நலமாக வாழ நாம் மறந்த சில பழக்கவழக்கங்கள்
1 . ஆரோக்கியமாக வாழ தினசரி உடலில் வியர்வை வெளியேற நாம் உழைக்கிறோமா? அல்லது உடற்பயிற்சி செய்கிறோமா ?
இனிமேல் செய்வோம் - உடனடியாக நோய்க்கு எதிரிகளை உருவாக்குவோம்
2 . பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி உணவாகவே எடுக்கிறோமா?
இனிமேல் உட்கொள்வோம் - உறுதியாக பல நோய்களில் இருந்து விலகிருப்போம்
3 . பசி எடுத்ததும் உணவுகளை எடுத்துக்கொள்கிறோமா? அல்லது நேரத்திற்கு உணவுகளை கடமைக்கும், ருசிக்கும் எடுத்துக்கொள்கிறோமா?
இனிமேல் மாறுவோம் - பசியெடுத்தால் மட்டும்உணவுகளை எடுத்து கொள்வோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
4 . ருசிக்காக உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து ஆரோக்கியத்திற்காக மட்டும் உணவுகளை எடுத்து கொண்டால் எதிர்காலம் வளமாகும்
இது போன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வோடு இல்லையென்றால் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு தொல்லையாகவே அமையும்
மாறுவோம் ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்திற்கு
சிறுதானியங்கள்
பாரம்பரிய அரிசிகள்
கலப்படமில்லாத மசாலா பொடிகள்
பனைவெல்லம் அல்லது கருப்பட்டி
இயற்கை முறையில் தயாரித்த சத்துமாவுகள்
தரமான மூலிகை பொடிகள்
மூலிகை நாப்கின்
மரச்செக்கில் தயாரித்த எண்ணெய்
வகைகள்
இந்துப்பு
கீரைகள்
பழங்கள்
காய்கறிகள்
மருத்துவமனை செல்லாத வாழ்வு வாழ அனைவர்க்கும் ஆசைதான் ஆனால் நாவை அடக்கி மனதை மாற்றி ஆரோக்கியத்தை தரும் உணவுகளை எடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்
புத்தரின் வாசகம் இது
நீங்கள் செய்த தருமமும்
நீங்கள் உண்ட உணவும் தான்
உங்கள் சொத்து
வாழ்க வளமுடன்
அகத்தியர் இயற்கை உலகம்
அகத்தியர் ஆர்கானிக்ஸ்
திருநெல்வேலி
No comments:
Post a Comment