Saturday, 6 August 2016

தலைவலி நீங்க

தலைவலி நீங்க ... பாத்திரத்தில் தண்ணீ­ர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும். சாப்பிடும் விதம் அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும். காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும். நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும். நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்

No comments:

Post a Comment