Wednesday, 25 December 2024

தலைமுடி

உலகத்தில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், பலரும் தங்களுக்கு தலைக்கு மேல் பிரச்னை இருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி என்ன தலைக்குமேல் பிரச்னை என்றால் தலைமுடி சரியாக வரவில்லை என்பதுதான் அந்த தலைக்கு மேல் பிரச்னை. சரி உங்களுக்கு தலைமுடி சீராக வளரவில்லை என்ற கவலை உள்ளதா, கவலைப்பட வேண்டாம். மருதாணி இலை உடன் வெங்காயடத தோல் போட்டு காய்ச்சிய தண்ணீரை தலைக்கு தடவி வாருங்கள், உங்கள் தலைமுடி காடு போல வளர்வதைப் பார்ப்பீர்கள். இது பாட்டி சொன்ன ரகசியம். ஒரே மாதத்துல மாற்றம் தெரியும்.

முதலில் அடுப்பை பற்றவைத்து விட்டு, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 கிளாஸ் ட்டதண்ணீர் ஊற்றுங்கள். அதில் 1 டீஸ்பூன் தேயிலைத்தூள் போடுங்கள். அடுத்து ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை சேருங்கள். அதில் 2 வெங்காயத்தின் தோல்களை மட்டும் சேருங்கள். நன்றாக கொதிக்கவிடுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றியிருக்கிறீர்கள் என்றால், அது அரை கிளாஸ் அல்லது முக்க்கால் கிளாஸ் தண்ணீராக வரும் வரை கொதிக்க வையுங்கள்.

இதையடுத்து, இந்த தண்ணீரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி, ஆறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, இந்த மருதாணி மற்றும் வெங்காயத் தோல் தண்ணீரை உங்கள் தலைமுடிக்கு தலைமுடியின் வேரில் படும்படியாக தலைமுழுவதும் தடவுங்கள், இந்த தண்ணீரைத் தடவிய பிறகு, லேசாக மசாஜ் செய்யுங்கள். அரை மணிநேரம் ஊறிய பிறகு, தலை குளித்துவிடுங்கள். இப்படி இந்த தண்ணீரை வாரத்துக்கு 2 முறை உங்கள் தலைக்கு தடவி வாருங்கள், நிச்சயமாக உங்கள் தலைமுடி வளர்வதில் ஒரு பெரிய மாற்றம் தெரியும்.

இந்த மருதாணி மற்றும் வெங்காயத் தோல் தண்ணீரை ஒரு மாதம் தடவி வந்தால், உங்கள் தலைமுடி வளர்வதில் ஒரு பெரிய மாற்றம் தெரியும், தலைமுடி காடுபோல அடர்த்தியாக வளர்வதைப் பார்க்க முடியும்.

Friday, 20 December 2024

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
1. போனது போய்விட்டது ஆனது ஆகிவிட்டது, இனி என்ன நடக்க வேண்டும்? அதைப் மட்டும் பேசு.
2. நல்ல வேளை இதோடு முடிந்ததென திருப்திப்படு.
3. உடைந்தால் என்ன? வேற வாங்கி விடலாம்.
4. பேரூந்து போய்விட்டால் என்ன? அடுத்த பேரூந்து வரும்.
5. பணம் தானே போனது. கை கால் இருக்கு. மனதில் தெம்பு இருக்கு, சம்பாதித்து விடலாம்.
6. செல்கிறவர்கள் ஆயிரம் சொல்வார்கள் எல்லாமே சரி என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான், அப்படித்தான் பேசுவான், அதையெல்லாம் கண்டுகொள்ளலாமா? ஒதுங்கி விடு அப்போதுதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு போய் கவலைப்படுவது.
9. கஷ்டம் தான், ஆனால் முடியும்.
10. நஷ்டம் தான், ஆனால் மீண்டு வந்துவிடலாம்.
11. இதில் விட்டதை அதில் எடுத்து விட மாட்டேனா?
12. விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
13. விழுந்தது விழுந்தது தான். எழுந்திருக்க வழியை தேடு.
14. உட்கார்ந்தே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு, நடக்க வேண்டியதைப் பார்.
15. இவன் இல்லையென்றால் என்ன வேற ஆளே இல்லையா?
16. இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லையா?
17. இப்போதும் முடியவில்லையா? சரி. இன்னொரு முறை முயற்சி செய்.
18. இது மிகவும் கஷ்டம், கொஞ்சம் யோசித்தால் வழி கிடைக்கும்.
19. முடியுமா? என்று நினைக்காதே. முடியும் என்று நினை.
20. கிடைக்கவில்லையா? விடு, காத்திரு இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம் கதையைப் பார்.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிந்து போன கதை.
24. சும்மா யோசித்துக் கொண்டே இருக்காதே. குழப்பம் மட்டுமே மிஞ்சும், வேகமாக வேலையை ஆரம்பி.
25. ஆஹா இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யாரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.
26. உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கிறான்.
27. ஊரில் ஆயிரம் பிரச்சினை. என் பிரச்சினையை நான் தீர்த்தால் போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது அதன் வழியில். என் வேலை வேற வழியில்.
29. எப்போதுமே ஜெயிக்க முடியுமா? அப் அப்போது, தோற்றால் என்ன பெரிய தவறா?
30. அவனை ஜெயித்தால் தான் வெற்றியா? நான் தான் தினம் வளர்கிறேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நன்றாக தூங்கி விட்டேன் பரவாயில்ல. இனிமேல் விழித்திருந்தால் போதும்.
32. நான்கு காசு பார்க்கும் நேரம். கண்ட பேசி காலத்தை கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே,
வீழ்வது கேவலமில்லை, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.
உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள். வெற்றி நமதே.✍🏼🌹

Thursday, 10 October 2024

சமையல்

🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

Wednesday, 11 September 2024

புலம்புவதும் மனநோய்தான்

_*புலம்புவதும் மனநோய்தான்...*_

_பலரை பார்த்திருக்கின்றேன்...._

_*ஏகத்துக்கு புலம்புவார்கள்.*_ 
_*அப்படி செய்திருக்கலாம்,*_ 
_*இப்படி*_ _*செய்திருக்கலாம்,*_ 
_*இவன் இப்படி என்னை சொல்லி*_ 
_*மனதளவில்*_ _*காயப்படுத்தி விட்டானே. ..*_

_புலம்பி என்ன பிரயோசனம்?_

_*Past is past.....*_

_அந்த மனக்குப்பைகளையே_ 
_சுமந்து கொண்டு திரிவானேன்?_

_*தூக்கி எறிந்தால்தான்,*_ 
_*மனசுமையும் குறையும்.*_

_அடுத்து என்ன செய்யலாம்_ 
_என்ற தெளிவும் கிடைக்கும்._

_*Negative thoughts ஆகவே*_ _*இருந்தால்,*_
_*நம்மை சுற்றி*_ _*Negative thoughts நபர்கள்*_ 
_*நம் Aura circleல் வருவார்கள்.*_ 
_*மேலும் மனம் சோர்வுறும்.*_

_இங்கே டாக்டரும் நாமே. நோயாளியும் நாமே. நம் மனதை நாம்தான் சரிசெய்ய வேண்டும்._ 

_*No other Choices......*_

_*துன்பங்கள் அதிகமாக இருந்தால், நம் தேவையற்ற வினைகள் கழிகிறது.*_ 

_அடுத்த நல்ல நிலைக்கு இறைவன் நம்மை தயார் செய்கிறார் என்று ஆக்கபூர்வமாக நம்மை நாமே நேர்மறை எண்ணங்களோடு உற்சாகப்படுத்தி கொண்டால், பிரச்னைகளை சந்திக்க, சீரமைக்க வாய்ப்பு உண்டு._

_*Meditation, தற்சோதனை எல்லாம் இந்த மனநிலைக்கு நம்மை உயர்த்தத்தான்.*_

_நல்ல Motivation_ _speeches கேட்பதை_
_வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்._

_*எத்தனை தோல்விகள்*_ _*நம்மை புரட்டி*_ _*போட்டாலும், சிறு*_ _*நம்பிக்கையை*_  
_*even 1% விட்டு விடாதீர்கள்.*_

_இரவு முடிந்தால் விடியல் கண்டிப்பாக வரும்._

_*அறிவோம், தெளிவோம், உயர்வோம்.*_

கை தட்டுங்கள்

👏 *தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்* 👏 *கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.*. 👏 *கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன 👏 கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி 👏 *கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*

👏 *இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன.*

 👏 _*உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.*_ 

👏 *அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.*

 👏 *அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.*

👏 *தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.*
👏 *ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர்*

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்...!

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்...!

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. 

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. 

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், 
செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது...✍🏼🌹

Thursday, 29 August 2024

எவ்வளவு வழிபாடு செய்தும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள்

**எவ்வளவு வழிபாடு செய்தும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள் வாராகி அம்மனுக்கு இந்த ஒரு தீபத்தை தினமும் ஏற்றி வந்தால் போதும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.**

இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபடக்கூடிய ஒரு தெய்வம் என்றால் அது வாராஹி அம்மன் தான். உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடிய இந்த வாராகி அம்மன் நம்முடைய கஷ்டங்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுவாள். மேலும் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ வைக்கவும் உதவுவாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நிறைவேறாத வேண்டுதல்களும் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

**நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற**

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அந்த வேண்டுதலை முன்வைத்து எந்த தெய்வத்திடம் வழிபட்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தெய்வத்தை வழிபடுவதையே வெறுத்து விடும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி வழிபாடு செய்வதை நிறுத்துவதற்கு பதிலாக அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் எந்த தெய்வத்திடம் வேண்டி நிறைவேறாமல் இருந்தாலும் வாராகி அம்மனிடம் இந்த முறையில் தீபம் ஏற்றி வைத்து வேண்டுதலை வைக்க அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதற்கு நாம் நம்முடைய வீட்டில் தினமும் வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். வேறு எதுவும் பெரிதாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுவாக தீபம் ஏற்றுவதற்கு நெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பஞ்ச கூட்டி எண்ணெய் என்று பல எண்ணெய்கள் உபயோகப்படுகின்றன. அதில் எந்த எண்ணெய்யை பயன்படுத்தி நீங்கள் தீபம் ஏற்றுகிறீர்களோ அந்த எண்ணையவே இந்த தீபத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். காலையிலும், மாலையிலும் இந்த தீபத்தை வாராகி அம்மனை நினைத்து ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது பஞ்சமுக விளக்காக இருந்தால் மிகவும் சிறப்பு.

நாம் விளக்கேற்றுவதற்காக எண்ணெய் வாங்குவோம் அல்லவா? அதை ஒரு லிட்டர், அரை லிட்டர் என்று வாங்குவோம். அவ்வாறு வாங்கி வந்த எண்ணெயில் அரை லிட்டர் எண்ணெய் ஆக இருக்கும் பட்சத்தில் அதில் வால் மிளகு ஒன்றை போட வேண்டும். வால்மிளகு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய சாதாரண மிளகை கூட போடலாம். ஒரு லிட்டராக இருக்கும் பட்சத்தில் இரண்டு மிளகுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த எண்ணையை பயன்படுத்தி வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எண்ணெய் தீர்ந்த பிறகு அதில் இருக்கக்கூடிய மிளகை எடுத்து ஒரு அகல் விளக்கில் வைத்து அதனுடன் கற்பூரத்தை வைத்து வீட்டு வாசலுக்கு வெளியே வைத்து ஏற்றி விட வேண்டும். அந்த மிளகு எரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதனால் நம்முடைய வேண்டுதல்கள் தடைப்பட்டு இருக்கிறதோ அந்தத் தடையை உடைத்து எறிந்து நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழிகள் பிறக்கும். பிறகு இந்த மந்திரத்தை தினமும் காலையில் மற்றும் மாலையில் 108 முறை சொல்ல முடியாது.

**மந்திரம்**

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண வாராஹி யே ஹும்பட் ஸ்வாஹா



இந்த முறையில் தொடர்ச்சியாக நாம் வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் விரைவிலேயே நடைபெறும்

Tuesday, 27 August 2024

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்

*உலகப் புகழ் பெற்ற மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் மகள் தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.*

*அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் ஹனா வெளியிட்டுள்ளார்.*

*நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.*

 *வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.*

*நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்ட பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.*

*எங்களை அருகில் அமர்த்திக் கொண்டு,என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து கூறினார்.*

*"ஹனா! "இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது."*

*வைரங்களை எங்கு எடுப்பாய்?*

*பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.*

*முத்துக்களை எங்கு எடுப்பாய்?*

*கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.*

*தங்கத்தை எங்கு எடுப்பாய்?*

 *சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளின் உள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றவர்...*

*என்னை உற்று நோக்கியவராக,*

*"உன்னுடைய உடல் புனிதமானது.வைரங்கள்,முத்துக்களை விட நீ புனிதமானவள்.உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்."என்றார்.*

*எனவே,பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்...*

*பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்த செயல்...*

*அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்...*

*பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.*

*பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய் தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.*

*நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...!*

Friday, 16 August 2024

ஒன்பது விதிகள்

_*கர்மாவின் ஒன்பது விதிகள் !*_ 

*1.ஒன்றாம் விதி !* 

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும் !!!!!!"

*2.இரண்டாம் விதி !!* 

வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.

*3.மூன்றாம் விதி !!!* 

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்!!!

*4.நான்காம் விதி !!!!* 

நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!

*5.ஐந்தாம் விதி !!!!!* 

நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!

*6.ஆறாம் விதி !!!!!!* 

நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!

*7.ஏழாம் விதி !!!!* 

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது !!!!

*8.எட்டாம் விதி !!!!* 

நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும் !!!!

*9.ஒன்பதாம் விதி !!!!* 

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும் !!!!✍🏼🌹

*மனித வாழ்வில் பாவமும்* *புண்ணியமும்*

மனித வாழ்வில் என்ன செய்தால் பாவங்கள நீங்கி எத்தனை தலை முறைக்கு புண்ணியம் கிடைக்கும்?

நம் சந்ததியருக்கு
எதை சேர்த்து வைக்கவேண்டும் ?
புண்ணியங்களையா?பாவங்களையா ..........?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!

நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!

ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!

நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து இங்கே பார்ப்போம் :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு
.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. 

(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. 

(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி 
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. 

(3) *வித்யா* : 

இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது. 

(4) *கர்மா* : 

தொழில், குணம், மனைவி 
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் 
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக 
பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

(5) *மரணம்* : 

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் 
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும் 
மருத்துவர் இதே கேள்வியை தான் 
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் 
பிழைப்பார். 

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப் படுகிறது. இதை மாற்ற யாராலும் முடியாது..

*விதிவிலக்கு* 
நமக்கு காலத்தில் கிடைக்க வேண்டியது தடையாக இருக்கும் பக்ஷத்தில் ஜோதிடம் மூலமாக செய்ய வேண்டிய பரிகாரம் செய்தால் கிரஹங்களால் தடைபட்ட தோஷங்கள் விலகி செளக்யம் உண்டாகும். ஆனால் மரணத்திற்கு மட்டும் இது பொருந்தாது. 
காரணம் அது கிரஹங்களுக்கு எல்லாம் மேல் உள்ள இறைவன் வசம் உள்ளது. அந்த பொறுப்பை பாரபக்ஷம் பார்க்காத சனிபகவான் சகோதரர் தர்மராஜனிடம் இறைவன் வழங்கியுள்ளாா். 
அங்கே எந்த சலுகையும் (Recommendation) செல்லுபடியாகாது.
வாழ்க வளமுடன் 
🙏🙏🙏🙏🙏

*கர்ம வினை !*

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. 

ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் 
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். 

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். 

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். 

சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். 
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"* 
எனப்படுகிறது.

*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது. 
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது. 

சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. 

பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன. 

கனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?* 

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

*நாமே* நம் தாயை, *தந்தையை,* 
*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் 
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .

ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் 
#வேறு_பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. 

அது என்ன ? 
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் 
*கர்ம* கதிகளின் 
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *"கர்ம வினை"* தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.

அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். 

அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் 
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. 
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.

அவரவர்கள் செய்வினையின் 
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் 
வாழ்க்கை அமையும் .

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.

இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு 
நாம் மட்டுமே பொறுப்பு.

அப்படி என்றால் 
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது. 

இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. 

நீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,

நீ என்ன செய்யப் போகிறாய் ?

எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? 

எது போன்ற வாழ்க்கைத் தடத்தை 
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது 
உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் 
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 

ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். 

அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை 
உண்ண முடியாது. 

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் 
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._ 

நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.

_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._

_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது🙏

*#கோபாஷ்டமி#*

*இந்திராகாந்தியை*பாதித்த வரலாறு.*

*இஸ்லாமிய* *வம்சாவழியை சேர்ந்த* *இந்திராகாந்தி *ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து இந்துவைப் போன்று பெயரை* *வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அரசாண்டதுதான் அவரின் ராஜ தந்திரம்.*

அவரது உண்மைமுகத்தை தெரிந்து கொள்வோம்.

1966 தேர்தலில் தான் ஜெயிப்பது கடினமான ஒன்று என்பதை அறிந்த *இந்திரா காந்தி ஆச்சார்யா வினோபா வையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.*

தேர்தலில் தான் வெற்றி பெற 
*ஆசீர்வதிக்கும் படி வேண்டினார்.* இருவரும் ஆசீர்வதித்து இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். 

இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் நாட்டில் ஒரு நாளைக்கு 15000 பசுக்கள் கொல்லப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுக்க கூடாது என்றும் அந்தப் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தனர். 

இந்திராவும் ஜெயித்து பிரதமரானால் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் உறுதி அளித்துச் சென்றார். 

தேர்தலும் வந்தது 
இந்திராவும் வெற்றி பெற்று
பிரதமரானார். 

ஆனால் கொடுத்த வாக்கை மறந்தார்.

நமக்கு ஒன்றும் இது புதிதில்லை என்றாலும் அன்று அவர்களால் 
அதை ஜீரணிக்க முடியவில்லை. 

ஆச்சார்யா வினோபா இது சம்பந்தமாக இந்திராவிடமே நேராகக் கேட்டு விடலாம் என்று இந்திராவைச் சந்தித்து இந்திரா தேர்தலுக்கு முன் அளித்த சத்தியத்தையும் உறுதி மொழியையும் ஞாபகப்படுத்தினார்.

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்திராவோ தான் அப்போது தான் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதை சரி செய்து விட்டுப் பின் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும் என்றார். 

மாதங்கள் உருண்டோடின. இந்திரா எதையும் செய்யவில்லை. 

கர்பாத்ரி சுவாமிகள் பொறுமை இழந்தார். தனது சீடர்களையும் மற்ற சந்நியாசிகளையும் அழைத்துக் கொண்டு பாராளுமன்றம் சென்றார். வாசலில் நின்று தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

*இந்திராவோ* அவர்களை சிறிதும் மதிக்காமல் அவர்கள் மீது *துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்.*

அப்பாவி சந்நியாசிகளும் சீடர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தனர். 

*7 நவம்பர் 1966 அன்று கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்.*

பிணங்களை அப்புறப்படுத்தியும் கொளுத்தியும் மறைத்தார்கள். 

அதைப் பார்த்த குருவிற்கு மனம் கொதித்தது. 

*எப்படி இந்த அப்பாவி மனிதர்கள் இறந்தார்களோ அதே போல நீயும் இறப்பாய் என்று வயிறு எரிய சபித்தார்.*

இந்திரா எப்படி இறந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 

ஆனால் *ஒரு உண்மையை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்*.

அப்பாவி சீடர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டு மடிந்த நாள் *கோபாஷ்டமி நாள்.* அது பசுவிற்கு உகந்த நாள். 

இந்நாளில் பசுவைப் பூஜித்து வணங்கும் இந்துக்களின் கலாச்சார பாரம்பரிய வழக்கம். 

**இந்திராவின் கணவர் ஃபெரோஸ்காந்தி இறந்தநாள் கோபாஷ்டமி நாள்.*

*இந்திரா குண்டடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*

அவரது மகன் *ராஜீவ்காந்தி இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*

அவரது இன்னொரு மகன் *சஞ்ஜய் இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*

*தர்மத்தை அவமதிப்பவர்களை கர்மா ஒரு பொழுதும் விட்டு விடுவதில்லை.*

மீண்டும் அவர்கள் செய்யும் அதர்மங்களால் அழிவுப்பாதையை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத தோன்றுகின்றது.

உங்களது கர்மாக்களை சதவிதமாக கணக்கில் வையுங்கள். 100% என எடுத்துக்கொள்வோம், அதை 0%ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1) பறவைகளுக்கு நீர் வைத்தல் = 2% (-)
தானியங்கள் வைத்தல் = 5 % (-)
(2) நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3) மீன்களுக்கு உணவளித்தல் = 20% (-)
(4) குரங்குகளுக்கு உணவளித்தல் = 36% (-)
(5) குதிரைகளுக்கு உணவளித்தல் = 64% (-)
(6) யானைகளுக்கு உணவு அளித்தல் = 68% (-)
(7) பசுக்களுக்கு உணவளித்தல் = 86% (-)
(8) ஆடுகளுக்கு உணவளித்தல் = 62% (-)
(9) தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தல் = 86% (-)
(10) சகோதர, சகோதரிகள் அவர்கள் கஷ்டப்படும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11) கர்ப்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12) ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
(13) கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14) அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15) நோயளிகளுக்கு = 93% (-)
(16) மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17) திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

சரி இனி ஆன்மீக ரீதியாக பார்ப்போம் :-

(1) கோயில் மயில்களுக்கு
(2) கோயில் காகத்திற்கு
(3) கோயில் சேவல்களுக்கு
(4) கோயில் யானைகளுக்கு
(5) கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
(6) கோயில் பூசாரி
(7) பிராமணர்களுக்கு உணவு
(8) விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு
(9) கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
(10) அன்னதானத்திற்கு உதவுதல்
(11) கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
(12) கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13) கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14) இறைவனுக்கு பூ மாலை
(15) முன்னோர்கள் வழிபாடு
(16) மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17) ஏழை மாணவர்கள் படிக்க
(18) தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோபப் படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ளை, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்களாலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும். இதற்கு கர்மா கழித்தல் இல்லை. 

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே! கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதிகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வப்போது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின்பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை...

- அகத்தியர் கர்மகாண்டம் நூலில் இருந்து...

ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ராம் ராம் ராம் ராம ராம ராமே

Thursday, 15 August 2024

இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?.

*இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?..*

பொதுவாகவே சில உணவுகளை சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.எல்லோருக்கும் இனிப்பு என்றாலே பிடித்தமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் இனிப்பு என்ன தான் விருப்பமான ஒன்றாக இருந்தாலும், அதை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என அச்சப்படுவார்கள்.
இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். மேலும், நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்புண்டு. எனவே இனிப்பு சாப்பிட்டவுடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற செயலாகும்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் முதலில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி இனிப்பு சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, இனிப்புகளை அளவாகவும் முறையாகவும் சாப்பிடுவது நல்லது.

*தவிர்க்க வேண்டியவை:*

 பழக் கலவை (Fruit salad): பழக் கலவைகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம்.

 *சிட்ரஸ் பழங்கள்:*
 இந்த பழங்களை சாப்பிட்டால் தண்ணீரை உடனே குடிக்ககூடாது. அவ்வாறு குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி உண்டாகும்.

 *ஐஸ்கிரீம்:*

ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, சளி போன்ற நோய்கள் ஏற்படும். 

*டீ:*

ஒரு சிலர் டீ குடித்ததும் உடனே தண்ணீர் குடிப்பார்கள். சூடான டீயை குடித்துவிட்டு உடனே குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரை குடித்தால் வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படலாம். 

*இனிப்பு:*

இனிப்பு வகைகள் அல்லது டெசர்ட் வகைகள், டோனட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடித்தால் தண்ணீர் சர்க்கரையை உடனே உறிஞ்சிவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க நேரிடலாம். 

*பால்:*
 பால் குடித்துவிட்டு உடனே தண்ணீர் குடித்தால் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும், செரிமானக் கோளாறுகளை உண்டாகும். எனவே இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்காமல் குறைந்தது அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கழித்து குடிக்க வேண்டும்.இனிப்பு சாப்பிட்டவுடனேயே காரம் கலந்த ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் தண்ணீர் குடிப்பதை அவ்வப்போது தடுக்கலாம்.

சுண்ணாம்புவின் சூட்சமம்

சுண்ணாம்புவின் சூட்சமம்.

எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். 

ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.

பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.

மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும்.. நீர் மோர், ஜூஸ், தண்ணீரிலும் கலந்து கொடுக்கலாம். நல்ல மாற்றம் தெரியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்க லாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.

இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். 

கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். 

மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. 

தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.

பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.

குளிர்காலத்தில் தொண்டை கட்டிக்கொண்டால் முருங்கைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பரவலாக பூசிவிட வேண்டும். தொண்டை கமறல் நீங்கிவிடும். சுண்ணாம்பை நேரிடையாக சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்தி சாப்பிடும் பக்குவத்தில் கடைகளில் விற் கிறார்கள். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்புதான் சிறந்தது.

இன்று நாம் உபயோகிக்கும் சுண்ணாம்பு கடல் சிப்பியிலிருந்து எடுக்கும் சுண்ணாம்பு அல்ல.சுண்ணாம்பு கற்களை நீர்த்தி எடுக்க படுபவை

 கடல் சிப்பிகளிலிருந்து உண்டாக்கபட்ட சுண்ணாம்பு அது தான் உண்ண தகுந்தவை மருத்துவ குணம் வாய்ந்தது.

அது விலை சற்று அதிகம் என்பதால் அந்த சுண்ணாம்பை உபோகிக்காமல் இருந்துவிட்டோம்

சிப்பிசுண்ணாம்பு தான்  மருத்துவ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

 வெற்றிலை உடன் பாழாய் போன புகையிலையும் சேர்த்து போடுபவர்களுக்குதான்  தொன்டை மற்றும்,வாய்...
புற்று நோய் வந்தது...

வடலூர் வள்ளல் பெருமான் எழுதிய நித்திய கரும ஒழுக்க நூலில் வெற்றிலை பாக்கை எப்படி சாப்பிடுவது என்று கூட எழுதி வைத்துள்ளார் ஆகவே தயவு செய்து வெற்றிலைப் பாக்கு போடுங்கள்..

Friday, 12 January 2024

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!


1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


4. எப்போதும் பொறாமையை விலக்குங்க ள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்

16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

-தொகுப்பு ரமணி மோகனகிருஷ்ணன்

தன்னம்பிக்கை

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

கஷ்டம் வரும் தருணங்களில் நிலைகுலைந்துப் போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள்.

எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள்.

அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும்.

நீங்கள் செய்யும் நல்ல காரியங்களும், பிறரிடம் காட்டும் பரிவும் செலுத்தும் அன்பும் நல்லெண்ணமும் பல்கிப் பெருகி மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.

அடுத்தவரைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதத்திற்கு நீங்களே காரணம். அதற்கு அவர் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.

உங்களுடைய மௌனமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் குறிக்கும் உங்கள் அகம் சார்ந்தப் பேச்சு உங்களிடம் மற்றவர்கள் நடந்துக் கொள்ளும் விதத்தில் வெளிப்படும்.

வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்.

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

எந்தவொரு நிகழ்வுக்கும்


நம் வாழ்வில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும், decesion எடுக்கும் பொழுது, ரெண்டு solution இருக்கும்.

இந்த ரெண்டில் ஒன்னை தேர்வு பண்ணும் பொழுது, ஒன்னை விட மற்றொன்று better ஆக தோன்றும். 

சில நேரங்களில், ரெண்டு solution ன்னும் இருந்தா நல்லா இருக்கும் என்று feel பண்ணுவோம்.

 அனேக நேரங்களில், ஒரு solution எடுத்த பின், மற்ற solution இதைவிட better ஆக இருக்குமோ என்று மனம் எண்ணும் .

 இக்கரைக்கு அக்கரை பச்சை..
 இந்த எண்ணம் எப்போ ஆரம்பிச்சது..

 ரகளை பண்ணி அம்மாகிட்ட செம்மையா அடிவாங்கும் பொழுது தோன்றியது.. 

இக்கரைக்கு ப்ரெண்ட் வீடு அக்கரை பச்சை என்று.

 அவங்க வீட்டுல ஒரே ஒரு நாள் தங்கிய பொழுது ( அம்மா அப்பா ஊருக்கு போன பொழுது) புரிந்தது இக்கரையே சிறந்தது என்று.

  ஸ்கூல் சேர்ந்து .. correct ஆ Tenth படிக்கும் பொழுது தான்னு நினைக்கிறேன்.
என்னடா எப்ப பாரு விழுந்து விழுந்து படிச்சிண்டு.. எப்போ தான் collage போவோமோ.. daily jolly யா பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கலாம். படிக்க ஒன்னும் இருக்காது என்று.. 

collage வந்த பொழுது, புரிந்தது.. அக்கரை அளவானது என்று.

 College la படிக்கும் பொழுது தோன்றியது.. எப்போடா வேலைக்கு போவோம்.. நல்லா சம்பாதிச்சு.. சொந்த சம்பாதியத்துல, வாழ்க்கையை enjoy பண்ணலாம் என்று....

வேலைக்கு போன பொழுது தான் புரிஞ்சுது.. இக்கரை ( அப்பா சிக்கனம்) சூப்பர் என்று.
 hard earned money.. தாம் தூம்ன்னு செலவு பண்ண முடியல.

 திருமணம் ஆனா நிறைய ஊர் சுத்தி பார்க்கலாம் என்ற அக்கரை பச்சை, 

 வெறும் relatives வீட்டுக்கா போகும் பொழுது , இக்கரை வெறும் பச்சை இல்ல.. மஞ்சள், சிகப்பு.. என்று colour colour ஆனது என்று.

 வீட்டில் வேலை முடித்து, வேலைக்கு, on time போக வேண்டும் என்றால், அதிகாலை 4. 30 மணிக்கு எழுந்து வேலை செய்யணும். . அப்போ தோணும்.. ச்ச.. பேசாம படிக்காமல் இருந்திருந்தால், வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்று. 

ஒரு மாசம் leave ல வீட்டில் இருக்கும் பொழுது, slow motion ல வேலை செய்யும் பொழுது புரிந்தது.. எப்பவும் சுறுசுறுப்பாய் இருப்பது எவ்வளவு நல்லது என்று.

பிறரை சார்ந்து இல்லாமல் independent ஆக இருப்பது ,சொர்க்க வாழ்க்கை போலஇருந்தது.

