Wednesday, 29 May 2019

காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம்

காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது.

இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவையே.

150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.

ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும்.

நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.

இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும்.

இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

பி-12 வைட்டமின்

பி-12 வைட்டமின் குறைபாட்டால் என்ன ஆகும்?
பி-காம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன.

உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம்.

பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.

பி2 ஆரோக்கியமான பார்வை, சருமத்துக்கு உதவுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

பி3 ஆரோக்கியமான சருமம் மற்றும் தசை திசுக்களுக்கு அவசியம். மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது.

பி5 உணவு மெட்டபாலிஸத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

பி6 மூளையில் செரட்டோனின் என்ற ரசாயனம் சுரக்க உதவுகிறது.

பி7 ஆரோக்கியமான முடி, நகம் வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

பி9 ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பி12 உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கச்செய்கிறது. மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த அனீமியாவை குறைக்கிறது.

பதனிடப்படாத முழுமையான தானியங்களில் உயிர்ச்சத்து பி பெறப்படும். கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும்.

இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும். பதனிடப்படாத முழுமையான தானியம், உருளைக் கிழங்கு, பருப்பு, அவரை, வாழை, மதுவம் போன்றவற்றிலும், மற்றும் கரும்பு, திராட்சை, சக்கரைக்கிழங்கு (sugar beet) போன்றவற்றில் இருந்து சீனி தயாரிக்கும்போது கிடைக்கும் மொலாசிஸ் (molasses) எனப்படும் துணைப்பொருளிலும் உயிர்ச்சத்து பி அதிகளவில் கிடைக்கும்.

உளுந்தங்களி

உளுந்தங்களியில் இரும்பு முதலான நுண்கனிமச்சத்துகளுடன் புரதமும் நார்ச்சத்தும் அதிகம். பெண்கள் வயதுக்கு வரும்போது இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம். வயதாகும்போது மூட்டுகளின் `கார்டிலேஜ்’ எனும் தசைநார்கள் வலுப்பெறவும் இது உதவும். சுவையான உளுந்தங்களி எப்படி சமைப்பது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: உளுத்தம் பருப்பு மாவு (நன்கு அரைத்தது) - ஆறு கைப்பிடி, கருப்பட்டி - தேவையான அளவு, தேங்காய் துருவியது, நல்லெண்ணெய் - நான்கு ஸ்பூன், அரிசிமாவு – சிறிதளவு, ஏலக்காய் - நான்கு கிராம், வறுத்த பாசி பருப்பு – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிளறிய பின் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் அருமையான உளுந்தங்களி ரெடி!!

வெந்தயம்

வெந்தயத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இதில் நிறைந்திருக்கும் சர்க்கரை எதிர்ப்புப் பண்புகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, டைப்-1 சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. வெந்தயம், மாதவிடாய் வலி நீக்க ஒரு பக்க விளைவில்லாத மருந்து. கோடை காலத்தில் வெந்தயம் ஊறவைத்து நீரை குடித்து வர உடல்சூடு தணியும். இவ்வளவு மருத்துவ பலன்கள் மிகுந்த வெந்தயத்தில் மசியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேகவைத்த வெந்தய பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெந்தய மசியல் தயார்!

(மருத்துவ குறிப்பு: ஒரு கப் வெந்நீரில், கால் டீஸ்பூன் வெந்தயப் பொடி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடிக்க தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும்..)

Monday, 27 May 2019

மூலிகை பொடி

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாழை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
நன்றி வணக்கம்.

எலுமிச்சை

*மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் எலுமிச்சை தோல்!!*

எலுமிச்சை மிக சக்தி வாய்ந்த பழம், அதிக ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது. விட்டமின் சி நிறைந்தது.

ரத்த அழுத்தம் , இன்ஃபெக்ஷன், ஜலதோஷம் என பல வகை பாதிப்புகளுக்கு எலுமிச்சை நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் மிக அதிகமாக விட்டமின் சி, மற்றும் ஏ, பி6, பி1, பயோஃப்ளேவினாய்டு, பெக்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், போன்றவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. முதுமையையும் தள்ளிப் போகச் செய்யும் ஆற்றல் உண்டு.

