Wednesday, 30 November 2016

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். 

* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

* அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

* ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

* பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

* வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

* கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

* சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்

பைல்ஸ் பிரச்சனை

இயற்கை வைத்தியம்

பைல்ஸ் பிரச்சனை

இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பைல்ஸ் பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஐஸ்
பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்
கற்றாழை
கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
பாதாம் எணணெய்
பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆலிவ் ஆயில்
தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்.
தானியங்கள்
பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம். எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு பலமுறை தடவி வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
டீ பேக்
டீயில் உள்ள டானிக் ஆசிட், மூல நோய்க்கு காரணமான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். அதற்கு டீ பேக்கை சுடுநீரில் ஊற வைத்து, அதனை லேசாக குளிர வைத்து, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லையெனில், டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
தண்ணீர்
முக்கியமாக பைல்ஸ் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலியை உணரக்கூடும்.

Monday, 28 November 2016

HEALTH_TIPS

#HEALTH_TIPS

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்..!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!

கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இந்த தைராய்டு சுரப்பியில் இருவேறு வகையான பிரச்சனைகள் எழும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு.

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹைர்மோன் குறைவான அளவில் சுரக்கும் நிலையாகும். ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பதாகும். பொதுவாக தைராய்டு பிரச்சனை ஒருவருக்கு வந்தால், அதனை முழுமையாக குணப்படுத்த முடியாது.

ஆனால் அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் செய்ய வேண்டியது உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துவது. இங்கு தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உண்பதைத் தவிர்த்தால், தைராய்டு பிரச்சனை மோசமாவதைத் தடுக்கலாம்.

க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்கவும்

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருக்கும். ஒருவேளை க்ளுட்டன் உணவுகளை இப்பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே ஹைப்போ தைராய்டு இருந்தால், க்ளுட்டன் உணவுகளை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

சோயா பொருட்கள் வேண்டாம்

சோயா பொருட்கள் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டி, உடலை உறிஞ்சச் செய்யும். எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், இந்த உணவுப் பொருட்களை அறவேத் தொடக்கூடாது. ஆனால் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா பொருட்களை உண்ணலாம்.

காபிக்கு 'பை-பை' சொல்லுங்கள்

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், காபியை அதிகம் குடிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான அளவில் காப்ஃபைன் உடலில் சென்றால், அதனால் அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்பட்டு, சோர்வு மற்றும் தைராய்டு பிரச்சனையை மேலும் மோசமாக்கும். எனவே காபிக்கு பதிலாக வேறு ஏதேனும் ஆரோக்கியமான பானத்தைப் பருகுங்கள்.

வறுத்த உணவுகளைத் தொடாதீர்கள்

வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் என்ன தான் தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்து வந்தாலும், இந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால், அந்த மருந்தின் சக்தி குறைந்து, நிலைமை மோசமாகத் தான் செய்யும். எனவே தைராய்டு பிரச்சனை இருப்பின், முதலில் எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளைத் தொடாதீர்கள்.

சர்க்கரை

ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு, ஏற்கனவே மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் விரைவில் உடல் பருமனடைவார்கள். அதோடு சர்க்கரையை உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமன் இன்னும் அதிகரிக்கும். எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளையோ அல்லது பானங்களையோ பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இளமையை காக்கும் இஞ்சி-சீரகம் கம்மர்கட்

இளமையை காக்கும் இஞ்சி-சீரகம் கம்மர்கட்

இஞ்சி - ஒரு பங்கு தோல் நீக்கி பொடியாக அரிந்தது
சீரகம் - இஞ்சியின் இரண்டு பங்கு
ஏலக்காய் - 2 பொடித்தது
பனைவெல்லம் - தேவையான அளவு சுத்தம் செய்து பாகு வடிவில்
பசு நெய் தேவையான அளவு

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து இளம் சிவப்பாக இஞ்சியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, ஏலக்காய் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.

அதே வாணலியில் சூட்டில் ஜீரகம் இரண்டு பங்கு சேர்த்து வாசனை வரும் வரை லேசாக பிரட்டி விடவும். கருகி விடக்கூடாது. ஆறியவுடன் மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.

பனைவெல்லத்தை கரைத்து கல், மண் நீக்கி அதே வாணலியில் இட்டு பாகு பதத்திற்க்கு காய்ச்சவும். பாகு பதம் வந்தவுடன் பொடித்த பொடியை போட்டு அல்வா பதத்தில் இறக்கவும். சிறிது ஆறியவுடன், கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டை பிடுக்கவும்.

சாப்பிடும் முறை:

காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம். ஜீரணத்திற்க்கும், குடலுக்கும், உடலில் உள்ள நச்சு கழிவுகளையும் நீக்கவல்லது. தைராயிட் பிரச்சனகளிலிருந்து பாதுகாக்கும். இளமையை நீட்டிக்கும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

பல் ரோகப்பொடி

பல் ரோகப்பொடி

சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்துபோகும்.

சுக்கு இல்லாவிடில் மருத்துவத்துறையில் சிறப்பான முறைகளைச் செய்வது அரிது! பல மருந்துகளில் சுக்கு தலைவனாக சேரும்போது திறமை மிகுந்த தளபதியைப் போல் நோய்களை விரட்டும், சுக்குக்கு மேல் தோலிலும், அருகம்புல்லுக்கு கணுக்களில் நஞ்சும் இருப்பதாக மருத்துவ ஏடுகள் கூறுகின்றன. ஆகவே இவைகளைப் பயன்படுத்தும் போது நஞ்சு பாகத்தை நீக்கி பயன்படுத்தல் வேண்டும்.

வாய்ப்புண் தீர

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

இஞ்சியின் மகத்துவங்கள் !

இஞ்சியின் மகத்துவங்கள் !

இஞ்சி பெயர்க்காரணம் :

இஞ்சி (ணுiபெiடிநச ழககiஉiயெடந) தாவரத்தின் தாவரவியல் பெயர் ஜிஞ்சிபர். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றியது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சியின் பொதுப்பண்பு :

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்.
✔ இஞ்சிக்கு எரிப்பு குணம் உடையதால் கடினமான உணவுப்பொருட்களையும் எளிதில் செரிக்கச்செய்துவிடும்

✔ இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும். இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.

✔ இஞ்சியை சாதாரணமாக சமையலில் சேர;த்துக் கொள்வது மிகப் பண்டைய கால வழக்கங்களில் இருந்தே ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சி வளரும் இடம் :

  இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர;வதற்கு அதிக காற்று, ஈரத்தன்மை மற்றும் மிதவெப்பம் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ. மழைபொழியும் மலைப் பிரதேசங்களில் இஞ்சி வளர்கிறது.

சுக்கு (காய்ந்த இஞ்சி) :

 உலர்ந்த இஞ்சியே சுக்கு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை 'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

இஞ்சி முறபா :

 மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது.

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

🖥சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

நம்புங்கள் நல்லதே நடக்கும்

உமீழ் நீர் உயிர் நீர்.

உமீழ் நீர் உயிர் நீர்.

🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵🍼🍨🍧🍦

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!

👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

ஒற்றைத் தலைவலியைப் போக்கும் சுண்டைக்காய்!*

*ஒற்றைத் தலைவலியைப் போக்கும் சுண்டைக்காய்!*

அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது.

வேறு பெயர்கள்: கடுகி பலம், பீதித் தஞ்சம், பித்தம், இருத்தியங்குசுட்டம், அருச்சி, கராபகம், சுவாசகாசக் கினி, தொட்டிதணைபற்பமாக்கி

வகைகள்: மலைச் சுண்டை, ஆனைச் சுண்டை

ஆங்கிலப் பெயர்: Solanum torvum, Linn; Solanqceae.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சோகை நீங்க

*சோகை நீங்க...*

குப்பைமேனி செடியை உலர்த்தி, தூளாக இடித்து பொடி 100 கிராம், மிளகு வறுத்து 10 கிராம் சேர்த்து கண்ணாடி புட்டியில் வைக்கவும். 3 மாதங்கள் 1/2 ஸ்பூன் அளவு காலை, மாலை பசும்பாலில் சாப்பிடவும். சோகை நீங்கும். ரத்தம் பெருகும். மருந்து சாப்பிடும் வரை புலால் உணவு கூடாது.

*வாய்ப்புண் குணமாக*

மாசிக்காயை நன்றாக தூள் செய்து இரண்டு சிட்டிகை ஒரு வேளைக்கு வீதம் நெய் அல்லது வெண்ணையுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். குடல் புண் குணமாகும்.

*பித்தத்தை தவிர்க்க*

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.

*குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க*

தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட குளுகோஸ் நேரடியாக உடலுக்குள் சேருகிறது.

*கல்லீரல் பலப்படுத்த*

தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது. வைட்டமின் சி சத்து மற்றும் கால்சியம் இரும்பு சத்து உள்ளது.

*உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு*

உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திபழம் உதவும்.

*இதயத்தில் பலம் கிடைக்க*

மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடைகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

*இரத்த அழுத்தம் சரியாக*

டீ காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழசாறு பிழிந்து சாப்பிட்டு வர நல்லது.

*குழந்தைகளுக்கு மந்தம்*

கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து, குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசி எடுக்கும்.

*குழந்தைகளுக்கு வாய்ப்புண்*

குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால், இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்

*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்*!!

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*

*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

இஞ்சி - பூண்டு சட்னி

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி - பூண்டு சட்னி

தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் - 12,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

1. பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

2. இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.

4.சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.

5.இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து..

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து..

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

கருப்பு உளுந்து லட்டு

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1.முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க
வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

தேனும் எள்ளும்

தேனும் எள்ளும்

நவதானியங்களில் ஒன்றான எள் நமது நாட்டிற்கே உரிய தானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.

இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதுஃ மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது. எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும்.

பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது இத்தகைய சிறப்பு மிக்க தானியத்தை நம் நாவிர்கேற்ப சுவை கூட்டி எள்ளு மிட்டாய் என நம் குடும்பங்களில் உண்டு வந்தோம். எள்ளு மிட்டாய் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் அவசியம். சூடு அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.

ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் உள்ளடக்கிய தேனுடன் எள்ளை கலந்து சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படும். ஏனெனில் எள் தோல் முடி உடலுக்கு நல்ல உறுதியை அளித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

இக்கலவையை தினமும் உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம். மேலும் எள்ளில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

உங்கள் வயிற்றில் புண் இருந்தால், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வாருங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் மற்றும் எள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவும்.

எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொண்டு வர, எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதிலும் தினமும் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தேன் மற்றும் எள் கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பாக செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.

ஆற்றலை ஏராளமாக அள்ளி வழங்கும். அத்தகைய பொருட்களை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நாளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சுறுசுறுப்புடன் நாள் முழுவதும் செயல்படலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சில உணவுகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சில உணவுகள்

பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர்கள், கர்ப்பிணி தாய்மாராக மாறும் பொழுது கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை.

அதற்கான ஒரு சில ஆரோக்கிய உணவுகளைப் பார்ப்போம்:

வெஜிட்டபுள் இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்
பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - 1/2 கிண்ணம்
உருளை கிழங்கு - 2 (பெரியது)
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டிஉப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,

சீரகம் தாளித்து பின்னர் வேகவைத்துள்ள காய்கறி கலவையைச் சேர்த்துப் பிரட்டி விட்டு, அரை உப்பு சேர்த்து கிளறவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து காய்கறி

மசாலாவை ஒரு தேக்கரண்டி எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான வெஜிட்டபுள் இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

கம்பு கிச்சடி

தேவையானவை :

கம்பு - அரை கிண்ணம்
பாசிப்பருப்பு - 1 தேக்கரண்ட
பெரியவெங்காயம் - ஒன்று
பட்டை - ஒருதுண்டு
பச்சைமிளகாய் - 2
இஞ்சிவிழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்ட
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - அரை தேக்கரண்டி

காய்கறிகள் :
கேரட் - அரைகிண்ணம்
பீன்ஸ் - 3பெங்களூர் தக்காளி - பாதி
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:

தவிடு நீக்கப்பட்ட கம்பு (கடையிலேயே தவிடு நீக்கி சுத்தம் செய்த கம்பு கிடைக்கும்) மற்றும் பாசிப்

பயறு இரண்டையும் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் சேர்த்து சீரகம், பட்டை, இஞ்சி, கறிவேப்பிலை, உளுந்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த கம்பு மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம்செய்து, தண்ணீரை சுத்தமாக வடிகட்டவும். இதனுடன் வதக்கிய கலவையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். குக்கர் சத்தம் அடங்கியவுடன், விசிலை நீக்கி கிச்சடியை நன்கு கலக்கி, பரிமாறவும்.

ராகி - முருங்கைக்கீரை அடை

தேவையானவை:

கேழ்வரகு (ராகி) மாவு - 1 கிண்ணம்
முருங்கைக் கீரை - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் சிறிதளவு.

செய்முறை:

ராகி மாவில் நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய்வற்றல், சுத்தம் செய்த முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு தட்டின் பின்பகுதியில் மெல்லிய காட்டன் துணியைப் போட்டு அதன்மீது பிசைந்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு உருண்டைகளாக எடுத்து தட்டி. தோசைக்கல்லில் இட்டு, சுற்றிலும் நல்லெண்ணெய்யை விட்டு மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

பலன்கள்: கேழ்வரகில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு அடர்த்தி குறைதல், ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர, உடல்நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கம்பு தோசை

தேவையானவை:

கம்பு மாவு - 1 கிண்ணம்
தோசை மாவு - 2 கரண்டி
பச்சைமிளகாய் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

கம்பு மாவுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்துக்குக் கலந்து, தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். அதன் மேலே நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி தூவி, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

பலன்கள்: கால்சியம், புரதம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.

சாமை வெண்பொங்கல்

தேவையானவை:

சாமைஅரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் } தேவையானஅளவு (மிளகு 8-10)
உப்பு - தேவையானஅளவு
இஞ்சி - ஒருதுண்டு
தண்ணீர் - 450 மில்லி.
முந்திரி - 3 (பொடித்துக்கொள்ளவும்)

செய்முறை:

நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச்சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன.

ராகிக் கஞ்சி

தேவையானவை:

ராகி மாவு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது
தண்ணீர், பால் - தேவையான அளவு.

செய்முறை:

ராகி மாவைச் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இளஞ்சூடாக இருக்கையில், அத்துடன் தேவையான அளவு பால் கலந்து அருந்தலாம்.

பலன்கள்: புரதம், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. பெண்களுக்கு வயதான காலத்தில், எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுக்கும்.

கேரட் ஜூஸ்

தேவையானவை:

கேரட் - 2
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
தேன் - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, தேங்காய்ப்பால் சிறிது சிறிதாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.

(குறிப்பு: மேற்கண்ட உணவு வகைகளை மற்றவர்களும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.)

வரகு கேசரி

வரகு கேசரி

தேவையான பொருட்கள்:
வரகு - அரை கப்,
சர்க்கரை – 3/4 கப் ,இனிப்பு குறைவாக வேண்டும் என நினைபவர்கள் சிறிது அளவை குறைத்து கொள்ளலாம்.
நெய் - 2டேபிள்ஸ்பூன்,
முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 10,
தண்ணீர் – 2 ½ or 3 கப் கூட use செய்யலாம்.வரகு நீரை நன்றாக உறுஞ்சி விடுகிறது
ஏலக்காய்த்தூள் - சிறிது,
கேசரி பவுடர் - சிறிது. or குங்குமப்பூ சிறிது (நான் குங்குமப்பூ use செய்தேன்)
தேங்காய்ப் பூ-2 டேபிள்ஸ்பூன்(optional)
உப்பு-ஒரு சிட்டிகை

செய்முறை

1. வாணலியில் கொஞ்சம் நெய்யைச் சூடாக்கி, முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் கொள்ளவும்.