 வேளையில் pressure அதிகமாகும் பொழுது, தோன்றும், வேலையை resign பண்ணிட்டு, வீட்டில் இருக்கலாம் என்று. வீட்டில் இருக்கும் பொழுது தான் புரிந்தது, வெறும் ஊர் வம்பில் புத்தி போகாமல்,வேலையில் கிடைத்த வெற்றி, achievement எல்லாம் எவ்வளவு best என்று.

Colleagues உடன் பழகும் பொழுது புரிந்தது,. Introvert மாதிரி பிறர் மீது போட்டி, பொறாமை, இல்லாமல், நமக்கு நாமே போட்டி என்று தெளிவு கிடைத்தது.

இதனால், எப்பவும் என்னுடைய next level பற்றியே யோசித்து, முன்னேற்றம் கிடைத்தது.

 தான், தான் ரொம்ப clever என்று நினைத்துகொண்டு, குதற்கமாக சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில், உள்ளதை உள்ளபடி accept பண்ணிக்கொண்டு, உண்மை பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்ப, என் approach மாற்றி கொள்வதில், புரிந்தது, உண்மையான education ன்டைய value.

 தொலைவில் இருக்கும் வரை, ஒன்னை விட மற்றொன்று better ஆக தான் தெரியும்.

 Better, best என்று தேர்ந்து எடுத்துக்கொண்டு போனால், வாழ்வில் திருப்பதியே இருக்காது.

By Lakshmi Desikan

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 

🎋

*'கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே...!"*

*'கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே...!"*
*.......................................*

நாம் சொல்லப் போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கூக்குரல் எழுப்பிப் பேசும் பொழுது எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.*

அது நமக்கொரு தவறான தோற்றத்தைத் தந்து விடும். குரலினை உயர்த்திப் பேசுவது நல்லதா...? என்று எவரிடம் கேட்டாலும், நல்லது இல்லையென்றே உரைப்பார்கள்.*

ஆனால்!, சினம் கொள்ளும் போதும், நாம் கூறிய கருத்தினை மறுத்துப் பேசும் பொழுதும் நம் குரலினை உயர்த்தியே பேச வேண்டிய கட்டாயமும் வருகிறது...*

அந்நேரம் இதயத் துடிப்பு அளவுகளைக் கடந்து உயர் மன அழுத்த நிலையால் நாளங்கள் தடித்து, கண்கள் சிவந்து சினத்தின் உயரத்திற்கே நம்மை அறியாமல் சென்று விடுகின்றோம்...*

இப்படி நம்மிடம் இடையிடையே நிகழ்வதனால் பல வேண்டாத விளைவுகளும் ஏற்படும்.*

இவையெல்லாம் அமைதியாக இருக்கும் பொழுது நமக்கே புரியும்.*

ஆனால் இதயத்தின் துடிப்புகள் அளவை மீறும் பொழுது நம் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைப்பது என எவரும் அறிவதற்கு இல்லை.*

குரலினை உயர்த்திப் பேசும் பொழுது நாம் மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய் விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.*

அதுவொரு தரக்குறைவான செயல். அமைதியின் சக்தியை எவரும் புரிந்து கொள்வதில்லை என்பதே குரலினை உயர்த்திப் பேசக் காரணமாக இருக்கிறது.*

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். மாறாக தம் குரலினை உயர்த்தியே பேசுபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது*

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக் கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவியலும்*

உளவியல் முறையாக பார்க்கும் பொழுது அது ஒரு இயலாமை. குரலினை உயர்த்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.*

இவ்வாறு உரக்க ஓலமிட்டு குரலெழுப்புவதால் எவரும் தன் வலிமையை நிலைநாட்ட இயலாது.*

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை நோயற்ற நிலையிலும், மகிழ்ச்சியானதாகவும், மன நிறைவானதாகவும் இருக்கும்...!*

*ஆம் தோழர்களே...!*
*குரலினை உயர்த்திப் பேசுவது பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உரக்கப் பேசும்பொழுது சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் கவனமும் சிதறுகிறது.*

*இந்நிலையில் பல தவறுகள் நிகழ வாய்ப்பும் இருக்கிறது.*

*⚽உரக்கப் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்தவொரு செயலையும் அமைதியாக எதிர்கொள்ளும்போது சிக்கல்கள் எளிதாகி விடும். குரலினை உயர்த்திப் பேசுவதால் அது மேலும் சிக்கலாகி விடும்...✍🏼🌹*