Tuesday, 18 April 2017

சுகர் ஸ்மார்ட்

🎙👉🏿சுகர் ஸ்மார்ட்🎙

நீரிழிவு,👈🏿✅📢📢✅⤵ உணவுக்கட்டுப்பாடு என்றெல்லாம் கூறியவுடன் பலரும் ‘அய்யோ பரிதாபம்’ என்றே எண்ணுகிறார்கள். உண்மையில், நீரிழிவாளர்கள் ஆரோக்கியமானவர்கள் உண்ணுகிற அத்தனை ருசி உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். எல்லாவித உணவுக்குழுக்களில் உள்ள உணவுகளையும் தேர்ந்தெடுக்க முடியும். ஸ்மார்ட் ஆகச் செயல்பட்டு, சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், சுவையில் குறையொன்றுமில்லை!

✅இதோ அதற்காக ஒரு கைடு...
அளவாகச் சாப்பிடுங்கள்... அதிக முறை சாப்பிடுங்கள்!ரத்தத்தில் தடாலடியாக குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்க இந்த ஸ்டைல் உதவும். 3 வேளைகளில் மூக்குப்பிடிக்க சாப்பிடாமல், 5-6 வேளைகளாகப் பிரித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்வது சிறப்பு. ஆனால், எந்த வேளை உணவையும் தள்ளிப்போடவோ, விட்டு விடவோ வேண்டாம். 🏁

✅மாவுச்சத்தைக் குறைக்கலாம்!
அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை கூடிய வரை குறைக்கலாம். இவற்றில் அதிக சர்க்கரை உள்ளதால், ரத்த சர்க்கரையையும் விரைவில் உயர்த்தும்.🏁

✅வெரைட்டி நல்லது!
முழு தானிய உணவுகள், அனுமதிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். இதன் மூலமே நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். எந்த ஒற்றை உணவு மூலமாகவும் நமக்குத் தேவையான ஒட்டுமொத்த சத்துகளும் கிடைத்து விடாது அல்லவா? வைட்டமின், தாது (மினரல்), நார்ச்சத்து (ஃபைபர்) போன்ற அவசியமானவற்றை இந்த உணவுகளில் இருந்தே பெற முடியும். கொலஸ்ட்ராலும் கிடையாது. கொழுப்பும் குறைவு. கலோரியும் குறைவோ குறைவு!🏁

✅கொழுப்பையும் குறைக்கணும்!
அதிக வாய் கொழுப்போ, அதீத உடல் கொழுப்போ... எதுவாக இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவாது. அதனால் மொத்த கலோரியில் 30 சதவிகித கொழுப்பையே உணவிலிருந்து பெற வேண்டும். குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த இலக்கை எளிதாக எட்டலாம்.🏁

✅உப்போ சர்க்கரையோ ஒவ்வாது!
உப்பை மிகக்குறைவாகப் பயன்படுத்துங்கள். பாட்டில் பானங்கள், இனிப்புகள், கேக் வகைகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை கலக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ‘நோ’ சொல்லி விடலாம். மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை ஆசையாகச் சாப்பிடலாம். ஆறேழு மாம்பழங்களை அலேக் செய்யும் ஆசாமிகளுக்கு இந்த விதி உதவாது!⤵

🎯ஸ்வீட் டேட்டா
உலகில் 7 வினாடிகளுக்கு ஒருவர் நீரிழிவு சார்ந்த பிரச்னைகளால் உயிர் இழக்கிறார்.

🎯மாற்று 
உணவுகள் இதோ!
தினமும் காலையில் இட்லி, மதியம் சாதம், இரவில் தோசை என்று ஒரே மாதிரி உணவு சாப்பிட்டால் போரடிக்குமில்லையா? அதிலும் நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக  இருந்தால் உங்கள் நிலைமை ரொம்பவும் பரிதாபம் ஆகிவிடும். ஏற்கெனவே பல உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட உங்களுக்கு, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு ‘மெனு கார்டு’ வேறு கொடுத்துவிட்டால், வாழ்க்கையே வெறுத்துவிடும்...

✅சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவும் அளவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. அடுத்து, ஒரு உணவுக்குப் பதிலாக அதே கலோரியைத் தரக்கூடிய மாற்று உணவையும் தெரிந்துகொண்டால், நாம் விரும்பும் உணவுகளை மாற்றி மாற்றிச் சாப்பிட்டுக்கொள்ள உதவும். இதன் பலனால், ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு விடுதலை கிடைக்கும். இப்போது சந்தோஷம்தானே!⤵

🎯இட்லிக்கு மாற்று உணவு (100 கலோரிகள்). 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
தோசை 1, அரிசி சாதம் 150 கிராம்.
சப்பாத்தி 1, கோதுமை ரொட்டி 1 துண்டு.
பழ வகைக்கு மாற்று உணவு (50 கலோரிகள்). 

🎯இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
ஆரஞ்சு 1, ஆப்பிள் 1, பேரிக்காய் 1, நாட்டுக் கொய்யாப்பழம் 1, வாழைப்பழம் சிறியது, திராட்சை 20, தர்ப்பூசணி ஒரு துண்டு, பப்பாளி ஒரு துண்டு, மாம்பழம் 3 துண்டு, நெல்லிக்காய் 5, சப்போட்டா 1, பலாப்பழம் 3 சுளைகள்.
காய்கறிகள் சமைத்தது  30 கலோரிகளுக்கு மாற்று உணவு. 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, ேகரட், முள்ளங்கி, சவ்சவ், நூல்கோல், பசலைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ, புதினா.

🎯காய்கறிகள் சமைத்தது - 60 கலோரிகளுக்கு மாற்று உணவு. 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
அவரைக்காய், கொத்தவரங்காய்,
வெங்காயம், முருங்கைக்கீரை.
இறைச்சி வகைகள் - 80 கலோரிகளுக்கு மாற்று உணவு. 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
மீன் 75 - 100 கிராம், கோழி இறைச்சி 75 கிராம், ஆட்டிறைச்சி 50 கிராம், ஈரல் 75 கிராம்
முட்டை 1.

🎯பால் - 75 கலோரிகளுக்கு மாற்று உணவு. 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
பசும்பால் - 125 மி.லி., எருமைப்பால் - 65 மி.லி., தயிர் 125 மி.லி., மோர் 600 மி.லி.
கொழுப்பு உணவுகள் - 
75 கலோரிகளுக்கு மாற்று உணவு. 
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
வெண்ணெய் இரண்டரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், சூரியகாந்தி எண்ணெய் 2 டீஸ்பூன்.

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

No comments:

Post a Comment