயந்திரம் மூலம் வெளியேற்றி விடுவார்கள். விழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவராக வருவார். அவர் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார்.

லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிசயக் கிணற்றுக் கோயிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன் படுத்துகிறார்கள்.

இன்னொரு அதிசயமும் இந்தக் கோயிலுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலில் இருந்த உற்சவர் ஐம்பொன்னால் செய்யப் பட்ட ஆஞ்சநேயர் சிலை திருடு போய் விட்டது. ஊர் மக்கள் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். சிலையை எடுத்துச் சென்ற திருடர்களால் அந்த சிலையை வெகு தூரம் கொண்டு செல்ல இயலவில்லை.

எனவே ஒரு குளத்தில் அந்த சிலையைப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சிலை கண்டெடுக்கப் பட்டு மீண்டும் இந்தக் கோயிலுக்கே வழங்கப் பட்டது. இது இங்குள்ள ஆஞ்சநேயரின் மகிமையாக இந்த ஊர் மக்கள் கருதுகிறார்கள்.

மேலும் கருவரையைச் சுற்றி வரும் போது, தவழ்ந்து தான் செல்ல முடியும். அதற்காகவே குறுகலாகப் பாதையை அமைத்துள்ளார்கள்.

கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!

கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!

கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தியை கொண்டு நீர் இழப்பை சமன் செய்து உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: செம்பருத்தி இதழ்களை எடுக்கவும்.

இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதய நோய் இல்லாமல் போகும். பருத்தி இனத்தை சேர்ந்த செம்பருத்தி பல்வேறு நன்மைகளை கொண்டது. இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது.

வெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஊறவைத்த வெந்தயத்தை நீருடன் எடுக்கவும். இதனுடன் சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர ஆசனவாய், சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும்.  உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்புச்சத்தை கொண்டது.

சிறுநீர் பெருக்கியாக சோம்பு விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்றுப்பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு. செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.

நோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திருநீற்று பச்சையை காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணத்தை கொண்டது. விதைகள் மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

இது, பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம். தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். வியர்குருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் பெறும்.

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

*வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

*வெந்தய டீ தயாரிப்பது எப்படி?*

*ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.*

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

*நன்மை 1*

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 2*

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

*நன்மை 3*

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

*நன்மை 4*

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

*நன்மை 5*

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

*நன்மை 6*

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

*நன்மை 7*

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

*நன்மை 8*

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

*நன்மை 9*

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

*நன்மை 10*

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

*நன்மை 11*

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

*நன்மை 12*

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

*நன்மை 13*

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

*நன்மை 14*

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 15*

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

*நன்மை 16*

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

*நன்மை 17*

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

*நன்மை 18*

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

*நன்மை 19*

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

*நன்மை 20*

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே

உணவே மருந்து
பலமுறை படியுங்கள், மற்றவர்களுடன் share செய்யுங்கள்.
நோய் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டுத்தான் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே அதைச் சரி செய்து கொள்ளலாம். கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! ஆனால் உண்மை அதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. அதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
உணவில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்துக் குறைக்க வேண்டியதைக் குறைத்தால் நோய் தானாகவே சரியாகிவிடும். ஒழுங்கான உணவுப் பழக்கத்தினால், எந்தப் பிணியும் வராமல் தடுத்துக் கொள்ளலாம். நமது உடல் எப்போதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்கிறது. தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது, நுரையீரல் சுருங்கி காற்றை உள்வாங்கியும், பிறகு வெளிவிடவும் செய்கிறது. இதன் மூலம் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தைச் சீராக உடல் முழுவதும் பரப்புகிறது.
நாம் தினமும் வேலை செய்வதால், உடல் மெலிந்து போக வேண்டுமல்லவா! ஏன் அப்படி நடப்பதில்லை? கடினமான உழைப்பில் உடலில் தேய்த்து போகும் பாகங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றன. அப்படிப் புதுப்பிக்கும் பணியினைத் தொடர்ந்து செய்வது இரத்தமாகும். இரத்தம் உடலெங்கும் ஓடி, ஒவ்வொரு பாகத்திற்கும் வேண்டிய சத்துப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறது. இப்படி நாம் உயிர்த்திருப்பதற்குரிய சரும பணியைச் செய்து வரும் இரத்தம், அவரவர் உண்ணும் உணவிலிருந்தே ஏற்படுகிறது. அவரவர் உண்ணும் உணவு, அவர்களுக்கு வேலை செய்யும் சக்தியை அளிக்கிறது.
சிறுவர்களாக இருக்கும்போது தேகத்தின் பல உறுப்புகளை நன்கு வளர்க்கிறது. நாம் உண்ணும் உணவு, உடல் நன்கு வளர்ச்சியடைவதற்கும், உடலின் உறுப்புக்கள் நன்கு வேலை செய்தவற்கும் உதவும்படியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும் மற்றும் உடலை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு அவசியம் வேண்டிய ஐந்துவித சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன. அவை, கார்போஹைட்டிரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், கனிச்சத்து ஆகியவை ஆகும். அரிசி போன்ற உணவுகளில் வேண்டிய மாவுச் சத்து கிடைக்கிறது.
பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கிறது. சமையல் எண்ணெயில் கொழுப்புச் சத்தும் அதிகம். பால்போன்ற உணவு வகைகளிலும் காய்கறியிலும் பலவிதச் சத்துக்கள் உள்ளன. இவற்றுள் மாவுச் சத்தும், புரோட்டீனும், கொழுப்புச்சத்தும், உடலுக்கு வேண்டிய சக்தியை வாங்கி அதைத் தொடர்ந்து இயங்கச் செய்வதால், உடலின் வளர்ச்சி சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. வைட்டமினும், கனிச்சத்தும் உடலுக்கு அதிக அளவில் சக்தியைத் தருவதில்லை என்றாலும், உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் சீராகவும், செம்மையாகவும் நிகழ்வதற்குச் சிறிது அடிப்படை சக்தி எப்போதும் தேவைப்படுகிறது.
இதற்கும் மேலாக அவரவர் தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறு சக்தி தேவைப்படுகிறது. உடலுழைப்பு அதிகமாக அதிகமாக சக்தியும் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் சோற்றில் இந்தக் கஞ்சியை ஊற்றி ஊற வைத்து காலையில் உண்டு வர உடல் பலம் பெறும். இதில் மோர் கலந்து பருகினால் அதிக சூதகப் போக்கைக் கட்டுப்படுத்தும். உளுந்துப் பருப்பும் அரிசியும் கலந்து தயாரிக்கும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும். வாயுவை உண்டு பண்ணும். வாத நோயாளிகள் இதை உண்ணாமல் இருப்பது நல்லது. வயதானவர்கள் கொள்ளும் அரிசியும் கலந்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பலம் பெறும். கோதுமையைக் காய வைத்து இடித்து உமியை நீக்கிவிட்டு உடைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வாத சுரம், கபநோய்கள், சன்னி முதலியவை குணம் பெறும். அடிக்கடி குடித்து வர அதிகமாகப் போகும் சூதகம் கட்டுப்படும். இதில் பால் சேர்த்து உண்பது உடல் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
சோளக் கஞ்சியை, மோர் அல்லது தயிர் சேர்த்து உண்பது நன்மை பயக்கும். மலக்கட்டு நீங்கும். குழந்தைப் பேறில்லாத ஆண் பெண்கள் நாற்பத்தெட்டு நாட்களுக்கு இரவில் தினைக்கஞ்சியுடன் தேன் கலந்து உண்டு வர குழந்தைப் பேறு உண்டாகும். நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் பித்தம் நீங்கும். பைத்தியம் பிடித்தவர்களுக்கு தினமும் ஒரு வேளையாவது இதைக் குடிக்கக் கொடுத்து வருவது நன்மை பயக்கும். பச்சரியும், சிறுபயறும் கலந்து வைக்கப்படும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும்: பித்தத்தையும் குணப்படுத்தும். பார்லிக் கஞ்சியை பகலில் மட்டுமின்றி இரவிலும் சாப்பிடலாம்.
அனைத்து வித நோயாளிகளுக்கும் பார்லிக் கஞ்சியே சிறந்தது. 200 கிராம் பார்லியுடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து இளம் கறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு தேக்கரண்டித்தூளில் 250 மி.லி. நீர் விட்டு கஞ்சி காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து இரவு உணவுக்குப் பின் அருந்த மலக்கட்டு நீங்கும். குழந்தைகளுக்குக் காலை உணவாக இதையே கொடுக்க மலச்சிக்கல் தீரும். வெந்தயக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. காபி காய்ச்சலின் வேகத்தைக் குறைக்கும்.
சளியை முறிக்கும். தினமும் காபி குடிப்பவர்களுக்கு சுவாசகாசம் வரும் வாய்ப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைவாக இருக்கும். அதிகமாக தேநீர், காபி குடித்தால் தாது மற்றும் உயிர்ச்சத்து இழப்பு ஏற்படும். சிறுநீரை அதிகளவு வெளியேற்றிவிடும். பித்தத்தை உற்பத்தி செய்யும் இதய நோயாளிகள் பருகக்கூடாது. அதிக காரச் சுவை உள்ள குழம்பு வாதத்தை அதிகப்படுத்தும். புளிப்புச் சுவை குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த கப நோய்களைப் போக்கும். உப்புச் சுவையையும் குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.
உப்புச் சுவையையும் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். கேழ்வரகுக் கூழ் களி, உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்த நோய்களைப் போக்கும். வாத நோயைத் தோற்றுவிக்கும். கொழுக்கட்டை, இது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்தத்தையும் வாதத்தையும் அதிகப்படுத்தும்.
