Monday, 31 October 2016

சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில அசைவ உணவுகள் - மக்களே உஷார்!

நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில அசைவ உணவுகள் - மக்களே உஷார்!
ஒரு குறிப்பிட்ட தினங்களில் மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராயின், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். ஏனெனில் நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் உண்மையில் அசைவ உணவுகளே. என்ன நம்ப முடியவில்லையா?
சொன்னா நம்பமாட்டீங்க... இந்த உணவுகளை சாப்பிட்டா செத்துருவீங்க...
உண்மையிலேயே நாம் கடைகளில் சைவ உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிருகங்களின் கொழுப்புக்கள் அல்லது இறைச்சிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அப்படி சைவ உணவுகள் என்று விற்கப்படும் அந்த அசைவ உணவுகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து இனிமேல் உஷாராக இருங்கள்.
சூப்
இந்தியர்களுக்கு சூப் என்றால் பிடிக்கும். அதிலும் உங்களுக்கு வெஜிடேபிள் மேன்சௌ சூப் பிடிக்குமானால் கவனமாக இருங்கள். ஏனெனில் அது அசைவ உணவு தான். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் சூப்புக்களில் சேர்க்கப்படும் சாஸ் மீனில் இருந்து தயாரிக்கப்படுபவை. எனவே அடுத்த முறை ஹோட்டல்களில் சைவ உணவை ஆர்டர் செய்யும் முன் யோசித்துக் கொள்ளுங்கள்.
நாண்
வட இந்தியாவில் நாண் மிகவும் பிரபலமான ஒன்று. தற்போது தென்னிந்தியாவிலும் பலரால் இது அதிகம் உண்ணப்படுகிறது. ஆனால் நீங்கள் சைவம் என்று நினைக்கும் இந்த நாண், உண்மையில் அசைவம் என்பது தெரியுமா? ஆம், நாண் மென்மையாக இருப்பதற்கு, அதை செய்வதற்கு தயாரிக்கப்படும் மாவில் முட்டை சேர்க்கப்படுகிறது.
சீஸ்
தற்போது பல உணவுகளில் சீஸ் சேர்க்கப்படுகிறது. ஆனால் சீஸ் உண்மையில் ஓர் அசைவப் பொருள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் சீஸில் விலங்குகளின் குடலில் இருந்து பெறப்பட்ட நொதிகள் கலக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்
பலரும் எண்ணெய்களெல்லாம் சைவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில எண்ணெய்கள் மற்றும் ஜூஸ்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது என்று சொல்வார்கள். இதற்கு அந்த எண்ணெயில் மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது தான். அதேப் போல் சில ஜூஸ்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ஜூஸில் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட லினோலின் சேர்க்கப்பட்டிருக்கும்.
சர்க்கரை
சர்க்கரை எப்படி அசைவ உணவைச் சேரும் என்று யோசிக்கிறீர்களா? இயற்கையான கார்பன் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படும். சரி, இயற்கையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது? கருகிய எலும்புகளில் இருந்து தான் கார்பன் பெறப்படுகிறது. இந்த கருகிய எலும்புகள் விலங்குகளுடையது. அப்படியெனில் நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை சைவமா? அசைவமா? என்பதை நீங்களே கூறுங்கள்.
பீர் மற்றும் ஒயின்
பீர் மற்றும் ஒயினை தயாரிப்பவர்கள், அதனை தெளிவுப்படுத்துவதற்கு மீன்பசைக்ககூழ் அல்லது மீனின் நீர்ப்பைகளைப் பயன்படுத்துவார்கள். அதிலும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பீர் மற்றும் ஒயினில் மீன்பசைக்ககூழ் தான் பயன்படுத்தப்படுகிறது.
ஜெல்லி
ஜெல்லி செய்வதற்கு முக்கிய பொருள் ஜெலட்டின். இது விலங்குகளில் இருந்து பெறப்படுகிறது. எனவே ஜெல்லி இனிப்பு பொருள் மட்டுமின்றி, அசைவப் பொருளும் கூட.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உங்களால் நம்ப முடியாது தான். இருந்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுப் பொருள். மேலும் நிறைய சிப்ஸ்கள் குறிப்பாக பார்பிக்யூ ப்ளேவரில் சிக்கன் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அடுத்த முறை பாக்கெட் சிப்ஸ் வாங்கி சாப்பிடும் முன், அந்த பாக்கெட்டின் பின் குறிப்பிட்டுள்ள பொருட்களை சரிபாருங்கள்.

நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கோப்பை
பெரிய நெல்லிக்காய் – 6
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – 2 கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 2 சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 1 மேஜைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:

சாதத்தை எடுத்து ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.

அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்). தனியாக சிறிது நெய் விட்டு அதில் பொட்டுக் கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து கிளறிய சாதத்துடன் சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.

நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி செய்துச் சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும்.
(நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.)
இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.
நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள்:

தினம் நெல்லிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் இளமையாக இருக்க உதவும் டானிக்காக பயன்படும். தொற்று நோய்கள் வரவிடாமல் தடுக்கும். இருதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பலப்படுத்தும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து உள்ளது ( ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களிலுள்ள வைட்டமின் சி சத்து உள்ளது).
புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நெல்லிக்காயிலுள்ளது.

நெல்லிக்காயில் மாவுச் சத்து-14 கி, புரத சத்து-0.4 கி, கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி, கால்ஷியம்-15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி1 28 மி.கி, வைட்டமின் சி 720,  மி.கி, நியாசின் – 0,4 மி.கி,  கலோரிகள் – 60 ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அடிஅடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்

🌓🌔🌓🌔🌓🌔🌓🌔

🌲🌳🎄🌲🌳🎄🌲🌳

*இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்*

*☄1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!*

*☄2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.*

*☄3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.*

*☄4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.*

*☄5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.*

*☄6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.*

*☄7. கடுமையான🖥 இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.*

*☄8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.*

*☄9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.*

*☄10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.*

*☄11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.*

*☄12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

Tuesday, 25 October 2016

வெந்தயம்

மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.
சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம்
பயன்படுத்தப்படுகிறது.

உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை
வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்.
நீரிழிவு
நோய் பாதிப்பை குறைக்கும் குணமும் வெந்தயத்துக்கு இருக்கிறது.
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹோர்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின்
பங்கு தொடர்பாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு
மையத்தில் ஆராய்ச்சிநடத்தப்பட்டது.

நல்ல
ஆரோக்கியத்துடன் இருக்கும் 25 வயது முதல் 52 வயது வரை உள்ள 60 பேர்
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என 45 நாட்களுக்கு
அவர்களுக்கு வெந்தயச்சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹோர்மோன் அளவு,
தாம்பத்திய உறவில் ஆர்வம் ஆகிவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு பிரிவினருக்கு வெந்தயம் அல்லாத வெறும்
சாறு கொடுக்கப்பட்டது.

வெந்தயச் சாறு
குடித்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் அதிகரித்து இருந்தது
தெரியவந்தது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹோர்மோன் உற்பத்தியை
அதிகரிக்க உதவுகிறது. வெறும் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் உற்பத்தியில்
எந்த மாற்றமும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு
வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆய்வில்
தெரியவந்துள்ளது.


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு
வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆய்வில்
தெரியவந்துள்ளது.



வெந்தயதின் மகிமை தெரிந்தால் தங்கத்தை கொடுத்தாவது அதே வாங்கிவிடுவார்கள் என்று சொல்வார்கள்


வயிற்றுவலி என்றால் வெந்தயத்தை மோருடன் கலந்து குடிக்கச் சொல்வர்

ரத்த புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடவேண்டுமா ???

ரத்த புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடவேண்டுமா ???

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து.!

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் ஊர்ஜிதமாக கூறுகின்றனர்.!!

இத்தகவலை ஏனோ தானோ என்று விட்டு விடாமல் உலகில் பலருக்கும் இப்பிரட்சினை இருப்பதனால் இத்தகவலை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்காயினும் பிரயோசனமாக இருக்கும்.!!

Monday, 24 October 2016

உடல் பருமன்

முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

2 கை அளவு சிறுகீரை ஒரு கை அளவு பார்லி ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

டென்ஷன்

தற்கால வாழ்வில் அதிக பரபரப்பு. அதன் காரணமாக படபடப்பு (டென்ஷன்) உயர் ரத்த அழுத்தம். முடிவில் இதயத்தில் பிரச்சனை. அதிக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதய நோயை எளிதில் கட்டுப்படுத்தும் எளிய மருந்து 'செம்பருத்தி'. இந்தப் பூவை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்திவர இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கிடைக்கும்போது சேகரித்து உலர்த்தியும் உபயோகிக்கலாம்.

இதன் இலையை அரைத்து தலைக்குத் தேய்த்துவர மூளை குளிர்ச்சி அடையும். முடி செழித்து வளரும். பூக்களைத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வரக் கூடுதல் நன்மை கிடைக்கும்.

கைப்பிடி அளவு ஊறவைத்தப் புழுங்கல் அரிசி, மேற்படி இலை பிடி, அளவு, உப்பு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடல் குடல் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் தீரும்

நோயெதிர்ப்பு சக்தி

இன்றைய நவீன காலத்தில் பலருக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கும் எளிதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவரின் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், எந்த ஒரு நோய் தாக்கினாலும், அது விரைவில் குணமாகிவிடும்.

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வேண்டுமெனில், அதற்கு உணவுகள் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. குறிப்பாக காய்கறிகளை ஒருவர் அதிகம் உட்கொண்டு வந்தால், அவற்றில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருட்கள், நோய்கள் அண்டாமல் தடுக்கும்.

இங்கு ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த காய்கறிகள் என்னவென்று படித்து, அவைகளை உங்களின் டயட்டில் சேர்த்து வந்தால், நிச்சயம் நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த காய்கறிகளில் முதன்மையானது பூண்டு. இந்த பூண்டில் அல்லிசின் என்னும் பொருள், உடலில் உள்ள திசுக்களை, கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். மேலும் ஆய்வுகளில் பூண்டானது பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்புரை ஆகியவற்றை தடுப்பதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதைத் தவிர்க்காதீர்கள்.

வெங்காயம் வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோயின் தாக்கத்தையே குறைக்கும் அளவில் சக்தி வாய்ந்த ஒன்று. மேலும் பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அல்லிசின் என்னும் அற்புதமான பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி, இவற்றில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
காளான் காளான்களை உட்கொண்டு வந்தாலும், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காளான்களுக்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி உள்ளது. மேலும் இது டி.என்.ஏ பாதிக்கப்படுவதையும் தடுக்கும். எனவே அடிக்கடி காளானை சமைத்து சாப்பிடுங்கள்.

தக்காளி அன்றாட சமையலில் சேர்க்கும் தக்காளிக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. குறிப்பாக இதில் லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே எக்காரணம் தக்காளியை மட்டும் உணவில் சேர்க்காமல் இருக்காதீர்கள்.

பீட்ரூட் பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஓர் அற்புதமான காய்கறி. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது இரத்தணுக்களை குறிப்பாக இரத்த வெள்ளையணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த காய்கறியை தவறாமல் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ப்பது அவசியம்.

பசலைக்கீரை கீரைகளில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன், போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. அதிலும் பசலைக்கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இதய நோய், புற்றுநோய் மற்றும் இதர நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அஸ்பாரகஸ் தண்டு போன்று காட்சியளிக்கும் அஸ்பாரகஸ், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். மேலும் இதுவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகளுள் ஒன்று.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிழங்குகளிலேயே சர்க்கரைவள்ளிக் கிழங்கில் தான் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்றுநோய், வைரஸ் தொற்றுகள் போன்றவை அழிக்கப்படும். எனவே இதனை அடிக்கடி வேக வைத்து உட்கொண்டு வாருங்கள்.

சித்த மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு தனி மரியாதை

சித்த மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு தனி மரியாதை உண்டு. எளிதாக கிடைக்க கூடிய இந்த சோற்றுக்கற்றாழை பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது.

இந்த சோற்றுக் கற்றாழை கண் திருஷ்டி உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படும். மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி ஒட்டாமல் இருப்பதற்க்காகவும் இந்த சோற்றுக்கற்றாழை கட்டி தொங்கவிடப்படும்.

கற்றாழையின் பிசின் போன்ற சோற்றை தலையில் தேய்த்து  30 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு முதலியவை குணமாகும்.

சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே கொஞ்சம் வெந்தயத்தை வைத்துவிட்டு மூடி விடவும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து அதை தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாகும்.

காய்ந்த கற்றாழையை நெருப்பில் கருக்கி அதை தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வந்தால் விரைவில் புண் குணமடையும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து அதை இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை நெருப்பில் வாட்டி உடல் தாங்கும் வெப்பத்தில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

அழகு சாதனப் பொருள்களில் சோற்றுக் கற்றாழை சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

Sunday, 23 October 2016

குழந்தைகளை #சனியனே என்று திட்டக் கூடாது...ஏன்?.

#குழந்தைகளை #சனியனே என்று திட்டக் கூடாது...ஏன்?.

வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது.

நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கும்.

நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும்.

நாம் குழந்தைகளை சனியனே என திட்டும்போது அந்த தேவதையும் ஆகட்டும் என ஆசீர்வதத்துவிடும். இதனால்தான் குழந்தைகளை சனியனே என்று திட்டக்கூடாது.

ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக் கூடாது.

நிறைய இருந்தது மறுபடியும் வாங்க வேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம்.

வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும்.

வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும்.

எனவே பேசும் போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்.
♥♥♥

வெண்ணெய்

தாய்ப்பால் வெண்ணெய்:

தாய்ப்பால்  வெண்ணெய்க்கு கண், கை, கால், நாசி ஆகியவற்றில் உண்டாகும் எரிச்சல் நீங்கும்.

பசு வெண்ணெய்:

பசுவின் வெண்ணெய்க்கு கண் நோய், கண் எரிச்சல், பீளை சாரல் பிரமேகம் ஆகியவை நீங்கும். பசி உண்டாகும்.

எருமை வெண்ணெய்:

எருமை வெண்ணெயினால் பித்த மூத்திர கிரிச்சரம் நீங்கும். மலாசயக்கிருமி, அக்னி மந்தம், வாத ரோகம், கபாதிக்கம், கரப்பான் தொந்தரவு முதலியன உண்டாகும்.

வெள்ளாட்டு வெண்ணெய்:

வெள்ளாட்டு வெண்ணெய் சுரரோகம், பித்த நோய், கரப்பான் ஆகியவற்றை நீக்கும். பசியை உண்டாக்கும்.

ஒட்டகத்தின் வெண்ணெய்:

ஒட்டக வெண்ணெயானது நல்ல அழகையும், மந்தத்தையும், வாத ரோகத்தையும் உண்டாக்கும். நீரிழிவையும், பித்த கோபத்தையும் நீக்கும்.

பசுவின் நெய்:

பசுவின் நெய்யானது தாகம், உழலை பிணி, சுட்சம ரோகம், வாந்தி, பித்தாதிக்கம், வாத விஷம், விரணப்பிரயோகம், வயிற்றில் எரிவு, பித்த விக்கல், இருமல், வயிற்று வலி சினைப்பு, குடல் நெளிதல், அசதி, சோம்பல், மூலரோகம் ஆகியவற்றை நீக்கும்.

காராம் பசு நெய்:

காராம் பசு நெய்யால் விழிக்கு ஒளியும், சரீர புஷ்டியும், பொன் மேனியும் உண்டாகும். கண், புருவம், நெற்றி சிரசு இவற்றை பற்றிய நோய்கள் விலகும்.

எருமை நெய்:

எருமை நெய்யால் அறிவு, அழகு, கண்ணொளி இவை மத்திமமாகும். வாத பித்த தோஷம், கரப்பான் ஆகியவை உண்டாகும்.

வெள்ளாட்டு நெய்:

வெள்ளாட்டு நெய் அதிசிலேஷ்ம ஆதிக்கத்தையும், வாத கோபத்தையும் போக்கும். சரீரத்தை வளர்ப்பதும் அல்லாமல் கண் ஒளியையும் உண்டாக்கும். பத்தியத்துக்கு உதவும்.

செம்மறியாட்டு நெய்:

மதுரமான செம்மறியாட்டு நெய்யால் கப நோய் அதிகரிக்கும்.

பள்ளாட்டு நெய்:

பித்த நோயை ஒழிக்கும். மந்தம் உண்டாக்கும்.

ஒட்டகத்தின் நெய்:

ஒட்டக நெய்யானது அக்னி மந்தம் செய்தாலும், சுக்கில தாதுவை விருத்தி செய்யும்.

கலப்பு நெய்:

எருமை நெய் முதலான கலப்பு நெய்க்கு சுக்கிலம் பெருகும். தீபனமும் உண்டாகும். பித்த தோஷமும், தேகக்கொதிப்பால் ஆகிய பித்த சுரமும் நீங்கும். உடலும் வழுவாகும்.

பன்றி நெய்:

பன்றி நெய்யானது நீர்க்கடுப்பையும், இரத்த மூலக்கிராணியையும், வாதக்கடுப்பு முதலிய பிணிகளையும் அகற்றும்.

உடும்பு நெய்:

உடும்பு நெய்யானது இரத்த கிராணியை நீக்கும்.

காக்கை நெய்:

காக்கை நெய்யானது காமாலையை குணப்படுத்தும்.

ஆமை நெய்:

ஆமை நெய்யானது இரத்த மூலத்தை நீக்கும்.

ஓணான் நெய்:

ஓணான் நெய்யானது பின்னிசைவை குணமாக்கும்.

கரடி நெய்:

கரடி நெய்யால் வாத வேகமும், பாத வெடிப்பும் அகலும்.

ஆம‌ண‌க்கு நெய்:

உஷ்ண ஆதிக்கமுள்ள முத்து கொட்டை நெய்யை முறைப்படி குடித்தால் விரோசனம் ஆகும்.இதனால் கோரவாதம், குன்மம், குடல் ஏற்றம், உடல், கண், மூக்கு, செவி, வாய் இவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும். பொன் நிறமும், தாது விருத்தியும் உண்டாகும்.

சிற்றாமணக்கு நெய்:

சிற்றாமணக்கு நெய்யானது பற்பல ஔஷதங்களின் வெப்பங்களையும், வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும் நீக்கும். குழந்தைகளை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்க்கும்.

எள் நெய்:

எள்ளின் நெய்யால் புத்திக்கு தெளிவு, விழிக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி, தேக புஷ்டி, பலம், தேஜஸ், வாலிபத்தன்மை ஆகியவை உண்டாகும். நேத்திர நோய், செவி நோய், கபால உஷ்ணம், காசம், விரணம் ஆகியவை நீங்கும்.

வாதுமை நெய்:

வாதுமை நெய்யானது ஔஷதங்களினாலும், உழைப்பினாலும் கிளைத்த வெப்பங்களையும், கப தோஷத்தையும் நீக்கும். சமமான உஷ்ணம், சுக்கிலம், பஞ்சேந்திரியங்களுக்கும் ஒளி ஆகியவற்றை உண்டாக்கும்.

வேப்ப நெய்:

வேப்ப நெய்க்கு மகா வாதம், கிரந்தி, கரப்பான், சிரங்கு, ஆகிருஷ்ண ஸ்தம்பன வாதம், சுரம் நீங்கும். பித்தத்தை உண்டாக்கும்.

இலுப்பை நெய்:

இலுப்பை நெய்யால் கரப்பான் கடி விஷம், சிரங்கு, விரணம், வன்மை இவை உண்டாக்கும். சகலமான வாதங்கலும், துர்ப்பலமும் நீங்கும்.

புன்னை நெய்:

புன்னை நெய்யால் சன்னிபாதம், மகா வாத ரோகம், முன்னிசிவும், பின்னிசிவும், ஐவகை வலி, விரணம், கிருமி ஆகியவை நீங்கும்.

புங்கின் நெய்:

மலை புங்கின் பருப்பு நெய் அழகும், ஒளியும் உண்டாக்கும். கரப்பானும், சொறி, சிரங்கும் ஒழியும்.

தேங்காய் நெய்:

தேங்காய் நெய்யினால் நெருப்பினால் எற்பட்ட விரணம், தந்த மூல ரோகம், படர்தாமரை, சிரங்கு முதலியன தீரும். தலை மயிர் நன்றாக வளரும்.

கடுகு நெய்:

சூடுள்ள கடுகு நெய்யால் குன்மம், இரத்த பித்தம், தோல் நோய், மகா வாதம், ஷயம், முளை மூல விரணம், சூலை முதலியன நீங்கும்.

நீரடி முத்து நெய்:

நீரடி முத்து நெய்யை உடலில் பூசினாலும், உள்ளுக்குள் குடித்த்தாலும் வாதம், குட்டம், சிரங்கு, சொறி, சூலை முதலியன நீங்கும்.

முக்கூட்டு நெய்:

எள்ளின் நெய், பசுவின் நெய், ஆமணக்கு நெய் இவை முறையே பித்த வாத கோபங்கள் மீறாமல் தத்தம் நிலையில் பொருந்துவன, ஆதலால் அம்மூன்று வித நெய்களையும் கிரமப்படி கூட்டி காய்ச்சி ஸ்நானம் செய்தால் திரி தோஷங்களால் ஏற்படும் சகல ரோகங்களும் நீங்கும்.

ஐங்கூட்டு நெய்:

ஆமணக்கு, எள்ளு, வேம்பு, புன்னை, புங்கு இவற்றின் நெய்களை கலந்து தைலமாக செய்து உபயோகித்தால் பின்னிசிவு, மகா வாதம், சந்நிபாத சுரம், சுப தோஷம் ஆகியவை நீங்கும்.

முக்கூட்டு நெய் சேர்க்கும் முறை:

வாதம் முதலிய மூன்று தோஷங்களுக்கும் கூட்ட வேண்டிய முறை; வாத தேகிகளுக்கு பசுவின் நெய் மூன்று பங்கு; எண்ணெய் இரண்டு பங்கு; ஆமணக்கு நெய் மூன்று பங்கு.பித்த தேகிகளுக்கு எண்ணெய் ஒரு பங்கு; ஆமணக்கு நெய் இரண்டு பங்கு; பசுவின் நெய் மூன்று பங்கு.சிலேத்ம தேகிகளுக்கு ஆமணக்கு நெய் ஒரு பங்கு; பசுவின் நெய் இரண்டு பங்கு; எண்ணெய் மூன்று பங்கு . இவ்வாறு சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் வெண்ணெய், நெய் வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

Thursday, 20 October 2016

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன? கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும்........
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68%  ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி  அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.இதுவே பெருவாரியான
சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான்

"கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்"

என்று கூறுகிறோம். இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சிமேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy)எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma),புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற  எந்த தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.

இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.

நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.

ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.

ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.

இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.

வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் (H2O) இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.

இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.

மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.

மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.

இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகிறது. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.

இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, 19 October 2016

பித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள்:

பித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள்:

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
மாம்பழத்தை பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட் டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலாப்பழம்(ஆரஞ்சு)சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத் தில் உள்ள பித்தம் குறையும்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்றை செய்து வர பித்தம் நீங்கி, உடல் நல்ல நிலைக்கு மாறும்.

எலும்பு முறிதல், இரத்தக் கட்டு, தசை பிறழ்தல் , நரம்பு பிசகுதல் - இயற்கை வைத்தியம்

எலும்பு முறிதல், இரத்தக் கட்டு, தசை பிறழ்தல் , நரம்பு பிசகுதல் - இயற்கை வைத்தியம்

இது நாகரீக உலகம். எனவே வீட்டில் கழிப்பறை, குளியல் அறை வரை வழவழப்பான மொசைக் தரை. இது காலத்தின் கட்டாயம். இதன் மறுபக்கம் முதியோரும், குழந்தைகளும் அடிக்கடி வழுக்கி விழுவது.

எலும்பு முறிவு குணமாக

இதற்குப் பெரிய அளவில் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் என மொசைக் தரைச் செலவுடன் போட்டியிடும் மருத்துவச்செலவு.

எலும்பு முறிவு இன்றி நரம்பு பிசகுதல், தசை பிறழ்தல், ரத்தக்கட்டு போன்றமைக்கு எளிமையான மருத்துவம் காண்போமா?

ஒரு கைப்பிடி அளவு நெல்லை மண்சட்டியில் இட்டு கருகும் வரை வறுக்கவும். பின்பு நைசாகப் பொடிக்கவும். காப்பித்தூள் கலரில் பொடி இருக்கும். சாதம் வடித்த சூடான கஞ்சியில் சிறிது எடுத்து மேற்படிப் பொடியை அதில் கலக்கவும். சேறு பதத்தில் கலந்து மிதமானச் சூட்டில் பற்றுப் போடவும்.

அரிசி கழுவிய கழுநீரில் புளிய இலை - ஒதியன் இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மறுநாள் அதை சூடு செய்து பற்றுப்போட்டதை நன்கு கழுவவும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும்.

உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் ஆகும்?

உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் ஆகும்?

சைவ உணவுகள்

நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்
கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்
unavu jeeranamagum neram
உணவு ஜீரணமாக எடுத்துக்கொள்ளும் நேரம்
ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்
கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்
அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்
சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்

அசைவ உணவுகள்

மீன் - அரை மணி நேரம்
முட்டை - 45 நிமிடங்கள்
கோழி - 2 மணி நேரம்
வான் கோழி - இரண்டரை மணி நேரம்
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்
TIME பாத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்..!!!

Tuesday, 18 October 2016

வறட்டு இருமலுக்கு

வறட்டு இருமலுக்கு,காய்ச்சி ஆறிய வெண்ணீர் கொடுங்கள்.

இருமி இருமி தொண்டை புண்ணாகி இருக்கும், தேன் கொடுங்கள்.

ரொம்ப ஹார்ட கடித்து முழுங்கும் உணவு கொடுக்க வேண்டாம் , கொடுத்தால் தொண்டையில் அடைத்து கொண்டு வாமிட் வரும், லைட்டான ஆகாரம் கொடுங்கள்.
பாலில் காய்ச்சி குடிக்கும் பக்குவத்தில் ஆற்றி, தேன் கலந்து கொடுங்கள்.

மஞ்சள் தூளில் சிறிது தேனை குழைத்து நாக்கில் வைத்து முழுங்க சொல்லுங்கள்

திருமணம், வீட்டு விசேஷங்களில் மட்டுமே வாழை இலையில்

திருமணம், வீட்டு விசேஷங்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது.

அதைப் பதிவு செய்யும் வகையில், வாழை இலையில் உணவருந்துவதால் கிடைக்கும் ஏராளமான பலன்களைக் கீழ்க்காணும் அகத்தியர் குணவாகடப் பாடல் தெளிவுபடுத்துகிறது:

"தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமன்னும்

அக்கினி மந்தம் பலமொடு திக்கிடுகால்

பாழை யிளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனமாம்

வாழை யிலைக்குணரு வாய்"

தேகத்துக்கு தேஜஸ்

தேகத்தின் அழகைக் கூட்டுவதற்காகத் தினமும் விலை உயர்ந்த கிரீம்களையும் ஜெல்களையும் தவறாமல் பூசியும் பயனில்லையே என அங்கலாய்ப்பவர்கள், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

பித்த நோய்கள் மறைய

உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை உணவு' அற்புதமான தேர்வு.

செரிமானம் அதிகரிக்க

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட' ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு. அதன் மற்ற உறுப்புகளான வாழைப் பூ, தண்டு, காய், பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவந்தால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

நோய்களிலிருந்து விடுதலை

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polypheno> oxidase, நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை' நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

வாழை இலைப் பொதிவு

வாழை இலையில் உணவைப் பொதிந்து கொடுத்த காலம் மாறி, தீமை விளைவிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் உணவைப் பொதிந்து தருவது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய அம்சம். தொலைவான பயணங்களின்போதும் ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வரும்போதும், பிளாஸ்டிக்குக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்துவது நல்லது.

அதேபோலச் சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.

நெகிழியைத் தவிர்ப்போம்

தொடர்ந்து பல நாட்களுக்கு நெகிழித் தட்டுகளில் சூடான உணவை வைத்துச் சாப்பிட்டுவருவதால், அதிலுள்ள மெலமைன், பாலிவினைல் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடும். வாழை இலையைப் போல, மெழுகு சாயம் பூசப்பட்ட காகிதங்களும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உண்பதால் காகிதங்களில் உள்ள சாயம் உடலில் சிறிது சிறிதாக நச்சுத் தன்மையை ஏற்றும். அதற்குப் பதிலாகப் பசுமையான வாழை இலையில் வெதுவெதுப்பான சோறு, கமகமக்கும் குழம்பு, காய்கறி, கீரைகள், ரசம், மோரை நம் மரபு முறைப்படி சாப்பிடும்போது, ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.

மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால் பஃபே முறையில் நின்றுகொண்டே சாப்பிடப் பழகிவிட்ட நாம், இனிமேலாவது பொறுமையுடன் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது நல்லது! இந்த மாற்றம் நம் உடலுக்கு அவசியம் தேவை.

வைத்துச் சாப்பிடும் வேறு இலைகள்

> பலா இலையில் சாப்பிடுவதால், பித்தம் அதிகரிக்கும் அதேநேரம் பெருவயிறும் குன்மமும் குறையும்.

> தாமரை இலையில் உணவருந்துவதால், பித்த, வாத நோய்களும் செரியாமையும் உண்டாவதால், அதில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

> இவை தவிர தேக்கு இலைகளும் உண்கலன்களாக பயன்படுகின்றன.

Monday, 17 October 2016

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

🍲எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
🍲


தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - 2 துண்டுகள்
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
தனியா பொடி - 1
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கருவேப்பிலை - 1 கீற்று
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தறிக்காயை நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உரித்த வெங்காயம் மற்றும் நான்கு துண்டுகளால நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் வெந்து எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவிவிடவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

நெல்லிக்காய்

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் = 10
பச்சை மிளகாய் = 2
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
புளி = சிறிது
பெருங்காயம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

நெல்லிக்காய் முற்றலாக இருக்க வேண்டும். இதை அதன் மேலே இருக்கும் கோடுகளின் மீது கீறி பெயர்த்தால் கீற்று கீற்றாக நெல்லிக்காய் வந்து விடும்.
இதனோடு பச்சை மிளகாய், மிளகு, சீரகம், புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்தால் போதும் இதை ஆறு கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விடவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வரும் போது இந்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான பெரிய நெல்லிக்காய் ரசம் தயார். இந்த ரசத்தை ரைஸோடும் பரிமாறலாம். குடிக்கவும் கொடுக்கலாம். குடிக்க பயன்படுத்தும் போது சிறிது வெந்நீரும், உப்பும் கலந்து காரத்தை குறைத்து விட்டுக் குடிக்கலாம். இது நல்ல ருசியைக் கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்:

நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும். பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போடவேண்டுமா?

*வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போடவேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

* செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

* கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே!உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

* திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

* மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

* வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?

பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்து
விட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.

* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்.?

சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

* நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

*கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்
உள்ளதத்துவம் என்ன?
மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும்.
அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.

* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை?

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையைவைத்து வழிபடலாம்
வழிபாட்டின்போது காலை , மாலை
வேளைகளில் பால்,பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?

தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

மருத்துவம்

கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

இஞ்சியை தோல் நீக்கி  இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.

மகிழம்காயை எடுத்து நன்றாக மென்று அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும்.

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு

மருத்துவக் குணங்கள்:

வியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.
பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.
ஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.
நான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.
பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.
பூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.
ரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்

குடலை சுத்தம் செய்வது எப்படி

குடலை சுத்தம் செய்வது எப்படிஎன்று நீங்கள் கேட்கலாம். குடலை உணவுகள் மற்றும் பானங்களின் மூலம் தான் சுத்தம் செய்ய முடியும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடலை ஒரே நாளில் சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுத்துள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.                                                                                                  தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு - 1/2 டீஸ்பூன் இஞ்சி சாறு - 1 டீஸ்பூன் ஆப்பிள் சாறு - 1/2 கப் வெதுவெதுப்பான நீர் - 1/2 கப் தயாரிக்கும் முறை: வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.                                உட்கொள்ளும் முறை  ஆரம்பத்தில் இந்த பானத்தை ஒரு நாளில் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலையில் உணவு உண்பதற்கு முன், மதியம் உணவு உண்பதற்கு முன் மற்றும் மாலையில் 6-7 மணியளவில் என மூன்று வேளை பருக வேண்டும். தண்ணீர் முக்கியமாக இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது, குறைந்தது 8 டம்ளர் நீரை தினமும் குடிக்க வேண்டும். அதுவும் காலை மற்றும் மதிய வேளையில் நீரைப் பருகுங்கள். இதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம்.                                                                                       பருகக்கூடாதவர்கள் சர்க்கரை நோயாளிகள் இந்த பானத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆப்பிள் சாறில் சர்க்கரை அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இந்த சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு காலம்? குடலை சுத்தம் செய்யும் இந்த பானத்தை ஒரு நாள் அல்லது அதிகப்படியாக ஒரு வாரம் வரை பின்பற்றலாம். ஆனால் அதற்கு மேல் பின்பற்ற வேண்டாம். நன்மைகள் இந்த பானத்தைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும், குடலியக்கம் மேம்பட்டு செரிமானம் ஊக்குவிக்கப்படும் மற்றும் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகும். முக்கியமாக உடல் எடை குறையும்.

Friday, 14 October 2016

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,  ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள "செயின்ட் ஜோசப் கல்லூரியில்" இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய "விண்வெளி பொறியில் படிப்பை" சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு "பொக்ரான் அணு ஆயுத சோதனையில்" முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பாரத ரத்னா விருது" மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், "பாரத ரத்னா" விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. 'எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்' என்ற அவர் "கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்" என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

துளசி

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.

எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம் வரப்போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து,  பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?



இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

1. நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

2. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

3. வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

4. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

5. வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம்.

6. வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

7. வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

பெண்களுக்கான சில வித்தியாசமான மருத்துவ குறிப்புகள்

பெண்களுக்கான சில வித்தியாசமான மருத்துவ குறிப்புகள்


சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்

உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

நீர்ச்சுருக்கு( நீர்க்கடுப்பு)

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்

உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

பொதுவாக தானிய வகைகளை நாம் அன்றாட உணவில்

பொதுவாக தானிய வகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கிறேம்.
அவை நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக ஊட்டச்சத்தினை தருகின்றன.மேலும் நம்மை எப்போதும் புத்துணர்வுடன் வைக்க உதவுகின்றன.
அதுபோல் ஒன்று தான் கொள்ளு. தினமும் நாம் கொள்ளினை சாப்பிடுவதன் மூலம் நீண்ட ஆயுளும் பெறலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
கொள்ளின் மகத்துவங்கள்
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளதால், இதை சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
கொள்ளுடன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி குடிப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால், கொள்ளினை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் சளி குணமடையும்.
உடலில் உள்ள ஊளை சதைகளை குறைக்க கொள்ளுப் பருப்பு மிகவும் உதவும்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
இதயத்தை பாதுகாப்பாய் வைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கின்றது.

Thursday, 13 October 2016

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் :
   
காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.
   
விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.
   
வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
  
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
   
அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
   
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் 'பி' ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் 'சி'யும் சிறிதளவு உண்டு.
   
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
   
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
  
வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
   
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.
   
காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.
   
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
   
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.
   
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
   
மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
   
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
   
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
   
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்பரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
   
காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.
   
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.
   
ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.
👍

Wednesday, 12 October 2016

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

🖥சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!
* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
=====================================================
தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.  நன்றி

Tuesday, 11 October 2016

உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம்

உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம் :

இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒருவித சக்தி இருக்கிறது. சிலர் அதை உயிர் என்றும் மனிதசக்தி, இறைசக்தி, ஞானசக்தி அல்லது மிருகசக்தி என்றும் சொல்வார்கள். அது அவரவரின் விருப்பப்படியே இருக்கும்

அன்பென்னும் சக்தி (இரத்தம்) அநேக நரம்புகளின் வழியாக நாடி-சிரை வரை சென்று வியாபித்துள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம். இவனுடைய எண்ணம், செய்கை பழக்க வழக்கமெல்லாம் அறிமுகம் செய்யப் படுகின்றன. அவனவன் செய்கையை அவன் முகம் சொல்லும். அவன் கண்ணும் ஒரு கதையை சொல்லும்.
நமது சரீரத்தில் நாடிகளின் செயல்பாடு மிக முக்கியமானது அதில் அசுர நாடிகளும் தேவ நாடிகளும் இருக்கின்றன. அசுர நாடி மிகச் சொற்பமே. ஆயினும் அதன் விருத்தியே மாயப் பிரபஞ்சமாகி ஆசைக்கு உட்பட்டு தீய வினைகள் அதிகரிக்கின்றன.
"விதியையும் விதித்து என்னை விதித்திட்ட
மதியையும் விதித்து அம்மதி மாயையில்
பதிய வைத்த நின்னருளை எப்படி கண்டு களிப்பதே"
–தாயுமானவர்—

மனிதனின் கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
தெய்வீகம் – இயறக்கை – தாந்திரீகம் அல்லது சக்தி – ஸ்தூலம்-சம்பத் என மூன்றாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களுக்கும் இந்த பகுதியில் தொடர்புண்டு.

தத்துவ சாத்திரங்களில் ஆத்மா – மணம் -சரீரம் என்ற இம் மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதனோடு சம்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களும் அடியிலே உள்ள மேடுகள் கிரகங்களின் பலா பலத்தைத் அறியத் தருகின்றன.

ஆள்காட்டும் முதல் விரல் – குரு,
நடுவில் உள்ள இரண்டாவது விரல்- சனி,
மூன்றாவது பவித்திர விரல் – சூரியன்,
நான்காவது சுண்டு விரல் – புதன்.

புதனுக்கு அடுத்த கீழ்ப்பாகம் – செவ்வாய்,
கட்டை விரலுக்குக் கீழே உள்ள மேடு – சுக்கிரன்,
உள்ளங் கையில் செவ்வாய்க்கு கீழ்மேடு – சந்திரன்.
நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர்.
இந்தரேகை தெய்வீகமானது.
செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகின்ற ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர்
கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போயிருக்கும் ரேகைக்கு ஆயுள் ரேகை என்று பெயர்.
சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதிரேகை என்று பெயர்.

ஒவ்வொரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக்கப்பட்ட பாகத்துக்கு "அங்குலாஸ்தி" என்று பெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கிறது.
மூன்றாவது அங்குலா ஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது.

கட்டை விரல் – ஆத்ம சக்தி
ஆள்காட்டி விரல் – சக்தி
நடுவிரல் – விதிப்பயன்
மோதிரவிரல் – பிரகாசம்
சுண்டுவிரல் – சாத்திரம்

குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான்
குரு விரலாகிய ஆள்காட்டி விரல்
சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்
சூரியன் விரலாகிய மோதிர விரல்
புதன் விரலாகிய சுண்டு விரல் ஆகியவற்றை இணைத்து முத்திரை தியானம் செய்து வந்தால் மேற்சொன்ன பலனை பெறலாம்

குபேர முத்திரை

ஜோதிட சாஸ்திர ரீதியாக பெருவிரல் சக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை, பொருளாதார வசதிகைளைப் பெருக்கும்
சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்
குரு விரலாகிய ஆள்காட்டி விரல்
சனி விரலாகிய நடு விரல் இவற்றின் நுனியை இணைப்பது குபேர முத்திரை

விரல்களை அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானதுநெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.
செய்முறை:
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.

எவ்வளவு நேரம்?
*குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.
*ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.
*ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.
எப்படி வேலை செய்கிறது?
பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.
*நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.
*மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.
*செவ்வாய்,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.
*இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன.
இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது.
நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.
ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.
நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.
அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.
ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.
குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது.
நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை!
பலன்கள்.
*நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.
*வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை
*ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.*
*🍁திங்கள் – அருகம்புல்☘*
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
*🍁செவ்வாய் – சீரகம்☘*
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
*🍁புதன் – செம்பருத்தி☘*
இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
*🍁வியாழன் – கொத்துமல்லி☘*
ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
*🍁வெள்ளி – கேரட்☘*
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.
*🍁சனி – கரும்பு சாறு☘*
கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
*🍁ஞாயிறு – இளநீர்☘*
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.!😃
🎄🌺🎄வாழ்க வளமுடன்🎄🌺🎄

Monday, 10 October 2016

வெந்தயக்கீரை சூப். . .

வெந்தயக்கீரை சூப். . .

தேவையான பொருட்கள். . .

வெந்தயக்கீரை – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சோள மாவு – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெண்ணெய் – சிறிதளவு
காய்ச்சிய பால் – 1/2 டம்ளர்
மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை. . .

வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும்.

நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும்.

காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சோக்கவேண்டும்.

எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும். உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும்.

இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.

சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.

மருத்துவப் பயன்கள். . .

வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது.

உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறைகிறது.

இருமல், கபம், சாளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது

வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.

வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிறு உப்பீசமாக காணப்படுதல் போன்ற வயிற்று கோளாறுகளை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது

Stomatitis வாய்ப் புண் Oral Ulcer

Stomatitis வாய்ப் புண் Oral Ulcer

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

– நல்ல உணவுப் பழக்க வழக்கம்
– தினசரி மிதமான உடற்பயிற்சி
– மன அழுத்தத்தைக் குறைப்பது
– தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது:

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சிலருக்கு மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:

சிலருக்கு மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:

கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும்.

இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

பெண்கள் கண்டுபிடித்த வாசனைப் பொருள்தான் மஞ்சள்.

பாடி ஸ்ப்ரே, சென்ட்… என்று ஃபாரின் நறுமண சமாசாரங்கள் புழக்கத்துக்கு வரும் முன்பே, நம் நாட்டுப் பெண்கள் க ண்டுபிடித்த வாசனைப் பொருள்தான் மஞ்சள். அது வெறும் வாசனைப்பொருள் மட்டுமல்ல… அழகைக் கூட்டும் மந்திர விஷயங்களும் அதில் ஏராளமாக அடங்கியிருக்கின்றன.

பருவை விரட்டலாம்!

இளமை துள்ளாட்டம் போடும் டீன் ஏஜை எட்டிப் பிடித்ததும், பலரும் சந்திக்கும் பிரச்னை முகப் பருக்கள்! அழகுக்கு சோதனையாக வரும் இந்தப் பருக்களால் உண்டாகும் வலி இன்னொரு தொல்லை. இதற்கான எளிய வைத்தியம் மஞ்சளிடம் இருக்கிறது.

பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்து விடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

மென்மை கூட்டலாம்!

முகத்தில் தோல் சொரசொரப்பாக, கடினமாக இருந்தால் பசும் மஞ்சளோடு துளசியை சேர்த்து அரைத்துப் பூசுங்கள். விரைவிலேயே பட்டு போன்ற மென்மை முகத்தில் குடியேறும்.

கரும்புள்ளியைத் துரத்தலாம்!

பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக்கொண்டால் அழகிய நிறம் கிடைப்பதோடு கரும்புள்ளிகளும் மறைந்துவிடும். அடர்ந்த கருமை நிறத்தவர்கள் இந்த முறையை பின்பற்றி னால் ஒரே வாரத்தில் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பளிச் நிறம் வர, மற்றொரு வழி சொல்லட்டுமா?

கால் கிலோ கிழங்கு மஞ்சள், கால் கிலோ பூலாங்கிழங்கு, கால் கிலோ கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து 100 மி.லி தேங்காய் எண்ணெயில் கலந்து சூடாக்குங்கள். ஆறி, மேலாக தெளிந்ததும் அந்த எண்ணெயை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பயற்றம் மாவு அல்லது சோப்பு தேய்த்துக் குளித்தால் நாளுக்கு நாள் சருமம் மெருகேறி, அழகிய நிறம் பெறுவதை கண்கூடாக காணலாம்.

உலர்ந்த சருமத்தினர், நடுத்தர மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அற்புதமான சிகிச்சை இது.

அழகைக் கூட்டலாம்!

அரைத்துப் பூசினால்தான் என்றில்லை, மஞ்சள் கலந்த நீராவிகூட அழகைக் கூட்டும், தெரியுமா?! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள். பிறகு, அதே நீரில் இரண்டு வேப்பிலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். அடுத்து, ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு, 3 எலுமிச்சை இலை அல்லது அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.

இத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையா மல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர் ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள்… 'நானே நானா.. மாறினேனா..!' என்று உங்கள் விழிகள் விரியும். அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்துவிளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.

பசும் மஞ்சள் சீசனில்தான் கிடைக்கும். இதனை காயவைத்தால், அது கஸ்தூரி மஞ்சள். பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

வெடிப்பை நீக்கலாம்!

குண்டு மஞ்சள் கிழங்கு… கெட்டியாக இருக் கும் இந்த மஞ்சள் அதிக நிறம் கொடுக்கும். கூடவே, சருமத்தைக் கடினமாக்கிவிடும். அதனால், இது உடலில் பூச உகந்ததல்ல. ஆனால், பித்த வெடிப்பை போக்குவதில் மருந்தாகவே செயல்படுகிறது.

இந்த கிழங்கு மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 டீஸ்பூன் கடுகைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து, பாதவெடிப்பு மீது பற்றுப் போடுங்கள். அரைமணி நேரம் ஊறவிட்டுக் கழுவுங்கள். தினசரி இதனை செய்துவர, வலி நீங்கி, பித்த வெடிப்பு மறைவதோடு பாதமும் மிருதுவாகும்.

'வெடிப்பு இல்லை. ஆனால், என் பாதங்கள் டல்லடிக்கின்றன. அதனை அழகுபடுத்த வழி இருக்கா?' என்பவர்களுக்கு இது… பாதங்களை ஷாம்பு போட்டு பிரஷால் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியோடு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து பாதத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பிறகு எலுமிச்சம் பழத் தோலால் அழுந்த தேய்த்துக் கழுவுங்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்படிச் செய்தால், பளபளவென மின்னும் பாதம் கண்களில் ஒற்றிக்கொள்ளச் சொல்லும். இரவில் படுக்கப் போகும் முன் இதைச் செய்தால் சுகமான நித்திரை நிச்சயம்.

எல்லோருமே போடக்கூடிய மஞ்சள் ஃபேஸ் பேக் ஒன்றைப் பார்ப்போமா? முழு பாசிப் பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், கசகசா தலா 10 கிராம், உலர்ந்த ரோஜா மொட்டு, பூலாங்கிழங்கு தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை மூன்றும் சேர்த்தது 2 கிராம் _ இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் சிறிதளவு எடுத்து தயிரில் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன் முகத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்தான்!