எலுமிச்சை சாறு போலவே எலுமிச்சை தோலிலும் மிக அதிக சத்துக்கள் உண்டு, காய்ச்சலை குணப்படுத்தும், ஆன்டிசெப்டிக் குணங்கள் கொண்டவை, காயங்களிய விரைவில் அற்றும். 40 வயதிற்குப் பின் வரும் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் கொண்டது,

மூட்டுகளில் இருக்கும் சுருங்கியிருக்கும் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. வலியை குறைத்து, பாதிப்பை குணப்படுத்துகிறது.

அதனை மூட்டு வலிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

*ஆயின்மென்ட் :*

*தேவையானவை :*

ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை -2
யூகலிப்டஸ் இலை

எலுமிச்சை தோலை பொடியா துறுவிக் கொள்ள வேண்டும். ஒரு மூடியுள்ள ஜாரில் எலுமிச்சை தோலை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை ஊற்றி அதில் யூகலிப்டஸ் இலையையும் நறுக்கிப் போட்டு ஜாடியை இறுக மூடிவிடுங்கள்

அப்படியே 2 வாரங்கள் வைத்திருக்க வேண்டும், பின்னர் அது ஆயின்மென்ட் போல கெட்டியாகியிருக்கும். இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் வலியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இப்படி தினமு செய்தால் வலி மறைந்துவிடும்.

*எலுமிச்சை தே நீர் :*

எலுமிச்சை தேனீர் மூட்டு வலியை போக்கும், வாயுவை போக்கும், நச்ச்சுக்களையும் வெளியேற்றி விடும். உடல் குறைப்பிற்கும் நல்லது.

*தேவையானவை :*

நீர்- 2 கப்
எலுமிச்சை- 2
தேன்

*தயாரிக்கும் முறை :*

நீரில் இரண்டு எலுமிச்சையின் தோலை துருவிக் கொண்டு அதில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து வடிகட்டவும். இந்த தே நீரில் தேவையான அளவு தேனை கலந்து பருகலாம்.

*நன்மைகள் :*

இது நம் ஜீரண மண்டலத்தை பலம் பெறச் செய்வதோடு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரைப்பைக்கு  புத்துணர்ச்சி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

எலுமிச்சை தோல் மூட்டு வலிக்கு மட்டுமல்லாமல் இதர நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி காண்போம்.

*அழகிற்கு :*

எலுமிச்சை தோல் சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சையின் தோலில், நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் உள்ள அமிலமானது நம் சருமத்திலுள்ள கருமையைப் போக்கி நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் பிளச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும்.

*பற்களின் வெண்மைக்கு :*

எலுமிச்சைத் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து, வெண்மையான புன்னகையை பெறலாம்.

காலம் தவறாமல் சாப்பிட்டால்

காலம் தவறாமல் சாப்பிட்டால், நாம் வாழும் காலம் அதிகரிக்கும். தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல, அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். உடல் ஆரோக்கியம் அதில் தான் இருக்கிறது. பலர் உணவு சாப்பிடும் நேரத்தை முறையாக கடைபிடிப்பதில்லை. இதுவே அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், அமிர்தத்தை சாப்பிட்டாலும் அது பலன் தராது. மாறாக அல்சர் தான் வரும். குடிப்பது கூழாக இருந்தாலும், அதை குறித்த நேரத்தில் குடிக்க வேண்டும். காலம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் முன் கை, கால், வாய் கழுவிய பின் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிட கூடாது. இந்தியர்களை பொருத்தவரை பலர் சாப்பிடும் போதுதான், அதிகம் பேசுகின்றனர். அது ஆரோக்கிய கேடான பழக்கம்.
சூரியன் உதிக்கும் நேரத்திலும், மறையும் நேரத்திலும் சாப்பிடக்கூடாது. நிலா வெளிச்சத்தில் உணவு உண்ணக்கூடாது. இருட்டிலும், நிழல் விழும் இடங்களிலும் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
அதிக கவலை, துக்கம், கோபம் ஆகிய உணர்வுகளுடன் சாப்பிட்டால் பலன் இல்லை. உணவில் உப்பு புளி, மிளகாய் அதிகம் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. நின்று கொண்டு சாப்பிட்டால் பித்தக்கற்கள் உண்டாகும். எனவே, உட்கார்ந்து சாப்பிடுவதுதான் சரியான
முறையாகும்.
உணவின் ஜீரணம், வாயிலேயே துவங்கி விடுகிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் ஜீரணத்துக்கு உதவுகிறது. அவசரமாக சாப்பிடுவதால், உமிழ்நீர் உணவில் சேராமல் போய் விடுகிறது. சாப்பிடும் போது, அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று மெல்ல
சாப்பிட வேண்டும். அது உமிழ் நீரோடு கலந்து விரைவில் ஜீரணத்துக்கு வழி வகுக்கும்.
உணவை நன்றாக மென்று உண்பதால், பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. வாய் தாடை, கண், மூக்கு இவைகள் நன்கு வளர்ந்து முகத்திற்கு பொலிவைத் தரும். அதனால்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள். உணவில் முதலில் இனிப்பு உண்ண
ஆரம்பித்து, தொடர்ந்து புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்டு, முடிவில் துவர்ப்பு உண்ண வேண்டும்.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் சாப்பிடக்கூடாது. வாழை இலையில் சாப்பிட்டால், இளமை குன்றாமல் தோற்றம் அளிக்கலாம். இலையில் சாப்பிடும் போது இலையை சுத்தமாக கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும். உணவு சாப்பிடுவதில் இது போன்ற
முறைகளை, பின்பற்றுவதால், ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

