Friday, 7 October 2016

அன்னம் சாப்பிடும் முறைகள்

💥அன்னம் சாப்பிடும் முறைகள்.💥

* படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டோ, ‎துடையின் மேல் தட்டை வைத்துக் கொண்டோ சாப்பிடுதல் ஆகாது.
* தலைவிரி கோலமாக இருக்கும்போது சாப்பிடுதல் ஆகாது.
* அன்னத்தை ‎நிந்திக்ககூடாது.
* வாயில் இருந்து விழுந்ததை திரும்ப எடுத்து சாப்பிடுதல் ‎ஆகாது.
* கையால் எடுக்கும்போது கீழே விழுந்ததையும் திரும்ப எடுத்து ‎சாப்பிடுதல் ஆகாது.‎
* கையினால் அன்னத்தை பரிமாரக்கூடாது.
* பரிமாரும்போதே, அது எனக்கு ‎பிடிக்காது என்று கையால் தடுக்ககூடாது
* குடிநீர்,பாயசம்,ரசம் போன்ற திரவ பொருட்களை சாப்பிடும் போது ‎உறிஞ்சும் சப்தம் கேட்கக்கூடாது. அதாவது மெதுவாக, சப்தம் இல்லாமல் ‎சாப்பிடவேண்டும்.‎
* பேசிக்கொண்டோ, தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ அதிக நேரம் ‎உட்கார்ந்து சாப்பிடுதல் ஆகாது. ஐந்து, அல்லது அதிகபட்சம் பத்து ‎நிமிடத்துக்குமேல் அமர்ந்து சாப்பிடுதல் ஆகாது.‎
* நாம் சாப்பிடும்போது, இடது கையால் தண்ணீர் குடிக்கிறோம் அல்லவா,‎
அப்போது நம் வலது கை தட்டையோ அல்லது இலையையோ, ‎தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும்

No comments:

Post a Comment