Friday, 30 September 2016

வாந்தி, பித்தம் தீர :-

வாந்தி, பித்தம் தீர :-
எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும்.

தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :-
கொத்தமல்லி விதை வறுத்துப் பொடி செய்து கசாயம் செய்து காலை, மாலை 2 வேளை 1 டம்ளர் அளவு சாப்பிட தீரும்.
வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.
துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

தீராத வாந்தி நிற்க!
"சதகுப்பை" என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.

பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு வயிற்று வலி இவற்றிற்கு:-
இஞ்சியை -100 கிராம் எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, இஞ்சியை சிறு துண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால் நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும். சாதாரணமாக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு கைகண்ட மருந்தாகும்.

வாயுத்தொல்லை, பசியின்மை:
வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழைச் சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி (5 மி.லி) கற்றாழைச் சாற்றினை நாளுக்கு 3 முறை உட்கொள்ள வேண்டும். (குறிப்பாக வெறும் வயிற்றில்) கசப்புத் தன்மையைக் குறைக்க அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.

வாயு தொல்லை
வாயு தொல்லை நீங்க ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை இனி இல்லை..
சோயா பீன்ஸ், மற்றும் சோயா பொருட்கள் கான்சரை தடுப்பதோடு மட்டுமல்லாமல், இதய் நோய்கள், எலும்பு சீர்கேடுகளையும் சரி செய்கிறது. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் நிலை மாறுதல்களுக்கும், எலும்பு தேய்வு இவற்றுக்கும் மருந்தாகவும் சோயா உதவுகிறது.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, சிறிது புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி வைத்துக்கொண்டு, உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் விலகும்.

பசியின்மை நீங்க:
துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டுவர பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும்.
பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.
நில வேம்பை கஷாயம் வைத்துக் குடிக்க நன்கு பசியெடுக்கும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க:-
வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .

வயிற்றுப் பூச்சி வெளியேற:-
மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

வயிற்றுப் போக்கு :
சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும்.
தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம். நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில் குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

நாடாப் புழு வெளியேற:-
கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.

சீதபேதி
கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்¬ர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

மலச்சிக்கல் நீங்க:-
மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த மலச்சிக்கல் நீங்கும்
செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் குணமாக:
அகத்திக்கீரை நல்ல நிவாரணம்.
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும்.
மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

நுரையீரல் நோய் குணமாக:-
நாயுருவிச் செடியின் விதைகளை இடித்துப் பொடி செய்து உட்கொண்டால் நுரையீரல்நோய்கள் குணமாகும்.

நீரிழிவு நோய் குணமாக:-
இதன் தீவிரத்தை குறைக்க வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சிறுநீர் அடைப்பு:
வெள்ளரிக்காய் விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி, அதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால் `சிறுநீர் அடைப்பு' நீங்கும்!



குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

Thursday, 29 September 2016

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம்

"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.

30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.

எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.

பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்!

மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.

அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு, கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்கிறார்கள்

Wednesday, 28 September 2016

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?-தன்மை!

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?-தன்மை!

தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.

கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது.

ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு....

தூக்கமின்மை!

24X7 மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது.

மனநல சீர்கேடு!

நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.

பூண்டு!

இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. ஆம், தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள்.

தன்மை!

பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது.

நன்மைகள்!

பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும்.

பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது.

நல்ல உறக்கம்!

நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை / கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.

நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?...

ஒர் எச்சரிக்கைப் பதிவு....!

நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?...

அப்படியானால் அவசியம் படியுங்கள்.
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ? நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டு விடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா? அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்து விடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்து விடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஜன்னலை திறந்து வைத்து தூங்குங்கள்...

Tuesday, 27 September 2016

தூக்கம் வரலையா? செர்ரி ஜூஸ் குடிங்களேன்!

தூக்கம் வரலையா? செர்ரி ஜூஸ் குடிங்களேன்!

இன்சோம்னியா எனப்படும் தூக்கக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நோயினை குணப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் உண்டு. இந்த நோய் இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை விரட்டுவதற்கு செர்ரி பழ ஜூஸ் போதும் என்கிறார் ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான டாக்டர் வில்பிரட் பிஜியான்.

cherry juice may cure insomnia
மன உளைச்சல் ஏற்படும்

தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம்.

இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படியே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்துவிடுவார்கள். நவீன காலத்தில் இன்சோம்னியா நோயை குணப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாகும். அந்த சவாலை நிறைவேற்ற செர்ரி பழ ஜூஸ் உதவுகிறது.

இது குறித்து 2 கட்டமாக நடைபெற்ற ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு காலை, மாலை இரு வேளையிலும் செர்ரி பழ ஜூஸ் கொடுக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் அதே நபர்களுக்கு வேறு பழ ஜூஸை கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இதைச் செய்யும்போது அவர்களுக்கு நல்ல தூக்கம் வருவது ஆய்வில் நிரூபணமானது.

வைட்டமின் சி அதிகம்

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. செர்ரிப் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 20 ஆக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.

எப்படி ஜூஸ் தயாரிக்கலாம்

தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும். இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காலையிலும், மாலையிலும் இந்த ஜூஸை அவர்கள் குடிக்கவேண்டும். இதில் இனிப்பு சேர்க்கக்கூடாது. செர்ரி பழ ஜூஸ் குடிப்பவர்கள் சராசரியாக 17 நிமிடங்கள் அதிகம் தூங்குவது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட வில்பிரட், செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் சத்து, உடலிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தி தூக்கத்தை முறையாக உடலுக்கு வழங்குகிறது. பகலில் உழைப்பு, இரவில் தூக்கம் என்ற சுழற்சியை அந்த ஹார்மோன் ஏற்படுத்த ஜூஸ் உதவுகிறது என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு குறித்து மெடிசனல் ஃபுட் என்கிற பத்திரிகையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆய்வு

'இன்சோம்னியா' நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவது குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினார்களாம்

இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக்கேட்டிருப்போம். காரணம் கேட்காமல் அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? ஏன் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் டயட்டீஷியன் வீணா சேகர்.

