Tuesday, 27 March 2018

அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே

உணவே மருந்து
பலமுறை படியுங்கள், மற்றவர்களுடன் share செய்யுங்கள்.
நோய் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டுத்தான் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே அதைச் சரி செய்து கொள்ளலாம். கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! ஆனால் உண்மை அதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. அதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
உணவில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்துக் குறைக்க வேண்டியதைக் குறைத்தால் நோய் தானாகவே சரியாகிவிடும். ஒழுங்கான உணவுப் பழக்கத்தினால், எந்தப் பிணியும் வராமல் தடுத்துக் கொள்ளலாம். நமது உடல் எப்போதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்கிறது. தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது, நுரையீரல் சுருங்கி காற்றை உள்வாங்கியும், பிறகு வெளிவிடவும் செய்கிறது. இதன் மூலம் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தைச் சீராக உடல் முழுவதும் பரப்புகிறது.
நாம் தினமும் வேலை செய்வதால், உடல் மெலிந்து போக வேண்டுமல்லவா! ஏன் அப்படி நடப்பதில்லை? கடினமான உழைப்பில் உடலில் தேய்த்து போகும் பாகங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றன. அப்படிப் புதுப்பிக்கும் பணியினைத் தொடர்ந்து செய்வது இரத்தமாகும். இரத்தம் உடலெங்கும் ஓடி, ஒவ்வொரு பாகத்திற்கும் வேண்டிய சத்துப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறது. இப்படி நாம் உயிர்த்திருப்பதற்குரிய சரும பணியைச் செய்து வரும் இரத்தம், அவரவர் உண்ணும் உணவிலிருந்தே ஏற்படுகிறது. அவரவர் உண்ணும் உணவு, அவர்களுக்கு வேலை செய்யும் சக்தியை அளிக்கிறது.
சிறுவர்களாக இருக்கும்போது தேகத்தின் பல உறுப்புகளை நன்கு வளர்க்கிறது. நாம் உண்ணும் உணவு, உடல் நன்கு வளர்ச்சியடைவதற்கும், உடலின் உறுப்புக்கள் நன்கு வேலை செய்தவற்கும் உதவும்படியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும் மற்றும் உடலை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு அவசியம் வேண்டிய ஐந்துவித சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன. அவை, கார்போஹைட்டிரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், கனிச்சத்து ஆகியவை ஆகும். அரிசி போன்ற உணவுகளில் வேண்டிய மாவுச் சத்து கிடைக்கிறது.
பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கிறது. சமையல் எண்ணெயில் கொழுப்புச் சத்தும் அதிகம். பால்போன்ற உணவு வகைகளிலும் காய்கறியிலும் பலவிதச் சத்துக்கள் உள்ளன. இவற்றுள் மாவுச் சத்தும், புரோட்டீனும், கொழுப்புச்சத்தும், உடலுக்கு வேண்டிய சக்தியை வாங்கி அதைத் தொடர்ந்து இயங்கச் செய்வதால், உடலின் வளர்ச்சி சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. வைட்டமினும், கனிச்சத்தும் உடலுக்கு அதிக அளவில் சக்தியைத் தருவதில்லை என்றாலும், உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் சீராகவும், செம்மையாகவும் நிகழ்வதற்குச் சிறிது அடிப்படை சக்தி எப்போதும் தேவைப்படுகிறது.
