••••••• *உணவு விழிப்புணர்வு* •••••••
இந்தியாவில் வட இந்தியர்கள் கோதுமையை தானே விரும்பி அதிகமாக உண்கிறார்கள் அவர்களுக்கு அதனால் பிரச்சனையா வருகிறது??
ஏன் எங்களை மட்டும் கோதுமை வேண்டாம் என்று கூறுகிறீர்கள்??
*உங்கள் கேள்வி புரிகிறது*
*இதோ பதில்*
இன்று நாம் விளைவித்து உண்ணும் கோதுமையும்
நமது முன்னோர் பசுமை புரட்சிக்கு முன் ஆயிரமாயிரம் காலமாக விளைவித்து உண்ட கோதுமையும் ஒன்றல்ல என்று கூறி எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்
*என்ன வித்தியாசம்??*
நமது முன்னோர் உண்ட கோதுமை டிப்லாய்டு( diploid - di என்றால் இரண்டு கரு) வகை விதைகளால் உருவான கோதுமை . அதன் பெயர்
Triticum monococcum
நாம் பசுமை புரட்சிக்கு பின் அந்த வகையை நிறுத்திவிட்டு உலக நாடுகள் பலவற்றிலும் உண்ணப்பட்ட புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Hexaploid ( hexa என்றால் ஆறு கரு) வகை விதைகளுக்கு மாறினோம். இந்த விதைகளுக்கு பெயர் triticum avistum
இதனால் விளைச்சல் பெருகிற்று
தண்ணீர் குறைவாக உட்கொண்டு மகசூல் நன்றாக கிடைத்தது
ஆனால் நமது பண்டைய நாட்டு விதை நமது உடலுக்கு ஊறு செய்யாமல் இருந்தது. அதற்கு குறைவான antigenecity இருந்தது
இப்போதைய Hexaploid வகை விதைகளில் antigenecity அதிகமாக இருக்கிறது . க்ளூடனும் அதிகமாக இருக்கிறது.
( antigenecity என்றால் ஒரு பொருள் நம் உடலுக்குள் சென்றால் நமக்கு ஊறு செய்யும் திறனை குறிப்பிடுவது)
{ (Molberg O, Uhlen AK, Jensen T, Flaete NS, Fleckenstein B, Arentz-Hansen H, et al. Mapping of gluten T-cell epitopes in the bread wheat ancestors: implications for celiac disease. Gastroenterology. 2005;128:393–401)}
இந்த கோதுமையை அதிகமாக உண்பது நமது இந்திய நாட்டின் வடக்கு மாநிலத்தவர்களும்
பாகிஸ்தான் நாட்டவர்களும் தான்
இவர்களுக்கு தான் தென் ஆசியாவிலேயே அதிகமான அளவு ஆட்டோ இம்யூன் வியாதிகள் தாக்குகின்றனவாம்
(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/21898056/)
ஜப்பானியருக்கோ மிகவும் குறைந்த அளவிலேயே ஆட்டோ இம்யூன் வியாதிகள் வருகின்றனவாம்
காரணம் இவர்கள் கோதுமையை விட்டு அரிசியை அதிகம் உண்பது தானாம்
இந்தியாவில் கூட அரிசியை முழு நேர உணவாக உண்ணும் தென் மாநிலத்தவருக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் வடமாநிலத்தவரை விட குறைவாம்
ஏன்.. ஐரோப்பிய நாடுகளில் கூட
கோதுமையை சக்கை போடு போடும் ஸ்வீடனுடன் ஒப்பிடுகையில் டென்மார்க்கில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் குறைவாம்.
நினைவில் கொள்க.. ஸ்வீடன் டென்மார்க் இரண்டும் அருகருகே இருக்கும் தேசங்கள். கேரளாவும் தமிழ்நாடும் போல.. இதில் ஸ்வீடனில் கோதுமை அதிகம் உண்கிறார்கள். டென்மார்க்கில் அவ்வளவு அதிகம் உண்பதில்லை . அதில் இருக்கிறது வித்தியாசம்
கோதுமையை பிரதான உணவாக உண்ணும் வடக்கிந்தியர்களுக்கு குடல் சார்ந்த தன்னெதிர்ப்பு நோயான சீலியாக் நோய் அதிகம் தாக்குவதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது
இந்த சீலியாக் வியாதியானது குழந்தை பருவத்திலேயே தோன்றி வயிற்றுப்போக்கு, உயிர்ச்சத்துகள் பற்றாக்குறை, எலும்பு வலிமையின்மை, டைப் ஒன்று நீரிழிவு , தைராய்டு குறைபாடுகள் , மூட்டு வாதம் போன்ற பல நோய்களுக்கு தாயாக விளங்குகிறது என்கிறது ஆய்வு.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3100145/
*கொசுறு செய்தி*
இரண்டாம் உலகப் போர் முடிவில்
ஐரோப்பாவில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிற்று . கோதுமைக்கும் பஞ்சம் நிலவியது.
அப்போது அங்கிருந்த மருத்துவரும் உணவியலாளருமான வில்லியம் காரல் டிக் என்பவர் . தன்னிடம் வந்த சீலியாக் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்.
அதில் கோதுமைக்கு எங்கெல்லாம் பஞ்சம் நிலவுகிறதோ அங்கிருந்து வந்த குழந்தைகளுக்கெல்லாம் சீலியாக் நோய் வெகுவாக குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர்.
அதுவே கோதுமை பஞ்சம் ஏற்படாத இடங்களில் இருந்து அவரை சந்தித்த குழந்தைகளுக்கு சீலியாக் நோய் முற்றியிருந்தது.
இதிலிருந்து " கோதுமையில் இருக்கும் ஒரு பொருள் தான் இந்த நோய்க்கு காரணம் அதன் பெயர் க்ளூடன் என்றும் கண்டுபிடித்தார்.
(van Berge-Henegouwen GP, Mulder CJ. Pioneer in the gluten free diet: Willem-Karel Dicke 1905-1962, over 50 years of gluten free diet. Gut. 1993;34:1473–5)
அன்றிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் குடல் சார்ந்த ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் அனைத்திற்கும் க்ளூடன் ஃப்ரீ டயட் பரிந்துரைக்கப்பட்டது.
நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டது.
கோதுமையை அதிகளவில் பயன்படுத்தும் நாமும் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டது.
No comments:
Post a Comment