Thursday, 1 September 2016

30 வயதிற்கு பின் கால்சியம் கட்டாயம்

கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால் உண்டாகும் பின்விளைவு!!

இப்போது அடிக்கடி விளம்பரங்களில் காண்பீர்கள் 30 வயதிற்கு பின் கால்சியம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.

எந்த மருத்துவரும் தேவையேயில்லாமல் கால்சியம் போன்ற சத்து மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார்கள்.

காரணம் கால்சியம் சத்து நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் இருந்தாலே போதுமானது. அதை தவிர்த்து கால்சியம் மருந்துகள் சாப்பிடுவது நல்லதல்ல.

கால்சியம் பாஸ்பரஸ் போன்ற நுண் சத்துக்கள் பல உறுப்புகலின் செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கின்றன. குறிப்பாக நரம்புகளில், செல்களில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தேவை.

60 வயதிற்கு பிறகு வரும் ஆஸ்டியோஃபியரோஸிஸ் போன்ற எலும்பு தெய்மானம் நோய்களுக்கு காரணம் கால்சியம் அளவு குறைவதால்தான். ஆனால் அவற்றிற்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் டெமென்ஷியா என்னும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஸ்வீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் சாப்பிடும் கால்சியம் மாத்திரைக்கும் மன அழுத்தத்திற்கு என்ன தொடர்பு என ஆராய்ச்சி செய்தனர்.

இந்த ஆராய்ச்சிக்காக 700 வயதான பெண்களை ஈடுபடுத்தினர். அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்து ஆய்வு படுத்தினார்கள்.

பொதுவாக ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மன பிறழ்வு வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்வார்கள்.

இந்த ஆராய்ச்சியின் ஏற்கனவே ஸ்ட்ரோக் வந்த பெண்கள், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏழு மடங்கு டெமென்ஷியா எனப்படும் மனப் பிறழ்விற்கு தள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment