Monday, 29 August 2016

சர்க்கரை பற்றிய ஒரு அலசல்

சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் வெள்ளைச்சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்கள்,நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை வெள்ளைச்சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை, அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்..

இந்த வெள்ளை சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச்சர்க்கரையை தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வெள்ளைச்சர்க்கரையாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு இதில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான வெள்ளைச்சர்க்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான வெள்ளைச்சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

9. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரைவியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!'

கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது.

அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம்.

கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Sunday, 28 August 2016

நெயில்பாலிஷ்

பெண்கள் முதல் குழ‌ந்தைக‌ள் வரை நெயில்பாலிஷ் எனப்படும் நகப்பூச்சைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் அந்த நகப்பூச்சுகளில் எத்தனை விதங்கள், நிறங்கள் உள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். முதன் முதலில் நகப்பூச்சைக் கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா? அவர்கள் சீனர்கள் தான். அவர்கள் எளிய முறையில் கையில் கிடைத்தப் பொருட்களைக் கொண்டு நகப்பூச்சை செய்து பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் படிப்படியாக சில ரசாயனங்களையும், நிறங்களையும் கொண்டு நகப்பூச்சு தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சிகப்பு மற்றும் வெளிர் சிகப்பு நிறத்தில் மட்டுமே நகப்பூச்சுக்கள் வந்தன. ஆனால் தற்போதெல்லாம் ஆடைக்கேற்ற அனைத்து நிறங்களிலும் நகப்பூச்சுக்கள் அலங்கரிக்கத் துவங்கிவிட்டன.

நெயில்பாலிஷ் வாங்கும்போது அதனை கைகளில் போட்டுப் பார்த்து வாங்குவது சிறந்தது. அது தமது நிறத்திற்கு சரியாக உள்ளதாக என்பதை பார்த்துக் கொள்ளலாம்.நெயில்பாலிஷ் ரிமூவர் என்பது, ஒரு நெயில்பாலிஷ் போட்டு அதனை மாற்ற வேண்டும் என்றால் ரிமூவரைக் கொண்டு நெயில்பாலிஷை அழித்துவிடலாம்.

நெ‌யி‌ல்பா‌லி‌ஷ‌் ‌ரிமூவரை வாங்கி பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக எடுத்து வைக்க வேண்டும். இல்லை எனில் அது ஆவியாகிவிடும். மேலும், கை விரல்களில் எப்போதும் நெயில்பாலிஷ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஏனெனில் நகங்கள் பல வியாதிகளை முன்னறிவிப்பவை.

மேலும், நகங்கள் சூரிய வெளிச்சம் பட்டால் அது உடலுக்கும் நல்லது. எனவே விரல்களுக்கு வாரத்தில் ஒரு சில நாட்களுக்காவது நகப்பூச்சுக்களில் இருந்து விடுமுறை அளியுங்கள்.

தாய்மை

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். 'கருவுறுதல்' தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.

நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது. இக்காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் என்ன?:

1. சிறுநீரில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Pregnodex test):

வழக்கமாக வரும் நாளிலிருந்து ஒரு வாரம்வரை மாதவிலக்கு தள்ளிப் போனாலோ, அந்த காலத்தில் லேசாக தலைச்சுற்றல் இருப்பது போல் உணர்ந்தாலோ, கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிகாலைச் சிறுநீரைப் பரிசோதிப்பது நல்லது. ஆனால், கட்டாயமில்லை. சிறுநீரில் 'ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன்' (Human Chorionic Gonadotropic Hormone-hCG) இருக்கிறதா என்று சோதிக்கும் பரிசோதனை இது. இந்த ஹார்மோன் சிறுநீரில் காணப்பட்டால், பாசிட்டிவ் என்று கூறுவார்கள். இது கர்ப்பத்தை உறுதி செய்யும்.

2. ரத்தத்தில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Blood hCG test):

சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வரும்போது, ரத்தத்தில் மேற்சொன்ன ஹார்மோன் அளவைப் பரிசோதித்து உறுதிசெய்வது வழக்கம். இது 5 mIU/ml க்குக் கீழே இருந்தால் கர்ப்பம் இல்லை. அதற்கு மேல் இருந்தால் கர்ப்பம் உறுதி.

ரத்தத்தில் hCG அளவு

கருத்தரித்து mIU/ml

7 நாட்கள் 0 5

14 நாட்கள் 3 426

21 நாட்கள்18 7340

28 நாட்கள்1080 56500

35 42 நாட்கள் 7650 - 229000

3. ரத்த அழுத்தப் பரிசோதனை:

கர்ப்பம் உறுதியானதும், கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். இது 120/80 மி.மீ. மெர்குரி என்று இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை மருத்துவரிடம் போகும்போதும் இதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இது 140/90-க்கு மேல் இருந்தால், உயர் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். அப்போது சிகிச்சை தேவைப்படும்.

4. உடல் எடை:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ஒவ்வொரு மாதமும் அரை கிலோ முதல் ஒரு கிலோவரை எடை கூடலாம். கருத்தரித்ததில் இருந்து பிரசவம் ஆகும்வரை மொத்தமாக 10 முதல் 12 கிலோவரை எடை கூடலாம். ஏற்கெனவே உடல் எடை அதிகமாக இருந்தால், 8 கிலோவரை கூடலாம். உடல் எடை மிக அதிகமென்றால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். எனவே, எடைக் கட்டுப்பாடு அவசியம்.

5. அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்:

l ஹீமோகுளோபின் மற்றும் ஹிமட்டோகிரிட் பரிசோதனைகள்:

இவை கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவுக்கு ரத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. இந்த அளவுகள் குறைவாக இருந்தால், ரத்தசோகை உள்ளதாக அர்த்தம். அதற்கு சிகிச்சை தேவைப்படும்.

l தட்டணுக்கள் பரிசோதனை:

ரத்தத்தில் தட்டணுக்கள் (Platelets) குறைவாக இருந்தால் பிரசவ நேரத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். இச்சோதனை மூலம் இந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்.

l ரத்த வகை மற்றும் ஆர்ஹெச் பிரிவுப் பரிசோதனைகள்:

கர்ப்பிணிக்குத் தீவிர ரத்தசோகை இருக்கும்போதும், பிரசவத்தின்போது உதிரப்போக்கு மிக அதிகமாக ஏற்பட்டாலும், ரத்தம் செலுத்த வேண்டி வரும். அதற்குத் தாயின் ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.

l குழந்தைக்கு ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ், தாய்க்கு ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என இருந்தால், இரண்டாவது பிரசவத்தில் குழந்தைக்குப் பிரச்சினை (Rh incompatibility) ஏற்படலாம். அதைத் தவிர்க்க தாய், சேய் இருவருக்கும் ஆர்ஹெச் பிரிவு தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க கர்ப்பிணிக்கு 'மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை' (Indirect Coomb's test) செய்யப்படும். இது நெகட்டிவ் என்று முடிவு தெரிவித்தால், குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு 'ஆர்ஹெச் இமுனோகுளோபுலின்' (Anti - D) ஊசி மருந்தைச் செலுத்த வேண்டும்.

l ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை:

கர்ப்பிணிக்கு ஏற்கெனவே நீரிழிவு இருந்தாலும், கர்ப்ப காலத்தில் புதிதாக ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஏற்கனவே நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிக்கு, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 90 மி.கி./டெ.லி. எனவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 மி.கி./டெ.லி, மற்றும் ஹெச்பிஏ1சி (HbA1C) அளவு 6.5%க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். இல்லையென்றால், இன்சுலின் சிகிச்சை தேவைப்படும். சிலருக்குக் கர்ப்பகாலத்தில் மட்டும் நீரிழிவு ஏற்படும். இதைத் தெரிந்துகொள்ள மருத்துவரின் முதல் சந்திப்பு அன்றும், 4-வது, 7-வது கர்ப்ப மாதங்களிலும் கர்ப்பிணியை 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச்செய்து, 2 மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக்கும்போது 140 மி.கி./டெ.லி.க்குக் கீழே இருந்தால், அவருக்கு நீரிழிவு இல்லை; இதற்கு அதிகமென்றால், கர்ப்ப கால நீரிழிவு என்று அர்த்தம். இதற்கு சிகிச்சை பெற வேண்டும்.

l தைராய்டு பரிசோதனை:

கர்ப்பிணிக்குத் தைராய்டு பிரச்சினை இருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும். இந்த ஆபத்தைத் தவிர்க்க கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

l ஹெபட்டைடிஸ் பி பரிசோதனை:

கர்ப்பிணிக்கு ஹெபட்டைடிஸ் பி வைரஸ் கிருமிகள் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன் ஹெபட்டைடிஸ் பி இமுனோகுளோபுலின் தடுப்பு மருந்தைக் குழந்தைக்குப் போடவேண்டும். இத்துடன் வழக்கமான ஹெபட்டைடிஸ் பி தடுப்பூசியையும் முறைப்படி போட வேண்டும்.

l வி.டிஆர்.எல். பரிசோதனை (VDRL test):

சிபிலிஸ் எனும் பால்வினைநோய் கர்ப்பிணிக்கு உள்ளதா எனத் தெரிந்துகொள்ளும் பரிசோதனை இது. கர்ப்பிணிக்கு இது இருந்தால், குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

l ஹெச்ஐவி பரிசோதனை:

கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளும் பரிசோதனை இது. அப்படி இருந்தால், குழந்தைக்கும் பரவ வாய்ப்புண்டு. எனவே, கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, குழந்தைக்கு இது பரவாமல் தடுக்க வேண்டும்.

l சிறுநீர்ப் பரிசோதனை:

சிறுநீரில் புரதம் மற்றும் சர்க்கரை உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். புரதம் இருந்தால், சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு அல்லது ரத்தக்கொதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. அப்போது சிகிச்சை தேவைப்படும். சர்க்கரை இருந்தால், நீரிழிவுக்கான சிகிச்சை தேவைப்படும்.

6. நோய் பிரித்தறியும் பரிசோதனைகள் (Screening tests):

l அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:

கர்ப்பமான 11 முதல் 14 வாரத்துக்குள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் நியூக்கல் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். இதில் கருவில் இருப்பது ஒற்றைக் குழந்தையா, ஒன்றுக்கும் மேற்பட்டதா, பொய் கர்ப்பமா எனப் பல விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியையும் இதயத் துடிப்பையும் அறியலாம். பிரசவ தேதியைக் கணிக்கலாம். குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம், ட்ரைசோமி 18 போன்ற பிறவிக் கோளாறுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதா என அறியலாம். இது பாசிட்டிவ் என்றால், தாயின் ரத்தத்தில் PAPP-A மற்றும் hCG அளவுகளைச் சரிபார்த்து, அந்த சாத்தியத்தை உறுதிசெய்ய வேண்டும்.

l கர்ப்பமான 20-லிருந்து 22-வது வாரத்தில் மீண்டும் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். இதில் குழந்தையின் வளர்ச்சி ஒழுங்காக இருக்கிறதா அல்லது இதயம், சிறுநீரகம், மூளை, முதுகுத்தண்டு உள்ளிட்ட உறுப்புகளில் குறைபாடு உள்ளதா என அறியலாம்.

l 32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவை. இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை போதும்.

7. சிறப்புப் பரிசோதனைகள்:

முவ்வகை பிரித்தறியும் பரிசோதனைகள் (Triple Screening tests):

கர்ப்பமான 11 முதல் 14 வாரத்துக்குள் எடுக்கப்படும் நியூக்கல் ஸ்கேனில் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம், ட்ரைசோமி 18 போன்ற பிறவிக் கோளாறுகள் இருப்பதாகச் சந்தேகம் வந்தால், ஈஸ்டிரியால் (Estriol) ஹார்மோன் அளவு, ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன் அளவு, பனிக்குடநீர்ப் பரிசோதனை (ஆம்னியோசின்டெசிஸ்), கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங் பரிசோதனை, ஆல்பா பீட்டா புரோட்டீன் பரிசோதனை ஆகியவற்றைச் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

l ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினை உள்ளவர்கள், இரட்டைக் குழந்தை உள்ளவர்கள் அல்லது 40 வயதைக் கடந்து கருத்தரித்தவர்கள் ஆகியோருக்கு 28-வது வாரத்தில் ஒரு ஸ்கேன் தேவைப்படும்.

l பிரசவ தேதி நெருங்கியும் பிரசவ வலி வராதபோது, பனிக்குட நீர் போதுமான அளவு இருக்கிறதா, சுகப்பிரசவத்துக்குச் சாத்தியமா, பிரசவத்துக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது உண்டு.

l இப்போதெல்லாம் 'சோதனைக் குழாய் குழந்தை' போன்ற சிறப்பு சிகிச்சை முறையில் கரு உருவாக்கம் செய்யப்படுவதால், இப்படிப்பட்டவர்களுக்கு கர்ப்பமான 6-லிருந்து 7-வது வாரத்திலேயே ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். குழந்தையின் ஆரம்பகட்ட வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் ஸ்கேன் இது.

l கருக் குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் கொண்டு 5-வது மாதத்தில்தான் கேட்க முடியும். ஆனால், 'டாப்ளர் டிவைஸ்' எனும் கருவியைக் கொண்டு கருவுற்ற 3-வது மாதத்திலிருந்தே குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்க முடியும்.

l மரபணு சார்ந்த குறைபாடுகளை அறியும் பரிசோதனை (Carrier Screening): குடும்ப வழியில் தலசீமியா, ஹீமோபிலியா, தசைஅழிவு நோய் போன்றவை குழந்தைக்குக் கடத்தப்படுவது உண்டு. இந்த வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய பெற்றோர் இருவரின் ரத்தமும் பரிசோதிக்கப்படும். இதை கருவுறுவதற்கு முன்போ, பின்போ செய்யலாம்.

l டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: நச்சுக்கொடியிலும் குழந்தையின் ரத்தக்குழாய்களிலும் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை அறியும் பரிசோதனை இது.

l 3டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: நவீன மென்பொருளின் உதவியுடன் இது செய்யப்படுகிறது. குழந்தைக்குப் பிளவுபட்ட உதடு போன்ற உடலமைப்பு சார்ந்த குறைபாடுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இது உதவுகிறது.

l 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: இதில் குழந்தையின் அசைவுகள் துல்லியமாகத் தெரியும்.

l குழந்தைக்கு எக்கோ பரிசோதனை: குழந்தைக்குப் பிறவியிலேயே தோன்றக்கூடிய இதயக் கோளாறுகளைத் துல்லியமாக அறிய இது உதவுகிறது.

அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.

கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு

Friday, 26 August 2016

நாம் சமையல் செய்யும்போது பொருட்கள் வீணாகமலும், சுவையாகவும், எளிதாகவும் இருக்க

நாம் சமையல் செய்யும்போது பொருட்கள் வீணாகமலும், சுவையாகவும், எளிதாகவும் இருக்க சில வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.



1. பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.

2. பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால் கெட்டியான சூப் கிடைக்கும்.

3. உளுந்து வடை மாவு ரொம்ப நீர்த்துப்போய் விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும்.

4. கலந்த சாதம், வெஜிடபிள், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறைவிட்டுக் கிளறிவிட வேண்டும்.

5. பன்னீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பன்னீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்.

6. வாழைத்தண்டை நறுக்கிக் கொண்டிருக்கும்போது ஆள்காட்டி விரலில் நாரைச் சுற்றிக் கொண்டேயிருந்தால் மோதிரம் போல நார் திரண்டு வந்துவிடும்.

7. ஆலு பரோட்டா செய்யும்போது பூரணம் வெளிவராமல் இருக்க மாவை கிண்ணம்போல் வடிவமைத்து ஆலுவை உள்ளே வைத்து மாவை நன்றாகச் சுற்றி மூடி செய்தால் பூரணம் வெளியே வராது.

8. பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும். இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால் பொடி ருசியாக இருக்கும்.

9. பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம் மூன்று பூண்டுப் பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் வாசனையுடன் கூடிய சுவையான பஜ்ஜி கிடைக்கும்.

10. தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.

ஞாபகம்

20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொல்வார்கள். எப்போதோ படித்த இங்கிலீஷ் எஸ்ஸையை வரிமாறாமல் ஓப்பிப்பார்கள்.

எல்லாம் ஒரு காலம். இன்று சொந்த செல்போன் எண்ணையே சிலர் மறந்துவிடுகிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் கூட நினைவில் நிற்பதில்லை. காரணம் மூளையின் நினைவுத் திறனுக்கான வேலைகளை செல்போனிடம் கொடுத்துவிட்டோம்.

அடுத்து ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் கூகுள் செய்து பெற்றுவிடுகிறோம். பெரியவர்களின் நிலையே இதுவென்றால் …. மாணவர்கள்……? பாவம்….. பெரும்பாலான மாணவர்களை வதைப்பது இந்த ஞாபக மறதிதான். ராத்திரி, பகல் விழிதிறந்து படித்தாலும், அடுத்த அரைமணி நேரத்தில் படித்ததெல்லாம் மறந்துவிடும்.

சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை என இந்த ஞாபக மறதி ஏற்படுத்தும் துணை விளைவுகள் இன்னும் கொடுமையானவை. நினைவாற்றலை மேம்படுத்த என்னதான் செய்வது? கொஞ்சம் முயற்சி செய்தால் அது ரொம்ப ஈஸி என்கிறார்கள் நிபுணர்கள்.

ஐம்புலன்களாலும் நாம் உள்வாங்கும் விஷயங்கள் வெவ்வேறு கட்டங்களைத் தாண்டி மெமரியில் பதிவு செய்யப்படுகிறது. மெமரியில் பதிவு செய்யப்பட்ட விஷயத்தை தேவைப்படும் இடத்தில் திரும்ப எடுப்பதைத்தான் நினைவாற்றல் என்கிறோம்.

விஷயங்களை பதிவு செய்வதில் பலவிதமான யுத்திகள் ஒவ்வொருவருக்குள் நிகழ்கிறது. படங்களாக, கதைகளாக, சம்பவங்களாக யோசிக்கவே முடியாத கற்பனையாக… இப்படி  தான் உள்வாங்கும் விஷயத்தை ஒரு குழந்தை தனக்கு சுலபமான வழியில் மெமரிக்கு கொண்டு செல்கிறது. எனவே நினைவுத் திறனில் பிரச்சனை என்றால் முதலில் அவர்கள் அந்த விஷயத்தை கவனிப்பதில் தான் பிரச்சனை இருக்கும்.

கவனச் சிதறலுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வது முதல்படி. அதன் பின்னர் உள்வாங்கும் விஷயம் மெமரிக்கு கொண்டு செல்லப்படுகிறதா?.... அது எந்த மெமரியில் ஸ்டோர் ஆகிறது என்பது அடுத்த கட்டம். முழுமையாக கவனித்து மெமரிக்கே கொண்டு செல்லாத விஷயங்கள் காணாமல் போய்விடும்.

கவனிக்கப்பட்டு ஷார்ட் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும் விஷயங்கள்,  லாங்டேர்ம் மெமரிக்கு சரியாக வகை பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அவ்வாறு லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லப்படாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும்.  எங்கோ கேட்டது மாதிரி இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை முழுமையாக நினைவுக்கு கொண்டு வரமுடியாது.

அப்போது தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும்.

கவனிக்கும்போதும், உள்வாங்கும் போதும் நன்றாக புரிந்துக் கொள்ளும் சில மாணவர்கள் அந்த விஷயத்தை உடனே கேட்டால் சொல்வார்கள். அடுத்த நாள் கேட்கும் போது மறந்து விடுவார்கள். இவர்களுக்கு விஷயங்களை லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்ல திரும்பத்திரும்ப அதை படிக்க வேண்டியுள்ளது.

அதை அர்த்தமுள்ள புரிதலுக்கு உட்படுத்தி கதை,படங்கள், உருவங்கள் என லிங்க் செய்து லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும்போது நினைவாற்றலை மேம்படுத்த முடியும். கண்களுக்கு விழிகளை சுழற்றும் பயிற்சி கொடுக்கும்போது மாணவர்களின் கவனம் ஒரு நிலைப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மூச்சுப் பயிற்சியும் கவனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். எந்த ஒரு விஷயத்தையும் கவனச்சிதறல் இன்றி உள்வாங்கினால் எக்காலமும் அது நினைவில் இருந்து அகலாது…

மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?

1. நினைவாற்றலில் சேமித்த விஷயங்களை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள,  உணவால் கிடைக்கும் சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன.  முழு தானியங்களை சுண்டல் வகைகளாக அப்படியே சாப்பிடவேண்டும்.

2. சிவப்பு பரங்கிக்காயில் உள்ள விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஜின்க் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

3. நல்ல கொழுப்பு உள்ள உணவுகளும், வைட்டமின் சி உள்ள ஆரஞ்ச், எலுமிச்சை, சாத்துக்குடி நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கூடவே பச்சைக் கீரைகள், தக்காளியை சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகும்.

4. நினைவாற்றல் மேம்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது…

வீட்டு மருத்துவம்

*.அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

*.சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறைஅருந்தினால் குணமாகும்.

*.தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

*.வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும்சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

*.கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.



எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.


சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.  எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.



கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல்பலம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இப்போது பிரண்டை உபயோகம் என்பது மறைந்து வருகிறது.

பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல்பலம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இப்போது பிரண்டை உபயோகம் என்பது மறைந்து வருகிறது.



* நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.

* இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும். பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதிபடவும் உதவும்.

* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.

* பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.

* பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

* பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

* பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும்.

* உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

* எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்?

எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்?

1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

16.மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

இரத்த அழுத்தம் நோய்

வாரம் இரண்டு நாள் வீதம் முள்ளங்கி சாறும், வாழைத்தண்டு சாறும் தயார் செய்து சுமார் 100 மிலி காலை உணவு க்கு முன் ஒரு மணி நேரம் முன்பாக சாப்பிட வேண்டும், இதனால் ஒரு 50 %மாரடைப்பை தடுத்து விடலாம், இந்த சாறுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் கலந்து உள்ள இரசாயன பொருட்களின் விஷத்தன்மைகளை அழித்து இரத்தித்தில் தேவைக்கு அதிகமாக உள்ள உப்புப் படிவங்களை நீராக மாற்றி எளிதாக உடலைவிட்டு வெளியேற உதவுகின்றன, சிறு நீரகங்களின் செயல்பாட்டுக்கு இவைகள் இரண்டும் மிகவும் சிறந்தவை, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய வில்லை என்றாலும் இரத்த அழுத்தம் நோய் ஏற்படும்,

Wednesday, 24 August 2016

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த"கம்போடியா மக்கள்"அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர்

பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை "கற்பத்தரு" என்றழைத்தனர் !

சித்தமருத்துவத்தில் ஜெயநீர் மற்றும் முப்பு உருவாக்கும் போது கள்ளு பயன்படுத்துவது இதற்காக தான் முட்டியில் பூசபடும் சுண்ணாம்பை 2 நாழிகையில் அயனியாக மாற்றிவிடுகிறது பதநீர்.

எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. எனில் பனைஏடும் தெய்வம் தானே?

வரலாறு அளித்த கருவிகளில் முதன்மையானது கள்ளும்,ஓலையும் இவை இல்லையேல் சங்கப்பாடல் இல்லை இதை நம்மால் மறுதளிக்க முடியுமா?

அறம்,மறம் என்று வேடம் தரித்துகொண்டு பனையின் கொடைகளை மறந்து போனோம் ஆனால் கம்போடியா தொல்குடிகள் அதன் மகத்துவம் அறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளனர் அவர்களை போல நாமும் பனையில் இருக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி உலக தரத்திற்கு உயர்த்த முயலுவோம் .....

கள்ளும்-பதநீர் மறந்ததால் தமிழகம் இன்று நோயின் பிடியில்

1.கள் மற்றும் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது.

2. 40% அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணம் பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதை மறுதளிக்க முடியுமா பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது பனங்கருப்பட்டிக்கு மாற்றாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்தியதே ???

3.பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருந்தது மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருந்தன கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் பல் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கவேஇருக்காது .

4.பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்

5.வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும் அதற்கு காரணம் பதநீர் மற்றும் கள்ளில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள்

பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல ...

நோய்களை உருவாக்கும் உக்தி, அரசியல் தலைவர்கள் துணையுடன் நடைமுறைபடுத்தும் வணிகர் நலம் சார்ந்தது என்று.

கொள்ளையர்களுக்கு எப்போதும் நிறம் ஒன்றுதான் அன்று வெள்ளையாக(ஆங்கிலேயன்) இருந்தான்,இப்போது (..............)

மிதக்குடியன் ஆன தமிழன் எதற்காக மிகைகுடியன் ஆக்கபட்டான் என்று உங்களுக்குகே தெரியும் ????

Tuesday, 23 August 2016

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை சமூக இழுக்காக கருதக்கூடாது என்று இந்தியா ஹோம் ஹெல்த் கேர் மைய தலைவர் டாக்டர். அனிதா ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.


ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரம் அனுசரிக்கப்படுகிறது. ஒரு வார காலம் அனுசரிக்கப்படும் இதில், தாய்ப்பாலூட்டல், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் புதிய தாய்மார்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள் குறித்து விளக்கமளிப்பது ஆகியவையும் இந்த ஒரு வார கால செயல்நடவடிக்கைகளில் அடங்கும்.

இந்தியாவில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுதல் ஏன் ஒரு கவலையளிக்கிற மற்றும் அச்சம் ஏற்படுத்துகிற செயல்பாடாக இருக்கிறது என்பது குறித்த கவலைகளை மக்கள் மனதிலிருந்து அகற்றுவதை தனது குறிக்கோளாகக் கொண்டு இந்தியா ஹோம் ஹெல்த் கேர் (ஐஎச்எச்சி) இந்த வார நிகழ்வை அனுசரிக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐஎச்எச்சி-ன் தலைவர் டாக்டர். அனிதா ஆரோக்கியசாமி பேசுகையில், "இந்தியாவில் மால்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது மற்றும் திறந்த அமைவிடங்களில் தாய்ப்பாலூட்டுதலை ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக கருதி கவலைப்படுவதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் பெரும்பாலும் விலகி ஒதுங்கிவிடுகின்றனர்.

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது என்பது வாழ்க்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக, வழிமுறையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை பசியோடு இருப்பது குறித்ததாகும். தனது பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட ஒரு தாயை இச்செயல்பாடோடு இணைந்திருக்கிற எந்தவொரு சமூக இழுக்கும் தடுத்திடக்கூடாது.

வீட்டின் சுவர்களுக்கு வெளியே இருக்கும்போது கூட தனது குழந்தைக்கு பாலூட்டி பேணுகின்ற ஒவ்வொரு அன்னையையும் இந்தியா ஹோம் ஹெல்த் கேர் ஆதரிக்கிறது. இன்றைய உலகில் வெளியே செல்லும் போது பசியினால் அழுகிற குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்ப்பதற்கு பதிலாக பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து பாதுகாப்பதற்கு மறைப்புகளே அவசியப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.

உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் இஞ்சி

உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் இஞ்சி

இஞ்சி பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.


காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும், மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும், மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.

இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த, கப நோய்கள் நீங்கும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும். காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும்.இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.

கணினி முன்பு நீண்டநேரம்

கணினி முன்பு நீண்டநேரம் உட்கார்ந்தபடி வேலைபார்ப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது.

இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.

இவற்றைச் சரிசெய்ய எளிய ஆலோசனைகள்:

1. காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேர பதற்றமும் குறையும்.

2. நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

3. முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

4. பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே,அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

5. நிறைய தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது. என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.

6. கணினி முன் வேலை செய்யும்போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக்கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

7. இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

வயிற்றில் சாதாரணமாகவே அமிலம்

வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன.

வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே "அசிடிட்டி' எனப்படும்.

அறிகுறிகள்

நெஞ்செரிச்சல்:
வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அஜீரணம்:
வயிற்றின் மேல் பகுதியில் எரிவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு; சில நேரங்களில் குடல் பகுதியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அரிதாக சிலருக்கு எவ்வித வலியும் இருக்காது. ஆனால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிறு ஊதல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படும்.

அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட உணவு முறையில் சிறியளவில் மாற்றம் செய்து கொண்டாலே போதும்.

* சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அப்போது உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழு அளவில் கிடைக்கும்.

* பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் "புரோமிலெய்ன்' ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.

* சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.

இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது

குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான்.

* சந்தானம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும்.

* வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.

* முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

* சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும்.

* தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும்.

* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.

பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய்.

கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன....

சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச் சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு - திப்பிலி - இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.

வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.

பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும்.

முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம்.

உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது.

கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அகஸ்திய ரஸாயன லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம், அபயாமிருத ரஸாயனம், திரிபலா சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விக்கான சிறந்த விடையாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தலை வலியை குணமாக்கும் வெந்நீர் வைத்தியம்

தலை வலியை குணமாக்கும் வெந்நீர் வைத்தியம்

மனிதர்களுக்கு ஏற்படும் தலை வலியை சாதாரண வெந்நீர் குணமாக்கும் வல்லமை கொண்டது.

சிலருக்கு அடிக்கடி தலை வலி வரும். மேலும் சிலருக்கு எப்போது பார்த்தாலும் தலை வலிப்பதாக கூறுவார்கள். அவர்களுக்காகவே, இயற்கை வைத்தியம் கைகொடுத்துள்ளது.

தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது.

பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து.

* சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

* சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

* சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Monday, 22 August 2016

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த"கம்போடியா மக்கள்"அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர்

பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை "கற்பத்தரு" என்றழைத்தனர் !

சித்தமருத்துவத்தில் ஜெயநீர் மற்றும் முப்பு உருவாக்கும் போது கள்ளு பயன்படுத்துவது இதற்காக தான் முட்டியில் பூசபடும் சுண்ணாம்பை 2 நாழிகையில் அயனியாக மாற்றிவிடுகிறது பதநீர்.

எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. எனில் பனைஏடும் தெய்வம் தானே?

வரலாறு அளித்த கருவிகளில் முதன்மையானது கள்ளும்,ஓலையும் இவை இல்லையேல் சங்கப்பாடல் இல்லை இதை நம்மால் மறுதளிக்க முடியுமா?

அறம்,மறம் என்று வேடம் தரித்துகொண்டு பனையின் கொடைகளை மறந்து போனோம் ஆனால் கம்போடியா தொல்குடிகள் அதன் மகத்துவம் அறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளனர் அவர்களை போல நாமும் பனையில் இருக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி உலக தரத்திற்கு உயர்த்த முயலுவோம் .....

கள்ளும்-பதநீர் மறந்ததால் தமிழகம் இன்று நோயின் பிடியில்

1.கள் மற்றும் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது.

2. 40% அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணம் பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதை மறுதளிக்க முடியுமா பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது பனங்கருப்பட்டிக்கு மாற்றாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்தியதே ???

3.பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருந்தது மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருந்தன கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் பல் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கவேஇருக்காது .

4.பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்

5.வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும் அதற்கு காரணம் பதநீர் மற்றும் கள்ளில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள்

பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல ...

நோய்களை உருவாக்கும் உக்தி, அரசியல் தலைவர்கள் துணையுடன் நடைமுறைபடுத்தும் வணிகர் நலம் சார்ந்தது என்று.

கொள்ளையர்களுக்கு எப்போதும் நிறம் ஒன்றுதான் அன்று வெள்ளையாக(ஆங்கிலேயன்) இருந்தான்,இப்போது (..............)

மிதக்குடியன் ஆன தமிழன் எதற்காக மிகைகுடியன் ஆக்கபட்டான் என்று உங்களுக்குகே தெரியும் ????

Sunday, 21 August 2016

கரிசலாங்கண்ணிக்கீரை


* கரிசலாங்கண்ணிக்கீரை*.   
      இது கையாந்தகரை என்று தமிழ் நாட்டிலும், பிருங்கராஜ் என்று வட நாட்டிலும் அழக்கப்படுகிறது.
      கரிசலாங்கண்ணிச் செடியில் பூக்கும் மலர்களின்
நிறத்தைக் கொண்டு சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால்
வெள்ளை நிற மலர்கள் பூக்கும் கரிசலாங்கண்ணிக்
கீரையே அதிகம் கிடைக்கட்கூடியதாக இருக்கின்றது.
      மஞ்சள் நிற புவுடைய மஞ்சள் கரிசலாங்கண்ணிக்
கீரையை உணவாகச் சமைத்து உண்ண உடல் பொன்னி-
றமடையும் அதிலுள்ள இயற்கைச் சத்துக்கள் உடலுக்கு
மினுமினுப்பைக் கொடுத்து மிளிரச் செய்யும். அதனால்
இதை பொற்றிலைக்கையான் என்றும் அழைப்பதுண்டு.
     பொதுவாக கரிசலாங்கண்ணிக் கீரைக்கு ஈரலைப்
பாதுகாக்கும் குணம் உண்டு.
     பல்வேறு காரணங்களால் கல்லீரல் சீர்கெட்டு வீங்கி
மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. அதனால்
கண்கள் மஞ்சள் நிறமடையும். வெளியாகும் சிறுநீர்
மஞ்சள் நிரத்தில் காணப்படும். முற்றிய நிலையில்
நகங்களும், உடலும் கூட மஞ்சள் நிறமாகும். மலமும்
வியர்வையும் மஞ்சள் நிறமாக வெளியேறும். அவ்வாறு
முற்றிய நிலையில் உள்ள மஞ்சள் காமாலை நோய்க்கு
கரிசலாங்கண்ணிக்கீரையை சிறிதளவு நீர்விட்டு
அரைத்து, பசுமோரில் கலக்கி காலை, மாலை என நோயின் தன்மைக்கு ஏற்ப ஒரு வாரம் அல்லது 15
நாட்கள் அல்லது ஒரு மாதம் என அருந்திவர மஞ்சள்
காமாலை நோய் முற்றிலும் குணமாகும்.
     பொதுவாக பித்தநீர் அதிகம் சுரந்தால் வாய்க்கசப்பு
இருக்கும். செரிமான சக்தி குறையும். சிலருக்கு
வாந்தியும் கூட ஏற்படும். இது போன்ற கோளாறுகள்
உள்ளவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரையை உப்பு, பூண்டு,
புளி, சிறிதளவு மிளகாய், தேங்கய் சேர்த்து துவையலாக
அரைத்து உணவில் சேர்த்து வந்தால் பித்தநீர் சுரப்பு
சீராகி, வாய்க்கசப்பு நீங்கும். கிராமங்களில் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாக மென்று தின்னும் பழக்கம் உள்ளது.
     இக்கீரையை நெய்விட்டு வதக்கி வெங்காயம், பூண்டு,
மிளகாய், சீரக, சேர்த்து வேக வைத்து அத்துடன்
தேங்காய் துருவல், பருப்பு சேர்த்து கடைந்து உணவில் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வர பார்வை நரம்புகளுக்கு வலுவைக் கொடுக்கும். அதனால் விழிகள் பிகாசமடையும்.

Saturday, 20 August 2016

பல் வலி போக்கும் நந்தியா வட்டை

பல் வலி போக்கும் நந்தியா வட்டை

அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.

பார்வை கோளாறு குணமடையும்:

இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.

நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும்.

மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

பல் வலி நீக்கும்:

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

யாராவது விவரம் தெரிஞ்சவங்க இது சரியா இல்லையான்னு சொல்லுங்க. ப்ளீஸ்.

யாராவது விவரம் தெரிஞ்சவங்க இது சரியா இல்லையான்னு சொல்லுங்க. ப்ளீஸ்.

///வெள்ளை விஷம் ...

நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..

ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..

" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..

ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???

"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."

"அப்படின்னா "

" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"

எந்த தண்ணிய ஊத்துவீங்க ...

ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..

இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??

பாப்பாங்க ..

அப்புறம்

பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற  என்னென்னமோ  டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....

சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??

அப்படி சொல்ல முடியாது..

அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..

சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..

அதுக்கு ...??

அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??

நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..

சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே.. வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் ., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க .. எத்தனை பேரு... நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி க குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல.. பயம் தம்பி...." ///

விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும்

விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

எலும்புகளை பலப்படுத்தும்:

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் 'ஆஸ்டியோபெரோஸிஸ்' என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

வசியம் போக்கும்:

விளாம்பழத்தை ஒட்டோடு இருபத்தியொருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை மறந்து விடும். கெட்ட பெண்களினால் இடம்பெற்ற வசிய மருந்துகளும் முறிந்துவிடும்.

பழுக்காத விளாங்காயைத் தண்­ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியைகூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.

இதயத்திற்கு இதமளிக்கும்:

இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.

இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.

பித்தம் போக்கும்:

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

முகம் இளமையாக மாறும்:

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.

இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் 'மாஸ்க்' போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

மரப் பட்டையைப் பொடித்து தண்­ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

பட்டுப்போன்ற கூந்தல்:

வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் - 100 கிராம், சீயக்காய், வெந்தயம் - தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

விளாம் மர இலையை தண்­ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்

முன்னோர்கள் நீண்ட காலம்

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு மருந்துகளையே உணவாகப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே.
பீட்சா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் உள்ளிட்ட அயல்நாட்டு உடனடி உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்கு உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவது போன்றவை முக்கிய காரணங்கள்.
இவ்வகை உணவுகளில் அதிகளவிலான ரசாயன உப்பு, ரசாயன கலவைகள், செயற்கையான இனிப்பு, கொழுப்பு வகைகள் உள்ளிட்டவை கலந்துள்ளன. தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட விரும்பி, மாற்று உணவுகளை தேடிப்போன மனிதன் இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களைச் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே உணவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, கொழுப்புச்சத்து குறையவும், உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாகிறது.
சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு, இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுமே உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. கோதுமையை விட சிறுதானியங்களில் 10 சதவீதம் சர்க்கரை சத்து குறைவு; நார்ச்சத்து அதிகம்.
ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதியில்லாத ஏழை, எளிய மக்களின் உணவாக விளங்கிய சிறுதானியங்களின் விலை இன்று பன்மடங்கு உயர்ந்து வசதி படைத்தவர்களின் உணவாக விளங்குகிறது.
பொதுவாக சிறுதானியங்களில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்பு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தானியங்களிலேயே அதிக சத்து வாய்ந்த கேழ்வரகானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் சூட்டினை சமநிலையில் வைத்திருத்தல், குடலுக்கு வலிமையளித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.
இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள வரகை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையவும், மாத விடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு உடல் நலனை சீராக்கிக் கொள்ளவும் பயனாக அமைகிறது.
செரிமான சக்தியை அதிகரித்து உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருப்பது, வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைப்பது போன்ற தன்மை கம்புக்கு உண்டு. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்து அவர்களின் உடல் வலிமையையும் கூடுதலாக்குகிறது.
வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, ஆகியவற்றுக்கு ஏற்ற உணவான சாமை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாமை உணவை சமைத்து உண்ணலாம்.
உடலுக்கு உறுதியை அளிக்கும் வல்லமையுடைய சோளம் உடல் பருமன், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய உணவான சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
சிறுதானியங்களின் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள அரசும் அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால் அவற்றின் விலை குறைந்து அனைவரும் பயன்படுத்த வழி ஏற்படும்.

எத்தனை பேர் வீட்ல கருப்பட்டி உபயோகிக்கிறீங்க

எத்தனை பேர் வீட்ல கருப்பட்டி உபயோகிக்கிறீங்க

கருப்பட்டியின் பயன்கள்

1.இரத்தத்தை சுத்திகரிக்கும்,சுறுசுறுப்பை கொடுக்கும் மேனி பளபளப்புக்கு நல்லது

2.சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும்.

3.சீரகத்தை வறுத்து சுக்கு கருப்படியுடன் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும், ஓமத்தை கருப்படியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

4.குப்பை மேனி கீரை உடன் கருப்பட்டி வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல் நாள்பட்ட சளி தொல்லை நீங்கும் .

5.கரும்பு சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும் ,எலும்புகளும் உறுதியாகும்.

6.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுபெறுவதுடன்,கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

7.நீரிழிவு நோயாளிகள் கைகுத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால்,சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிகடி சிறு நீர் போவதும் குறையும்.

8.குழந்தைகள் முதல் பெரியவர் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.

9.சுக்குகருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது.சுக்கு மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
அந்த தாய்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கபெறும்.

10.காப்பியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்து குடித்தால் நம் உடலுக்கு சுண்ணாம்பு சத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் கிடைக்கிறது
மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்

விழா காலங்களில் வயிறு உபாதைகளை தவிர்க்க...!

விழா காலங்களில் வயிறு உபாதைகளை தவிர்க்க...!