தேமல்

எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன.
சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவோர் உள்ளனர். அந்த மாதிரி நபர்களுக்கு, தேமல் வருவதை தடுக்கவே முடியாது.
இன்றைக்கு, 90 சதவீதம் பேர் உடம்பில் எண்ணெய் தேய்ப்பதில்லை. படுக்கும் முன் அல்லது குளித்து முடித்த பின், உடம்பில் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்க வேண்டும். தோல் வறண்டு போனால், வெடிப்பும் ஏற்படும். தேமல் வர உடல் சூடும் ஒரு காரணம். வாரத்தில் ஒரு நாள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்கள், வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து, குளித்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதுதான் பக்கவிளைவு இல்லாத எளிய மருந்து.

நலமாக வாழ நாம் மறந்த சில பழக்கவழக்கங்கள்

நலமாக வாழ நாம் மறந்த சில பழக்கவழக்கங்கள்

1 .  ஆரோக்கியமாக வாழ தினசரி உடலில் வியர்வை வெளியேற நாம் உழைக்கிறோமா? அல்லது உடற்பயிற்சி செய்கிறோமா ?

இனிமேல் செய்வோம் - உடனடியாக நோய்க்கு எதிரிகளை உருவாக்குவோம்

2 . பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி உணவாகவே எடுக்கிறோமா?

இனிமேல் உட்கொள்வோம் - உறுதியாக பல  நோய்களில் இருந்து விலகிருப்போம்

3 . பசி எடுத்ததும் உணவுகளை எடுத்துக்கொள்கிறோமா?  அல்லது நேரத்திற்கு உணவுகளை கடமைக்கும், ருசிக்கும் எடுத்துக்கொள்கிறோமா?

இனிமேல் மாறுவோம் - பசியெடுத்தால் மட்டும்உணவுகளை எடுத்து கொள்வோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

4 . ருசிக்காக  உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து ஆரோக்கியத்திற்காக  மட்டும் உணவுகளை எடுத்து கொண்டால் எதிர்காலம்  வளமாகும்

இது போன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வோடு இல்லையென்றால் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு தொல்லையாகவே அமையும்

மாறுவோம் ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவு  பழக்கவழக்கத்திற்கு

சிறுதானியங்கள்
பாரம்பரிய அரிசிகள்
கலப்படமில்லாத மசாலா பொடிகள்
பனைவெல்லம்  அல்லது கருப்பட்டி  
இயற்கை  முறையில் தயாரித்த சத்துமாவுகள்
தரமான மூலிகை பொடிகள்
மூலிகை நாப்கின்
மரச்செக்கில் தயாரித்த எண்ணெய்
வகைகள்
இந்துப்பு
கீரைகள்
பழங்கள்
காய்கறிகள்

மருத்துவமனை செல்லாத வாழ்வு வாழ அனைவர்க்கும் ஆசைதான் ஆனால் நாவை அடக்கி மனதை மாற்றி ஆரோக்கியத்தை தரும் உணவுகளை எடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்

புத்தரின் வாசகம் இது

நீங்கள் செய்த தருமமும்
நீங்கள் உண்ட உணவும் தான்
உங்கள் சொத்து

வாழ்க வளமுடன்
அகத்தியர் இயற்கை உலகம்
அகத்தியர் ஆர்கானிக்ஸ்
திருநெல்வேலி