Wednesday, 22 March 2017

ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமம்

இந்த நவீன அவசர யுகத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமம் என்று போட்டி போட்டுக்கொண்டு உழைக்கின்றனர். அவசர யுகத்திற்கு ஏற்றாற்போல், பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாய் எண்ணி, தங்களது உடல் நலனைக் கூட பொருட்படுத்தாமல், உடல் நலனைக் கவனிக்க நேரமின்றி ஓடுகின்றனர். சரியான தூக்கமின்றி, மன நிம்மதியின்றி வேலை, வேலை என்று ஓடுகின்ற அவசர யுகத்திற்கு ஏற்ற பெண்களாகத்தான் அனைவரும் இருக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் இதன் பலனை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆம்! இன்று பெண்கள் யாரும் ஆதி காலத்தில் இருந்தது போன்று, குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பதில்லை. 

  ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை. ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும். இயற்கை வெளிச்சத்தில் பிராண வாயு அதிகம் வெளிப்படுத்தும் மரம், செடி கொடிகள் / இரவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிப்படுத்தும். 

  அவ்வாறே மனிதன் ஆக்ஸிஜனை உள் இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுவான். பிராணவாயுவினை சுவாசித்து, இயற்கை வெளிச்சத்தில் வேலை செய்யும்பொழுது ஹார்மோன், இரத்தம், உடல் இயக்கம் சீர்படும். இரவில், கெட்ட காற்றினை சுவாசிக்கும் செல்கள் கெடுதலையே விளைவிக்கும். 
 
  இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே. அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய பக்க விளைவுகள் உள்ளது என்று தெரிந்தும், ஆங்கில மருத்துவத்தையே அனைவரும் நாடுகின்றனர். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத, பல சிறந்த யுக்திகளைக் கொண்ட சித்த மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை வழங்கி வருகிறது. 

  பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் கர்ப்பப்பை நோய்கள் முக்கியமான ஒன்று. அவை என்ன மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இங்கு காண்போம்.         
கருப்பை (கர்ப்பப்பை) நோய்கள்:

நீர்கட்டி (Fibroid)

பெரும்பாடு (Menorrhagia)

சூதகத்தடை (Amenorhea) 

சினைப்பை கட்டி (Pcod)

இவை உண்டாவதற்கான காரணங்கள்:

மன அழுத்தம் (Depression)

உறக்கம் இன்மை. முக்கியமாக இரவு உறக்கம் இல்லாமை. 

சத்தான உணவு பழக்கம் இல்லாமை. 

தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை.

உடற்பயிற்சி இன்மை. 

இந்த நோய்களைக் கண்டறிவதற்கான அறிகுறிகள்: 

அதிக இரத்தப் போக்கு (அ) குறைவான இரத்த போக்கு (அ) மாதாந்திர தீட்டு சரிவர வராமை.

இடுப்பு மற்றும் வயிற்றில் வலி 

அதிவியர்வை

கைகால் மரத்து போகுதல்

தலைசுற்றல்

சோம்பல், கோபம், எரிச்சல்

உடம்பில் இரத்தம் (Heamoglobin) குறைவாக இருந்தாலும் சுழற்சி தடைப்படும். 

கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் இருந்தாலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுத்தும். 

போதுமான உடற்பயிற்சி இல்லாமையால் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடுகள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சி சரிவர இயங்காது. 

இரத்தம் மற்றும் புரதம் உடம்பிற்கு அத்தியாவசியமானது. குறிப்பாக பெண்களுக்கு அதில் குறைபாடுகள் இருந்தாலும், சுழற்சி தடைபடும். 

உடல் பருமன் ஒரு முக்கியமான காரணம். 

இதற்கு ஏற்ற சிறந்த உணவு நிவாரணி: 

துவர்ப்பு சுவை உணவுகள் சிறந்தவை. 

கீரைகள் – அரைகீரை, முருங்கைக்கீரை மற்றும் சிறுகீரை சிறந்தது. இரும்புச் சத்தினை அதிகரிக்கும். சிறுநீர் நன்கு கழிக்க செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட நீர்கள் வெளியேற்றப்படும். 

பழவகைகள்: துவர்ப்பு சுவையுள்ள பழங்கள், காய்கள் சிறந்தது. மாதுளை, கொய்யா, பப்பாளி, சுண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவை குருதியினை பெருக்கும். உதிரப்போக்கை சீர்படுத்தும். 

  உளுந்தங்களி ஓர் சிறந்த உணவு. பனை வெல்லம், நல்லெண்ணெய் கலந்து செய்யும் உளுந்தங்களியினால் இடுப்பு மற்றும் நரம்புகள் வலுப்பெறும். உளுந்து – புரதம், பனைவெல்லம் – இரும்பு சத்து, நல்லெண்ணெய் – நல்ல கொழுப்பு சத்து. 

சிறுபீளை குடிநீர்:

  இக்குடிநீர் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக உடம்பில் உள்ள நசுத்தன்மையினை வெளிப்படுத்தி, உடம்பின் உஷ்ணத்தினை குறைக்கும். உடல் சுறுசுறுப்பு பெற்று, எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.   

  ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்க ஓர் தூண்டுகோளாக செயல்படும். உடல் சமநிலை அடைவதால், வெள்ளைபடுதல், கண் எரிச்சல் ஆகியவை குறையும். 

அசோகப்பட்டை சூரணம்

மாதுளை மணப்பாகு (அ) ரசாயனம்.

H6 அதிகப்படும், கர்ப்பப்பை சுழற்சி சரிவர இயங்க உதவும். 


உடற்பயிற்சி, உணவு, உறக்கம்

-  இம்மூன்றும் சரிவிகிதப்படி முன்னோர் கூற்றின்படி இருந்தால், எந்த நோயும் எளிதில் வராது.

No comments:

Post a Comment