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள்.

அந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி இருக்கும். விளக்கொளி இல்லாத காலகட்டத்தில் இருட்டில் தெரியாமல் சமைத்துவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இப்போது பலரும் பகலில் வேலைக்குப் போவதால் கீரை போன்ற உணவுகளை சாப்பிட முடியாதவர்கள், இரவுதான் சாப்பிட வேண்டி இருக்கும். இல்லையென்றால் அதிலுள்ள சத்து கிடைக்காமலே போய்விடும். அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னை ஏற்படவில்லை என்றால், தாராளமாக கீரை எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும், சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டி இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அப்படித் தவிர்க்க வேண்டியவை...

டீ, காபி பொதுவாக டீ, காபி போன்ற உற்சாக பானங்களை (Stimulant drinks) சாப்பிடுவது தூக்கத்தைக் குறைக்கும். காபியில் இருக்கும் கஃபைன் (Caffeine),டீயில் இருக்கும் த்யோப்ரமைன் (Theobromine) ஆகியவை மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். அதனால்தான் பரீட்சை நேரங்களிலும், இரவில் வேலை செய்யும்  போதும் 75 சதவிகித மக்கள்  டீ, காபி குடிப்பார்கள். காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்காகத்தான் தூங்கி எழுந்தவுடன்   காபி, டீ குடிக்கிறோம்.

அசைவ உணவுகள்

பொதுவாக பார்ட்டி என்கிற பெயரில் இரவு நேரத்தில் உணவகத்துக்குச் செல்பவர்கள் அதிகம். அங்கு அதிகபட்சம் அவைச உணவுகளே இடம் பெறும். பார்ட்டி என்பதால் பேசிக்கொண்டு, குஷியாக சாப்பிடுவதால் கட்டாயம் எப்போதையும் விட ஒரு பிடி அதிகப்படியாகவே சாப்பிடுவோம். அசைவ உணவு என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் அதிகம் சாப்பிடத் தோன்றும். அதைத் தொடர்கதை ஆக்காமல் இருப்பதே நல்லது. அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.

காரம் மற்றும் எண்ணெய்

சாப்பிட்டவுடன் நாம் மல்லாந்த  நிலையில் படுப்போம். அதனால் காரம் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும் போது ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஏற்படும். 'எதிர்த்துக்கிட்டு வருது', 'எதுக்களிப்பு' என்று சொல்வோமே... அந்தப் பிரச்னைதான் இது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம்.

இனிப்புகள் மற்றும் சாக்லெட்

இனிப்பு மற்றும் சாக்லெட் வகைகள் பொதுவாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை. எனர்ஜி அளிக்கக்கூடியவை. திருமண ரிசப்ஷன் போன்ற இரவு நேர விழாக்களில் ஐஸ்க்ரீம், டெசர்ட்ஸ் போன்றவை அவசியம் இடம்பெறும். ஆசையில் அதிகமாகச் சாப்பிடாமல் அளவோடு எடுத்துக்கொண்டால் தூக்கத்துக்குப் பாதிப்பிருக்காது. இனிப்பு வகைகளில் சர்க்கரை அதிகமிருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். கொஞ்சமாக சாக்லெட் சாப்பிடுவது தவறல்ல. அதைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கப் போகும் போது பற்களில் சொத்தை ஏற்படும். இஷ்டப்படி சாப்பிட்டுவிட்டு, ஜீரணமாக வேண்டும் என்று சிலர் சோடா குடிப்பார்கள். ஆனால், அதில் இருக்கும் சர்க்கரை உங்கள் இனிய கனவுகளை கட்டாயம் கலைக்கும்!

நீர்ச்சத்துள்ள உணவுகள்

பார்லி உடலில் இருக்கும் தேவையற்ற நீரை எடுக்கும். இரவில் அதைச் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவுக்காரர்களுக்கு இன்னும் கஷ்டம். பூசணி, புடலை, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கோஸ், செலரி போன்ற காய்கறிகள் சாப்பிட்டாலும் இதே பிரச்னைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும். 

கரையா நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்தில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என்று உண்டு. கரையா நார்ச்சத்து அதாவது, கொஞ்சம் கடினமான நார்ச்சத்துள்ள உணவுகளான சில கீரைகள், பாகற்காய் போன்ற உணவுகள் ஜீரணிக்க நேரம் எடுக்கும். அதனால் அவற்றை இரவு நேரங்களில் தவிர்க்கலாம். அல்லது கொஞ்சம் முன்னதாக சாப்பிடலாம்.

புளித்த உணவுப்பொருட்கள்

இட்லி, ஆவியில் வேக வைத்த சிறந்த உணவாக இருந்தாலும், புளிக்க வைத்த மாவில் செய்வதால், சிலருக்கு புளித்த ஏப்பம் ஏற்படும். அதனால்தான் இட்லி, தோசை ஆகியவற்றை காலை உணவாகவே நம் பாரம்பரியத்தில் பழக்கி உள்ளனர். இதனாலும் இனிய உறக்கம் தடைபடக்கூடும் என்பதால், இரவில் தவிர்க்கலாம். மற்றபடி ஆவியில் வேக வைத்த உணவுகள் ஓ.கே. குழந்தைகள் இரவில் இட்லி, தோசை சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.

