கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு(ROCK SALT) என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.இதை ஹிந்தியில் சிந்தா நமக்கு என்பார்கள். இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான்.ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாச்சாரத்தில் உள்ளது.மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.
இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது.இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெற வல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.அந்தப் பாடல்
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே.
-திருமூலர் வைத்திய சாகரம்-
No comments:
Post a Comment