வயிறு - Stomach Disease
சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டுவர தொப்பை குறையும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட குடல் புழுக்கள் சாகும்.
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை வறுத்து சாம்பலை 1 (அ ) 2 சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட குடல் புண் ஆறும்.
காய்ந்த நெல்லிக்காயை வாணலியிட்டு இளவறுப்பாக வறுத்து பொடி செய்து கோழி முட்டை வெள்ளை கரு சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட செரிக்கும் திறன் பெருகும்.
வாழைத்தண்டு போரியல் வைத்து சாப்பிட குடலில் சிக்கியிருக்கும் முடி, நஞ்சு ஆகியவற்றை வெளியேற்றும்.
No comments:
Post a Comment