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.

புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும்.

எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து, அந்த தண்­ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.

ஒரு டம்ளர் தண்­ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.

இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.

சமையல் செய்யும்போது கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாலும், அடுப்பில் சூடாக இருக்கும் பாத்திரத்தில் கையை வைத்து சூடு வாங்கிக்கொள்ள நேரிடும். அப்படி சூடு வாங்கிக்கொண்டால், உடனே அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அப்படிச் செய்வதால் சூடு பட்ட இடத்தில் கொப்புளம் போன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

நாட்டு கொய்யா

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து
நிறைந்தது நம்ம "நாட்டு கொய்யா" தான்
நிரூபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் !
=========
நாட்டு கொய்யாப்பழம்: இதன் அருமை தெரிந்தோ,
தெரியாமலோ நாம்
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து
கொண்டால் மிகவும் அக்கறையோடு
உட்கொள்வோம்.
=========
நோய் எதிர்ப்பு சக்தி தரும்
=========
கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு
பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம்.
வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக
வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல்
நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.
=========
கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள்
சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய்
உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின்
செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி
செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.
=========
புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய்
குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின்
'சி' சத்தும், லைகோபேனும் திசுக்களை
பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம்
வெகுவாய் குறைகின்றது.
=========
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு
கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை
அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை
நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.
=========
கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும்
சிறந்ததாகும்.
=========
இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால்
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண
அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின்
நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.
=========
ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த
உற்பத்தியைக் கூட்டுகிறது.
=========
கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள 'மக்னீசியம்'
நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி
விடுவதால் மனச் சோர்வு குறையும்.
=========
கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும்
வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும்
வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு
செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி
இருக்கும்.
=========
இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும்
லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும
சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம்
தள்ளிப் போகின்றது.
=========
கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடலை
சுத்தமாய் வைக்கும்.
=========
எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே
நல்லது.
=========
காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு
கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும்.
வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களு
மே சிறந்ததுதான்.
=========
கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்:
1 கப் கொய்யாப்பழம் சுமார் - 165 கிராம் எடை
கொண்டது
=========
கலோரி சத்து 112
=========
உப்பு - 0 சதவீதம்
=========
மாவுச்சத்து - 8 சதவீதம்
=========
கொழுப்பு சத்து - 2 சதவீதம்
=========
நார்சத்து - 36 சதவீதம்
=========
புரதம் 4 கிராம்
=========
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
=========
வைட்டமின் சி - 628 சதவீதம்
=========
கால்சியம் - 3 சதவீதம்
=========
இரும்பு சத்து - 2 சதவீதம்
=========
இனி வேண்டாமே மேற்கத்திய மோகம்.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

Friday, 19 August 2016

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!


வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.
1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:
*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:
1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.
*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.
*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்

Thursday, 18 August 2016

ஆயுள் தரும் மொழிகள்

ஆயுள் தரும் மொழிகள்!

கோழைக்கு எதிரி தூதுவளை!
நல் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை!
எந்த வீக்கத்திற்கும் எருக்கம்பால் அடி!
அரவம் தீண்டின் அழஞ்சி வேர் பட்டை இடு!
வெங்காயம் உண்போருக்கு தன் காயம் பழுதில்லை!
வெள்ளைப் பூண்டு பத்து தாய்க்கு சமம்!
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக!
அரணைக்கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்!
கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி!
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி!
குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி!
நிரிழிவு தீர்க்கும் ஆரை!

Wednesday, 17 August 2016

உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்’

உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்'

நான் உயர்தரம் படித்துவிட்டு இருக்கிறேன். எனக்கு சரியாக தீர்மானம் எடுக்கவும் அவதானம் செலுத்தவும் முடியாதிருக்கிறது. சரியான அளவு உணவு உட்கொள்ளாமை இதற்கு காரணமாக இருக்கலாம் என எனது நண்பர் சொல்கிறார். இதில் உண்மை இருக்கிறதா? ஆனால் நான் எனது ஒவ்வொரு உணவு வேலைகளிலும் கவனயீனமாகவே இருக்கிறேன். தயவுசெய்து பதில் தாருங்கள்.

– பெயர் குறிப்பிட விரும்பாத வாசர் –

தீர்மானம் நிறைவேற்றுவதில் பல்வேறு விதமான விடயங்கள் தாக்கங்கள் செலுத்துகின்றன. அவற்றுள் இறந்த கால அனுபவங்கள், தனியால் வேறுபாடுகள், ஒவ்வொருவருக்கும் உரித்தான சிந்தனைகள், வயது, சமூக பொருளாதார நிலைமை, தீர்மானம் நிறைவேற்றுவதற்கான முயற்சி, உடல் ஆரோக்கியம் அல்லது போசணை போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இதில் நாம் உட்கொள்ளும் உணவு அல்லது போசணை, தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏனைய விடயங்களைப்போன்று தாக்கம் செலுத்தத்தான் செய்கின்றது. எமது உடல் ஆரோக்கியமாக தொழிட்படுவதற்கு போசணைமிக்க ஆகாரங்கள் அவசியம் என்பதை நாம் எவரும் மறுக்க மாட்டோம். காலை ஆகாரம், மதிய போசணம், இராப்போசணம் ஆகிய மிக முக்கிய உணவு வேலைகளில் நாம் எமது உடல் நிலைக்கும் நேரத்திக்கும் தக்கவாறான போசணையான ஆகாரங்களை உடலுக்கு வழங்கும் போது உடல் சுறுசுறுப்பாகவும் நோய்களை எதிர்த்துப் போரடக்கூடிய சக்தியையும் பெற்றுக்கொள்கிறது.

போசணையுள்ள ஆகாரங்களை உண்ணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவது போன்று மனநலத்திலும் சிந்தனையிலும் தாக்கம் புரிவது பற்றி நம்மில் அநேகர் அவதானம் செலுத்துவதில்லை. எமது மூளையின் அன்றாட செயற்பாடுகளுக்கு நாம் உண்ணும் உணவு மிகமுக்கிய தாக்கம் புரிகிறது என மௌன்ட செனாய் மருத்துவக்கல்லூரியின் சின்டியா கிரீன் எனும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

எமது உடல் திசுக்கள், இரத்தம், என்புகள் மற்றும் உடலிலுள்ள கலங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் உட்செலுத்தும் போசணைகளின் மூலமும் மீள் எழுச்சி அடைகின்றன. இதில் மூளையில் உள்ள கலங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் உட்கொள்ளும் போசணை குறைவான ஆகாரங்கள் எமது உடலை ஆரோக்கியமற்ற நிலைக்கு உள்ளாக்குவது போன்று எமது மனநிலையையும் அப்படியே ஆக்கிவிடுகிறது.

சில வகையான மனநிலையோடு தொடர்பான நோய்களின் தீவிரத்தன்மைக்கு விட்டமின்கள் மற்றும் கனிப்பொருட்களின் குறைபாடு முக்கிய காரணமாக இருப்பதாகவும் போசணை குறைவான ஆகாரங்கள் சிந்தனையையும் அவதானத்தையும் முறையாகப் பேண முடியாமல் செய்வதற்கும் காரணமாக அமைகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. நாம் பசித்திருக்கும் நேரங்களில் வேறு விடயங்கள் மீது அவதானம் செலுத்த முடியாமல் போதில் இருந்து இதன் உண்மையைப் புரியலாம். எமது உடலையும் சிந்தனையையும் ஒரு நிறுவனமாக ஒன்று சேர்த்துச் செயற்பட இந்த போசணை உள்ள ஆகாரஙகள் தேவைப்படுகின்றன.

அளவான, சமபோசணையுள்ள உணவு எமது மூளையின் செயற்பாடுகளுக்கும் உடலின் முறையான இயக்கத்திற்கும் தேவைப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக உண்ணுகிறவர்களைக் காணும் போது "என்ன திண்டு திண்டு மாடாகப் பார்க்கிறாயா?" என்று சொல்வதையும், மிகக்குறைவாக உண்ணுகிறவர்களைக் காணும் பொழுது "காகம் கொத்துவது போல சப்பிட்டால் படிப்பும் வராது ஒன்றும் ஏறாது!" என்று சொல்வதையும் அடிக்கடி காண்கிறோம். எமது சிந்தனையில் உணவு ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச் செலுத்துவதை தெரிந்தோ தெரியாமலோ விளங்கியிருப்பதால் தான் நாம் இவ்வாறு சொல்லக் காரணமாக இருக்கலாம்.

நாம் அன்றாடம் உட்கொள்ளும் போசணையில் சுமார் 30 வீதம் மூளையின் தொழிற்பாட்டுக்குச் செல்கிறது. அதனால் ஒன்றிணைந்த உடல் தொழிற்பாட்டுக்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் துணைபுரியக்கூடிய உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும். முழுத்தானியங்கள், அவரை இணங்கள், மரக்கறிகள், பழங்கள், கீரைவகைள், விலங்குணவுகள் என்பவற்றிலிருந்து எல்லாவிதமான போசணை உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சால்மான், தூனா, மெகரல், சார்டின் போன்ற கடல் உணவுகளில் ஒமேகா 3 அடங்கி இருப்பதால் அது சிந்தனையை ஆரோக்கியமாக வைக்கத் துணைபுரிகின்றன.

அதே நேரம் நன்கு தீட்டப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளான தீட்டப்பட்ட கோதுமை, சீனி, பதமாக்கிய கொழுப்புகள் என்பவற்றில் விட்டமின்களும் கனிப்பொருற்களும் மிகக்குறைவாகக் காணப்படுவதால் உடலுக்குத் தேவையான போசணைகள் கிடைக்காமல் போவதோடு சில உடல் திசுக்களிலும் என்புகளிலும் தேங்கியுள்ள விட்டமின்களையும் கனிப்பொருள்களையும் அழித்துவிடவும் செய்யலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் செயற்கையான நிறமூட்டிகள், உணவுகளை பாதுகாக்கும் பதப்பொருட்கள், வாசனைகள் என்பன சேர்க்கப்பட்டிருக்கும். இந்தச் சேர்மானங்கள் போசணைப் பயன் அற்றதாக இருப்பதோடு மூளையின் சாதாரண தொழில்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவும் செய்யலாம். முழு நிறைவுடைய இயற்கை உணவுகள் எல்லாவிதமான போசணைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட உணவுகளில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. பசிக்குச் சாப்பிடுகிறவர்களாக நாம் இருக்காமல் உள உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை பேணிக்காக்க சாப்பிடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 'நீங்கள் சாப்பிடுவதே நீங்கள் ஆவீர்' எனும் விஞ்ஞானக்கூற்றை நாம் செவிமடுத்திருப்போம்.

இயற்கையின் அற்புதமான உணவுகளின் மூலம் கிடைக்கும் விட்டமின்களையும் கனிப்பொருட்களையும் உண்ணாமல் செயற்கையானதும் துரித உணவுகளையும் தொடர்ந்த உண்பதும் உணவில் கவனயீனமாகவும் ஒழுங்கு பேணாமல் நேரம் தவறி உண்பதும் உடலிலும் சிந்தனையிலும் சமநிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். இறுதியில் நாம் நோயாளிகளாக ஆகிவிடுவோம். நோயுற்றால் உடல் பலவீனம் ஆவதுடன் உள்ளமும் பலவீனத்தை நோக்கி மெல்ல நகர்ந்துவிடும். அப்போது எம்மால் செய்ய முடியுமான பல விடயங்களை செய்ய முடியாத நிலைக்கு நாமே எங்களை உட்படுத்திக் கொண்டவர்களாக ஆகிவிடுவோம்.

'எனக்கு இதைச்சாப்பிட ஏலுமா?' 'நான் ஏன் அதைச் உண்ண வேண்டும்'. 'ஏன் இவ்வளவெல்லாம் சாப்பிட வேண்டும்' என்று எமக்கு பல நல்ல உணவுகள் கிடைக்கும் போது அவற்றை உண்ணாது கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்காமல் 'உணவுகள் நாவுக்கு மட்டுமல்ல அவை உடலுக்கும், சிந்தனைக்கும், எமது ஒட்டுமொத்தமான செயற்பாடுகளுக்கும் துணைபுரியவே பல வகைகளில், வர்ணங்களில் இயற்கை எமக்குத் தந்திருக்கிறது.' என்ற உண்மையை மனதில் விதைத்துக்கொண்டால் அவற்றை உண்ண எமது உள்ளத்தையும் உடலையும் பழக்கிக்கொள்ளலாம். அப்போது உடல் ஆரோக்கியமடைவதுடன் சரியாக தீர்மானம் எடுக்கவும் அவதானம் செலுத்தவும் முடியுமான ஆற்றலையும் பெற்றுத்தரும்.

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

ஆரோகியம்
உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை – 6தண்ணீர் – 1/2 லிட்டர்தேன் – தேவையான அளவு

* முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.

* எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்.

காலை உணவு

காலை உணவு அரசனைப் போன்றதா சேவகனைப் போன்றதா?

• 'காலை உணவை ஒழுங்காகவும் நேரத்திற்கும் எடுக்க வேண்டும்'.
• 'காலை உணவு சாப்பிடாவிட்டால் படிப்பும் வராது நல்ல சிந்தனையும் வராது'.
• 'மூன்று வேலை சாப்பாட்டிலும் காலைச்சாப்பாடு தான் மிகவும் முக்கியமானது'.
• 'பகலைக்கு இரவைக்கு சாப்பிடாவிட்;டாலும் காலையில் நன்றாகச் சாப்பிட வேண்டும்'.
• 'காலை சாப்பாடு சாப்பிடததன் காரணமாகத்தான் நோயும் அதுவும் இதுவும்'.

இப்படி பல வீடுகளில் பல முறைகளில் காலை சாப்பாடு பற்றி கதைக்கப்படுவதை அன்றாடம் கேட்கிறோம். காலைச்சாப்பாடு பற்றி அதிகமாக கரிசனை செலுத்தக்கூடியவர்கள் இருப்பது போன்று அதுபற்றி எந்த அக்கரையும் காட்டாமல் அலட்சியமாக இருந்து கிடைப்பதைச் சாப்பிட்டு இருந்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். காலை சாப்பாடு பற்றி இரவிலேயே திட்டமிட்டுக் கொள்கின்ற தாய்மார்களும் பெண்களும் இருப்பதுபோன்று நேரத்தை வைத்து ஏதாவது செய்வோம் என்று சொல்கின்ற பல பெண்களும் இருக்கின்றார்கள். தனது பிள்ளையோ கணவனோ அல்லது குடும்பத்தில் எவரோ காலை சாப்பாட்டை தவறுதலாகவேனும் உண்ணமால் இருந்தால் 'காலை சாப்பாடு சாப்பிடவில்லை' என்று முழு நாளும் சொல்லி வருத்தப்படுகின்ற தாய்மார்களையும் நாம் காண்கிறோம்.

'காலை உணவை அரசனைப்போன்றும் பகல் உணவு மந்திரியைப்போன்றும் இரவு உணவை சேவகனைப்போன்றும் உண்ண வேண்டும்' என்று உணவு உட்கொள்வதன் முக்கியத்ததுவத்தையும் அதன் அளவையும் எமது ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லித்தந்தது எமது ஞாபகத்தில் இருக்கலாம். இப்படிச்சொல்லித்தந்ததிலிருந்து காலை உணவின் முக்கியத்ததுவத்தையும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

காலை உணவை ஆங்கிலத்தில் பிரேக் பாஸ்ட் (breakfast) என்று அழைக்கிறோம். பிரேக் பாஸ்ட் என்ற சொல் எப்படி உருவானது என்பதை தெரிந்துகொள்வதால் அதன் முக்கியத்துவத்தை எமக்கு இன்னும் தெளிவு படுத்துவதை புரியலாம். பிரேக் (break) என்பதை உடைத்தல் முறித்தல் போன்ற அர்த்தத்தினாலும் பாஸ்ட் (fast) என்பது நோன்பு விரதம் என்ற அர்த்தங்களை தழிலில் தருவதை நாம் அறிவோம். அப்படியானால் இரவு முழுக்க உண்ணாமல் நோன்பிருந்து விட்டு அதன் மூலம் இழந்து போன சக்தியை மீளப்பெற்றுக்கொண்டு எதிர்கொள்ளும் நாளை உட்சாகமாக முகம் கொடுக்க உடலைத் தயார்படுத்திக்கொள்ள அந்த நோன்பிலிருந்து விடுபட்டு தூய்மையான ஆகாரங்களை உண்பது காலை உணவு பிரேக் பாஸ்ட் (breakfast) எடுப்பதாக அர்த்தம்கொள்ள முடியும். நாம் பகல் காலங்களில் நோன்பு நோற்று விட்டு மாலையில் நோன்பு திறப்பதையும் பிரேகிங் பாஸ்ட் (breaking fast) என்றே சொல்கிறோம். இதிலிருந்த இதன் பொருளை இன்னும் தொழிலாக புரிந்துகொள்ள முடியும்.

