Monday, 17 October 2016

நெல்லிக்காய்

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் = 10
பச்சை மிளகாய் = 2
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
புளி = சிறிது
பெருங்காயம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

நெல்லிக்காய் முற்றலாக இருக்க வேண்டும். இதை அதன் மேலே இருக்கும் கோடுகளின் மீது கீறி பெயர்த்தால் கீற்று கீற்றாக நெல்லிக்காய் வந்து விடும்.
இதனோடு பச்சை மிளகாய், மிளகு, சீரகம், புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்தால் போதும் இதை ஆறு கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விடவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வரும் போது இந்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான பெரிய நெல்லிக்காய் ரசம் தயார். இந்த ரசத்தை ரைஸோடும் பரிமாறலாம். குடிக்கவும் கொடுக்கலாம். குடிக்க பயன்படுத்தும் போது சிறிது வெந்நீரும், உப்பும் கலந்து காரத்தை குறைத்து விட்டுக் குடிக்கலாம். இது நல்ல ருசியைக் கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்:

நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும். பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

No comments:

Post a Comment