இதற்கும் மேலாக அவரவர் தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறு சக்தி தேவைப்படுகிறது. உடலுழைப்பு அதிகமாக அதிகமாக சக்தியும் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் சோற்றில் இந்தக் கஞ்சியை ஊற்றி ஊற வைத்து காலையில் உண்டு வர உடல் பலம் பெறும். இதில் மோர் கலந்து பருகினால் அதிக சூதகப் போக்கைக் கட்டுப்படுத்தும். உளுந்துப் பருப்பும் அரிசியும் கலந்து தயாரிக்கும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும். வாயுவை உண்டு பண்ணும். வாத நோயாளிகள் இதை உண்ணாமல் இருப்பது நல்லது. வயதானவர்கள் கொள்ளும் அரிசியும் கலந்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பலம் பெறும். கோதுமையைக் காய வைத்து இடித்து உமியை நீக்கிவிட்டு உடைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வாத சுரம், கபநோய்கள், சன்னி முதலியவை குணம் பெறும். அடிக்கடி குடித்து வர அதிகமாகப் போகும் சூதகம் கட்டுப்படும். இதில் பால் சேர்த்து உண்பது உடல் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
சோளக் கஞ்சியை, மோர் அல்லது தயிர் சேர்த்து உண்பது நன்மை பயக்கும். மலக்கட்டு நீங்கும். குழந்தைப் பேறில்லாத ஆண் பெண்கள் நாற்பத்தெட்டு நாட்களுக்கு இரவில் தினைக்கஞ்சியுடன் தேன் கலந்து உண்டு வர குழந்தைப் பேறு உண்டாகும். நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் பித்தம் நீங்கும். பைத்தியம் பிடித்தவர்களுக்கு தினமும் ஒரு வேளையாவது இதைக் குடிக்கக் கொடுத்து வருவது நன்மை பயக்கும். பச்சரியும், சிறுபயறும் கலந்து வைக்கப்படும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும்: பித்தத்தையும் குணப்படுத்தும். பார்லிக் கஞ்சியை பகலில் மட்டுமின்றி இரவிலும் சாப்பிடலாம்.
அனைத்து வித நோயாளிகளுக்கும் பார்லிக் கஞ்சியே சிறந்தது. 200 கிராம் பார்லியுடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து இளம் கறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு தேக்கரண்டித்தூளில் 250 மி.லி. நீர் விட்டு கஞ்சி காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து இரவு உணவுக்குப் பின் அருந்த மலக்கட்டு நீங்கும். குழந்தைகளுக்குக் காலை உணவாக இதையே கொடுக்க மலச்சிக்கல் தீரும். வெந்தயக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. காபி காய்ச்சலின் வேகத்தைக் குறைக்கும்.
சளியை முறிக்கும். தினமும் காபி குடிப்பவர்களுக்கு சுவாசகாசம் வரும் வாய்ப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைவாக இருக்கும். அதிகமாக தேநீர், காபி குடித்தால் தாது மற்றும் உயிர்ச்சத்து இழப்பு ஏற்படும். சிறுநீரை அதிகளவு வெளியேற்றிவிடும். பித்தத்தை உற்பத்தி செய்யும் இதய நோயாளிகள் பருகக்கூடாது. அதிக காரச் சுவை உள்ள குழம்பு வாதத்தை அதிகப்படுத்தும். புளிப்புச் சுவை குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த கப நோய்களைப் போக்கும். உப்புச் சுவையையும் குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.
உப்புச் சுவையையும் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். கேழ்வரகுக் கூழ் களி, உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்த நோய்களைப் போக்கும். வாத நோயைத் தோற்றுவிக்கும். கொழுக்கட்டை, இது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்தத்தையும் வாதத்தையும் அதிகப்படுத்தும்.
கோதுமை அடை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். கோதுமை ரொட்டி உட்கொள்வதால் உடலில் இரத்தம் உண்டாகும். உடல் பலம் பெறும். உடல் சூட்டை சிறிது அதிகரிக்கும். சவ்வரிசி நோயாளிகளின் பலவீனத்தைப் போக்கும். வெண்குட்டம், வெள்ளைப் போக்கை குணப்படுத்தும் அதிகமாக உட்கொண்டால் சளிப்பிடிக்கும். அதிக சூடான கெடுதலை விளைவிக்கும். சூடாக உண்டால் மனநோய், பித்த நோய் ஏற்படும். இரத்த பித்தம், தலை, சுற்றல், மயக்கம், எரிச்சல், பலக்குறைவு அதிக தாகத்தை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இளஞ்சூடான சோற்றை உண்பதே நம் உடலுக்கு நன்மை பயக்கும். வாத, பித்த கப நோய்கள் குணமடையும். நம் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் மிகவும் குழைந்துவிட்ட சோறு உடலின் வெப்ப சமனிலையைக் கெடுக்கும்.
உலர்ந்துள்ள சோறு அஜீரணத்தை உண்டாக்கும். காந்தலான சோறு சீரண உறுப்புகளைப் பாதிக்கும். நன்றாக வேகாத சோறு மந்தத்தை உண்டாக்கும். உணவு உண்ணும்பொழுது கடைசியில் தயிர்விட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் வாத, பித்த, கபக் குற்றங்களை நீக்கும்.
கபக் குற்றங்களைச் சமன் செய்யும். சோறில் மோர் கலந்து சாப்பிடுவதால் நல்ல சீரணசக்தி உண்டாகும். பித்தம், மேகம், மூலமுளை குணமாகும். பாண்டு கிராணி நோய்களும் குணமாகும். உளுந்துச் சோறு உடலுக்கு நல்ல வலிமை தரும். பித்தநோய்களைப் போக்கும். வாதத்தை அதிகரிக்கும். எலுமிச்சம் சாதம் பித்தத்தைப் போக்கும். கண்பார்வையைத் தெளிவடையச் செய்யும். உடல் சூட்டைத் தணித்து சம நிலையில் வைக்கும். எள் கலந்து தயாரிக்கப்படும் சோறும், உடலுக்கு நல்ல வலிமை தரும். வாத பித்தக் குற்றகங்ளை நீங்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ஓரளவு நெய் சேர்த்து சோற்றைத் தாளித்து உண்டு வந்தால் பித்த நோய்கள் குணமடையும். கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும். உடலுக்குப் பல நன்மைகளை உண்டாக்கும். கடுகு போட்டு, சிறிது புளியும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சோறு வாத, கப நோய்களைப் போக்கும். கம்புச் சோறு இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். புண்கள் விரைவில் ஆறாது. இருமல், இரைப்பு இவைகளைத் தோற்றுவிக்கும். சாமை அரிசியைக் குத்தி சோறாகவோ, கஞ்சியாகவோ செய்து உட்கொண்டு வந்தால் தாது விருத்தியடையும். வாத, கபநோய்களைப் போக்கும்.
சுத்தமான நல்லெண்ணெய் கலந்து தாளித்துத் தயாரிக்கப்படும் சோறு வாத நோய்களைக் குணப்படுத்தும். நம் உடலுக்கு நல்ல வலுவையும், புணர்ச்சியில் விருப்பத்தையும் உண்டாக்கும். பசும்பாலைக் கொதிக்க வைத்து, அரிசியை போட்டு வேக வைத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து உண்டு வர மிகுந்த நன்மை உண்டாக்கும். வாயுவை உண்டாக்கும். இதை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. புளியைக் கரைத்து வரமிளகாய், பெருங்காயம், கடுகுபோட்டுத் தாளித்துத் தயாரிக்கப்டும் சோறு பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். மேக நோயைக் குணப்படுத்தும். இருமலை உண்டு பண்ணும். உடல் வலியை உண்டாக்கும். ருசியின்மையைப் போக்கும். மிளகு கலந்துத் தயாரிக்கப்படும் சோறு. வாயுத் தொந்தரவுகளைப் போக்கும். நல்ல சீரண சக்தியை உண்டாகும்.
பித்தம், கபம் இவற்றைப் போக்கும் துவரம் பருப்பு மசியல்.. துவரம் பருப்புக் குழம்பு அல்லது மசியலுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல், வாத, கப நோய்கள் குணமடையும். உடலுக்கு நல்ல வலுவையும் பார்வைத் தெளிவையும் உண்டாக்கும்.
துவரம் பருப்பு இரசம், துவரம் பருப்பு வேக வைத்த நீரில் மிளகு பூண்டு பெருங்காயம் சேர்த்து வைக்கப்படும் இரசத்தை உண்பதால் அக்னி மாந்தம் நீங்கும். வாத நோய்களைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவை அதிகமாகச் சேர்த்துச் செய்யப்படும் துவையல் இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். கார சுவையுள்ள துவையல் நல்ல பசியை உண்டாக்கும் புதினாத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்கும். ருசியின்மையைப் போக்கும். கொத்துமல்லித் துவையல் உடலின் அதிக சூட்டைத் தணிக்கும் ஏப்பம் வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சலைப் போக்கும். சீரணத்தைத் தூண்டும். இஞ்சித் துவையல் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். பசியைத் தூண்டும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி இஞ்சி, பூண்டு, புளி சேர்த்துச் செய்யப்படும் துவையலை காக்கை வலிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து உண்டு வர குணம் கிடைக்கும். பீர்க்கங்காய்த் துவையல் ருசியின்மையைப் போக்கும். தேநீர் தயாரிக்க முன்பு கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தக்கூடாது. நீர் கொதிக்கத் துவங்கும்பொழுதுதான் தேநீர் தூளைக் கலக்க வேண்டும். இதயத்தைத் தூண்டும். நரம்புகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கும். சீதபேதியைப் போக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும். நஞ்சு உட்கொண்டவர்களுக்கு முதலுதவியாக தேநீரைப் பருகக் கொடுக்கலாம். பால் சேர்க்காத தேநீர் இதய நோய், புற்று நோய் வருவதைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்கும். பக்கவாத நோயாளிகளுக்கு நல்லது. பக்கவாதம் வராமலும் தடுக்கும். அதிகமாக பருகக்கூடாது.
தோசை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். பித்தக் கோளாறுகளைப் போக்கும். புளிப்புச் சுவையுள்ள பச்சடி பித்த நோயைத் தோற்றுவிக்கும். உறைப்புச் சுவையுள்ள பச்சடி வாத நோயைத் தோற்றுவிக்கும். வாழைத் தண்டு பச்சடி உடல் சூட்டைத் தணிக்கும், வாத, பித்த கபக் குற்றங்களைக் குறைக்கும். இறைச்சி கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி, இவ்வுணவு நம் உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மந்தத்தைத் தோற்றுவிக்கும்.
புட்டு : பத்தக் கோளாறுகளைப் போக்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். சர்க்கரைப் பொங்கல் உடலில் புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். ருசியின்மையைப் போக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பித்த, வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். மிளகு அதிகமாகப் போட்டுத் தயாரிக்கப்படும் பொங்கல் பசியின்மையைப் போக்கும். குடல், இறைச்சல், வாயுப் பொருமல், பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்கும். பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பு கலந்து தயாரிப்பது உடலுக்கு நல்ல பலம் தரும். உடல் சூட்டை அதிகப்படுத்தும்.
சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு சூட்டை அதிகப்படுத்தும். சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு ஆகாது. பால் பொங்கல் உடல் சூட்டை சமப்படுத்தும். வாதத் தொடர்பான நோய்களை அதிகப்படுத்தும்.
பொரியல் வகைகள் : நிறைய எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் பொரியல் வகைகளில் உப்புச் சுவை அதிகமானால் கபத்தைத் தோற்றுவிக்கும். காரம் அதிகமானால் பசியின்மை. வாத நோய்கள் உண்டாகும். துவர்ப்புச் சுவை அதிகமானால் சுறுசுறுப்பு உண்டாக்கும். வயிற்றுப் பூச்சிகளைப் போக்கும்.
முறுக்கு : அரிசி, உளுந்து மாவு சேர்த்து செய்யப்படும் இதைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். வாதத் தொடர்பான கோளாறுகளைப் போக்கும். பித்தத்தை உற்பத்தி செய்யும்.
மோதகம் : புழுங்கல் அரிசி, மாவு, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து செய்யப்படும் இதை உண்பதால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி, தாது விருத்தி உண்டாகும்.
வறுவல் : எண்ணெய் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை இளம் வறுவலாக வறுத்து உண்டால் மந்தத்தை உண்டாக்கும். நடுத்தரமாக வறுத்து உண்டால் நீர்க் கோர்வையை நீக்கும். கறுக வறுத்து உண்டால் வாத, பித்த, கபக் குற்றங்களைத் தோற்றுவிக்கும்.
வடை : உளுந்து வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும். வாத நோய் உள்ளவர்களுக்கு ஆகாது. தயிர்வடை உடலுக்கு பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். நிறைய அளவு வெங்காயத்தை உளுந்து மாவில் போட்டு வெங்காய வடை செய்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணிந்து சமன்படும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணெய் : கண், காது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். அறிவுத் தெளிவை உண்டாக்கும். தோல் நோய்களைப் போக்கும். அடிப்பட்ட காயம், புண், ஆவி அல்லது கொதி நீரால் ஏற்பட்ட புண்ணுக்கு நல்லெண்ணெயை எலுமிச்சை சாறில் கலந்து பூசி வர குணம் கிடைக்கும்.
கடலெண்ணெய்: உடலுக்கு நல்ல பலம் தரும். வாதத் தொடர்பான நோய்களைத் தணிக்கும். எலும்புக்கு பலத்தைக் கொடுக்கும். இரத்தக் கொதிப்பை சமன் செய்யும், ஊைளச்சதையைக் குறைக்கும். தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பைப் போக்கும். நீர்ச்சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பிரிக்கும். உடல் எரிச்சல், நீர் எரிவைப் போக்கும். சிறுநீர்ப்பைக் கற்களைக் கரைத்து சுத்தமாக்கும்.
வாய்ப்புண், வாய்நாற்றத்தைப் போக்கும். மாதவிலக்குக்கு முன்னர் சாப்பிட மாதவிலக்கு வயிற்று வலியைப் போக்கும். மாதவிலக்கிற்குப் பின்னர் சாப்பிட களைப்பைப் போக்கும். வெள்ளைப் போக்கை குணமாக்கும். பித்தத்தை உண்டு பண்ணும். சுவாசகாசம், வாத நோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தலைவலி உள்ளவர்கள் உண்ணாமல் இருப்பது நல்லது. மாதவிலக்கு நாட்களிலும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கடுகெண்ணெய்: உணவில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும். தசை வலியைப் போக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளைப் போக்கும்.
தேங்காய் எண்ணெய்: வாய்ப்புண், வயிற்றுப்புண், கருப்பைப் புண்ணை குணமாக்கும். புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்லது.
பனையெண்ணெய் (பாமாயில்): கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.
சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள்:
மண்பாண்டத்தில் சமைப்பது தான் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு கண்நோய், மூல நோயைப் போக்கும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு புத்தியை வளர்க்கும். அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். நரம்பு, எலும்புத் தொடர்பான நோய்களைத் தோற்றுவிக்கும்.
உண்கலங்கள்: பொன்னால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தாது விருத்தியடையும். சீரண சக்தி உண்டாக்கும். பித்த, வாத, கப நோய்கள் உண்டாகாது. வெள்ளியால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் கண்களுக்கு நலம் தரும்.
பித்த கப நோய்கள் குணமடையும். உடலுக்குப் பொலிவைத் தரும். மன மகிழ்ச்சியைத் தரும். வாத நோயைத் தோற்றுவிக்கும். செம்பால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும் மன மகிழ்ச்சியைத் தரும். எந்த நோயும் அணுகாது. இரத்தத் தொடர்பான நோய்கள் குணமாகும். பித்தநோய்கள் குணமாகும். வெண்கலத்தில் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் களைப்பு நீங்கும். அனைத்து உடல் தொந்தரவுகளும் தீரும். பித்த நோய்கள் குணமாகும். கண்கள் ஒளிபெறும். தாது வலிமையடையும், உடல் தேறும்.
இரும்பு, கண்ணாடிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வீக்கம், சோகை குணமாகும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் வாத, பித்த, கப நோய்கள் குணமாகும். மண்ணால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் காசநோய் குணமாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். ஆண்மையை வளர்க்கும். வயிறுமந்தத்தைப் போக்கும். பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும். பக்க வாதம் குணமாகும். உடல் நடுக்கம் குணமாகும். காச நோய் குணமாகும்.
பலா இலையில் உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய் மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும். உணவு உட்கொள்வதற்கான காலமும், முறைகளும், முன்பு உண்ட உணவு செரித்து பசி உண்டாகியிருக்க வேண்டும். ஏப்பம் சுத்தமாயிருக்க வேண்டும். மலம், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தால், கழித்த பிறகே உண்ண வேண்டும்.
சூடானவையும், எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகளும் சிறந்தவை. தூய்மையானதாகவும், அறுசுவை நிறைந்ததாகவும், உண்ண வேண்டும். மிகவும் குறைவாகவோ, மிகவும் அதிகமாகவோ உண்ணக் கூடாது. மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இல்லாமல் கூழ்போல் மென்று உண்ண வேண்டும். கோபமாகவும், துன்பப்படும் பொழுதும் உணவு உட்கொள்ளக் கூடாது. உணவு உண்டவுடன் சிறிது நடப்பது நல்லது. உட்காருவதோ, படுப்பதோ, ஓடுவதோ கூடாது. காலை உணவு உண்பது முக்கியமானது மட்டுமல்ல, அவை சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். நீடித்த உடல் நலத்திற்கு அடித்தளமாக இருப்பது காலை உணவுதான்.
உடல் சுறுசுறுப்பாக இருக்கும். கொலஸ்டிரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதயக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறையும். முதலில் கடினமான உணவுப் பொருட்களையும், பிறகு மிருதுவான பொருட்களையும் உண்ட பிறகு திரவப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். வேலை செய்து, நடந்து, வெயிலில் அலைந்து களைத்துள்ள பொழுது உண்பதோ, பருகுவதோ கூடாது. தாகமுள்ள பொழுது, உணவு உட்கொள்வதோ, பசியுள்ள பொழுது நீர் அருந்துவதோ கூடாது. அதனால் முறையே குன்ம நோயும் வயிற்றில் நீர்க்கோர்வையும் ஏற்படும். எண்ணெய்ப் பசையில்லாத உணவு உடல் வலுவையும், ஒளியையும் போக்கிவிடும். தோல் வறட்சி மலக்கட்டை உண்டாக்கும்.
மிகவும் குளிர்ந்து போன உணவு, சளி, களைப்பு, ருசியின்மை, குமட்டல், அஜீரணம் ஆகியவற்றை உண்டாக்கும். மிகவும் கெட்டியான உணவு சிறுநீர் மலத்தை வெளியேற்றுவதில்லை. விரைவில் சீரணமாகாது. மிகவும் இனிப்பான உணவு பசியை அடக்கிவிடும். உப்பு அதிகமாக உள்ளஉணவு கண்களுக்குக் கெடுதலை உண்டாக்கும். காரம், புளிப்பு நிறைந்த உணவு கிழத்தன்மையை உண்டாக்கும் சாப்பிடும் பொழுது முதலில் இனிப்பான உணவையும் பிறகு புளிப்பு உப்பு கார உணவையும் உட்கொண்டு கடைசியாக துவர்ப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த பொருளுடன் சூடான பொருளையும் புதிய பொருளுடன் பழையதையும், பச்சையான பொருளுடன் வேகவைத்ததையும் கலந்து உட்கொள்ளக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர், கொழுப்பு இவற்றில் ஏதேனும் இரண்டையோ, பலவற்றையோ சம அளவில் கலந்து உட்கொள்ளக் கூடாது.
கள், தயிர், தேன் அவற்றை உடக் கொண்ட உடனே சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. நம் முன்னோர்கள் அறுசுவைகளையும் சுவைக்காக மட்டுமன்றி நோய் நீக்கவும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு சுவையை ஏற்றத் தாழ்வுகளுடன் உண்டு நோய் வராமலும், வந்த நோய்களைப்போக்கிக் கொள்ளவும் முடியும். இது நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. எனவே தான் உணவே மருந்து, மருந்தே உணவு எனும் வார்த்தை பொருள் பொதிந்ததாக இருக்கின்றது.
ஆம். நம் உணவு முறை நம் உடலுக்கு மருந்தாகவும் விளங்குகின்றது. இனிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு எனும் இந்த அறுசுவைகளும், உடலில் முறையே தசை, நரம்பு, உமிழ்நீர், இரத்தம், எலும்பு, கொழுப்பு எனும் ஆறு தாதுக்களையும் உயிர்க்கச் செய்கின்றன. இந்தத் தாதுக்கள் சரியாக இருக்கும் பொழுது இன்னொரு முக்கியமான தாதுவான மூளை சரியாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு இரத்தமாக மாறி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகின்றன.
இரத்தம் அதிகமானால் கால் குடைச்சல். தூக்கமின்மை, திமிர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இரத்தம் குறைந்தால், உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் போன்றவை ஏற்படும். இனிப்பு கபத்தை அதிகப்படுத்தும். காரம் கபத்தைக் குறைக்கும். துவர்ப்பு வாதத்தை அதிகப்படுத்தும், புளிப்பு வாதத்தைக் குறைக்கும். இந்த அறுசுவைகளில் ஒன்றுக்கொன்று நட்பு, பகை கொண்டவைகளாவும் உள்ளன.
உப்பு: வலது கை பித்த நாடியில் நம் உடலிலுள்ள உப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். உடலை மென்மையாக்கும். எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்துவை வளர்க்கிறது.

No comments:

Post a Comment