2.அதே நெய்யில் வரகை வறுத்து(கை பொறுக்கும் சூடு வரை வறுக்கவும்), ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

3. இது ரவை பதத்திற்கு இருக்க வேண்டும்.வாணலியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரைத்து வைத்துள்ள வரகை போட்டு வேகவைக்கவும்.

4. நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப் பூ (சாப்பிடும் போது தேங்காய் சுவை நன்றாக இருக்கிறது),சர்க்கரை ,சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும். இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ளவும்.

5.கேசரி பவுடர்(குங்குமப்பூ use செய்தால் நீர் கொதிக்கும் போது அதன் உடன் சேர்த்து கொள்ளலாம்,இவை எதுவும் இல்லாமல் வெறும் நிறம் இல்லாத கேசரியும் செய்யலாம்), ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

6.கடைசியாக முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும்.உதிரி உதிரியாக சுவை நன்றாக இருக்கிறது.வரகு use செய்பவர்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.இதை பனிவரகிலும் செய்யலாம்.

Monday, 21 November 2016

பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம்

பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எதுவென்ற சந்தேகம் இருக்கும். பெரும்பாலானோர் இரவில் தான் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்டால், சிலர் அது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழம் விலைமலிவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும் பழமாகும். இத்தகைய வாழைப்பழத்தை இரவில் ஒருவர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  தூக்கம் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். இதற்கு மெலடோனின் அளவை அதிகரிக்கும் ட்ரிப்டோபேன் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம் பொட்டாசியம் நம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தேவையான அவசியமான சத்தாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 4700 மிகி பொட்டாசியத்தை எடுக்க வேண்டும். இந்த பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது. சர்க்கரைக்கு சிறந்த மாற்று பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கள் குறையும் இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும். செரிமானம் வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. எனவே இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்

27 நட்சத்திரங்களுக்குரிய

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.

*ஆலயங்களும், அமைவிடங்களும்

*அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து 30கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டிஉள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருகி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

*பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடுவழியாக காரைக்கால் செல்லும் வழியில்நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

*கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

*ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

*மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

*திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

*புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

*பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்*
* *

*இருப்பிடம்: *பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

*ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

*மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

*பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

*உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

*ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்*
* *

*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

*சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

*சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்*
* *
*இருப்பிடம்:* சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

*விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்*

*இருப்பிடம்  மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

*அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

*கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

*மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

*பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

*உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

*திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்*

*இருப்பிடம்:* வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

*அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

*சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

*பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

*உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

*ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது
எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் திருத்தாள் போற்றி

நன்றி சேகர்

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?...

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?...

ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளை அணுக்கள்
நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்புச் சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள்  செய்கின்றன.

இரண்டு வகை சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் போது,  இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை  நிர்ப்பந்திக்கிறது.

இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும் போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்து கொள்ளும். இந்தக்  காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற் போல், உடல் எச்சரிக்கையாகி விடும்.

இதற்கு நினைவு  செல்கள் என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன் பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.

எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?

ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்தச் சக்தி  நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரி விகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக் குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்,  உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.

உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை  செய்யும் போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், இது  என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை என்பது அந்த உடலுக்குத் தெரிந்து விடும்.

அதன் பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.
இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  எச்.அய்.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,  நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும்  தேவையில்லை.

சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம்,  கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவு முறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு  குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.
அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி,  விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 hrs மணி முதல் 8hrs மணி நேரம் வரை தூக்கம் முக்கியம்.

*தீர்வு:*

துளசி இலைகள் ஒரு நோய் எதிர்ப்புத் திறன் போன்று செயல் படிகின்றன,பராமரித்தல் மற்றும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் ஒரு கலவை.அது பாக்டீரியா மற்றும் வைரஸ் காரணமாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கு எதிராக போராடுவது மட்டுமன்றி,மேலும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியைக் கூட்டுகிறது. இது நச்சு இலவச உடற்கூறுக்கு எதிராக ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது மற்றும் அதிகமான விஷத்தன்மை காரணமாக ஏற்படும் செல்லுலர் சேதத்தைத் தடுக்கிறது.

மேலும், எதினோபார்மகாலஜி இதழில் வெளியானஒரு ஆய்வு,இந்த மருத்துவ இலைகள் *டி சைட்டோகின்கள் என்.கே.* செல்கள் மற்றும் டி வடிநீர்ச் செல்கள் உற்பத்தியை தூண்டும்,தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் வகைகள், எனவே,நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும்

*இதை உபயோகிப்பது எப்படி?*

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் நான்கு புதிய துளசி இலைகளை மென்று விழுங்குங்கள்.சாப்பிடும் முன்  தண்ணீரீல்  இலைகளைக் கழுவ வேண்டும். அவைகளை மென்ற பிறகு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். குறைந்தது அடுத்த 30 நிமிடங்களுக்காவது வேறு எதையாவது சாப்பிடுவதைத் தவிருங்கள்.  நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக கிடைக்கும்...

மரச் செக்கு நல்லெண்ணெய் உணவில் அதிகமாக நீங்கள் சேர்ப்பீங்களா?

மரச் செக்கு நல்லெண்ணெய் உணவில் அதிகமாக நீங்கள் சேர்ப்பீங்களா?

அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

1. இதய நோய்

மரச்செக்கு நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

2. நீரிழிவு

மரச் செக்கு நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

3. வலுவான எலும்புகள்

மரச் செக்கு நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், மரச் செக்கு நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் மரச் செக்கு நல்லெண்ணையை  பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

4. செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயை விட, மரச் செக்கு நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

5. சுவாசக் கோளாறு

மரச் செக்கு நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

6. இரத்த அழுத்தம்

மரச் செக்கு நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் மரச் செக்கு நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

7. பளிச் பற்கள்

தினமும் காலையில் எழுந்து மரச் செக்கு நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

8. புற்றுநோய்

மரச் செக்கு நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

9. அழகான சருமம்

மரச் செக்கு நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் மரச் செக்கு நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10. புரோட்டீன்

எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் மரச் செக்கு நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

மரச் செக்கு இல்லாத நல்லெண்ணை தயாரிப்பாளர்கள் அதிக உற்பத்தி செய்ய ஆசைப்பட்டு பெட்ரோலிய கழிவுகளை கலக்கின்றனர்.

ஆகவே மரச் செக்கு எண்ணெய்களை மட்டும் வாங்கி உபயோகியுங்கள்.!!

Saturday, 19 November 2016

உங்களில் யாருக்காவது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமானால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயமே

உங்களில் யாருக்காவது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமானால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயமே தவிர, கவலைக்குரிய விஷயமல்ல!
.
ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என்பது ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு நோயோ, அஞ்சுவதற்கு உரிய விஷயமோ அல்ல. எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வேண்டுமென்றால் நம் ரத்த அழுத்தம் அதிகமாக வேண்டும்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? இப்படி அநேக ஆச்சரியங்களை நம் உடல் நமக்காக வைத்துள்ளது!
ரத்த அழுத்தம் எப்படி நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்முன் உயர் ரத்த அழுத்தம் எப்படி உண்டாகிறது என்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம் உயர வேண்டுமானால் நமது ரத்த நாளங்கள் கொஞ்சம் சுருங்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால்தான் ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் முன்னேறிச் செல்ல முடியும்.
ரத்த நாளங்கள் சுருங்குவதற்குக் காரணம் அட்ரீனலின் சுரப்புதான்! அட்ரீனலின் சுரக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. அவற்றினூடாக ரத்தம் செல்லும்போது அழுத்தம் அதிகமாகிறது. இதயத்தின் இயக்கத்தையும் அட்ரீனலின் துரிதப்படுத்துகிறது. ஒன்றை வைத்து இன்னொன்றைப் புரிந்துகொள்ள முடியும். பி.பி. அதிகமாகிவிட்டது என்றால் அட்ரீனலின் சுரந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அட்ரீனல் சுரக்காமல் எந்த ஒரு நோயும் குணமாகாது, கட்டுப்பாட்டிலும் இருக்காது என்கிறார் ஃபசுலுர் ரஹ்மான். அதனால்தான் உயர் ரத்த அழுத்தம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அவர் சொல்கிறார்.
.
ஏதாவது ஒரு பிரச்னைக்காக நாம் டாக்டரிடம் போகும்போது என்ன செய்வார்?
ஒரு பிபி செக்-அப் செய்வார். நம் கையில் ஒரு துண்டைச் சுற்றி, ஒரு சின்ன பலூனை வைத்து புஸ்க் புஸ்க் என்று அழுத்தி எண்கள் போடப்பட்டுள்ள செங்குத்தான கண்ணாடிக்குள்ளே வெள்ளி நிறத்தில் ஏதோ ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துவிட்டு ரத்த அழுத்தம் நமக்கு மிகவும் அதிகமாகிவிட்டது, உடனே மாத்திரைகள் சாப்பிட்டு அதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கூறுவார், அல்லவா? அதோடு சுகர் இருக்கிறதா என்று பார்க்க GTT (Glucose Tolerance Test) ஒன்றும் எடுக்கச் சொல்வார். நிச்சயமாக சுகர் இருக்கும். அத்துடன் நாம் பி.பி. மற்றும் சுகர் நோயாளியாக வெளியில் வருவோம்!
உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் இரட்டையர்கள் மாதிரி. சேர்ந்தே இருப்பார்கள். அல்லது உருவாக்கப்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் பின்னால் அட்ரீனலின் சுரப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்துக்காக எப்பொழுது மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களோ, அப்பொழுதே உங்கள் உடல்நிலை மொத்தமும் குட்டிச்சுவராகிவிடும் என்று மிகச்சரியாக எச்சரிக்கின்றனர் மனசாட்சி உள்ள சில அலோபதி டாக்டர்கள்.
.
உண்மையில், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது என்ன நடக்கிறது?
ரத்தத்தில் கலந்துள்ள ஊட்டச் சத்துகளும் மற்ற சக்திகளும் உடல் உறுப்புகளுக்குள்ளும், உயிரணுக்களுக்குள்ளும் அதிகமாக ஊடுறுவுகின்றன. அதன் காரணமாக, உடலுறுப்புகள் தத்தம் பலவீனங்கள் நீங்கி 'புத்துணர்வும், புத்துயிரும்' பெறுகின்றன. அட்ரீனலின் சுரந்ததால், கல்லீரலில் இருந்து வெளியேறி உடலின் பகுதிகளுக்குள் பரவிய செறிவூட்டப்பட்ட தரம் வாய்ந்த க்ளைக்கோஜன்தான் இதற்கான முக்கியக் காரணமாகும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் க்ளைக்கோஜனின் அளவும் அதிகமாகவே இருக்கும். அதைப் பரிசோதித்துவிட்டுத்தான் நீரிழிவு நோய்க்கான சிரிப்பு மருத்துவர்கள், ஸாரி, சிறப்பு மருத்துவர்கள், 'உங்களுக்கு டயாபடீஸ் வந்துவிட்டது' என்று கண்டுபிடிக்கிறார்கள்! புரிகிறதா?
ஆனால் அந்தச் சிறப்பு மருத்துவர்களுக்குப் புரியாத ஒரு விஷயம் ஒன்று உண்டு. பரிசோதிக்கப்படும் பல (வருங்கால) நோயாளிகளுக்கு ரத்தத்தில் மட்டும்தான் க்ளுக்கோஸ் அதிகமாக இருக்கும். ஆனால், சிறுநீரில் சர்க்கரையே இருக்காது! அது ஏன் என்று அம்மருத்துவர்களுக்குப் புரியாது!
ரத்தத்தில் தரம் குறைந்த க்ளுக்கோஸ் சுற்றிக்கொண்டிருந்தால்தான் சிறுநீரகங்கள் அதை வெளியேற்றும். ஏனெனில், அது ஒன்றுக்கும் உதவாத கழிவாகும். ஆனால், இப்போது அட்ரீனலின் சுரப்பால் கல்லீரலை விட்டு வெளியில் வந்த க்ளைக்கோஜன், செறிவூட்டப்பட்ட, மிகுந்த தரம் வாய்ந்த க்ளுக்கோஸாகும். அது நோய்த்தீர்க்கவல்ல சக்தியுமாகும். எனவே, அதை எந்தக் காரணம் கொண்டும் சிறுநீரகங்கள் வெளியேற்றாது. அதனால் சிறுநீரில் சர்க்கரை இருக்காது. ரத்தத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த க்ளைக்கோஜனைப் பற்றி எதுவுமே புரிந்துகொள்ளாமல், அதனையும் ஒருவித சர்க்கரை நோய் என்று அலோபதி கூறுகிறது!
