பொதுவாக தானிய வகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கிறேம்.
அவை நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக ஊட்டச்சத்தினை தருகின்றன.மேலும் நம்மை எப்போதும் புத்துணர்வுடன் வைக்க உதவுகின்றன.
அதுபோல் ஒன்று தான் கொள்ளு. தினமும் நாம் கொள்ளினை சாப்பிடுவதன் மூலம் நீண்ட ஆயுளும் பெறலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
கொள்ளின் மகத்துவங்கள்
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளதால், இதை சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
கொள்ளுடன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி குடிப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால், கொள்ளினை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் சளி குணமடையும்.
உடலில் உள்ள ஊளை சதைகளை குறைக்க கொள்ளுப் பருப்பு மிகவும் உதவும்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
இதயத்தை பாதுகாப்பாய் வைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கின்றது.
Friday, 14 October 2016
பொதுவாக தானிய வகைகளை நாம் அன்றாட உணவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment