Tuesday, 16 August 2016

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்கள்....கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை!

சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்ல வேண்டும். மருத்துவர் அதற்கேற்றபடி மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.

இரவு நேரப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்வது நலம்.

முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.

முதல் மூன்று மாதங்களில் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்துவர வேண்டும்.

வாந்தியைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.

தாயின் கவனம் முழுக்கக் கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.

அடிவயிற்றில் வலியோ,  லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கோ இருந்தால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.


தொண்டைப்புண் குறைய:

சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

  மூட்டு வலிகுறைய:

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.
காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

வாய்ப்புண் குறைய: பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்

No comments:

Post a Comment