ஜங் ஃபுட்

பொதுவாகவே ஜங் ஃபுட் உணவுகளை இரவில் குறைத்துக்கொள்வது நல்லது. அல்சர் உள்ளவர்கள் அசிடிட்டி நிறைந்த உணவுகளை  இரவில் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் பொதுவான விஷயங்கள். இதைத் தாண்டி ஒவ்வொருவரின் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிக அளவு சாப்பிட்டு உடனடியாக உறங்க செல்வது பருமனைக் கூட்டும். அதற்காகத்தான், அந்தக் காலத்தில், 'பகலில் ராஜாவைப் போல (விருந்து) உண், இரவில் பிச்சைக்காரனைப் போல (கொஞ்சமாக) உண்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரவில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட நம் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது ரொம்ப முக்கியம். அன்றைய நாளில் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், மினரல்கள் எடுத்துக்கொண்டோமா என்று பார்ப்பது நல்லது. தூக்கமின்மை மற்றும் அஜீரண பிரச்னை உள்ளவர்கள் ஒரு மாத உணவு டைரி ஒன்றை ஏற்படுத்தி தினமும் 6 மணிக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதை குறித்து வரவேண்டும்.

எந்த உணவு சாப்பிடும் போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது? உணவு சாப்பிடும் முன்னர் எப்படி இருந்தது? சாப்பிட்ட பின்னர் எப்படி இருந்தது? இந்தத் தகவல்களையும் குறித்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்து கொண்டு இரவில் தவிர்த்து விடலாம்.மொத்தத்தில்... மிட் நைட் பிரியாணிக்கு 'நோ' சொல்வதே நோய்களிலிருந்து தப்ப வழி!

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்

உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!!


சளி மற்றும் ஜலதோஷத்திற்கு இஞ்சி
இது ஒரு பழங்கால மருத்துவம். இதனை சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், அப்போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.


காயங்களுக்கு தேன்
தேனில் நிறைய ஆன்டிசெப்டிக் பொருள் நிறைந்துள்ளது. எனவே இந்த தேனை அரிப்பு, காயம் அல்லது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்தால், அவை சரியாகிவிடும்.


வலிக்கு மிளகாய்
மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும்.


நீரிழிவிற்கு பாகற்காய்
பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.


பேனை போக்கும் ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மட்டும், அவை பிரபலமானது இல்லை. இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்தால், தலையில் உள்ள பேனை முற்றிலும் போக்கலாம். அதுமட்டுமின்றி, ஸ்பால்ப்பில் ஏற்படும் பிரச்சனையும் போக்கலாம்.


மருக்களுக்கு வாழைப்பழம்
சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும்.


துர்நாற்றமுள்ள பாதத்திற்கு ப்ளாக் டீ
பாதங்களில் துர்நாற்றம் வருவதற்கு காரணம், ஹார்மோன்கள் தான். ஆகவே அதனை போக்க வெதுவெதுப்பான ப்ளாக் டீயில் பாதத்தை ஊற வைத்து, கழுவினால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.



குமட்டலுக்கு எலுமிச்சை
எப்போது பயணத்தின் போது வாந்தி வருவது போல் அல்லது குமட்டல் ஏற்படுகிறதோ, அப்போது எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், அதனை சரிசெய்யலாம்.


பழுப்பு நிற சருமத்திற்கு பால்
ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதால், சூரிய வெப்பமானது நேரடியாக சருமத்தை தாக்குகிறது. இதனால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தை அடைகிறது. எனவே அடிக்கடி பாலை வைத்து, கழுவி வந்தால், இந்த பிரச்சனையை தடுக்கலாம்.


உடல் வறட்சிக்கு தர்பூசணி
உடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும். அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம்.


சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய்
வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

Sunday, 25 September 2016

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

அருகம்புல்லின் பயன்கள்

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

*    நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

*    இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

*    வயிற்றுப் புண் குணமாகும்.

*    இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

*    நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

*    சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

*    நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

*    மலச்சிக்கல் நீங்கும்.

*    புற்று நோய்க்கு நல்ல மருந்து.

*    உடல் இளைக்க உதவும்

*    இரவில் நல்ல தூக்கம் வரும்.

*    பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

*    மூட்டு வலி நீங்கும்.

*    கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

*    நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

நுகர்வோரே விழித்திரு !

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
+++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
______________________________

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
_____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John's Pizza,
California Pizza Kitchen,
Sal's Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
+++++++++++++++++++++++++++++++

Friday, 23 September 2016

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும்

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

1. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

2. இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

3. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

4. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.

5. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

Thursday, 22 September 2016

ஊறுகாயை தொடர்ந்தும், அளவின்றியும் சாப்பிடுவதால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்... ஜாக்கிரதை!

ஊறுகாயை தொடர்ந்தும், அளவின்றியும் சாப்பிடுவதால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்... ஜாக்கிரதை!

ரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்துச் சாப்பிடும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சினை எதிர்கொண்டிருப்பார்கள்.

புற்றுநோய்

வர்த்தகரீதியில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஓர் ஆய்வு கூறும் முடிவு இது.

சிறுநீரகப் பாதிப்பு

ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வாந்தி உணர்வு

அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கு ஊறுகாய்தான் காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தொடர்ந்து சாப்பாட்டோடு சேர்த்து அதிகமாக ஊறுகாயும் சாப்பிடும் போது இதுபோன்ற குமட்டல், வாந்தி உணர்வு ஏற்படலாம்.

வயிற்றுப்புண்

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படக்கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம்.

மன அழுத்தம்

ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செரிமானப் பிரச்சினை

ஊறுகாயை விரும்பிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஓர் உணவையும் அளவுக்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

தொற்று நோய்

ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படக்கூடும்.

ஊறுகாய் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உப்பு, காரம்தான் மேற்கண்ட பிரச்சினைகளுக்குக் காரணம். கடைகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளிலும் இதே பிரச்சினை உள்ளது.

'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்றவர்கள் நமது முன்னோர். அமுதத்துக்கே அப்படி என்றால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

ஊறுகாயை எப்போதாவது 'தொட்டுக் கொள்ள' மட்டும் செய்தால் மேற் கண்ட பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்!

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை
============

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

புரதங்கள் (ப்ரோடீன்):
=================

புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்:
==

நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம்:
=====

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி:
====

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஞ்சள்:
=======

மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.

காய்கறிகள்:
==========

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள்:
=======

ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
*********************************

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...

http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ

அருமை நண்பர்களே !...

இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
ரா.க....

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*...
*சாப்பிடுங்கள் முறையாக*...
*வாழுங்கள் ஆரோக்கியமாக*!..

Monday, 19 September 2016

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!


நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!
1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
29. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சென்று வாருங்கள்

ஆஸ்துமா

ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ஆஸ்துமா உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படும்.
இவர்கள் மிகவும் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியற்றைப் பருகக்கூடாது. மேலும், குளிர்ச்சாதன பெட்டியில் வைத்த எந்த உணவையும் இவர்கள் உண்ணவே கூடாது. அதிக எண்ணெய்ச் சத்துமிக்க உணவைத் தவிர்க்க வேண்டும். அதிக 'காரம்' நிறைந்த குழம்பு வகைகள், உணவு வகைகள், ஊறுகாய் ஆகியவற்றையும் குறைக்க வேண்டும். தயிர், வெண்ணெய், நெய், அதிகம் நெய்யிலோ வெண்ணெயிலோ வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
இவர்கள் பல்வேறு மீன்கள் குறிப்பாக கடல்மீன்கள், மாமிச வகைகள், முட்டை ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மதுபானங்களை விட்டொழிக்க வேண்டும்.
இவர்கள் பொதுவாக……
அதிக அளவு நீர் பருகல் வேண்டும். சிறிது சூடான நீரையே குளிப்பதற்கு, குடிக்கப் பயன்படுத்துவது நல்லது.
அதிக அளவு பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும்.
வயிறு நிறைய ஒரே நேரத்தில் உணவு உண்ணக் கூடாது.
அடிக்கடி குறைந்தளவு உணவை உண்ண வேண்டும். இரவு நேர உணவைப் படுப்பதற்கு பலமணி நேரம் முன்பாகவே உண்ண வேண்டும்.
பல்வேறு பழங்கள் குறிப்பாக, பச்சைப்பழம், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.
வெள்ளரிக்காயும் தரக்கூடாது.

ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :-

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

மேலும் சில குறிப்புகள் :-

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

எச்சரிக்கை :-
ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்

சர்க்கரை நோய் குணமாக

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு குவளை அளவு குடித்து வரவேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.

தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அத்தி, துளசி, ஆவாரம், சிறுகுறிஞ்சான், கோவை இலைகளை நன்கு நிழலில் உலர்த்திப் பொடித்து காலையும் மாலையும் நோய் தன்மைக் கேற்ப உட்கொள்ள வேண்டும், நோய் குணமாகும் வரை.

நாவல்பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சர்க்கரை ஆரம்ப நிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.

தண்ணீரில் மழைக் காலங்களில் வளரும் ஆரைக் கீரையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்

தேவை அதிக கவனம்

மார்பகப் புற்றுநோய் பற்றி பலருக்கும் இப்போது தெரிந்திருக்கிறது. வரும் முன்னர் தடுக்க வேண்டும் என்பதிலும், வந்துவிட்டால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வின் அடுத்தகட்டமாக நாம்
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தை இப்போது மருத்துவ உலகம் முன்வைத்திருக்கிறது.. அது லிப்ஸ்டிக்!

'லிப்ஸ்டிக்கில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரீயம் (Lead) உள்பட பல ஆபத்தான ரசாயனங்கள் இருக்கிறது என்பது நீண்டநாட்களாகவே கூறப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது `லெட்டை போலவே ஆபத்தான வேறு முக்கிய விஷயமும் இருக்கிறது' என்று சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்திய மருத்துவ ஆய்வாளரான பி.எம்.ஹெக்டே.

பி.எம்.ஹெக்டேவின் கருத்தை அறிந்துகொள்ளும் முன், லிப்ஸ்டிக் எப்படி தயாராகிறது என்பது உள்பட சில அடிப்படை விஷயங்களை சரும நல மருத்துவரான ப்ரியா சொல்வதிலிருந்து கேட்போம்.''எண்ணெய், மெழுகு, கொழுப்பு இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் லிப்ஸ்டிக்கை தயாரிக்கிறார்கள்.

இதில் நிறத்துக்காக சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பார்கள். மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதில் லெட், காட்மியம், குரோமியம், மாங்கனீசு, அலுமினியம் போன்ற ஹெவி மெட்டல்கள் கலந்திருக்கும். நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்
களிலும் இந்த ஹெவி மெட்டல்கள் இருக்கும்.

ஆனால், லிப்ஸ்டிக்கில் என்னென்ன கலந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற Ingredients பகுதியில் ஹெவி மெட்டல்களை பற்றி குறிப்பிட மாட்டார்கள். ஹெவிமெட்டல்கள் நேரடியாகக் கலக்கப்படாததால் Base materials, Pigments என்றுதான் அச்சிட்டிருப்பார்கள்.

லிப்ஸ்டிக் தயாரிப்பாளர்கள் இந்த விவரங்களை மறைத்தாலும் பல நாடுகளின் ஆய்வுகளில் இந்த ஹெவி மெட்டல்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, லெட் இருப்பது அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்பவர், லிப்ஸ்டிக்கால் வரக்கூடிய பிரச்னைகளைப் பட்டியல் இடுகிறார்.

