தற்போதுள்ள சூழ்நிலையில் பொடுகு என்பது எல்லோருக்கும் வரும் ஆபத்து என்றாகிவிட்டது. ஆனால் நம் முன்னோர்கள் தலையில் பொடுகு என்பதே கிடையாது
இந்த நவீன உலகத்திற்கு ஏற்ப பொடுகை நீக்க சில வழிகளை பின்பற்றினால் பொடுகு கண்டிப்பாக போய்விடும்
1. எலுமிச்சை சாற்றில் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும் அதன் தோலை கொண்டு தலைமுடியின் வேர்கால்களில் அலுத்தி தேய்த்தால் பொடுகு வருவது கட்டுப்படும்
2.ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்த்து சீயக்காய் பயன்படுத்தினால் பொடுகு குறையும்
ஏனென்றால் சீயக்காய் தலையை வரண்டு போகாமல் பாதுகாக்கும்
3. உப்பு சிறந்த கிருமி நாசினி , பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை உடையது. உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை கூந்தலில் வேர்கால்களில் தடவி 5 நிமிடம் கழித்து குளிக்கவும். இதனால் கூட பொடுகு மறையும் சக்தி கொண்டது
4. கற்பூரத்தை பொடியாக்கி அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும் 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகு தலைகாட்டாது
5.சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்.
6. காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் வாங்கி 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடாக இருக்கும் போது வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊர வைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும்
No comments:
Post a Comment