அந்த நிலையில், ஒருவருக்கு டயாபடீஸுக்கான அலோபதி வைத்தியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா? கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்கவைக்கப்படும்! அதாவது, எப்போது இன்சுலின் சுரக்கக்கூடாதோ அப்போது அது வலுக்கட்டாயமாக டயானில் (Dianil) போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுவதன் மூலம் சுரக்கவைக்கப்படுகிறது! நம் உடல் மீது ஆங்கில மருத்துவம் நிகழ்த்தும் வன்முறை என்றுகூட இதைச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது, அட்ரீனலின் சுரப்பது தடுக்கப்பட்டுவிடும். அட்ரீனலின் சுரக்கவில்லை என்ற சூழ்நிலையில் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் க்ளைக்கோஜன் மீண்டும் கல்லீரலுக்குள் செலுத்தப்படும்! இப்போது சர்க்கரையை அளந்துபார்த்தால் குறைந்திருக்கும்! அதுதான் கல்லீரலுக்குள் மீண்டும் போய்விட்டதே! ஆஹா, சர்க்கரையை கட்டுப்படுத்திவிட்டோம் என்று அலோபதி மருத்துவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்!
.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
வயிறு, குடல்களிலெல்லாம் ஏற்பட்டிருந்த பிரச்னையை, அஜீரணத்தை, பலவீனத்தையெல்லாம் சரிசெய்துகொண்டிருந்த க்ளைகோஜனை டயானில் மற்றும் அதையொத்த மாத்திரைகள் என்ற வன்முறையின் மூலம் மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிட்டதால், வயிறு முதல் குடல்கள் வரை நோய்கள் அதிகரிக்கும். டயானில் சாப்பிட்ட சில நாட்களுக்குள்ளாக வயிற்றுத் தொந்தரவுகளும், குடல் தொந்தரவுகளும் அதிகமாகும். அஜீரணமும் வாயுத்தொல்லையும் மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கும். இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
டயானில் போன்ற மாத்திரைகள் க்ளைக்கோஜனை மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிடுவதால்,
# ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துபோய் மயக்கம் வரும்.
# கைகால்கள் வெடவெடத்துப் போகும்.
# கண்கள் இருளும்.
# திடீர் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.
மருந்து கொடுக்கப்பட்டதால், மயக்கம் அல்லது மரணம் உண்டானதைத் தெரிந்துகொள்ளாமல், நீரிழிவு நோயினால்தான் அப்படி ஆனது என்று கூறி முடித்துவிடுவார்கள்!
பாக்கெட்டில் எப்போதும் சீனியை அல்லது தக்காளியை வைத்துக்கொள்ளுங்கள்; மயக்கம் வருகிற மாதிரி இருந்தால் உடனே சர்க்கரையைச் சாப்பிடுங்கள், அல்லது இரண்டு தக்காளிகளைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் ரத்தத்தில் சர்க்கரை கூடும், மயக்கமும் போய்விடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆங்கில மருத்துவம் சொல்வதுபோல, அவசர காலத்தில் மயங்கி விழுவதிலிருந்தும் மரணம் ஏற்படுவதிலிருந்தும் கொஞ்சம் சர்க்கரையோ அல்லது தக்காளியோ நம்மைக் காப்பாற்றும் என்றால், அப்படிப்பட்ட ஆபத்பாந்தவர்களாக அவை இருக்கும்பட்சம், அவை ஒவ்வொன்றும் உயிர் காக்கும் பொருள் என்பதுதானே நிரூபணமாகிறது?! அவசர காலத்தில் நம்மைக் காப்பாற்றும் ஒரு பொருள் எப்படி ஆபத்தானதாக இருக்க முடியும்? ஆங்கில மருத்துவத்தின் முரண்பாடு புரிகிறதா?
.
மயக்கம் வருவதுபோல் இருக்கும்போது, நாம் சர்க்கரையை சாப்பிட்டால் என்ன நடக்கிறது தெரியுமா?
வாயிலிருந்து வயிற்றிலிருந்தும், உமிழ்நீரின் உதவியுடனும், வயிற்றின் இயக்கத்தின் காரணமாகவும், இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி உடனடியாக க்ளுக்கோஸ் பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்கிறது. அப்போது வயிற்றில் அதிகமான வெப்பம் உண்டாகிறது. ஏன்? ஏனெனில், க்ளுக்கோஸ் என்பது ஒரு எரிசக்தி. ஆனால், அந்த வெப்பம் வயிற்றை சுட்டெரித்துவிடாமல் இருக்க, உடனே அட்ரீனலின் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. அட்ரீனலின் சுரந்தால் கல்லீரலில் இருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படும். க்ளைக்கோஜன் என்ற அந்தச் சக்தி மிகுந்த க்ளுக்கோஸின் அளவு ரத்த ஓட்டத்தில் அதிகமாகி உடல் உறுப்புகளுக்கு, முக்கியமாக வயிற்றுக்கு, தேவையான ஊட்டச்சக்தியை அளிக்கிறது. டயாபடீஸுக்கான அலோபதி மருந்துகளால் ஏற்படும் சர்க்கரைக் குறைவையும், அது ஏற்படுத்திய மயக்கம், கை கால் நடுக்கம் இத்யாதிகளையும் க்ளைக்கோஜன் சீர்படுத்துகிறது!
ஆனால், இதற்கெல்லாம் காரணம், அவசரகாலத்தில் நாம் உட்கொண்ட சர்க்கரை அல்ல! அது உள்ளே வந்ததால் ஏற்பட்ட வெப்பத்திலிருந்து வயிற்றையும் மற்ற உறுப்புகளையும் காப்பாற்ற க்ளைக்கோஜனை 'ரிலீஸ்' செய்ய அட்ரீனலின் சுரந்ததால் ஏற்பட்ட விளைவாகும்!
ஆக, அவசர கால மயக்கத்துக்காக நாம் உட்கொண்ட சர்க்கரையால் நமக்கு நன்மையா தீமையா என்றால், பெரும் தீமைதான். அதில் பெருமளவு கழிவாக ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். கல்லீரல் அதை ஜீரணிக்கவும் செய்யாது; அதில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்காது. எனவே, அது வெறும் கழிவாக சிறுநீரகங்களை அடைகிறது. அதன் காரணமாக, சிறுநீரகங்கள் முதன்முறையாக நச்சுத்தன்மையால் பாதிப்புக்கு உள்ளாகின்றன! ஓர் ஐந்தாண்டுகளுக்குள் இயங்க முடியாத சூழ்நிலைக்கும் அவை தள்ளப்படும்!
பின்னர் சிறுநீரகங்களை சரிசெய்ய டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்! டயாலிசிஸ் செய்வதால் யாருக்கும் பிரச்னை தீர்வதில்லை. மாறாக, சில காலம் கழித்து 'கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகங்களைப் பொருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இன்னொருவருடைய உடல் உறுப்பை நம் உடல் என்றுமே ஏற்றுக்கொள்ளாது. ரத்தம் உட்பட. மனித உடல் கால்பந்து விளையாட்டு மைதானமல்ல, ஒருவருக்கு அடிபட்டால் அவருக்குப் பதிலான இன்னொருவரை அனுப்ப. இன்னொருவரின் உறுப்பு நம் உடலுக்குப் பாதகமான உறுப்பாகவே என்றும் இருக்கும். அதை எதிர்த்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்! அந்த எதிர்ப்பு சக்தியைப் பாழாக்கும் மருந்துகளை உட்கொண்டால், அது எய்ட்ஸில் போய் முடியும்!
.
சராசரிக் கணக்கு