''பொதுவாக லிப்ஸ்டிக்கால் சரும அலர்ஜி வரலாம். உதட்டில் வெடிப்பு ஏற்படுவது, உதடு முழுவதும் கருப்பாவது, மச்சம் போல் திட்டுத்திட்டாக சில இடங்களில் மட்டும் கருப்பாவது போன்ற சின்னச்சின்ன பிரச்னைகள் வரலாம். நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் Allergic contact dermatitis என்ற சரும அலர்ஜி வரலாம். சில நேரங்களில் லிப்ஸ்டிக்கின் நிறமிகளால் உதட்டின் சருமம் உறியலாம். குறிப்பாக, வெயிலில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களினால் உதட்டின் சருமம் உறியும் நிலை ஏற்படும்.

இவற்றைத் தவிர்த்து, லிப்ஸ்டிக்கை விழுங்குவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. முக்கியமாக தண்ணீர் குடிக்கும்போதோ, சாப்பிடும்போதோ லிப்ஸ்டிக்கை விழுங்கிவிடுவார்கள். சருமத்தில் என்ன தடவினாலும் அது உடலால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கும். அதேபோல், லிப்ஸ்டிக்கும் உதட்டிலிருந்து ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகமாக உண்டு.

மிகக் குறைந்த அளவில் லெட் கலந்திருப்பதால் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம் என்று மருந்து மற்றும் உணவுத்தரக்கட்டுப்பாடு நிறுவனமான எஃப்.டி.ஏ அனுமதித்திருக்கிறது. ஆனாலும், லெட்டுக்கு என்று சில ஆபத்தான குணங்கள் இருக்கின்றன. Neuro toxins என்ற நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய அபாயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றை லெட் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது'' என்கிறார் மருத்துவர் ப்ரியா.

மாடல்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், விசேஷ நாட்களில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துகிற பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
''லிப்ஸ்டிக்கை ஒருநாளிலேயே அதிக முறை பயன்படுத்துவதும், அதிக அளவிலான லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதும் தவறானது. மிகவும் இளம்வயதிலேயே லிப்ஸ்டிக் பயன்படுத்த ஆரம்பிப்பதும் பெரிய தவறு. 15 வயதில் ஒரு பெண் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த ஆரம்பித்தால் 45 வயதாகும்போது ஏறக்குறைய 30 ஆண்டுகள் அந்தப் பெண் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி இருப்பார்.

இதனால் லிப்ஸ்டிக்கினால் உண்டாகும் அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய அளவில் அவரை பாதிக்கும். அதனால், மிகவும் இளவயதிலேயே பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் லிப்ஸ்டிக் போட்டுவிடக் கூடாது.

மாடலிங், சினிமா போன்ற துறையில் லிப்ஸ்டிக்கை தவிர்க்க முடியாது. இவர்களைப் போல அடிக்கடி லிப்ஸ்டிக்கை பயன்படுத்துகிறவர்கள் நம்பகத்தன்மை கொண்ட பிராண்டுகளை பயன்படுத்தலாம். இப்போது ஆர்கானிக் வகை லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தி உதட்டின் நிறம் மாறினாலோ, கருப்பு மார்க் வருகிறது என்றால் அந்த லிப்ஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மருத்துவ ஆலோசனையும் அவசியம்'' என்கிறார் மருத்துவர் ப்ரியா.

பத்ம பூஷண் விருது பெற்ற மூத்த மருத்துவரான பி.எம்.ஹெக்டே, பெண்களின் மார்பகப் புற்றுநோயைத் தூண்டும் அபாயம் லிப்ஸ்டிக்கில் இருக்கிறது என்கிறார்.''பெண்களின் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனை தூண்டக்கூடிய வேதிப்பொருள் லிப்ஸ்டிக்கில் இருக்கிறது.

அதாவது, லிப்ஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல பெண்களின் உடலில் செயல்படும். இதனால் மார்பின் அளவு இயல்பாகப் பெரிதாவது போலத் தோன்றி, பின்னர் மார்பகப் புற்றுநோய் உண்டாகும். இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிற பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேல்தட்டு பெண்களிடம் காணப்பட்ட இந்த லிப்ஸ்டிக் பழக்கம் இப்போது இந்தியாவில் எல்லா தரப்பிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது. விழா நாட்கள், விசேஷங்களுக்குப் பயன்படுத்துவது என்று பெண்களிடம் ஆரம்பிக்கும் இந்த பழக்கம் சிலருக்கு தினசரி பழக்கமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால், இப்போதே லிப்ஸ்டிக்கினால் உண்டாகும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையை பெண்களிடம் உருவாக்க வேண்டியது அவசியம்'' என்கிறார்.

லிப்ஸ்டிக்கால் ஏற்படும் இந்தக் குழப்பம் பற்றியும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பற்றியும் நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரான ராம்குமாரிடம் பேசினோம்.''ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அடிப்படையில் பெண்களுக்குப் பல நன்மைகளைத் தரக் கூடியது. பருவமடையச் செய்வது, மார்பகம் உருவாவது, அழகு, நளினம், கவர்ச்சி என பெண்கள் பெண் தன்மையுடன் இருப்பதற்குக் காரணமே ஈஸ்ட்ரோஜென்தான். பெண்களின் பாலியல் உறவின் விருப்பத்தைத் தூண்டுவதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான்.

அழகு சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மார்பகங்களை பெரிதாக்க ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை ஊசிகளாகவும், மாத்திரைகளாகவும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், அது மருத்துவ ஆலோசனையுடன் அளவறிந்து கொடுக்கப்படுவதால் பிரச்னைகள் வராது.அதுவே, விவரம் அறியாமல் ஈஸ்ட்ரோஜெனை பயன்படுத்தும்போதோ அல்லது லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் மூலம் மறைமுகமாகத் தூண்டப்படும்போதோ மார்பகப் புற்றுநோய் பிரச்னை வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு.

