Tuesday, 27 March 2018

குடற்புழுக்கள் (WORMS INFESTATION)

குடற்புழுக்கள் (WORMS INFESTATION)

1.   கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும்

2.   கல்யாணமுருங்கை இலைச்சாறு10துளி,சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4தேகரண்டி,சிறிது தேனில் பெரியவர்களுக்கும் கொடுக்க குடற்புழுக்கள்  வெளியாகும்

3.   அதிகாலை சிறிது வெல்லம் உட்கொண்டு, பின்,1சிட்டிகை குடசப்பாலை விதைச்சூரணம் உட்கொள்ள குடல் புழு கட்டுப்படும்

4.   1பிடி குப்பைமேனிவேரை,1லிநீரிலிட்டு கால் லி.ஆகக் காய்ச்சிப்  பருக  நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும்

5.   கொட்டைக்கரந்தை விதைச்சூரணம்1தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட குடல் புழுக்கள் வெளியாகும்

6.   இஞ்சி,கோரைக்கிழங்கு,சமனரைத்து,சுண்டைக்காயளவு, சிறிது தேன் சேர்த்து சாப்பிட குடற்புழுக்கள் வெளியாகும்

7.   வேப்பம்பட்டைக் கஷாயம் 6தேகரண்டி,தினமிருவேளை பருக குடற்புழு வெளியாகும்

8.   வேப்பிலைச்சூரணம்1தேகரண்டி,தினமிருவேளை பால் அல்லது வெந்நீரில் கொள்ள குடல்புழுக்கள் வெளியாகும்

9.   வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம்காலை வெறும் வயிற்றில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும்

10. மலைவேம்பு இலைச்சாறு  4தேகரண்டி சாப்பிட குடல்புழு வெளியாகும்

11. மலைவேம்பு இலைகளை2ல்1ன்றாய்க் காய்ச்சிப் பருக வயிற்றுப்புழு வெளியேறும்

12. மலைவேம்புவேர்பட்டை சூரணம்1தேகரண்டி தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்

13.சுண்டைக்காயைவற்றல்செய்து,சூரணித்து,அரைதேகரண்டி,தினமிரு வேளை, வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்

14. பிரண்டைத்தண்டுகளை மேல்தோல்நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து,நெய்யில் வதக்கி  துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும்.மூளை,நரம்புகளும் பலப்படும்

15. வாய்விடங்கச்சூரணம்1-2கிராம் தினமிருவேளை 50மிலி வென்னீரில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும்

16. சிவதைசூரணம் 2கிராம் இரவில்50மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்

17. உத்தாமணி  இலைக்குடிநீர்  20மிலி கொடுக்க  குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள்  வெளியாகும்

18. 3துளி எருக்கன்இலைச்சாறு,10துளிதேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்

19. பச்சைமஞ்சளைப் பிழிந்து சாறெடுத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை குணமாகும்

20. குப்பைமேனி இலைச்சாறு4தேகரண்டி தொடர்ந்து 4நாள் உட்கொள்ள வயிற்றுப்புழு நீங்கும்

21. ஆடுதீண்டாப்பாளை விதைசூரணம்1தேகரண்டி, வி.எண்ணையில் கொள்ள பேதியாகும். கிருமிகள் சாகும்

22.வேப்பங்கொழுந்து,ஈர்க்கு,கடுக்காய்தோல் இவற்றை பிரண்டை சாற்றிலரைத்து, (விளக்)சிற்றாமணக்கெண்ணையில் கலந்து கொடுக்க நாக்குப்பூச்சி,கொக்கிப்புழு, கீரிப்பூச்சிகள் வெளியேறும்

23. குப்பைமேனிகொழுந்து 5,பூண்டுப்பல்1, சேர்த்தரைத்துக் கொடுக்க  மலப்புழுக்கள் வெளியாகும். சற்று அதிகம்கொள்ள கபம் மலத்துடன் வெளியாகும்

24. ஆடுதீண்டாப்பாளை இலை சூரணம் கால்தேகரண்டி  இரவில் வெந்நீரில் கொள்ள வயிற்றுப்புழுக்கள்  சாகும்

25. தும்மட்டிகாய் சாற்றில்,கருஞ்சீரகத்தை  அரைத்து, விலாவில் பூச குடல்பூச்சிகள் வெளியேறும்

26. நல்வேளை விதைகளை நெய்யில் வறுத்து பொடித்து சிறுவர்களுக்கு அரை கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்ற அளவில் காலைமாலை 3 நாள் சாப்பிட்டு 4ம்  நாள் அரை தேக்கரண்டி வி.எண்ணை கொள்ள பேதியாகி குடல் தட்டைபுழுக்கள் வெளியாகும்

27. வாரம் இரண்டு முறை காலையில் சாப்பிடும் போது 1 தேக்கரண்டி தேங்காய் சாப்பிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து ஒரு தம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2தேக்கரண்டி  விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர புழுக்கள் வெளியேறிவிடும் முடிந்தால் தினமும் செய்து வரலாம்.

28.   ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வர வயிற்றில் எவ்வித புழுக்கள் இருந்தாலும் அழிந்துவிடும். அதிலும் பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்துவிடும்.

29.  2 தேக்கரண்டி பப்பாளி விதை பவுடரை ஒரு தம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

30. 1 தேக்கரண்டி மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து, பொடி செய்து, தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வாழைப்பழம் அல்லது கிவி பழத்தை சாப்பிட்டு வர புழுக்கள் அழிந்து வெளியேறி விடும்

31. காலையில் வெறும் வயிற்றில் ஒருதேக்கரண்டி  வெல்லத்தை சாப்பிட்டு 15-20 நிமிடம் கழித்து, ஒரு தம்ளர் நீரில் 1 1/2 தேக்கரண்டி ஓமத்தை தட்டி சேர்த்து குடிக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வர, ஆரோக்கியமாக புழுக்களின்றி வைத்துக் கொள்ளலாம்.

32. ஒரு தேக்கரண்டி உலர்ந்த வேப்பம்பூவை ஒரு தேக்கரண்டி  நெய் சேர்த்து வறுத்து, வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து, நான்கு நாட்கள் தினமும் இரண்டு முறை உட்கொண்டுவர உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

33. கேரட்டை துருவி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றி விடலாம் இதனை சாப்பிட்ட பிறகு எந்த ஒரு பொருளையும் காலை உணவாக எடுக்கக் கூடாது..

34. ஒரு தம்ளர் சூடான தண்ணீரில் 1தேக்கரண்டி  கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

35. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தம்ளர் மோரில் கலந்து, தினம் ஒரு முறை குடித்து வர, வயிற்றுப் புழுக்கள் அகலும்.

36. தினமும் 4-6 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை குடித்து வர , உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிற்றில் உள்ள புழுக்களை எதிர்த்துப் போராடி அழித்து வெளியேற்றிவிடும்.

37. சுண்டைக்காயை உணவில் சேர்த்துவர நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப் பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்

38.  துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீர் 1 தம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
39.புரசம் விதையை அரைத்து பால் நெய்சர்க்கரை சேர்த்து லேகியமாக கிளறி கழற்சிக்காய் அளவு கொடுக்கலாம்.
40.முருக்கன் விதை வெல்லம் எள்ளு வாய்விளங்கம் சமன் தேங்காய் நீரில் அரைத்து உட்கொண்டால் கிருமிகள் நாசமாகும்.
41.குழந்தைகளுக்கு இரவில் மாதுளழம்பழத்தை சாப்பிட கொடுத்து காலையில் பேதி மருந்து கொடுக்கலாம்.
42.வாய்விளங்கத்தை புளித்த நீரில் அரைத்து காலையில் உட்கொண்டால் கிருமிகள் நாசமாகும்
43.முருக்கன் விதை மாத்திரையை காலை மட்டும் இளநீர் பால் சீனி ஏதாவதொன்றில் கொடுக்க கிருமி . மந்தம், கெண்டை வலி வயிற்று உப்புசம் நீங்கும்.
44.முருங்கை இல்லை சாறு காலை வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு குடிக்க கீரி பூச்சி நீங்கும்.
45.பன்னீர் பூவை குடி நீராக்கி கொடுக்க புழுக்கள் சாகும்.
46.முற்றின தேங்காயை நெல் வேக வைக்கும்போது அதனுடன் வேகவைத்து காலையில் தேங்காயை சாப்பிட தட்டை புழு நீங்கும்.

No comments:

Post a Comment