கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லதும், அடிக்கடி சிறுநீர் கழித்தலை தடுப்பதும், பலவீனமான உடலை தேற்றக் கூடியதும், பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் அடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். இந்நிலையில், தேத்தான் கொட்டை சூரணத்தை தேனீராக்கி பால் சேர்த்து குடிப்பதால் இப்பிரச்னை சரியாகும். தேத்தான் கொட்டை சூரணத்தை பயன்படுத்தி உடலை தேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேத்தான் கொட்டை சூரணப்பொடி, திரிகடுகு சூரணம், திரிபலா சூரணம், சீரகப்பொடி, சித்தரத்தை பொடி, பால் சேர்த்து பசை போன்று தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர், 4 பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர் விட்டு பாகு தயாரிக்கவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பசையை, வெல்ல பாகுடன் சேர்த்து கிளறவும். அல்வா பதத்தில் வரும்போது நெய்விட்டு கிளறவும். நெய் பிரிந்து தனியாக வரும் சமயத்தில் ஸ்டவ்வை ஆப் செய்யவும். கடைசியாக தேன் சேர்த்து கலக்கவும். லேகிய பதத்தில் இருக்கும் இதை காலை மற்றும் மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து கொண்டால் உடல் தேறும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும். உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். லேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும். பால்வினை நோய்க்கு தீர்வாக அமைகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. இருமலை தணிக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்ததை குறைக்கிறது. பால்வினையால் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து வெளியேறுதலை தடுக்கிறது. கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை உடைத்து வெளித்தள்ளும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
இளைத்த உடம்பை தேற்றும். உயிரணுக்களை அதிகரிக்கும். தேத்தான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இதை வாங்கி இடித்து பொடியாக்கி அதனுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துகொண்டு மெல்லிய துணியில் பொடியை பிட்டுபோல் வேக வைத்து எடுத்துக் கொண்டால் அது சுத்தமான பொடியாக இருக்கும்.
No comments:
Post a Comment