இதற்குக் காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மார்பகங்களின் செல்களுக்கும், கருப்பை செல்களுக்கும் அதிகமாக உண்டு என்பதுதான். அதனால்தான் ஈஸ்ட்ரோஜென் அதிகளவில் பெண்களின் உடலில் சுரக்கும்போது மார்பகப் புற்று நோயும், கருப்பைப் புற்றுநோயும் எளிதாக உருவாகி விடுகிறது.

மன அழுத்தம், வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் என்று ஏற்கெனவே மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நீரிழிவுப் பிரச்னையும் மார்பகப் புற்றுநோயை மறைமுகமாகத் தூண்டக்கூடியதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் கவனமாக, இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராம்குமார்.

''மார்பகப் புற்றுநோய் பற்றி முன்பு பேசவே பெண்கள் தயங்குவார்கள். ஆனால், இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், என்னதான் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் உரிய நேரத்தில் பரிசோதனை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

ஆரம்ப கட்டத்திலேயே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான்.முன்பைவிட மார்பகப் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் இந்த அலட்சியம் கவலைக்குரியதாக இருக்கிறது. அதிலும் வாழ்வியல் முறை, தவறான உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்ற காரணங்களால் இன்று மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது.

லிப்ஸ்டிக்கால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ரசாயனம் எப்படியிருந்தாலும் ஆபத்துதான் என்பதன் அடிப்படையில் பெண்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமநாதன்.

லிப்ஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல பெண்களின் உடலில் செயல்படும். இதனால் மார்பின் அளவு இயல்பாகப் பெரிதாவது போலத் தோன்றி, பின்னர் மார்பகப் புற்றுநோய் உண்டாகும்.

லெட் கலந்த லிப்ஸ்டிக்கை கண்டுபிடிக்க...

லிப்ஸ்டிக் விற்பனையில் பிரபலமாக இருக்கும் 12 முன்னணி பிராண்டுகளிலேயே லெட் கலப்படம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமானவை என்று மக்களால் நம்பப்படுகிற முன்னணி பிராண்டுகளிலேயே பிரச்னை என்றால், எந்த தர நிர்ணயமும் இல்லாமல் சந்தையில் விற்பனையாகிவரும் லோக்கல் பிராண்டுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளலாம். இந்தியா உட்பட அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை.

லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் லெட்டை எளிமையாகக் கண்டுபிடிக்க இரண்டு எளிய ஆலோசனைகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிக நேரம் நிறம் தாங்கக் கூடிய லிப்ஸ்டிக் என்றால் அது அபாயமானது. ஏனெனில், லெட் மற்றும் பிக்மெண்ட் அதிக அளவில் கலக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் நிறம் அதிக நேரம் தாங்கும். அதேபோல், லெட்டை கண்டுபிடிக்க இன்னொரு சின்ன உத்தியும் இருக்கிறது.

கையில் சின்னதாக லிப்ஸ்டிக்கை தடவிக் கொள்ளுங்கள். அந்த லிப்ஸ்டிக்கின் மீது மோதிரம், செயின் என்று தங்கத்தை லேசாக உரசிப் பாருங்கள். உடனடியாக கையில் தடவப்பட்டிருந்த லிப்ஸ்டிக்கின் நிறம் கருப்பாக மாறினால் லெட் அதிகளவில் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

லிப்ஸ்டிக்கில் கலக்கப்படும் லெட்டுக்கு, நியூரோ டாக்சின்ஸ் என்ற நரம்பு மண்டலங்களைப் பாதிக்கக் கூடிய அபாயம் கொண்டதையும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது.

காக்கை வலிப்பு குணமாக

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை பருகி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

வேப்பிலை, வில்வ இலை, முருங்கைக்காய், துளசி இலை, ஆடாதோடை போன்ற இலைகளைத் தூள் செய்து காலை மாலை சுடுநீரில் 1 தேக்கரண்டியளவு உண்டு வந்தால் நல்ல குணமேற்படும்.

(சில உடற்பயிற்சி முறைகளாலும் காக்கை வலிப்பைக் கட்டுப்படுத்தலாம். தலையை மொட்டையடித்து தலைக்கு வேப்பெண்ணெய் பூசி, வெயிலில் சூடுகாட்டுவதன் மூலம் மூளையின் சுழற்சிக் குறைந்து வலிப்பு நோய் நிற்கும். தினமும், காலை மாலை தலைக்கீழாய் நின்று சிரசாசனம் செய்வதிலும் வலிப்பு நோய் நிற்கும்).

Saturday, 17 September 2016

எட்டு

"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :

"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"

என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.

எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.

"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,

அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

"வாழ்க வளமுடன்

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது(எல்லா மாதங்களிலும்தான்). ஏன் தெரியுமா?...

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது(எல்லா மாதங்களிலும்தான்). ஏன் தெரியுமா?...

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

புரட்டாசி மாதத்தில் துளசியை அவசியம் பயன்படுத்துங்கள்(மற்ற மாதங்களிலும்தான்).

தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்

*தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்*

உடல் ஆரோக்கியத்தைப் பெற தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்

கூல்ட்ரிங்க் என்ற பெயரில் கெமிக்கலை குடிப்பதை விட

தினம் ஒரு சூப் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிட்டும்.

*ஞாயிறு :-*

ஞாயிற்று கிழமை மணத்தக்காளி சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வாய்ப்புண் ,வயிற்றுப் புண் ,வயிற்று வலி குணமாகும்.

*திங்கள்:-*

திங்கள் கிழமை முடக்கத்தான் சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வாத நோய்கள்,கை,கால், மூட்டுவலி,நாள்பட்ட

இருமல்,மார்பு நோய் ,வீக்கம்,ஆஸ்துமா,காசநோய் ,தலைவலி,காமாலை,

கழுத்து வலி ஆகியவை குணமாகும்.

*செவ்வாய்:-*

செவ்வாய் கிழமை வெள்ளை முள்ளங்கி சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், சிறுநீரக கோளாறுகள்,,இருமல் ,கல்லடைப்பு,ஆகியவை குணமாகும்.ஆண்மை
பெருகும்.

*புதன் :-*

புதன்கிழமை சிறு கீரை சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் கண் நோய்கள,புண்கள்,சிறுநீர் எரிச்சல்,வீக்கம்,பித்தநோய் ஆகியவை தீரும். குரல் வளமையடையும்.

உடல் வலிமை பெறும்.

*வியாழன்:-*

வியாழன் கிழமை அகத்தி கீரை சூப் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

பித்தம் குறையும், சைனஸ் நீங்கும், பீடி,சிகரெட்டினால் உள்ள நஞ்சு நீங்கும்.

*வெள்ளி :-*

வெள்ளிக்கிழமை முட்டைகோஸ் சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண்,வயிற்று வலி தீரும்.

இரும்பு சத்து நிறைந்தது.

*சனி:-*

சனிக்கிழமை வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் சிறுநீர் கோளாறுகளை போக்கும்.சிறுநீரக

கற்களைக் கரைக்கும்.உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

*குறிப்பு:-*

சூப் போடும்பொழுது உள்ளி ,பூண்டு,சீரகம்,பெருஞ்சீரகம்,நல்ல மிளகு,

வெந்தயம்,கறிவேப்பிலை,மல்லிக்கீரை,சிறிது உப்பு இவைகளை போட
வேண்டும்.

உள்ளி ,பூண்டு,இவைகளை லேசாக நசுக்கிப் போட வேண்டும்.

மற்றவைகளை ஒரு கரண்டி வீதம் போடவும்.
ஐந்து கரண்டி மல்லியை லேசாக வறுத்து போடவும்.ருசிக்கு
தகுந்த உப்பு போடவும்.

*பிற்சேர்க்கை :-*

தினசரி இஞ்சி ,பூண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது
நல்லது.

இவைகள் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

மாரடைப்பை தடுக்கும்.

இரத்த நாள செயல் பாட்டை சரி செய்யும்.

Thursday, 15 September 2016

சீனி : சில கசப்பான உண்மைகள்

சீனி : சில கசப்பான உண்மைகள் (Truth behind Sugar)

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.
சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.
அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.
காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது

முருங்கைக்கீரையை பற்றியும் அதனை சூப்செய்து குடித்து வந்தால்

முருங்கைக்கீரையை பற்றியும் அதனை சூப்செய்து குடித்து வந்தால் நமக்கு குறிப்பாக பெண்களுக்கு என்ன‍ மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
தினமும் முருங்கைக்கீரையை சூப்செய்து குடித்து வந் தால் தலைமுடி அடர்த்தியாகவும், அழுத்த‍மாகவும், ஆரோக்கியமாகவும் கருமையாகவும் நீண்டு செழித்தும் வளரத் தொடங்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தின மும் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு இடைவிடாமல் இந்த முருங்கைக்கீரை சூப் செய்து குடித்து வந்தால் கூந்தலில் ஏற்படும் அதிரடியான நல்ல மாற்ற‍த்தினை கண் கூடாக நீங்களே காணலாம். கண்டு மகிழலாம். பிறரை வசீகரிக்க‍லாம்.

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

காரட், பாகற்காய், இளநீர்:

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை:

இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்:

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்:

கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு:

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும்.



அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

டைப் 2 டயபடிஸ் (சர்க்கரை நோய்)

மிக மிகச் சாதாரண எளிய உடற்பயிற்சிகளை அன்றாடம் சுமார் அரை மணி நேரம் செய்வதால், டைப் 2 டயபடிஸ் (சர்க்கரை நோய்) நோயிலிருந்து தப்பலாம் என்று தெரிய வந்துள்ளது.



காலை நேரத்தில் வாக்கிங் செல்லுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு அரை மணி நேர நடைபயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைபயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் மிகக் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டுமா? குறைந்தது 15 நிமிட நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.

புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு அவர்களுக்கு

புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மிகவும் அவசியமானதாகும். அவர்களின் சிகிச்சை காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணும் போது தான் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ முடியும். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே ஆகும்.

1. பூண்டு

பூண்டு... குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

2. முட்டைகோஸ்

சத்துக்கள்: வைட்டமின் சி அதிகம் உள்ளன. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் உள்ளன.
 
பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இளமையைத் தக்கவைக்கும். கண்ணுக்கு மிகவும் நல்லது.  கேன்சர் வராமல் காக்கும்.

3. காலிஃபிளவர்

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

4. முருங்கைக் கீரை

சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும்,  ஓரளவு தாது உப்புக்களும் இருக்கின்றன.

பலன்கள்: கண்கள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரியாகும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் உறுதியாகும். தேங்காய் சேர்த்துப் பொரியலாகவும் சாப்பிடலாம்.

5. திராட்சை

திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.

6. இஞ்சி

இஞ்சி ஒரு மூலிகை பொருள். இதன் நன்மைகளோ ஏராளம். ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.

7. மஞ்சள் தூள்

கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.

8. ஆரஞ்சு

சத்துக்கள்: வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் உள்ளன.

பலன்கள்: நாள்பட்ட நோயால் பாதித்துத் தேறியவர்களுக்கு இது நல்ல டானிக்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும்.

9. எலுமிச்சை

வீக்கங்களை கட்டுப்படுத்தும்: உடலிலின் உள்ளுறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் எற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சையிடம் உள்ளது.

சிறுநீரகக் கற்களை தடுக்கும்: தினமும் எலுமிச்சை சாறினை குடித்தால், சிறு நீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து வெளியேறிவிடும். இவை சிறு நீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்து, சிறு நீரகத்தை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்தும்.

தசை மற்றும் எலும்புகளுக்கு பலம்: எலும்புகளுக்கு பலம் அளித்து, அவற்றி இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்கிவிடாமல் பாதுகாக்கிறது. தசைகளுக்கு பலம் தந்து உறுதி பெறச் செய்கிறது. அவற்றில் உண்டாகும் வீக்கங்களை போக்கி, புத்துணர்வை தரும்.

10. மாதுளை

சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து இதில் மிகவும் அதிகம். ஓரளவு  வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இருக்கின்றன.
   
பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்சனை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம். சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது

11. மிளகாய்

இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகள் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன் படுகிறது.

12. கீரை வகைகள்

புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்க முடியும்.

13. தக்காளி

தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள 'லைகோபைன்' வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

14. க்ரீன் டீ

கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ.

இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள்  இருக்கிறது கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இத தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா கொழுப்பு கரைஞ்சு  சிலிம் ஆகலாம்ங்க. மேலும், சக்கர நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்த கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.

Wednesday, 14 September 2016

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.
உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், கொத்தமல்லி சாறு சிறிது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட கொத்தமல்லி சாறு, தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Monday, 12 September 2016

சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை

சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும். எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது.

இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும். அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சமையல் குறிப்புகள்

பட்டை:

       செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது..

ஜாதிக்காய்:

     பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கிராம்பு:

      நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி :

       மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

புதினா:    

       ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏலக்காய்:

       வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

மல்லி:

      செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

மஞ்சள்:

      காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

சோம்பு:

        வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

பெருங்காயம்:

       கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

சீரகம்:

     சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

வெந்தயம்:

      நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

கடுகு:

     இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பூண்டு:

       வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்:

       இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது

விடாமல் அடிக்கடி இருமிக்கொண்டிருப்பவர்களுக்கும்

விடாமல் அடிக்கடி இருமிக்கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

*குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

*மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

*அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகிவிடும்

சிறிய குழந்தைகளின் காய்ச்சலை குறைக்க

சிறிய குழந்தைகளின் காய்ச்சலை குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் அல்லது ஸ்பாஞ் குளியல் அளியுங்கள். இது உடலின் உஷ்ணத்தை சீர்படுத்தும். சிறிய குழந்தைகள் என்றால் தினமும் 2 அல்லது 3 முறை ஸ்பாஞ் குளியலில் ஈடுபடுத்துங்கள். சாதாரண நீரில் ஒரு துணியை நனைத்து, அதனை பிழிந்து கொள்ளுங்கள். பின் அக்குள், பாதம், கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஒற்றி எடுங்கள். இது உடலின் வெப்பநிலையை குறைக்கும். மற்றொரு வழியும் கூட உள்ளது; குளிர்ந்த ஈர துணியை குழந்தையின் நெற்றியில் வைத்து, அதனை சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.

குறிப்பு: மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உட்புற உடலின் உஷ்ணத்தை அதிகரித்து விடும்.

எலுமிச்சை:
4 எலுமிச்சையின் சாறு மற்றும் தோள்களுடன் 1 தேக்கரண்டி இஞ்சி துண்டுகளை ஒரு வாணலியில் போடவும். அதனை மூடும் அளவிற்கு போதுமான நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனை மூடி போட்டு மூடி விட்டு ஒரு 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் நீரை வடிகட்டவும். சரிசமமான அளவில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதனை நீர்மமாக்கவும். சுவைக்காக சற்று தேனையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த சூடான லெமனேட் பானத்தை உங்கள் குழந்தைக்கு தினமும் சில முறை கொடுக்கவும்.

குறிப்பு: 1 வருடத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தேனுக்கு பதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

தேன் :
1 வயது அல்லது மேலே உள்ள குழந்தைகள் பொதுவான சளி அல்லது இருமலால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது தேன். 2 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கொள்ளவும். இதை குழந்தைகள் குணமடையும் வரை சில மணிக்கு ஒரு முறை கொடுத்து வரவும். வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கி, நெஞ்சு வலி குறையும்.

குறிப்பு: 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டும். அதற்கு காரணம் தேனில் உள்ள பாக்டீரியா குழந்தை பருவத்துக்குரிய கிளாஸ்டிரீயம் நச்சேற்றத்தை உருவாக்கலாம்.

ஆரஞ்சு:
ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி, சளியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இருமல், தொண்டைப் புண் மற்றும் ஒழுகும் மூக்கு போன்ற அறிகுறிகளைப் போக்க, இது நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 1 முதல் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சிறிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் அளவிலான தண்ணீரை கலந்து, சீரான இடைவெளிகளுள் கொடுக்கவும். பெரிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே உண்ணச் சொல்லலாம். இது வைட்டமின் சி உட்கொள்ளுதலை அதிகரிக்கும்.

இஞ்சி:
6 கப் தண்ணீர், ½ கப் மெல்லியதாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் 2 லவங்கப்பட்டையை ஒரு வாணலியில் போடவும். குறைந்த தீயில் அதனை 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின் வடிகட்டவும். அதனுடன் பச்சை தேன் அல்லது சர்க்கரையை கலக்கவும். இதனை உங்கள் குழந்தைக்கு தினமும் பல தடவை கொடுக்கவும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதனுடன் சரிசமமான அளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

தாய்ப்பால்:
குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது, தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, சீக்கிரமாகவே குணமடைய இது தனித்துவமான சமநிலை அளவில் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கும். சளி அல்லது இருமலை உண்டாக்கும் தொற்றை விரட்ட, அதுவும் 6 மாதத்திற்கு குறைவான குழந்தை என்றால், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.