பி-12 வைட்டமின் குறைபாட்டால் என்ன ஆகும்?
பி-காம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன.
உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம்.
பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.
பி2 ஆரோக்கியமான பார்வை, சருமத்துக்கு உதவுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
பி3 ஆரோக்கியமான சருமம் மற்றும் தசை திசுக்களுக்கு அவசியம். மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது.
பி5 உணவு மெட்டபாலிஸத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
பி6 மூளையில் செரட்டோனின் என்ற ரசாயனம் சுரக்க உதவுகிறது.
பி7 ஆரோக்கியமான முடி, நகம் வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
பி9 ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
பி12 உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கச்செய்கிறது. மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த அனீமியாவை குறைக்கிறது.
பதனிடப்படாத முழுமையான தானியங்களில் உயிர்ச்சத்து பி பெறப்படும். கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும்.
இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும். பதனிடப்படாத முழுமையான தானியம், உருளைக் கிழங்கு, பருப்பு, அவரை, வாழை, மதுவம் போன்றவற்றிலும், மற்றும் கரும்பு, திராட்சை, சக்கரைக்கிழங்கு (sugar beet) போன்றவற்றில் இருந்து சீனி தயாரிக்கும்போது கிடைக்கும் மொலாசிஸ் (molasses) எனப்படும் துணைப்பொருளிலும் உயிர்ச்சத்து பி அதிகளவில் கிடைக்கும்.
No comments:
Post a Comment