Friday, 7 April 2017

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. உலகில் உள்ள எல்லோருமே நோயற்ற வாழ்வை வாழவே விரும்புகிறார்கள். ஏனென்றால், அது தான் மகிழ்ச்சியான ஒன்று.

பொதுவாக, உடலில் ஒரு சில நோய்கள் இயற்கையாக வருகிறதென்றால், அதிகமான நோய்களை நாமே நம்முடைய செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்திக் கொள்வதாக கூறப்படுகின்றது.

அதாவது, நாம் செய்யக்கூடிய தேவையில்லாத விஷயங்கள் தவிர்ப்பதும், தேவை உள்ள சில சின்ன சின்ன விஷயங்களை செய்வதும் தான் அது. அதைப்பற்றிய ஒரு சில சுவாரஸ்ய தகவல்களைப்பற்றி பார்ப்போம்.

1.படுக்கும்போது தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக் கொள்ளாதீர்கள்.

2.உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும். இதை தினமும் பின்பற்றுங்கள்.

3.காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும். தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.

4.டி,காபி போன்றவற்றை குறைத்து, அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.

5.நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.

6.தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

7.கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும். இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள், நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.

8.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைப்பிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.

9.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.

10.தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

No comments:

Post a Comment