அளவோடு இருந்தால் அது அமிர்தம். அளவு கூடினால் அல்லது குறைந்தால் அது ஆபத்து என்று ஆங்கில மருத்துவம் சொல்லுகிறதா? அப்படியானால், எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில்தான் சர்க்கரை இருக்க வேண்டுமா? இந்தக் கருத்து சரியா? ஆங்கில மருத்துவ உலகம் பிழைத்துக் கொழுத்துக்கொண்டிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, இந்த சராசரி அளவுக் கணக்கு.
சராசரியாக ஒரு மனிதர் இந்த அளவு சாப்பிட வேண்டும், அவருடைய வயது இப்படி இருக்குமானால், அவருடைய எடை அப்படி இருக்க வேண்டும் (BMI), மனிதர்களுடைய சராசரி உயரம் இவ்வளவு, சராசரி ரத்த அழுத்தம் இவ்வளவு, சராசரி கொழுப்பு இவ்வளவு, இத்யாதி இத்யாதி என சராசரியான ஒரு மனிதனை நிம்மதியாக இருக்கவிடாமல் இந்த சராசரிகள் கொல்லுகின்றன. சராசரிக்கும் அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டுமாம், குறைவாக இருந்தால் அதிகமாக்க வேண்டுமாம்! இப்படிப்போகிறது கணக்கு.
ஆங்கில மருத்துவத்தின் சராசரிக் கணக்கை வைத்து டாக்டர் ஹெக்டே ஒரு கேள்வி கேட்கிறார். மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி 5 அங்குலம் என்று வைத்துக்கொண்டால் அமிதாப் பச்சனையும் ஜெயா பச்சனையும் என்ன செய்வது? அமிதாப்பின் காலைக் கொஞ்சம் வெட்டி ஜெயாவுக்குப் பொருத்த வேண்டுமா என்று கேட்கிறார்! டயாபடீஸ் தொடர்பான சராசரிக் கணக்கும் இப்படிப்பட்டதுதான்.
அலோபதியின் சராசரிக் கணக்கு அடிப்படையிலேயே தவறானது. மனித உடலின் உறுப்புகளின் அளவை இறந்த உடல்களை அறுத்துப் பார்த்துதான் அலோபதி புரிந்துகொள்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தைப் பிணத்தின் வயிற்றை எடுத்துப் பார்த்து, உலகில் உள்ள குழந்தைகளின் வயிறின் அளவு சராசரியாக இவ்வளவுதான், எனவே இந்த அளவுதான் உணவு கொடுக்கப்பட வேண்டும், இதற்குமேல் கொடுத்தால் நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு என்றெல்லாம் கூறுகிறது. ஆனால் எல்லாக் குழந்தைகளின் வயிறையும் இப்படிப் பார்த்து அளவிட முடியுமா என்ன?
ஜான்சன் பேபி குழந்தைகளின் வயிறும் எதியோப்பியக் குழந்தைகளின் வயிறும் ஒரே மாதிரியாகவா இருக்கும்? வயிறு நிறைய உண்ட பிறகும், அம்மா ஆசையாக ஒரு இட்லி கொண்டுவந்து 'சாப்டுடா கண்ணு' என்று கொஞ்சி அன்பாக வைத்தால், உடனே வயிறு கொஞ்சம் 'அட்ஜஸ்ட்' பண்ணி தளர்ச்சியடைந்து இடம் கொடுக்கிறது என்கிறது விஞ்ஞானம்!
எனவே, சராசரியாக ஒருவருக்கு 'சுகர் லெவல்' இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற ஆங்கில மருத்துவத்தின் நிர்ணயம் கேலிக்கூத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எவ்வளவு சுகர் இருக்க வேண்டும் என்பதை உடல் முடிவு செய்துகொள்ளட்டும். அதன் உரிமையிலும் கடமையிலும் நாம் தலையிடுவதனால்தான் எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன!
டயாபடீஸ் என்ற நீரிழிவு நோய்க்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். முடிவாக டயாபடீஸ் பற்றி சில முக்கியமான விஷயங்களை நினைவுபடுத்திக்கொள்வோம் –
# டயாபடீஸ் என்று ஒரு நோயே கிடையாது.
# அது ஆங்கில மருத்துவத்தின் கண்டுபிடிப்பு. (வியாபார நோக்கில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.)
# எனவே அதற்கு எந்த மருந்தும் கிடையாது.
# ஆங்கில மருந்துகளை நீரிழிவுக்காக உட்கொள்வதால், உடல் முழுக்க ஒவ்வொரு முக்கிய உறுப்பாக சீரழிந்து கடைசியில் மரணம் ஏற்படும்.
# இன்சுலின் கிடைக்காத க்ளுக்கோஸ் என்ற கழிவை சிறுநீரகம் வெளியேற்றும். உடலின் இந்த கழிவு வெளியேற்றம் நோயாகப் பார்க்கப்படுகிறது.
# இன்சுலின் சரியாகக் கிடைக்க முறையான உணவுப்பழக்கம் வேண்டும்.
# பழங்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பு அரை மணி நேரத்துக்கும் தண்ணீர் குடிக்கக்கூடாது.
# கடைகளில் பழச்சாறு வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில், அதில் தண்ணீர், பால் போன்ற சமாச்சாரங்கள் கலக்கப்படுகின்றன.
# பசிக்கும்போது மட்டும் சாப்பிட வேண்டும்.
# சாப்பிடும்போது, கவனம் சாப்பாட்டிலும் சாப்பிடுவதிலும் மட்டுமே இருக்க வேண்டும்.
# தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
# முறையான தூக்கமும் சரியான உழைப்பும் ஓய்வும் வேண்டும்.
உடலே உடலைச் சரிசெய்துகொள்ளும். இப்படி சரியாகவும் முறையாகவும் வாழ ஆரம்பித்தால், இனிப்பைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. திருட்டுத்தனமாக லட்டையோ மைசூர்பாக்கையோ விழுங்க வேண்டியதில்லை. எல்லோரும் பார்க்கும்போதே, உரிமையாகவும் சந்தோஷமாகவும் எடுத்து, ரசித்து, ருசித்து சாப்பிடலாம். உச்சி மீது வானிடிந்து வீழ்ந்துவிட்டபோதிலும் அச்சமென்பதில்லையே என்று பாடலாம். ஸ்வீட் எடுத்து உண்மையிலேயே கொண்டாடலாம்!
.
உணவே மருந்து; வாழ்க்கைமுறையே தீர்வு!
ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்? இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.
நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை.
நன்றி – டாக்டர்.ஃபஸ்லூர் ரஹ்மான்

Thursday, 17 November 2016

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்


1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.

2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.

5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.


6 .வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.

9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.

10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்