Friday, 9 September 2016

சுரம், காய்ச்சல் தீர:

சுரம், காய்ச்சல் தீர:

சீரகமும், குறுந்தோட்டி வேரும் சம அளவாக பொடி செய்து தேனுடன் 1 ஸ்பூன் தர குளிர்சுரம் நீங்கும்.
அவுரி வேர் பட்டையை , மிளகுடன் குன்றியளவு சுண்ணாம்பு சேர்த்து வெந்நீரில் கரைத்து கொடுக்க விடாசுரம் தீரும்.
ஆடாதோடை இலை, திப்பிலி, சுக்கு, சிற்றரத்தை, ஓமம், யானை திப்பிலி, கண்டங்கத்திரி இவை சமம் சேர்த்த குடிநீர் – 50 மில்லி வீதம், தேன் கலந்து கொடுக்க கபசுரம், இருமல்(இரைப்பு) மாறும்.

Dengue(டெங்கி என்று உச்சரிக்க வேண்டும்) காய்ச்சல் தணிய நிலவேம்பு கஷாயத்தை அடிக்கடி குடிக்க வேண்டும். நிலவேம்பு, வேப்பம்பட்டை மற்றும் 30-க்கும் மேலான மூலிகைகள் கலந்த மஹா சுதர்சன மாத்திரை அனைத்து ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும். அதை வாங்கி 2 முதல் 4 வேளை சாப்பிட பல காய்ச்சலும் தணியும். எந்த காய்ச்சளுக்கும் இதை கொடுக்கலாம்.
மலச்சிக்கல் ஏற்படுமாயின் திரிபலாவை இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.[பெரியவர்கள் 2 (அ) 3 மாத்திரை,சிறியவர்கள்: 1 மாத்திரை,அல்லது வைத்தியரின் ஆலோசனைப்படி.]

ஒரு டம்ளர் பசும்பாலில் பூண்டு(தோல் உரித்தது) சேர்த்து  + 1 (அ) 2  சிட்டிகை மஞ்சள் சேர்த்து  கொதிக்கவைத்து (பூண்டு நன்றாக வேக வேண்டும்) + தேன் சேர்த்து சாப்பிட கபம், சுரம், இதனால் வரும் உடம்பு வலி போன்றவை குணமாகும். இரண்டு வேலையும் உணவுக்கு பின் குடிக்க வேண்டும். [பெரியவர்களுக்கு- 10 பூண்டு பற்கள், சிறியவர்களுக்கு- 5 பூண்டு பற்கள்](Works as Antibiotic)

குளிர்க் காய்ச்சல்: கருந்துளசி/நீலத்துளசி சாற்றை இரண்டு (அ) மூன்று தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலக்கி 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தினால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

உஷ்ண காய்ச்சல் குணமாக: செம்பருத்திப் பூ 5, சுத்த தண்ணீரில் இட்டு சுண்ட காய்ச்சி 1/4 பங்கு ஆனவுடன் 3 வேளை குடிக்க சுரம் குணமாகும்.

No comments:

Post a Comment