Tuesday, 25 April 2017

கோடையில் அக்குளில் துர்நாற்றம் வீசாமல் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...!

கோடையில் அக்குளில் துர்நாற்றம் வீசாமல் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...!

கோடைக்காலம் ஆரம்பித்து, வெயில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது.

உடுத்தும் உடைகள் அனைத்தும் வியர்வையால் முழுமையாக ஈரமாகிவிடுவதோடு, அக்குள் பகுதி கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும்.

சிலருக்கு அதிகம் வியர்ப்பதால், அப்பகுதியில் அரிப்புக்கள் ஏற்படும்.

இதை இப்படியே விட்டுவிட்டால், தொற்றுகள் ஏற்பட்டுவிடும். எனவே மற்ற காலங்களை விட கோடையில் அக்குள் பகுதிக்கு சற்று அதிகமாகவே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இங்கு கோடையில் அக்குளில் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக இருக்கவும், அதிக வியர்வை வெளியேறாமல் இருக்கவும் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ் #1
கோடைக்காலத்தில் அக்குளை வாரத்திற்கு 2 முறை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு ஏதேனும் இயற்கை பொருட்களான உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அக்குளில் டாக்ஸின்களின் அளவு அதிகரித்துவிடும்.

டிப்ஸ் #2
தினமும் குளித்து முடித்த பின், நல்ல நறுமணமிக்க மாய்ஸ்சுரைசரை அளவாக தடவ வேண்டும். இதனால் அக்குள் பகுதி புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் இருக்கும்.

டிப்ஸ் #3
அக்குளில் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறினால், எலுமிச்சை துண்டுகளை அக்குளில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதனால் அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வியர்வை துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

டிப்ஸ் #4
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் அக்குளில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். இச்செயலை வாரத்திற்கு குறைந்தது 2 முறை செய்ய வேண்டும்.

டிப்ஸ் #5
கற்றாழை ஜெல்லை தினமும் இரண்டு முறை அக்குளில் தடவி வருவதால், அக்குள் புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

டிப்ஸ் #6
கோடைக்காலத்தில் காட்டன் உடைகளையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இதனால் வியர்வையை காட்டன் துணி உறிஞ்சி துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.

டிப்ஸ் #7
அக்குள் பேடுகளை கோடைக்காலத்தில் பயன்படுத்துவதன் மூலம், வியர்வை முழுமையாக உறிஞ்சப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். ஆனால் அக்குள் பேடுகளை நீண்ட நேரம் அக்குளில் வைத்திருக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது துர்நாற்றத்துடன் அழற்சியையும் ஏற்படுத்திவிடும்.

டிப்ஸ் #8
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பொருட்கள் அதிகம் உள்ளதால், அதை நீரில் சரிசம அளவில் கலந்து, அக்குளைத் துடைப்பதன் மூலம், அக்குளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment