Thursday, 30 March 2017

நவீன பற்பசை

இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.
 
கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்
கிராம்பு 50 கிராம்
கல் உப்பு 25 கிராம்
இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.
 
மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள். இதை அனுபவத்தில் பலரிடம் நான் கண்ட உண்மை.

Wednesday, 29 March 2017

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :-

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்

Wednesday, 22 March 2017

ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமம்

இந்த நவீன அவசர யுகத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமம் என்று போட்டி போட்டுக்கொண்டு உழைக்கின்றனர். அவசர யுகத்திற்கு ஏற்றாற்போல், பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாய் எண்ணி, தங்களது உடல் நலனைக் கூட பொருட்படுத்தாமல், உடல் நலனைக் கவனிக்க நேரமின்றி ஓடுகின்றனர். சரியான தூக்கமின்றி, மன நிம்மதியின்றி வேலை, வேலை என்று ஓடுகின்ற அவசர யுகத்திற்கு ஏற்ற பெண்களாகத்தான் அனைவரும் இருக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் இதன் பலனை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆம்! இன்று பெண்கள் யாரும் ஆதி காலத்தில் இருந்தது போன்று, குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பதில்லை. 

  ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை. ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும். இயற்கை வெளிச்சத்தில் பிராண வாயு அதிகம் வெளிப்படுத்தும் மரம், செடி கொடிகள் / இரவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிப்படுத்தும். 

  அவ்வாறே மனிதன் ஆக்ஸிஜனை உள் இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுவான். பிராணவாயுவினை சுவாசித்து, இயற்கை வெளிச்சத்தில் வேலை செய்யும்பொழுது ஹார்மோன், இரத்தம், உடல் இயக்கம் சீர்படும். இரவில், கெட்ட காற்றினை சுவாசிக்கும் செல்கள் கெடுதலையே விளைவிக்கும். 
 
  இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே. அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய பக்க விளைவுகள் உள்ளது என்று தெரிந்தும், ஆங்கில மருத்துவத்தையே அனைவரும் நாடுகின்றனர். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத, பல சிறந்த யுக்திகளைக் கொண்ட சித்த மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை வழங்கி வருகிறது. 

  பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் கர்ப்பப்பை நோய்கள் முக்கியமான ஒன்று. அவை என்ன மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இங்கு காண்போம்.         
கருப்பை (கர்ப்பப்பை) நோய்கள்:

நீர்கட்டி (Fibroid)

பெரும்பாடு (Menorrhagia)

சூதகத்தடை (Amenorhea) 

சினைப்பை கட்டி (Pcod)

இவை உண்டாவதற்கான காரணங்கள்:

மன அழுத்தம் (Depression)

உறக்கம் இன்மை. முக்கியமாக இரவு உறக்கம் இல்லாமை. 

சத்தான உணவு பழக்கம் இல்லாமை. 

தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை.

உடற்பயிற்சி இன்மை. 

இந்த நோய்களைக் கண்டறிவதற்கான அறிகுறிகள்: 

அதிக இரத்தப் போக்கு (அ) குறைவான இரத்த போக்கு (அ) மாதாந்திர தீட்டு சரிவர வராமை.

இடுப்பு மற்றும் வயிற்றில் வலி 

அதிவியர்வை

கைகால் மரத்து போகுதல்

தலைசுற்றல்

சோம்பல், கோபம், எரிச்சல்

உடம்பில் இரத்தம் (Heamoglobin) குறைவாக இருந்தாலும் சுழற்சி தடைப்படும். 

கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் இருந்தாலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுத்தும். 

போதுமான உடற்பயிற்சி இல்லாமையால் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடுகள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சி சரிவர இயங்காது. 

இரத்தம் மற்றும் புரதம் உடம்பிற்கு அத்தியாவசியமானது. குறிப்பாக பெண்களுக்கு அதில் குறைபாடுகள் இருந்தாலும், சுழற்சி தடைபடும். 

உடல் பருமன் ஒரு முக்கியமான காரணம். 

இதற்கு ஏற்ற சிறந்த உணவு நிவாரணி: 

துவர்ப்பு சுவை உணவுகள் சிறந்தவை. 

கீரைகள் – அரைகீரை, முருங்கைக்கீரை மற்றும் சிறுகீரை சிறந்தது. இரும்புச் சத்தினை அதிகரிக்கும். சிறுநீர் நன்கு கழிக்க செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட நீர்கள் வெளியேற்றப்படும். 

பழவகைகள்: துவர்ப்பு சுவையுள்ள பழங்கள், காய்கள் சிறந்தது. மாதுளை, கொய்யா, பப்பாளி, சுண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவை குருதியினை பெருக்கும். உதிரப்போக்கை சீர்படுத்தும். 

  உளுந்தங்களி ஓர் சிறந்த உணவு. பனை வெல்லம், நல்லெண்ணெய் கலந்து செய்யும் உளுந்தங்களியினால் இடுப்பு மற்றும் நரம்புகள் வலுப்பெறும். உளுந்து – புரதம், பனைவெல்லம் – இரும்பு சத்து, நல்லெண்ணெய் – நல்ல கொழுப்பு சத்து. 

சிறுபீளை குடிநீர்:

  இக்குடிநீர் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக உடம்பில் உள்ள நசுத்தன்மையினை வெளிப்படுத்தி, உடம்பின் உஷ்ணத்தினை குறைக்கும். உடல் சுறுசுறுப்பு பெற்று, எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.   

  ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்க ஓர் தூண்டுகோளாக செயல்படும். உடல் சமநிலை அடைவதால், வெள்ளைபடுதல், கண் எரிச்சல் ஆகியவை குறையும். 

அசோகப்பட்டை சூரணம்

மாதுளை மணப்பாகு (அ) ரசாயனம்.

H6 அதிகப்படும், கர்ப்பப்பை சுழற்சி சரிவர இயங்க உதவும். 


உடற்பயிற்சி, உணவு, உறக்கம்

-  இம்மூன்றும் சரிவிகிதப்படி முன்னோர் கூற்றின்படி இருந்தால், எந்த நோயும் எளிதில் வராது.

Tuesday, 21 March 2017

கொழுப்புக்களைக் கரைப்பது

உடலிலேயே வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் ஏராளமான மக்கள் இந்த தொப்பையினால் தான் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
உடலிலேயே வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் ஏராளமான மக்கள் இந்த தொப்பையினால் தான் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகின்றனர். உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை உள்ளதா? அந்த தொப்பையைக் குறைக்க பல முயற்சிகளை செய்து துவண்டுவிட்டீர்களா? கவலையைவிடுங்கள். நிச்சயம் இக்கட்டுரை உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
தொப்பையைக் குறைக்க நினைத்தால் முதலில் ஜங்க் உணவுகள், சர்க்கரை உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை முதலில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் போது, இந்த உணவுகளை சிறிது எடுத்துக் கொண்டாலும், அதனால் உங்கள் தொப்பைக் குறைப்பதில் சிக்கல் தான் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?
மேலும் வெறும் உடற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்க உதவாது. உடற்பயிற்சியுடன் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து வந்தால் தான், எளிதில் தொப்பையைக் குறைக்க முடியும். இங்கு எந்த கஷ்டமும் இல்லாமல், சீக்கிரம் தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், நிச்சயம் தொப்பையின் அளவைக் குறைக்கலாம். உங்கள் தொப்பையைக் குறைக்க வேறு சில அருமையான வழிகள்!!!
பார்ஸ்லி ஜூஸ்
1 கட்டு பார்ஸ்லி கீரை, 1 எலுமிச்சையின் சாறு, 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி, 1 சிறிய வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வந்தால், 10 நாட்களில் தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.
இந்த ஜூஸின் நன்மைகள்
இந்த ஜூஸ் தொப்பையைக் குறைப்பதோடு, பல்வேறு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இது உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றி, அழற்சி ஏற்படுவதைக் குறைக்கும். மேலும் இந்த பானம் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். செரிமானம் சீராகும். முக்கியமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பேரிக்காய் ஜூஸ்
1 பேரிக்காயை துண்டுகளாக்கி, 1 எலுமிச்சையின் சாறு, 1 சிறிய வெள்ளரிக்காய் மற்றும் 1 கட்டு பசலைக்கீரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பைக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
இந்த ஜூஸின் நன்மைகள்
இந்த ஜூஸ் கொழுப்புச் செல்களை உடைத்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்களை வேகமாக குறைக்க உதவும். கல்லீரல் மற்றும் செரிமான மண்டலம் சுத்தமாகும். இந்த ஜூஸில் உள்ள பேரிக்காய் உடலுக்கு வேண்டிய நார்ச்சத்துக்களை வழங்கி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். பசலைக்கீரை உடலில் ஏற்படும் அழற்சிகளைக் குடிறத்து, இரத்தத்தில் உள்ள அசிடிட்டியைக் குறைக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்
7-8 பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொண்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனை இரவில் குடிப்பதை விட, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஏனெனில் நெல்லிக்காய் சிலருக்கு சளி, இருமலை ஏற்படுத்தும்.
எலுமிச்சை இஞ்சி ஜூஸ்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் கொழுப்புக்கள் கரைந்து, உடலும் சுத்தமாகும்.
பசலைக்கீரை ஸ்மூத்தி
1 கட்டு பசலைக்கீரையை அரைத்து, அத்துடன் 1 கப் அன்னாசி பழச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து தொப்பை குறையும்

வாய் புண்

வாய் புண் எதனால் ஏற்படுகிறது

இதை சரி பன்ன என்ன வழி

அல்லது வராமல் இருக்க என்ன செய்யலாம்

நமது உடம்பில் நீர் வற்றி போனால் வாய் புண் வரும் அதர்க்கு தாகம் எடுத்தவுன் தன்நீர் குடிக்க வேண்டும் இயற்கை முறை பழச்சாறுகள் சாப்பிடுங்க

வாரம் இருமுறை எண்ணெய் குளியல் நல்லது

அஜீரம் ஏர்பட்டாலும் இதுபோன்ற விலைவுகள் ஏர்படும் அதர்க்கு எளிதில் செறிக்கும் உணவுகள் சாப்பிடுங்க

அசைவம் . மற்றும் காரம் போன்ற உணவு சாப்பிட கூடாது

வாய்புண் குணப்படுத்த 
திரிபால சூரணம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்லர் நீரில் போட்டு சிரிது உப்பு மற்றும் மஞ்சல் சேர்த்து கொதிக்க வைத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாய்கொப்புளித்து வந்தால் சரிஆகிவிடும்

உணவுகள் மீதமாகி விட்டால்

அனைவருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். உணவுகள் மீதமாகி விட்டால் அதனை வீணடிக்கக்கூடாது என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைத்து அல்லது சுட வைத்து அதனை பல நாட்களுக்கு சாப்பிடுகிறோம்.

இவ்வாறு நாள்பட்ட உணவுகள் திரும்ப திரும்ப சுட வைத்து நாம் சாப்பிடும் உணவுகள் நஞ்சை வெளியிடுகின்றன.

அதிலும் சில உணவுகளை பல நாட்கள் வைத்திருந்து கண்டிப்பாக நாம் சாப்பிடவே கூடாது. அவற்றில் சில

காய்கறிகள்

இன்றைய சூழலில் தினமும் காய்கறிகள் கூட வாங்க நேரம் இல்லாமல் மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜ் வைத்துவிடுவோம். இவ்வாறு வைப்பதால் நஞ்சினை உற்பத்தி செய்யும் பீட்ரூட், பசலைக்கீரை போன்ற காய்கறிகள் நைட்ரேட்டினை உற்பத்தி செய்யும்.

இந்த நஞ்சானது காய்கறிகளில் அப்படியே தங்கி சாப்பிடும் போது செல்களை சிதைக்கும். எனவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது.

சிக்கன்

சிக்கனில் அதிகளவு புரதம் இருப்பதால் 2 நாட்களுக்கு மேலாக சுட வைத்து சாப்பிடக்கூடாது. அதிக நாட்கள் வைத்து சாப்பிடுவதால் இதயநோய், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

அரிசி

அரிசியை சமைத்தாலும் அதில் பாக்டீரியாக்கள் பெருக அதிகளவு வாய்ப்புள்ளது. இதனை நாம் சுட வைத்தாலும் அது உயிரோடு தான் இருக்கும்.

இவை இரட்டிபாகி ஜீரண தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் அரிசியை திரும்ப திரும்ப சுட வைக்கக்கூடாது. மீதமுள்ள அரிசியில் நீர் ஊற்றி சாப்பிடும் போது நன்மை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய்

சூரியகாந்தி, எள் எண்ணெய் போன்றவற்றை திரும்ப சுட வைத்து உபயோகிப்பதை போல தீயது ஏதும் இல்லை.இதனால் இதய தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்றவை உருவாகிறது.

மூலிகை மருத்துவம்

* கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*  வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
* இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
* நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
* இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
*  வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.
*  உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
* பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்

இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள்

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லைதீரும்

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துகாய்ச்சி, தலையில் தேய்த்துகுளித்தால்,உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லைதீரும். பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்துதலையில் உறவைத்து
பின்னர் குளித்தல்.
கற்றாழை சாற்றை தலையில் மேல்தோலில்தேய்த்து
ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தல். சிறிதளவு தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து குளித்தல்.
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.அதனால் அந்நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து,துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்துகுளித்தல்.
கறிவேப்பிலை,துளசியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்துதலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தல். வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வருதல்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறுமாவுகலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டுகுளித்தாலும் பொடுகு நீங்கும்.
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும்எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தல்.நெல்லிக்காய் தூள்,வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து,சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர வேண்டும்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.நெய், பால்,வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.
பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.
நல்ல மிளகு – 15-20
வேப்பிலை – 2 கைப்பிடி
இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து,
சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை கழுவினாலும் பொடுகு மறைவதுடன் முடியும் பளபளப்பாகும்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தல்..
தேங்காய் பால் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 4 டீ ஸ்பூன்
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிப்பதால். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளருவதுடன் பொடுகும் மறையும்.
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளித்தல்.வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில்அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்தல்

விஷக்கடி

போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர். இத்தகைய வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன.


இத்தகைய வாழ்வாதார சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மையானது பாம்புகள், பூச்சிகள், வண்டுகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம். சித்தர்களின் மருத்துவத்திலும் கூட இந்த விஷக்கடிக்கான மருத்துவம் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற இந்த விஷக்கடி மருத்துவ முறைகளுள் ஒன்றினைத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.


இந்த தகவல் போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.


உண்டான விஷத்தையடா உண்மைகேளு
ஒருவருக்கும் ஆகாத பெட்டிதன்னை
கண்டவுடன் துளைசெய்து விளங்காய்போலே
கண்மணியே பழம்புளியை யுள்ளேவைத்து
மண்டலந்தான் சென்றெடுத்து எட்டியென்ற
மரத்தாலேசிமிள் ச்எய்து வைத்துக் கொள்ளு
சண்டாள விஷங்களப்பா யெதுவானாகும்
சாற்றிவிடு வெற்றிலையில் மிளகுபோலே.

மிளகுபோல் வெற்றிலையில் மடித்துக்கொள்ளு
மூன்றுநாள் கொடுத்துவிடு ஆறுவேளை
அவுடதத்திற்கும் பச்சரிசி கஞ்சியாகும்
அப்பனே முருங்கையிலை போட்டுக்காச்சு
உளவறிந்த உப்புதனைச் சேர்க்கவேண்டாம்
உத்தமனே பத்தியமதை பயமாய்க்காரு
களவான வீடதுபோல் விஷங்களெல்லாங்
கண்மறையப் போகுமடா உண்மைதானே.

எட்டி மரத்தில், விளாங்காய் அளவுள்ள துளை ஒன்றினைப் துளைத்துக் கொள்ள வேண்டுமாம்.  பின்னர் பழப் புளியை கொட்டையை நீக்கிச் சுத்தம் செய்து, எட்டி மரத்தில் உருவாக்கிய துளைக்கு உள்ளே வைத்து, அந்த துளையினை எட்டி மர துண்டினால் ஆன தக்கையைக் கொண்டு நன்கு மூடிவிட வேண்டுமாம்.  பின்னர் நாற்பது நாள் சென்ற பிறகு எட்டி மரத்தில் இருந்து புளியை எடுத்து, எட்டி மரத்தினால் செய்யப்பட்ட சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.


எந்தவகையான விஷக் கடியானாலும், சேமித்து வைத்த புளியில் இருந்து மிளகு அளவு எடுத்து, வெற்றிலையில் மடித்து பாதிக்கப் பட்டவரிடம் என்ன மருந்து என்று சொல்லாமல் உண்னக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு காலை மாலை என மூன்று நாட்களுக்கு, ஆறுவேளை உண்ணக் கொடுத்து வந்தால் களவு போன வீட்டைப் போல் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் காணாமல் சென்றுவிடும் என்கிறார்.


இதற்குப் பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாளும் உப்பு சேர்க்காது பச்சரிசியும், முருங்கையிலையும் போட்டு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்கிறார்

Monday, 20 March 2017

குழந்தைக்கு நல்லது?

குழந்தைக்கு  நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

பயித்தியம் தீர வைத்தியம்

பயித்தியம் தீர வைத்தியம்-புலிப்பாணி

தானென்ற சிறுகீரை வேரைத் தானுந்
தானரைத்து எலுமிச்சங் காய்தான் வீதம் 
வானென்ற மூன்று நாளாறு வேளை
வளமாக வெந்நீரிற் கொடுத்துப் பாரு
கோனென்ற ஆறு நாளுப்பாகாது
கொற்றவனே ஏழா நாளெல்லாமாகும்
ஊனென்ற பயித்தியந்தான் தீர்ந்து போகும்
உத்தமனே போகருட கடாட்ச்ந்தானே.(386)

                                 -புலிப்பாணி வைத்தியம் 500
பொருள்:

சிறுகீரை வேரை நன்றாக அரைத்து எலுமிச்சங்காய் அளவு
காலை-மாலையென இரண்டு வேளையும் மூன்று நாட்கள் வெந்நீரில் கலக்கிக்குடித்தால் பயித்தியம் தீர்ந்து போகும்.
மருந்துண்ணும் மூன்று நாளும் மற்றொரு மூன்று நாளுமாக
ஆறு நாட்கள் வரை உப்பிலாமல் கஞ்சி அருந்தவும்பின்னர்
ஏழாவது நாள் முதல் எல்லா வகை உணவுகளையும்
 சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

குழந்தை இல்லாமல்

நீண்டகாலம் குழந்தை இல்லாமல் வேதனைப்படுபவர்களுக்கு

நாட்டு இலந்தை இலை அரைபிடி 

கெட்டி மிளகு 6

பூண்டுதிரி -4

இவைகளை சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து மாதவிலக்கு ஆன முதல்நாள், இரண்டாம் நாள்,காலை வெறும் வயிற்றில் மோருடன் பருகிவர கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தை பிறக்கும். ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதவிலக்கான  முதல்நாள்,இரண்டாம் நாள் மட்டும் சாப்பிடவும்.

Friday, 17 March 2017

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை:

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக 
நிரூபிக்கப்பட்டுள்ளது.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.

மருத்துவக் குணங்கள்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.

சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.

ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட,  நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.

தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள்    100 கிராம்
ஆண்கள்    40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள்    50 கிராம்

முருங்கைச் சத்து முழுமையானது!

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4  மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

முருங்கைக்கீரை சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) - 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்  (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.

எப்படி சமைக்கக்கூடாது?

முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க  கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை கூட்டு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு-  1 கப், முருங்கைக்கீரை - 2 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.

தாளிக்க...

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், முருங்கைக்கீரை - 1 கப், பச்சை மிளகாய் - 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி  சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    64 கிலோ
கலோரிகள்
கால்சியம்    185 மி.கி.
பாஸ்பரஸ்    112 மி.கி.
இரும்பு    4 மி.கி.
புரதம்     9.40 கிராம்
கொழுப்பு    1.40 கிராம்
நார்ச்சத்து    2 கிராம்
தண்ணீர்    78.66 கிராம்



முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்

 தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5

சேர்த்து அரைக்கவும்.

 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

 ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.

 கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.

 கீரை சேர்த்து வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.

பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.

வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.


வாழைப்பூ---முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ --ஒரு கப்
முருங்கைக்கீரை ---ஒரு கப்
தேங்காய்த்துருவல்---ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் --ஒரு டீஸ்பூன்
கடுகு --  கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு--தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ---1
பெருங்காயத்தூள்---கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.

உடல் கழிவுகளை அலட்டிக்கொள்ளாமல் வெளியேற்றும்

உடல் கழிவுகளை அலட்டிக்கொள்ளாமல் வெளியேற்றும் 
'Divine Natural Technique'.....!

திடக்கழிவு,
திரவக்கழிவு,
வாயுக்கழிவு,
சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு,

இவைகளை வாழ்நாள் முழுவதும்,
சிரமமில்லாமல் நீக்கும்,
எளிமையான,
சுவையான ஒரு உற்சாக பானம் பரிந்துரைக்கிறேன்!

"வெந்நீர்+எலுமிச்சை சாரு+தேன்"

செய்முறை:
ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும்!
கொதிக்கவேண்டியதில்லை!
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும்!

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, 
சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சைப் பிழிந்துக்கொள்ளவும்!

3 ஸ்பூன் தேன் சேர்த்து, 
வெந்நீர் கலந்து, 
ஸ்பூனில் சிறிது சிறிதாக, 
அனுபவித்து, 
உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, 
பின் அருந்தவும்!
காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும்!
(5 நிமிடங்களே போதுமானது)!

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத்தேவையான 
உடனடி குளுக்கோஸ்,
சமைத்த உணவுக்குப்பையில் சிறிதளவும் கிடைக்காத 
தரமான "உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும்" கிடைக்கும்!

வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்!

வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம்!

உணவாகவும் மருந்தாகவும் 
செயல்புரியும் உன்னத இயற்கை பானம்!

பி.கு:
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம்!

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து,
சுவைத்து உட்கொள்வதால்,
தேனில் உள்ள குளுக்கோஸ் 
தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து 
நன்மை மட்டுமே செய்யும்!

மேலும்,
"தேன்" நாக்கிற்கு இனிப்பு,
உடல் உறுப்புகளுக்கு கசப்பு!
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது 
வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் 
மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, 
சொல்லாமல் ஓடிப்போகும்.......!

யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. சாரதா தேவியார்

யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. சாரதா தேவியார்

 மனஅமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்கள் குற்றங்களை எண்ணிப் பாருங்கள்.
* நம்பிக்கையும், மனஉறுதியும் வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் பெற்றதற்குச் சமமாகும்.
* உங்களால் யாருக்காவது மனமகிழ்ச்சியைத் தரமுடியுமானால் வாழ்வின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனோ அவன் புண்ணியவான்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல, மனவலிமையும் போய்விடும். சுறுசுறுப்பால் சோம்பலை துரத்தியடியுங்கள்.
* நாள் முழுக்க பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. இருந்தாலும் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டே கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருங்கள்.
* எல்லாச் செயல்களின் பலனையும், புகழையும் இறைவனிடம் ஒப்படையுங் கள். நதிநீர் போல ஓடிக்கொண்டே இருங்கள்.
* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை "மனிதன்' என்று அழைக்க முடியாது. இவ்விரண்டு பண்புகளும் அனைவருக்கும் அவசியம்.
* மனமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும் வாழ்வில் விளைவதில்லை.
* இறைவனின் விருப்பத்தால் தான், உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின்றன. இருந்தாலும் மனிதன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறான்.
* தியானம் செய்வதை அன்றாடக் கடமையாக்குங்கள். அதில் அன்றன்று செய்த நன்மை தீமைகளை நீங்களே எண்ணிப்பார்த்து உங்களை நெறிப்படுத்துங்கள்.
* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.
* சாமான்யன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஞானியோ மரணத்தைக் கண்டு சிரிக்கிறான். இந்த இருவருக்கும் உள்ள வேற்றுமை இது தான்.
* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.
* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.
* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.
* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.
* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.
*தவறு செய்துவிட்ட ஒருவரை மன்னிக்கவும் தயாராகுங்கள்,ஏனென்றால் இறைவன் உங்களுக்குள்  உள்ளான் 
* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு..    சிவனடியான் வடிவேலன்.

பனங்கருப்பட்டி

பனங்கருப்பட்டி

பனங்கல்கண்டு மற்றும் கருப்பட்டியில் எண்ணற்ற விட்டமின்களும்,மினரல் சத்துக்களும் அடங்கியுள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே  உடலை குளிர்சியடையச் செய்யும். அதன் கிளைசீமி இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழ். இதனால் சர்க்கரை மற்றும் பல கோடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். கருப்பட்டியில் கலபினம், ஒட்டுரகம் இல்லை; உரம் பூச்சி மருந்து அடிக்கப்படுவதில்லை; அதை தயாரிக்கையில் விஷகெமிக்கல்கள்  சேர்க்கப் படுவதில்லை; ஈரலையோ, உடலின் ஹார்மோன் அமைப்பையோ பாதிப்பதில்லை; எந்த நோயையும் வரவழைப்பதில்லை; மாறாக வந்த நோயை போக்கி வரும் நோயையும் வரவிடாது விரட்டும்.போதை நோய் உண்டாக்குவதில்லை; ஒரு துளியும் பாதிப்பில் நம்மை தள்ளுவதில்லை; மாறாக அமிர்தம் போல அனைத்து நலனையும் தருகிறது.சீர்கேட்டு இருக்கும் உடல் இயக்கத்தையும் சீரான சமநிலைக்கு கொண்டுவருகிறது

பெண்கள் பிரசவம் ஆனதிலிருந்து ஒருவாரத்திற்கு இந்த சுக்குகருப்பட்டியை இதேபோல்சீவி அதில் மிளகை பொடித்து போட்டு கொஞ்சம் பசு நெய் ஊற்றி லட்டுபோல் உருட்டி அரிசி சாதத்தில் போட்டும் அப்படியேவும்.. சாப்பிடுவார்கள் .. மேலும் வருத்து இடித்த எள்ளு பொடியை லட்டுடன் கலந்தும் சாப்பிடுவார்கள்...அப்படி சாப்பிடும் போது குழந்தை பிறந்தபின் கர்பப்பையின் உள்ளே மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களின் மிச்ச மீதங்கள் அனைத்தையும் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்

 எந்த சத்தும் இல்லாத இந்த சர்க்கரையை ஜீரணிக்கவே உங்கள் உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறுஞ்சி எடுக்கப்படும். இந்த சர்க்கரை பின்னர் குளுக்கோசாகவும், ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் உடலில் சாதாரணமாக ஜீரணிக்கப்படும். ஆனால் இந்த ப்ருக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி,அது இன்சுலின் சுரப்பை பாதித்து சக்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. ப்ருக்டோஸ் இன்சுலின் சுரப்பியை மட்டுமல்ல மூளைக்கு உணவு தேவை குறித்த தவறான தகவலை கொடுத்து (ஹார்மோன் சுரப்பை தடை செய்து) அதிகளவு உணவேடுக்க செய்கிறது. இதனால் உடல் பருமன் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம் இதய நோய்களின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்பட்ட பல்வேறு கெமிக்கல் விஷங்கள், உடலின் இயல்பு சமநிலையை பாதித்து பல்வேறு பெருவியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. ஹார்மோன் சுரப்பின சமநிலை தடுமாறுவதால் உடலின் மொத்த இயக்கத்திலேயே தடுமாற்றம் ஏற்படுத்துகிறது. கேன்சர், கர்ப்பப்பை,ஆண்மை-குழந்தையின்மை, கிட்னி-கணையம் என்று உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பாதிக்கிறது.


இதற்கும் மேலாக இந்த விஷம், நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. மேலும்  சர்க்கரை என்பதே ஒரு போதையாக (Sugar Addiction) மாறிவருகிறது. நீங்கள் சர்க்கரை உடலில் சேர்க்காவிட்டால் உங்களால் இயல்பாக இருக்க முடியாதவாறு நம் புத்தி தடுமாறும். சர்க்கரையை உண்டால் சாராயத்தை விட மோசமான கெடுதல்களை செய்துவிடும்.

சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, என்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால்,
•           சர்க்கரை வியாதி
•           பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்)
•           இதயக்கோளாறு
•           உடல் பருமன் - கொலஸ்ட்ரால்
•           ஈரல் நோய்
•           சிறுநீரக-கிட்னி கோளாறுகள்
•           கனைய-சிறுநீரக கற்கள்
•           மனச்சோர்வு-பதற்றம்
•           மலச்சிக்கல்
•           குழந்தையின்மை
•           பொரிந்து போகும் எலும்புகள்
•           அல்சைமர் நோய்
•           நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம்
•           தாதுக்குறைபாடு
•           ஹார்மோன் கோளாறுகள்
•           நாட்பட்ட தலைவலி
•           மூட்டுதேய்மானம்
•           ஒட்டுக்குடல்
•           தசை பிறழ்வு நோய்
•           ஆஸ்துமா
•           கண் மற்றும் பல் கோளாறுகள்

இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.

இயற்கை உணவு

இயற்கை உணவு & சுருக்கமாக

உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தேங்காய், கொட்டை பருப்புகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா & வறுக்காதது), பேரிச்சை, வாழைப்பழம், சீசனுக்கு  கிடைக்கும் எல்லா பழங்களும், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: அசைவ உணவு, முட்டை, பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடை, பனீர்(பால், பால் பொருட்கள்)
சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு:

தவிர்க்க வேண்டியது        மாற்று உணவு
                        
(1) சர்க்கரை                             வெல்லம், கரும்பு சர்க்கரை,
                                                       கருப்பட்டி
(2) பொடி உப்பு                        கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு      கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய்          கொண்ட எண்ணெய்
(4) மிளகாய்                              மிளகு
(5) புளி                                         எலுமிச்சை
(6) கடுகு                                     சீரகம்
(7) காபி, டீ                                 லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காபி, வரக் காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி   அவல், சிகப்பரிசி

    இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம், தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை இயற்கை  உணவுகள் அல்ல.  அவை தீமைகள் குறைவாக செய்யும்.
    முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும்.  இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. (உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த  நேரமே போதும்.  எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.)  ஜீரணக் கோளாறுகளும் குறையும்.  முடியாதவர்கள்  காலை உணவாக ஆரம்பிக்கலாம்.  அளவு, கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம்.   தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல்  வெளியேற்றும்.