பிரேக் பாஸ்ட் எனும் காலை உணவு நாளின் மிகமுக்கியமான உணவு என்பது பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். எமது நாளையும் நாளின் செயற்பாடுகளை உட்சாகமாக செய்யவும் எமது உடலுக்கு செலுத்தும் சக்திமிக்க எரிபொருள்தான் காலை ஆகாரம். நாம் காலையில் உன்னும் உணவு எமக்கு சுறுசுறுப்பாகச் செயற்பட துணைபுரிகிறது. காரியாலயங்களில் வேலை செய்பவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அவதானம் செலுத்தவும் சிந்தனையை முறையாக வெளிப்படுத்தி உற்சாகமாக செயற்படவும் காலை ஆகாரம் பெறும் பங்காற்றுகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

முறையான காலை ஆகாரம் உண்ணும் மாணவர்கள் குறைவாக அல்லது உண்ணாத மாணவர்களைவிட பாடங்களில் கூடுதலான பெறுபேறுகளைப் பெறுவதாகவும் வகுப்பறைச் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதாகவும் அவதானம் செலுத்துவதாகவும் கற்றல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓடவும் ஆடவும் உடல் வளரவும் மட்டும்தான் காலை உணவு என்பதல்ல. பிள்ளையின் சிந்தனை வளர்ச்சி, அவதானம் செலுத்தும் சக்தி, பிரச்சினை தீர்க்கும் திறன் போன்ற சிந்தனையோடு தொடர்பான விடயங்களிலும் காலை உணவு பெறும் தாக்கத்தை செலுத்ததுகிறது.

சிந்தித்துச் செயற்படல், அவதானம் செலுத்துதல், பிரச்சினை தீர்க்கும் திறன் என்பன மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தேவைப்படும் மனிதப்பண்புகளாகும். காரியாலய உத்தியோகத்தர்கள், கடைகளில் தோட்டங்களில் வேலை செய்கிறவர்கள், மீன் பிடித்தொழிலாளிகள், இயற்திரத்தொழிலாளிகள், விவசாயிகள் போன்ற அனைவரும் அவரவர் வேலைகளில் சிந்தனையையும் அவதானத்தையும் செலுத்த வேண்டியவர்காளகவே இருக்கின்றார்கள். அவற்றை முறையாகவும் புதியனவாகவும பயன்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் உடலுக்கும் உள்ளத்திற்கும் பொருத்தமான ஆகாரங்களை உண்டு நாளை ஆரம்பிக்க வேண்டும்.

'நாம் காலை உணவு உண்ணாவிட்டாலும் எமது வேலைகளைச் செய்கிறோம்' என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆம் செய்ய முடியாது என்பதல்ல. செய்யும் வேலையை பயனும் பெறுமதியும் உள்ளதாகவும், மனதை ஒருமுகப்படுத்தி நுட்பமாக செய்ய முடியுமாக இருக்குமா என்பது தான் இங்கு கேற்கப்படவேண்டிய கேள்வியாகும். பழக்கத்தின் மூலம் வேலைகளை செய்யலாம். பழக்கப்பட்ட வேலைகளை செய்வதற்கு எமது உடலும் உள்ளமும் அவகாசம் தரும். ஆனால் புதிய முறையில் சிந்தித்து அந்த வேலையை கவர்ச்சியும், கூடிய பயனும் தரக்கூடிய அளவிற்கு செய்து சாதனை படைக்க அவகாசம் தராது. எமது வாழ்வில் தேவையும் நோக்கமும் செய்யும் வேலையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கி மனத்திருப்தி அடைவதாகும். இன்றைய நாளைவிட நாளை வரும் நாள் வளமுள்ளதாக இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புவோம். அதனால் சுறுசுறுப்பாக செயற்பட எம்மை பழக்குவது ஒரு கட்டாயத்தேவையாகும். உள்ளம் உட்சாகமாகவும் உடல் சுறுசுறுப்பாகச்செயற்பட காலை ஆகாரம் மிகவும் அத்தியவசியமாகும்.

காலை உணவை உண்ணாமல் வெறும் வயிற்றோடு அலலது ஒரு கோப்பைத் தேனீரோடு மட்டும் நாளை ஆரம்பிக்கிறவர்கள் தாராளமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உடலுக்கும் உள்ளத்துக்குமான சக்தி கிடைக்கிறது. ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள சக்தியிலிருந்துதான் உடல் இயங்குவதற்கான எறிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உள உடல் செயற்பாடுகளுக்கான முழுமையான எறிபொருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சேமிக்கப்பட்ட சக்தியை மாத்திரம் வைத்து நீண்ட காலம் உடல் செயற்பாடுவதற்;கான எறிபொருளைப்பெற முடியாது.

எமது இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளை உசுப்பிவிடத் துணைபுரியும் ஹோமோன்கள் சேமிக்கப்பட்ட சக்தியை கொண்டு செயற்பட ஆரம்பிக்குமானால் அது எங்களை சோர்வுக்கும் எளிதில் சினம் கொள்கின்ற நிலைக்கு உட்படுத்தவும் தகவல்களை இழகுவாக பெற முடியாமல் ஆக்கிவிடவும் செய்யும். இதனால் சிறப்பாக காரியங்களை செய்யக்கூடிய ஆற்றல் இல்லாமல் போக காரணமாக அமைந்துவிடும். பாடசாலைக்குச்செல்கின்ற ஒரு மாணவனை அல்லது முக்கியமான கூட்டம் ஒன்றுக்குச் செல்லும் ஒருவரை இந்தச்சூழ்நிலையிலிருந்து பார்த்தால் விடயங்களை கற்கவும் கருத்துக்களை துள்ளியமாக உள்வாங்கிக்கொள்ளவும் அவர்களால் முடியாமல் போகும். அதனால் அவர்கள் கண்டிப்பாக காலை ஆகாரத்ததை எடுத்தே ஆகவேண்டும்.

காலை ஆகாரம் மூளையின் சக்தியை மீள்நிரப்புவது மட்டுமன்றி உட்சாகமாக செயற்படுவதற்கான ஒரு பின்உதைப்பை அல்லது வேகமான ஆரம்பத்தை பெற்றுத்தருகின்றது. சமச்சீரான காலை உணவு மூளை சரிசமநிலையில் செயற்பட பெரிதும் துணைபுரிகிறது. குறிப்பாக பிள்ளைகளின் அனைத்துச்செயற்பாடுகளிலும் காபோவைதரேற்றுக்கள், புரதங்கள் அடங்கிய உணவுகள் பங்காளிகளாக இருந்து செயற்படுகின்றன. இவை கற்றுக்கொள்ளவும் அவதானம் செலுத்துவும் சமநிலையோடு செயற்படவும் காரணமாக அமைகின்றது.

Tuesday, 16 August 2016

மூட்டு வலி,காலில் குத்தல்

மூட்டு வலி,காலில் குத்தல்
தமிழர்களிடம் ஒரு பழ மொழி இருக்கிறது.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.
இந்த மருந்தை ஏற்கனவே வேறு முறையில் பார்த்ததே.
...
பூமியின் மண்ணினுடைய பாலில் இருந்து எடுக்கப்பட்டு கட்டுவது இந்த கரையான் புற்று. இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.
இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.
இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு . இரண்டு பல்லு பூண்டு.
அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.
நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.
நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.
மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.
தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.
குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்.
தமிழர்களிடம் ஒரு பழ மொழி இருக்கிறது.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.
இந்த மருந்தை ஏற்கனவே வேறு முறையில் பார்த்ததே.
...
பூமியின் மண்ணினுடைய பாலில் இருந்து எடுக்கப்பட்டு கட்டுவது இந்த கரையான் புற்று. இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.
இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.
இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு . இரண்டு பல்லு பூண்டு.
அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.
நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.
நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.
மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.
தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.
குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்.