Monday, 28 November 2016

தேனும் எள்ளும்

தேனும் எள்ளும்

நவதானியங்களில் ஒன்றான எள் நமது நாட்டிற்கே உரிய தானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.

இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதுஃ மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது. எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும்.

பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது இத்தகைய சிறப்பு மிக்க தானியத்தை நம் நாவிர்கேற்ப சுவை கூட்டி எள்ளு மிட்டாய் என நம் குடும்பங்களில் உண்டு வந்தோம். எள்ளு மிட்டாய் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் அவசியம். சூடு அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.

ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் உள்ளடக்கிய தேனுடன் எள்ளை கலந்து சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படும். ஏனெனில் எள் தோல் முடி உடலுக்கு நல்ல உறுதியை அளித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

இக்கலவையை தினமும் உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம். மேலும் எள்ளில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

உங்கள் வயிற்றில் புண் இருந்தால், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வாருங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் மற்றும் எள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவும்.

எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொண்டு வர, எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதிலும் தினமும் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தேன் மற்றும் எள் கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பாக செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.

ஆற்றலை ஏராளமாக அள்ளி வழங்கும். அத்தகைய பொருட்களை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நாளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சுறுசுறுப்புடன் நாள் முழுவதும் செயல்படலாம்.

No comments:

Post a Comment