ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி(பவுடர்) செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
குறிப்பாக விந்து அதிகரிக்க, ஆண்மை குறைபாடு நீங்க , விந்தணுக்கள் அதிகரிக்க , ஒல்லியாக இருக்கும் உடல் குண்டாக, ஆண்குறி புஷ்டியாக உதவி செய்கிறது ஓரிதழ் தாமரை.
இதை 21,41 நாட்கள் என்னும் கணக்கில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும் காலங்களில் புளிப்பு மற்றும் காரம் உள்ள பொருட்களை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும். மசாலா உணவுகள் அறவே ஒதுக்க வேண்டும். மட்டன் தவிர மற்ற அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. சைவ உணவை பின்பற்றினால் மிகவும் நல்லது. மருந்து முடியும் வரை பிரம்மச்சர்யத்தில்(avoid sexual intercourse,masturbation) இருப்பது மிக மிக முக்கியம்.
சாப்பிடும் முறை: 2 கிராம் முதல் 5 கிராம் வரை பால் + தேன்/கற்கண்டு.
கூடுதல் பொடி(பவுடர்) சேர்த்தால் பால் மிகவும் கட்டியாகி விடும். பால் சூடாக இருக்கும் போது தேன் சேர்க்கக் கூடாது. மிதமான சூடு இருக்கும் போது சேர்க்கவும்.
குறிப்பு: பச்சை ஓரிதழ் தாமரை கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய்ந்த ஓரிதழ் தாமரையை கொண்டு வந்து நன்றாக மண், தூசு போக தண்ணீரில் அலச வேண்டும்(ஊற வைக்கக் கூடாது). அதன் பின் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.பிறகு மருந்து பொடி(பவுடர்) செய்யும் மில்லில் கொண்டு சென்று நைசாக பொடிக்க வேண்டும். பொடியை நாவில் இட்டு ருசித்து பார்க்க மண் இருக்க கூடாது. இது தூய்மையான செய்முறை.
ஆண்மை சக்திக்கு:(வெளிப் பிரயோகம்)
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்.
No comments:
Post a Comment