        இயற்கை உணவு&உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு

(1) பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக்  பைகளை உபயோகிக்க தேவையில்லை.  பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில்  அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.  தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.
(2) கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.
(3) அஹிம்சை தழைக்கும்.
(4) அமைதி நிலைக்கும்.
(5) ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.
(6) ஒற்றுமை ஓங்கும்.
(7) மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.
(8) மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.
(9) பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.
(10) கணவன் & மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.  அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.
(11) எரி பொருள் (எரி வாயு, விறகு) தேவை இருக்காது.  எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.  அந்நிய செலாவணி  மிச்சமாகும்.  விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.
கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.
(12) பொருளாதாரம் முன்னேறும்.
(13) பஞ்சம் இருக்காது.
(14) தீ விபத்துக்கள் இருக்காது.
(15) வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.
(16) சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.
(17) மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.(செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது).
(18) மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.
(19) மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் 'க்ளோபல் வார்மிங்' தடுக்கப்பட்டு விடும்.
(20) மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.
(21) குற்றங்கள் மறைந்து விடும்.
(22) உணவு கலப்படம் செய்ய முடியாது.
(23) உணவுப் பதுக்கல், கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.  இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.   மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும்.  
(24) பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.
(25) ஓருலகம், ஒரு இனம், ஒரு கூட்டாட்சி உருவாகும்.

எனக்கெல்லாம் காய்ச்சல்

எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு" எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, "எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!" என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, 'அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.

உணவே அடிப்படை

ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு 'ஹச்-ஹச்' எனத் தும்மாமலும், `லொக்-லொக்' என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?

ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.

எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?

நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, 'Cortisol' ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

`நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது' என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

கருப்பட்டி

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.

`சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்' என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.

சுக்குக் காபி, இஞ்சி டீ

"குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு' தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்" எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்!

மஞ்சள் மகிமை

மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

வண்ண வண்ணப் பழங்கள்

பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்' வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.

தீனிகளுக்கு விடை கொடுப்போம்

மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்!

எளிய வைத்திய முறைகள்... உடல் மெலிந்தவர்களுக்கு...

எளிய வைத்திய முறைகள்... உடல் மெலிந்தவர்களுக்கு...

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது.  இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.
 வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது.  அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும்.  வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.

 பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

 பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.  
 தூதுவளை பொடியை தேனில் கலந்து  1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

 கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள்  காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.  

தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

 முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து  சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும்.  உடல் பலம் பெறும்.  உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

 உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி.  இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை.. 
அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

கொள்ளு சூப்

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்:-
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

மருத்துவ குணம்: -

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.

சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம்,கொள்ளு துவையல்,கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி
சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்
உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்

கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும்.

கொழுப்பு கூடிருச்சா

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான சூப்பர் உணவுகள்
கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

* ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

* வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது.

இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

* பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு, இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.
* ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது.

இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

* க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

* கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

இரு மருத்துவ ஆய்வுகள்

இரு மருத்துவ ஆய்வுகள்

பிலிப்பைன்ஸின் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தேங்காய் எண்ணெய், நியுமோனியா உள்ள குழந்தைகளுக்கு துரிதமாக சுவாசத்தை சீராக்கியது.

40 அதி-பருமனான பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டதால் பக்க விளைளவுகளின்றி, உடல் எடை குறைந்திருக்கின்றது.


சரி, தீர்ப்பு என்ன? தேங்காய் எண்ணெய் நன்மையா தீமையா

ஆயுர்வேதத்தின் படி இயற்கையாக தேங்காய் எண்ணெய் உள்ளுக்கு எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். எனவே உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கு மருந்தாக உபயோக மாகின்றது.

நியுமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயனாகின்றது. இது மேற்சொன்ன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

முடி வளர்ச்சி, காயங்களை ஆற்றுதல், எக்சிமா மருந்தாக, இயற்கையான குளுமை குணம் முதலியவற்றுக்கு வெளிப்பூச்சாக நல்ல பலன் தரும் என்று ஆயுர்வேதம் தேங்காய் எண்ணெய்யை புகழ்கின்றது.

ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் உண்டுபண்ணுவதில்லை என்று தெரிவிக்கின்றன. கேரளாவில் எல்லா வித உணவு தயாரிப்புகளிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. தேங்காய் எண்ணெய் தான் அதிக உடல் பருமனுக்கு காரணம் என்றால் ஏன் கேரள மக்கள் அனைவரும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இல்லை?

இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.

முடி தைலங்களுக்கு தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல முக்கிய மூலப்பொருள் வேறேதும் இல்லை.

தேங்காய் எண்ணெய் சர்மத்திற்கு ஈரப்பசை ஊட்டவும், மிருதுவாக்கவும் பயன்படுகின்றது.

ஆரோக்கியமான மனிதனின் உணவில் அளவாக தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அது மிகவும் நல்லது.

அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெய்யின் பலன்களைப் பெறலாம்.

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.