கோதுமை அடை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். கோதுமை ரொட்டி உட்கொள்வதால் உடலில் இரத்தம் உண்டாகும். உடல் பலம் பெறும். உடல் சூட்டை சிறிது அதிகரிக்கும். சவ்வரிசி நோயாளிகளின் பலவீனத்தைப் போக்கும். வெண்குட்டம், வெள்ளைப் போக்கை குணப்படுத்தும் அதிகமாக உட்கொண்டால் சளிப்பிடிக்கும். அதிக சூடான கெடுதலை விளைவிக்கும். சூடாக உண்டால் மனநோய், பித்த நோய் ஏற்படும். இரத்த பித்தம், தலை, சுற்றல், மயக்கம், எரிச்சல், பலக்குறைவு அதிக தாகத்தை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இளஞ்சூடான சோற்றை உண்பதே நம் உடலுக்கு நன்மை பயக்கும். வாத, பித்த கப நோய்கள் குணமடையும். நம் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் மிகவும் குழைந்துவிட்ட சோறு உடலின் வெப்ப சமனிலையைக் கெடுக்கும்.
உலர்ந்துள்ள சோறு அஜீரணத்தை உண்டாக்கும். காந்தலான சோறு சீரண உறுப்புகளைப் பாதிக்கும். நன்றாக வேகாத சோறு மந்தத்தை உண்டாக்கும். உணவு உண்ணும்பொழுது கடைசியில் தயிர்விட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் வாத, பித்த, கபக் குற்றங்களை நீக்கும்.
கபக் குற்றங்களைச் சமன் செய்யும். சோறில் மோர் கலந்து சாப்பிடுவதால் நல்ல சீரணசக்தி உண்டாகும். பித்தம், மேகம், மூலமுளை குணமாகும். பாண்டு கிராணி நோய்களும் குணமாகும். உளுந்துச் சோறு உடலுக்கு நல்ல வலிமை தரும். பித்தநோய்களைப் போக்கும். வாதத்தை அதிகரிக்கும். எலுமிச்சம் சாதம் பித்தத்தைப் போக்கும். கண்பார்வையைத் தெளிவடையச் செய்யும். உடல் சூட்டைத் தணித்து சம நிலையில் வைக்கும். எள் கலந்து தயாரிக்கப்படும் சோறும், உடலுக்கு நல்ல வலிமை தரும். வாத பித்தக் குற்றகங்ளை நீங்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ஓரளவு நெய் சேர்த்து சோற்றைத் தாளித்து உண்டு வந்தால் பித்த நோய்கள் குணமடையும். கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும். உடலுக்குப் பல நன்மைகளை உண்டாக்கும். கடுகு போட்டு, சிறிது புளியும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சோறு வாத, கப நோய்களைப் போக்கும். கம்புச் சோறு இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். புண்கள் விரைவில் ஆறாது. இருமல், இரைப்பு இவைகளைத் தோற்றுவிக்கும். சாமை அரிசியைக் குத்தி சோறாகவோ, கஞ்சியாகவோ செய்து உட்கொண்டு வந்தால் தாது விருத்தியடையும். வாத, கபநோய்களைப் போக்கும்.
சுத்தமான நல்லெண்ணெய் கலந்து தாளித்துத் தயாரிக்கப்படும் சோறு வாத நோய்களைக் குணப்படுத்தும். நம் உடலுக்கு நல்ல வலுவையும், புணர்ச்சியில் விருப்பத்தையும் உண்டாக்கும். பசும்பாலைக் கொதிக்க வைத்து, அரிசியை போட்டு வேக வைத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து உண்டு வர மிகுந்த நன்மை உண்டாக்கும். வாயுவை உண்டாக்கும். இதை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. புளியைக் கரைத்து வரமிளகாய், பெருங்காயம், கடுகுபோட்டுத் தாளித்துத் தயாரிக்கப்டும் சோறு பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். மேக நோயைக் குணப்படுத்தும். இருமலை உண்டு பண்ணும். உடல் வலியை உண்டாக்கும். ருசியின்மையைப் போக்கும். மிளகு கலந்துத் தயாரிக்கப்படும் சோறு. வாயுத் தொந்தரவுகளைப் போக்கும். நல்ல சீரண சக்தியை உண்டாகும்.
பித்தம், கபம் இவற்றைப் போக்கும் துவரம் பருப்பு மசியல்.. துவரம் பருப்புக் குழம்பு அல்லது மசியலுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல், வாத, கப நோய்கள் குணமடையும். உடலுக்கு நல்ல வலுவையும் பார்வைத் தெளிவையும் உண்டாக்கும்.
துவரம் பருப்பு இரசம், துவரம் பருப்பு வேக வைத்த நீரில் மிளகு பூண்டு பெருங்காயம் சேர்த்து வைக்கப்படும் இரசத்தை உண்பதால் அக்னி மாந்தம் நீங்கும். வாத நோய்களைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவை அதிகமாகச் சேர்த்துச் செய்யப்படும் துவையல் இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். கார சுவையுள்ள துவையல் நல்ல பசியை உண்டாக்கும் புதினாத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்கும். ருசியின்மையைப் போக்கும். கொத்துமல்லித் துவையல் உடலின் அதிக சூட்டைத் தணிக்கும் ஏப்பம் வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சலைப் போக்கும். சீரணத்தைத் தூண்டும். இஞ்சித் துவையல் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். பசியைத் தூண்டும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி இஞ்சி, பூண்டு, புளி சேர்த்துச் செய்யப்படும் துவையலை காக்கை வலிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து உண்டு வர குணம் கிடைக்கும். பீர்க்கங்காய்த் துவையல் ருசியின்மையைப் போக்கும். தேநீர் தயாரிக்க முன்பு கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தக்கூடாது. நீர் கொதிக்கத் துவங்கும்பொழுதுதான் தேநீர் தூளைக் கலக்க வேண்டும். இதயத்தைத் தூண்டும். நரம்புகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கும். சீதபேதியைப் போக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும். நஞ்சு உட்கொண்டவர்களுக்கு முதலுதவியாக தேநீரைப் பருகக் கொடுக்கலாம். பால் சேர்க்காத தேநீர் இதய நோய், புற்று நோய் வருவதைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்கும். பக்கவாத நோயாளிகளுக்கு நல்லது. பக்கவாதம் வராமலும் தடுக்கும். அதிகமாக பருகக்கூடாது.
தோசை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். பித்தக் கோளாறுகளைப் போக்கும். புளிப்புச் சுவையுள்ள பச்சடி பித்த நோயைத் தோற்றுவிக்கும். உறைப்புச் சுவையுள்ள பச்சடி வாத நோயைத் தோற்றுவிக்கும். வாழைத் தண்டு பச்சடி உடல் சூட்டைத் தணிக்கும், வாத, பித்த கபக் குற்றங்களைக் குறைக்கும். இறைச்சி கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி, இவ்வுணவு நம் உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மந்தத்தைத் தோற்றுவிக்கும்.
புட்டு : பத்தக் கோளாறுகளைப் போக்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். சர்க்கரைப் பொங்கல் உடலில் புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். ருசியின்மையைப் போக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பித்த, வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். மிளகு அதிகமாகப் போட்டுத் தயாரிக்கப்படும் பொங்கல் பசியின்மையைப் போக்கும். குடல், இறைச்சல், வாயுப் பொருமல், பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்கும். பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பு கலந்து தயாரிப்பது உடலுக்கு நல்ல பலம் தரும். உடல் சூட்டை அதிகப்படுத்தும்.
சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு சூட்டை அதிகப்படுத்தும். சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு ஆகாது. பால் பொங்கல் உடல் சூட்டை சமப்படுத்தும். வாதத் தொடர்பான நோய்களை அதிகப்படுத்தும்.
பொரியல் வகைகள் : நிறைய எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் பொரியல் வகைகளில் உப்புச் சுவை அதிகமானால் கபத்தைத் தோற்றுவிக்கும். காரம் அதிகமானால் பசியின்மை. வாத நோய்கள் உண்டாகும். துவர்ப்புச் சுவை அதிகமானால் சுறுசுறுப்பு உண்டாக்கும். வயிற்றுப் பூச்சிகளைப் போக்கும்.
முறுக்கு : அரிசி, உளுந்து மாவு சேர்த்து செய்யப்படும் இதைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். வாதத் தொடர்பான கோளாறுகளைப் போக்கும். பித்தத்தை உற்பத்தி செய்யும்.
மோதகம் : புழுங்கல் அரிசி, மாவு, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து செய்யப்படும் இதை உண்பதால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி, தாது விருத்தி உண்டாகும்.
வறுவல் : எண்ணெய் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை இளம் வறுவலாக வறுத்து உண்டால் மந்தத்தை உண்டாக்கும். நடுத்தரமாக வறுத்து உண்டால் நீர்க் கோர்வையை நீக்கும். கறுக வறுத்து உண்டால் வாத, பித்த, கபக் குற்றங்களைத் தோற்றுவிக்கும்.
வடை : உளுந்து வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும். வாத நோய் உள்ளவர்களுக்கு ஆகாது. தயிர்வடை உடலுக்கு பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். நிறைய அளவு வெங்காயத்தை உளுந்து மாவில் போட்டு வெங்காய வடை செய்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணிந்து சமன்படும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணெய் : கண், காது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். அறிவுத் தெளிவை உண்டாக்கும். தோல் நோய்களைப் போக்கும். அடிப்பட்ட காயம், புண், ஆவி அல்லது கொதி நீரால் ஏற்பட்ட புண்ணுக்கு நல்லெண்ணெயை எலுமிச்சை சாறில் கலந்து பூசி வர குணம் கிடைக்கும்.
கடலெண்ணெய்: உடலுக்கு நல்ல பலம் தரும். வாதத் தொடர்பான நோய்களைத் தணிக்கும். எலும்புக்கு பலத்தைக் கொடுக்கும். இரத்தக் கொதிப்பை சமன் செய்யும், ஊைளச்சதையைக் குறைக்கும். தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பைப் போக்கும். நீர்ச்சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பிரிக்கும். உடல் எரிச்சல், நீர் எரிவைப் போக்கும். சிறுநீர்ப்பைக் கற்களைக் கரைத்து சுத்தமாக்கும்.
வாய்ப்புண், வாய்நாற்றத்தைப் போக்கும். மாதவிலக்குக்கு முன்னர் சாப்பிட மாதவிலக்கு வயிற்று வலியைப் போக்கும். மாதவிலக்கிற்குப் பின்னர் சாப்பிட களைப்பைப் போக்கும். வெள்ளைப் போக்கை குணமாக்கும். பித்தத்தை உண்டு பண்ணும். சுவாசகாசம், வாத நோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தலைவலி உள்ளவர்கள் உண்ணாமல் இருப்பது நல்லது. மாதவிலக்கு நாட்களிலும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கடுகெண்ணெய்: உணவில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும். தசை வலியைப் போக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளைப் போக்கும்.
தேங்காய் எண்ணெய்: வாய்ப்புண், வயிற்றுப்புண், கருப்பைப் புண்ணை குணமாக்கும். புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்லது.
பனையெண்ணெய் (பாமாயில்): கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.
சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள்:
மண்பாண்டத்தில் சமைப்பது தான் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு கண்நோய், மூல நோயைப் போக்கும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு புத்தியை வளர்க்கும். அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். நரம்பு, எலும்புத் தொடர்பான நோய்களைத் தோற்றுவிக்கும்.
உண்கலங்கள்: பொன்னால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தாது விருத்தியடையும். சீரண சக்தி உண்டாக்கும். பித்த, வாத, கப நோய்கள் உண்டாகாது. வெள்ளியால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் கண்களுக்கு நலம் தரும்.
பித்த கப நோய்கள் குணமடையும். உடலுக்குப் பொலிவைத் தரும். மன மகிழ்ச்சியைத் தரும். வாத நோயைத் தோற்றுவிக்கும். செம்பால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும் மன மகிழ்ச்சியைத் தரும். எந்த நோயும் அணுகாது. இரத்தத் தொடர்பான நோய்கள் குணமாகும். பித்தநோய்கள் குணமாகும். வெண்கலத்தில் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் களைப்பு நீங்கும். அனைத்து உடல் தொந்தரவுகளும் தீரும். பித்த நோய்கள் குணமாகும். கண்கள் ஒளிபெறும். தாது வலிமையடையும், உடல் தேறும்.
இரும்பு, கண்ணாடிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வீக்கம், சோகை குணமாகும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் வாத, பித்த, கப நோய்கள் குணமாகும். மண்ணால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் காசநோய் குணமாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். ஆண்மையை வளர்க்கும். வயிறுமந்தத்தைப் போக்கும். பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும். பக்க வாதம் குணமாகும். உடல் நடுக்கம் குணமாகும். காச நோய் குணமாகும்.
பலா இலையில் உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய் மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும். உணவு உட்கொள்வதற்கான காலமும், முறைகளும், முன்பு உண்ட உணவு செரித்து பசி உண்டாகியிருக்க வேண்டும். ஏப்பம் சுத்தமாயிருக்க வேண்டும். மலம், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தால், கழித்த பிறகே உண்ண வேண்டும்.
சூடானவையும், எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகளும் சிறந்தவை. தூய்மையானதாகவும், அறுசுவை நிறைந்ததாகவும், உண்ண வேண்டும். மிகவும் குறைவாகவோ, மிகவும் அதிகமாகவோ உண்ணக் கூடாது. மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இல்லாமல் கூழ்போல் மென்று உண்ண வேண்டும். கோபமாகவும், துன்பப்படும் பொழுதும் உணவு உட்கொள்ளக் கூடாது. உணவு உண்டவுடன் சிறிது நடப்பது நல்லது. உட்காருவதோ, படுப்பதோ, ஓடுவதோ கூடாது. காலை உணவு உண்பது முக்கியமானது மட்டுமல்ல, அவை சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். நீடித்த உடல் நலத்திற்கு அடித்தளமாக இருப்பது காலை உணவுதான்.
உடல் சுறுசுறுப்பாக இருக்கும். கொலஸ்டிரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதயக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறையும். முதலில் கடினமான உணவுப் பொருட்களையும், பிறகு மிருதுவான பொருட்களையும் உண்ட பிறகு திரவப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். வேலை செய்து, நடந்து, வெயிலில் அலைந்து களைத்துள்ள பொழுது உண்பதோ, பருகுவதோ கூடாது. தாகமுள்ள பொழுது, உணவு உட்கொள்வதோ, பசியுள்ள பொழுது நீர் அருந்துவதோ கூடாது. அதனால் முறையே குன்ம நோயும் வயிற்றில் நீர்க்கோர்வையும் ஏற்படும். எண்ணெய்ப் பசையில்லாத உணவு உடல் வலுவையும், ஒளியையும் போக்கிவிடும். தோல் வறட்சி மலக்கட்டை உண்டாக்கும்.
மிகவும் குளிர்ந்து போன உணவு, சளி, களைப்பு, ருசியின்மை, குமட்டல், அஜீரணம் ஆகியவற்றை உண்டாக்கும். மிகவும் கெட்டியான உணவு சிறுநீர் மலத்தை வெளியேற்றுவதில்லை. விரைவில் சீரணமாகாது. மிகவும் இனிப்பான உணவு பசியை அடக்கிவிடும். உப்பு அதிகமாக உள்ளஉணவு கண்களுக்குக் கெடுதலை உண்டாக்கும். காரம், புளிப்பு நிறைந்த உணவு கிழத்தன்மையை உண்டாக்கும் சாப்பிடும் பொழுது முதலில் இனிப்பான உணவையும் பிறகு புளிப்பு உப்பு கார உணவையும் உட்கொண்டு கடைசியாக துவர்ப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த பொருளுடன் சூடான பொருளையும் புதிய பொருளுடன் பழையதையும், பச்சையான பொருளுடன் வேகவைத்ததையும் கலந்து உட்கொள்ளக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர், கொழுப்பு இவற்றில் ஏதேனும் இரண்டையோ, பலவற்றையோ சம அளவில் கலந்து உட்கொள்ளக் கூடாது.
கள், தயிர், தேன் அவற்றை உடக் கொண்ட உடனே சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. நம் முன்னோர்கள் அறுசுவைகளையும் சுவைக்காக மட்டுமன்றி நோய் நீக்கவும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு சுவையை ஏற்றத் தாழ்வுகளுடன் உண்டு நோய் வராமலும், வந்த நோய்களைப்போக்கிக் கொள்ளவும் முடியும். இது நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. எனவே தான் உணவே மருந்து, மருந்தே உணவு எனும் வார்த்தை பொருள் பொதிந்ததாக இருக்கின்றது.
ஆம். நம் உணவு முறை நம் உடலுக்கு மருந்தாகவும் விளங்குகின்றது. இனிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு எனும் இந்த அறுசுவைகளும், உடலில் முறையே தசை, நரம்பு, உமிழ்நீர், இரத்தம், எலும்பு, கொழுப்பு எனும் ஆறு தாதுக்களையும் உயிர்க்கச் செய்கின்றன. இந்தத் தாதுக்கள் சரியாக இருக்கும் பொழுது இன்னொரு முக்கியமான தாதுவான மூளை சரியாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு இரத்தமாக மாறி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகின்றன.
இரத்தம் அதிகமானால் கால் குடைச்சல். தூக்கமின்மை, திமிர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இரத்தம் குறைந்தால், உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் போன்றவை ஏற்படும். இனிப்பு கபத்தை அதிகப்படுத்தும். காரம் கபத்தைக் குறைக்கும். துவர்ப்பு வாதத்தை அதிகப்படுத்தும், புளிப்பு வாதத்தைக் குறைக்கும். இந்த அறுசுவைகளில் ஒன்றுக்கொன்று நட்பு, பகை கொண்டவைகளாவும் உள்ளன.
உப்பு: வலது கை பித்த நாடியில் நம் உடலிலுள்ள உப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். உடலை மென்மையாக்கும். எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்துவை வளர்க்கிறது.