Friday, 5 August 2016

மூட்டு வலிகளை மூணு வகையா பிரிக்கலாம்

மூட்டு வலிகளை மூணு வகையா பிரிக்கலாம். அதாவது
முதல் வகை நீங்க சொன்னதுபோல விரல் மூட்டுகளில் வீக்கம், வலி, இரண்டாம் வகை வயதானவர்களுக்கும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் அதிகமா வரக்கூடியது. மூன்றாம் வகை அதிக அளவில் இல்லை. நம்ம ஊர் பக்கங்களில் அதை சரவாங்கினு சொல்லுவாங்க.
பெண்களுக்கு அதிகப்படியா வரும் மூட்டு வலிகளுக்கான காரணங்கள் பாத்திங்கன்னா.. கால்சியம் சத்து குறைபாடு. நம்ம எலும்புகளில் 99% கால்சியம் சத்தும் 1% இரத்தத்திலும் இருக்கு. ஒரு குழந்தை உருவாகும்போது அதனுடைய எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை தாயின் முதுகெலும்பில் இருந்துதான் எடுத்துகொள்கிறது. அதனால தான் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு அதிகப்படியான இடுப்பு வலியும் வருகிறது.
நம்ம மூட்டு எலும்புகள சுத்தி கார்ட்டிலேஜ் டிஷ்யூ இருக்கும். இதுக்குள்ள (சைனோவைல் திரவம் ) (Glucosamine ) உடல் எடை கூடும்போதும், வயது கூடும்போதும் சைனோவைல் திரவம் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். அப்போ அந்த கார்டிலேஜ் டிஷ்யூல அழுத்தம் ஏற்பட்டு எலும்புகள் உரசிக்கொள்ள ஆரம்பிக்கும். அப்போதான் நமக்கு மாடிப்படி ஏறும்போதும், இறங்கும்போதும் கர்ரக் கர்ர்க் சத்தம் வர்றது. உடனடியா நாம அதுக்கு வைத்தியம் பார்த்துக்கணும். இல்லேன்னா மூட்டயே கழட்டி மாத்தற அளவுக்கு வந்துரும்.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1200mg to 1500mg வரை கால்சியம் தேவைப்படும்.
வேர்க்கடலை, வெந்தயக்கீரை,நண்டு, பால்,முட்டை இவைகளில் இருந்து கால்சியம் அதிக அளவு கிடைக்குது. அதையும் அளவா சேர்த்துக்கணும்
உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி
"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment