பொதுவாக அன்று சமைத்த உணவுகளை, அன்றே இயற்கையான முறையில் பாதுகாத்து உண்பதுதான், உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைக்கும் உணவுகளால், நுரையீரல் பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றைய ப்ரிட்ஜ் கண்டுபிடிக்காத காலத்தில், உணவு கெடாமல் பாதுகாக்க நமது முன்னோர் இயற்கையான முறைகளை பின்பற்றினர். அதே போல் இன்றைய காலத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாமல், பாலை கெடாமல் பாதுகாக்க வழியுண்டு.
காய்ச்சிய பாலின் ஆடையை நீக்கி விட்டு, கிளறி ஆற வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் சுத்தம் செய்த மண் பாத்திரத்திலோ, ஜாடியிலோ பாலை ஊற்றி, குளிர்ந்த தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் அதை வைக்க வேண்டும்.
தண்ணீரில் நனைத்து, பிழிந்த துணியினால் மூடி வைக்க வேண்டும். துணியின் நான்கு பக்கங்களும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும். இப்படி ஒரு இரவு முழுவதும் மூடி வைத்தால், ஒரு கெடுதலும் வராமல் பாலை பத்திரமாக பாதுகாக்கலாம். ஸ்டீல், அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
தண்ணீருக்குள் உள்ள பாத்திரத்தில், வாழைக்காயை வைத்தால் ஒரு வாரம் வரை பழுக்காமல், கெடாமல் புத்தம் புதியதாய் இருக்கும். ஆனால், தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டும். உப்பு கரைத்த நீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்தால், பல நாட்கள்
கெடாமல் இருக்கும்.
பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் தூவி, சிறிது நேரம் மூடி வைத்திருந்தால், பல நாட்கள் கெடாமல் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
Monday, 27 May 2019
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைக்கும் உணவுகளால், நுரையீரல் பிரச்னை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment