காலை உணவு அரசனைப் போன்றதா சேவகனைப் போன்றதா?
• 'காலை உணவை ஒழுங்காகவும் நேரத்திற்கும் எடுக்க வேண்டும்'.
• 'காலை உணவு சாப்பிடாவிட்டால் படிப்பும் வராது நல்ல சிந்தனையும் வராது'.
• 'மூன்று வேலை சாப்பாட்டிலும் காலைச்சாப்பாடு தான் மிகவும் முக்கியமானது'.
• 'பகலைக்கு இரவைக்கு சாப்பிடாவிட்;டாலும் காலையில் நன்றாகச் சாப்பிட வேண்டும்'.
• 'காலை சாப்பாடு சாப்பிடததன் காரணமாகத்தான் நோயும் அதுவும் இதுவும்'.
இப்படி பல வீடுகளில் பல முறைகளில் காலை சாப்பாடு பற்றி கதைக்கப்படுவதை அன்றாடம் கேட்கிறோம். காலைச்சாப்பாடு பற்றி அதிகமாக கரிசனை செலுத்தக்கூடியவர்கள் இருப்பது போன்று அதுபற்றி எந்த அக்கரையும் காட்டாமல் அலட்சியமாக இருந்து கிடைப்பதைச் சாப்பிட்டு இருந்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். காலை சாப்பாடு பற்றி இரவிலேயே திட்டமிட்டுக் கொள்கின்ற தாய்மார்களும் பெண்களும் இருப்பதுபோன்று நேரத்தை வைத்து ஏதாவது செய்வோம் என்று சொல்கின்ற பல பெண்களும் இருக்கின்றார்கள். தனது பிள்ளையோ கணவனோ அல்லது குடும்பத்தில் எவரோ காலை சாப்பாட்டை தவறுதலாகவேனும் உண்ணமால் இருந்தால் 'காலை சாப்பாடு சாப்பிடவில்லை' என்று முழு நாளும் சொல்லி வருத்தப்படுகின்ற தாய்மார்களையும் நாம் காண்கிறோம்.
'காலை உணவை அரசனைப்போன்றும் பகல் உணவு மந்திரியைப்போன்றும் இரவு உணவை சேவகனைப்போன்றும் உண்ண வேண்டும்' என்று உணவு உட்கொள்வதன் முக்கியத்ததுவத்தையும் அதன் அளவையும் எமது ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லித்தந்தது எமது ஞாபகத்தில் இருக்கலாம். இப்படிச்சொல்லித்தந்ததிலிருந்து காலை உணவின் முக்கியத்ததுவத்தையும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.
காலை உணவை ஆங்கிலத்தில் பிரேக் பாஸ்ட் (breakfast) என்று அழைக்கிறோம். பிரேக் பாஸ்ட் என்ற சொல் எப்படி உருவானது என்பதை தெரிந்துகொள்வதால் அதன் முக்கியத்துவத்தை எமக்கு இன்னும் தெளிவு படுத்துவதை புரியலாம். பிரேக் (break) என்பதை உடைத்தல் முறித்தல் போன்ற அர்த்தத்தினாலும் பாஸ்ட் (fast) என்பது நோன்பு விரதம் என்ற அர்த்தங்களை தழிலில் தருவதை நாம் அறிவோம். அப்படியானால் இரவு முழுக்க உண்ணாமல் நோன்பிருந்து விட்டு அதன் மூலம் இழந்து போன சக்தியை மீளப்பெற்றுக்கொண்டு எதிர்கொள்ளும் நாளை உட்சாகமாக முகம் கொடுக்க உடலைத் தயார்படுத்திக்கொள்ள அந்த நோன்பிலிருந்து விடுபட்டு தூய்மையான ஆகாரங்களை உண்பது காலை உணவு பிரேக் பாஸ்ட் (breakfast) எடுப்பதாக அர்த்தம்கொள்ள முடியும். நாம் பகல் காலங்களில் நோன்பு நோற்று விட்டு மாலையில் நோன்பு திறப்பதையும் பிரேகிங் பாஸ்ட் (breaking fast) என்றே சொல்கிறோம். இதிலிருந்த இதன் பொருளை இன்னும் தொழிலாக புரிந்துகொள்ள முடியும்.
பிரேக் பாஸ்ட் எனும் காலை உணவு நாளின் மிகமுக்கியமான உணவு என்பது பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். எமது நாளையும் நாளின் செயற்பாடுகளை உட்சாகமாக செய்யவும் எமது உடலுக்கு செலுத்தும் சக்திமிக்க எரிபொருள்தான் காலை ஆகாரம். நாம் காலையில் உன்னும் உணவு எமக்கு சுறுசுறுப்பாகச் செயற்பட துணைபுரிகிறது. காரியாலயங்களில் வேலை செய்பவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அவதானம் செலுத்தவும் சிந்தனையை முறையாக வெளிப்படுத்தி உற்சாகமாக செயற்படவும் காலை ஆகாரம் பெறும் பங்காற்றுகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
முறையான காலை ஆகாரம் உண்ணும் மாணவர்கள் குறைவாக அல்லது உண்ணாத மாணவர்களைவிட பாடங்களில் கூடுதலான பெறுபேறுகளைப் பெறுவதாகவும் வகுப்பறைச் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதாகவும் அவதானம் செலுத்துவதாகவும் கற்றல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓடவும் ஆடவும் உடல் வளரவும் மட்டும்தான் காலை உணவு என்பதல்ல. பிள்ளையின் சிந்தனை வளர்ச்சி, அவதானம் செலுத்தும் சக்தி, பிரச்சினை தீர்க்கும் திறன் போன்ற சிந்தனையோடு தொடர்பான விடயங்களிலும் காலை உணவு பெறும் தாக்கத்தை செலுத்ததுகிறது.
சிந்தித்துச் செயற்படல், அவதானம் செலுத்துதல், பிரச்சினை தீர்க்கும் திறன் என்பன மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தேவைப்படும் மனிதப்பண்புகளாகும். காரியாலய உத்தியோகத்தர்கள், கடைகளில் தோட்டங்களில் வேலை செய்கிறவர்கள், மீன் பிடித்தொழிலாளிகள், இயற்திரத்தொழிலாளிகள், விவசாயிகள் போன்ற அனைவரும் அவரவர் வேலைகளில் சிந்தனையையும் அவதானத்தையும் செலுத்த வேண்டியவர்காளகவே இருக்கின்றார்கள். அவற்றை முறையாகவும் புதியனவாகவும பயன்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் உடலுக்கும் உள்ளத்திற்கும் பொருத்தமான ஆகாரங்களை உண்டு நாளை ஆரம்பிக்க வேண்டும்.
'நாம் காலை உணவு உண்ணாவிட்டாலும் எமது வேலைகளைச் செய்கிறோம்' என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆம் செய்ய முடியாது என்பதல்ல. செய்யும் வேலையை பயனும் பெறுமதியும் உள்ளதாகவும், மனதை ஒருமுகப்படுத்தி நுட்பமாக செய்ய முடியுமாக இருக்குமா என்பது தான் இங்கு கேற்கப்படவேண்டிய கேள்வியாகும். பழக்கத்தின் மூலம் வேலைகளை செய்யலாம். பழக்கப்பட்ட வேலைகளை செய்வதற்கு எமது உடலும் உள்ளமும் அவகாசம் தரும். ஆனால் புதிய முறையில் சிந்தித்து அந்த வேலையை கவர்ச்சியும், கூடிய பயனும் தரக்கூடிய அளவிற்கு செய்து சாதனை படைக்க அவகாசம் தராது. எமது வாழ்வில் தேவையும் நோக்கமும் செய்யும் வேலையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கி மனத்திருப்தி அடைவதாகும். இன்றைய நாளைவிட நாளை வரும் நாள் வளமுள்ளதாக இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புவோம். அதனால் சுறுசுறுப்பாக செயற்பட எம்மை பழக்குவது ஒரு கட்டாயத்தேவையாகும். உள்ளம் உட்சாகமாகவும் உடல் சுறுசுறுப்பாகச்செயற்பட காலை ஆகாரம் மிகவும் அத்தியவசியமாகும்.
காலை உணவை உண்ணாமல் வெறும் வயிற்றோடு அலலது ஒரு கோப்பைத் தேனீரோடு மட்டும் நாளை ஆரம்பிக்கிறவர்கள் தாராளமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உடலுக்கும் உள்ளத்துக்குமான சக்தி கிடைக்கிறது. ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள சக்தியிலிருந்துதான் உடல் இயங்குவதற்கான எறிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உள உடல் செயற்பாடுகளுக்கான முழுமையான எறிபொருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சேமிக்கப்பட்ட சக்தியை மாத்திரம் வைத்து நீண்ட காலம் உடல் செயற்பாடுவதற்;கான எறிபொருளைப்பெற முடியாது.
எமது இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளை உசுப்பிவிடத் துணைபுரியும் ஹோமோன்கள் சேமிக்கப்பட்ட சக்தியை கொண்டு செயற்பட ஆரம்பிக்குமானால் அது எங்களை சோர்வுக்கும் எளிதில் சினம் கொள்கின்ற நிலைக்கு உட்படுத்தவும் தகவல்களை இழகுவாக பெற முடியாமல் ஆக்கிவிடவும் செய்யும். இதனால் சிறப்பாக காரியங்களை செய்யக்கூடிய ஆற்றல் இல்லாமல் போக காரணமாக அமைந்துவிடும். பாடசாலைக்குச்செல்கின்ற ஒரு மாணவனை அல்லது முக்கியமான கூட்டம் ஒன்றுக்குச் செல்லும் ஒருவரை இந்தச்சூழ்நிலையிலிருந்து பார்த்தால் விடயங்களை கற்கவும் கருத்துக்களை துள்ளியமாக உள்வாங்கிக்கொள்ளவும் அவர்களால் முடியாமல் போகும். அதனால் அவர்கள் கண்டிப்பாக காலை ஆகாரத்ததை எடுத்தே ஆகவேண்டும்.
காலை ஆகாரம் மூளையின் சக்தியை மீள்நிரப்புவது மட்டுமன்றி உட்சாகமாக செயற்படுவதற்கான ஒரு பின்உதைப்பை அல்லது வேகமான ஆரம்பத்தை பெற்றுத்தருகின்றது. சமச்சீரான காலை உணவு மூளை சரிசமநிலையில் செயற்பட பெரிதும் துணைபுரிகிறது. குறிப்பாக பிள்ளைகளின் அனைத்துச்செயற்பாடுகளிலும் காபோவைதரேற்றுக்கள், புரதங்கள் அடங்கிய உணவுகள் பங்காளிகளாக இருந்து செயற்படுகின்றன. இவை கற்றுக்கொள்ளவும் அவதானம் செலுத்துவும் சமநிலையோடு செயற்படவும் காரணமாக அமைகின்றது.
No comments:
Post a Comment